Tuesday, June 18, 2013

இளைஞர்களே கிளர்ந்து எழுங்கள் ! பகுதி 2

3,30,000 பேர், அந்தப் பாதுகாப்பு வலையத்துக்கு உள்ளே கொண்டு வந்து திணிக் கப்பட்டார்கள். இதை நான் சொல்லவில்லை. ஐ.நா. மூவர் குழுவின் அறிக்கை
சொல்லுகிறது.

ஆனால், கேடு கெட்ட இந்திய அரசு, இந்திய நாடாளுமன்றத்தில் 2009 பிப்ரவரி 18 ஆம் நாள், 70,000 பேர்கள்தான் பாதுகாப்பு வலையத்துக்கு உள்ளே இருப்ப தாகச் சொன்னாய். இலங்கையில் ராஜபக்சே சொன்னதை, மூன்று நாள்களுக் குப் பிறகு, பிரணாப் முகர்ஜி இங்கே சொன்னார். கலைஞர் கருணாநிதியும்
அதையே சொன்னார்.


வேறு என்ன சான்று வேண்டும்?

அங்கே குண்டு வீசினான். புது மத்தளான் மருத்துவமனையில், முள்ளிவாய்க் கால், வன்னி என எல்லா மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசினான்.
அது மருத்துவமனைகள் என்று தெரிந்து கொண்டுதான் குண்டுகளை வீசி னான். காயப்பட்டுக் கிடந்தவர்களைக் கொன்றான். அதனால், காயப்பட்டவர் களை மரத்தடிகளில் கொண்டு வந்து வைத்து இருந்தார்கள்.அங்கே இருந்த மருத்துவர்கள் அறிக்கை கொடுத்து இருக்கின்றார்கள். அங்கே மருந்துகள் இல்லை. மயக்க மருந்து இல்லாமல், அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார் கள். சுத்தப்படுத்தப்பட்ட கருவிகள் இல்லை. எனவே, கசாப்புக் கடைகளில் பயன்படுத்துகின்ற வெட்டுக் கத்திகளை வைத்து, காயம்பட்ட உறுப்புகளை
வெட்டி எடுத்து இருக்கின்றார்கள். இதையும் நான் சொல்லவில்லை, ஐ.நா. குழு சொல்லுகிறது.


இரத்தம் இல்லை யாரிடமும். அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளி யின் ரத்தத்தையே எடுத்து, பிளாஸ்டிக் பைகளில் வைத்து, மீண்டும் ஏற்றி ய தாகச் சொல்லி இருக்கிறார்கள்.

இனப்படுகொலை என்பதற்கு,இதைவிட வேறு என்ன சான்றுகள் வேண்டும்? நாஜிகள் கூட இந்தக் கொடுமையைச் செய்ய வில்லையே?

பதுங்கு குழிகளில் பதுங்கிக் கிடந்த பிள்ளைகள் பதறிக் கொண்டே இருந்தார் கள். அங்கே வெள் ளைக் கொடிகளை ஏற்றி, இங்கே குழந்தைகள் இருக்கின் றார்கள் என்று சொன்னார்களாம். உடனே, அங்கே போய் குண்டுகளைப் போட் டுக் கொன்றான். நீண்ட நேரம் பதுங்கு குழியில் இருக்க முடியாமல் வெளியே வந்த குழந்தைகள் குண்டு வீச்சுக்குப் பலியானார்கள். உணவு வழங்குகின்ற மையங்கள் மீது குண்டுகளை வீசினான். ஐ.நா. மன்றத்தின் அலுவலத்தின் மீது குண்டு வீசினான். பால் பவுடர் கொடுக்கின்ற மையங்களின் மீது குண்டுகளை
வீசினான். செத்துக் கிடந்த பெண்களின் கைகளில், பால் பவுடர்கள் வாங்குவ தற்கான அட்டைகள் இருந்தன என்று அறிக்கை சொல்லுகிறது.

நெஞ்சைப் பதற வைக்கின்ற, நினைத்துப் பார்க்கவே முடியாத துயரங்களுக் குத் தமிழ் மக்கள் ஆளாக்கப்பட்டார்கள். இதற்கெல்லாம் காரணம்,இந்திய அரசு தான். உன்னை எப்படி நாங்கள் மன்னிக்க முடியும்? பிரச்சினையைத் திசை திருப்பக் கூடாது.

எதற்காக வாழ்த்துகிறாய்?

விசாரணைக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது என்னுடைய வாதம் அல்ல. இந்தியாவை நேசிக்கிறோம், இந்திய மக்களை நேசிக்கிறோம் என்றார் பிரபாகரன். ஆனால், இத்தாலிய சோனியா காந்தி திட்டமிட்டு, ஈழத் தமிழ் இனத்தைக் கரு அறுப்பதற்கு, மன்மோகன் சிங் அரசைப் பயன்படுத்திக் கொண்டார்.எலும்புத் துண்டுகளைப் போடுவது போலச் சில மந்திரி பதவி களைக் கருணாநிதிக்குத் தூக்கி எறிந்தார்.அதையே சாசுவதம் என்று நினைத் து, இன்றைக்குத் தீராத பழியைத் தேடிக் கொண்டார் கலைஞர் கருணாநிதி. அவருக்காக நான் வேதனைப்படுகிறேன்.அது அண்ணா உருவாக்கிய இயக் கம், இரத்தத்தை வியர்வையாகக் கொட்டி நாங்கள் வளர்த்த இயக்கம். எல்லா வற்றையும் பாழாக்கி விட்டீர்களே? வருத்தப்படுகிறேன்.

பழிதானே மிஞ்சியது? இழிவுச் சொல்தானே மிஞ்சியது? இனத்துரோகி என்ற பட்டம்தானே மிஞ்சியது? காரியம் முடிந்தால், கையில் காசு இருந்தாலும் கத வைச் சாத்தடி என்று சோனியா காந்தி, போயஸ் தோட்டத்துக்கு வாழ்த்துச் சொல்லுகிறார். அன்றைக்குத் தனது பழிவாங்கும் காரியத்தை முடிக்க கருணா நிதி தேவைப்பட்டார் சோனியா காந்திக்கு.

இந்தியை எதிர்த்த மொழிப்போரில், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு அஞ்சாத தீரர்கள் உலவிய இந்தத் தமிழகத்தில், சுடுடா பார்ப்போம் என்று தி.மு. க.வின் தீரர்கள் மார்பைக் காட்டி நின்றார்கள்.அந்தத் தி.மு.க. என்ன ஆயிற்று?

நாம் ஒன்றும் கிளார்க் வேலை பார்ப்பவர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர் கள்.

மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே
எங்கள் வாள் வலியும் தோள்வலியும் போச்சே

என்றான் பாரதி. தமிழர்கள், வாளோடு போராடியவர்கள்,மானத்துக்காகப் போராடியவர்கள். அது தெரியும் சோனியா காந்திக்கு. அந்தத் தமிழகம் மீண்டும் பொங்கி எழுந்து விடாமல் தடுப்பதற்காக, அன்றைக்குக் கலைஞர் கருணாநிதி தேவைப்பட்டார்.தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பை அடக்கக் கருணாநிதி ஒரு தீர்மானம் போட்டார். அதைத்தான் முத்துக்குமார் தன் மரண சாசனத்தில் சுட்டிக் காட்டினான். துரோகத்துக்கு மேல் துரோகம்.

ஜெர்மனியின் கடிதம்

2009 மே 19 ஆம் நாள், ஜெர்மனி அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்கு ஒரு கடிதம் கொடுத்தது. இலங்கையில் போர்க்குற்றம் நடந்து விட்டது. ஈழத்
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள்.இதைப்பற்றி, உடனடியாக மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.அந்தக் கூட் டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தார்கள். வாக்கு அளிக்கும் உரிமை பெற்ற 47 நாடுகள் உள்ளன. அதில், மூன்றில் ஒரு பங்கு நாடுகள்
கையெழுத்து இட்டுக் கோரிக்கை விடுத்தால், உடனே கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது சட்டம்.

ஜெர்மனியோடு மேலும் 16 நாடுகள் சேர்ந்து, மொத்தம் 17 நாடுகள் கையெழுத் துப்போட்டு, ஒரு கடிதத்தைக் கொடுத்தன. ஆகவே, மனித உரிமைகள் ஆணை யத்தைக் கூட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. மே 17 இல், பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்கு உள்ளா கக் கடிதம் கொடுத்தார்கள்.

ஜெர்மனி என்ன தமிழனின் தொப்புள் கொடி உறவா? ஜெர்மனியிலே, தமிழர்கள் கோடிக்கணக்கில் வசிக்கின்றார்களா? அவன் கொடுத்தான் தீர்மானம். எனவே, கூட்டத்தைக் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதை அறிந்து கொலை காரப் பயல் ராஜபக்சே அரசு, இந்தியாவை உடனே அணுகியது. இவர்களும் யோசனை சொன்னார்கள் நீ ஒரு தீர்மானத்தை எழுதிக் கொண்டு வா என்று.

ஜூன் 25 ஆம் நாள் கூட்டம் கூடியது. உடனே என்ன செய்தார்கள் தெரியுமா? போர்க்காலத்தை மிகச் சாதுர்யமாகச் சமாளித்து, சாதாரண மக்களுக்கு எந்தப்
பாதிப்பும் ஏற்படாத வகையில் வெற்றிகரமாக நடத்தி,அமைதியை நிலைநாட் டியதற்காக இலங்கை அரசைப் பாராட்டுவதாக ஒரு தீர்மானம்.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப்போட வைப்பதற்கு,இந்திய அரசு,கச்சை கட்டிக் கொண்டு வேலை பார்த்தது. அதனால், 29 நாடுகள் அதை ஆதரித்து வாக்கு அளித்தன. அப்படி எந்தெந்த நாடுகள் எல்லாம் ஈழத்தமிழருக்கு எதிராக, சிங்களக் கொலைபாதகனுக்கு ஆதரவாக வாக்கு அளித்தன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா,பாகிஸ்தான்,மாவோ உலவிய சீனா,லெனின் உலவிய ரஷ்யா, கியூபா, விதைத்தவன் உறங்கலாம்; விதைகள் உறங்காமல் வீறு கொண்டு வெடிக்கும் என்று புரட்சி பூபாளம் இசைத்த ஃபிடல் கேஸ்ட்ரோ உலவுகின்ற கியூபா, அர்ஜெண்டைனாவில் பிறந்து, பொலிவியக் காடுகளில் மடிந்த சேகு வேரா கைகளில் துப்பாக்கி ஹவானா வீதிகளில் வலம் வந்தானே, அந்த கியூபா, எங்கள் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துக் கையெழுத்துப் போட்டது.

அடுத்தது, அங்கோலா, அசர்பெய்ஜன், பஹ்ரைன்,பங்களாதேஷ், பொலிவியா, பிரேசில், பர்கினோ ஃபசோ,கேமரூன், ஈஜிப்ட், கானா, இந்தோனேசியா, ஜோர் டான், மலேசியா, மடகாஸ்கர், நிகரகுவா, நைஜீரியா,ஃபிலிப்பைன்ஸ், கட்டார், செளதி அரேபியா, செனகல். மிகுந்த வேதனை என்ன தெரியுமா?

அண்ணல் காந்தியார் அறப்போர் நடத்தினாரே, நாங்கள் நெஞ்சிலே போற்று கின்ற நெல்சன் மண்டேலா இன்றும் உலவுகின்ற தென்னாப்பிரிக்கா. இத்து டன், முதலில் 17 நாடுகள் கொடுத்த கோரிக்கை மனுவில் கையெழுத்துப்போட் ட உருகுவே, பின்னர் யூதாசாக மாறி இலங்கையை ஆதரித்தும் கையெ ழுத்துப் போட்டு விட்டது. அடுத்தது ஜாம்பியா.

ஆனால், என்னுடைய அன்புத் தமிழ்ப் பெருமக்களே,இலங்கையின் போர்க் குற் றத்தை விசாரிக்க வேண்டும் என்கின்ற வகையில்,இலங்கைக்கு ஆதர வான
தீர்மானத்தை எதிர்த்து வாக்கு அளித்த நாடுகள் எவை தெரியுமா? அதில், விடு தலைப் புலிகளைத் தடை செய்து உள்ள நாடுகளும் இருக்கின்றன. ஆனாலும்,
போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று வாக்கு அளித்து இருக் கிறார்கள்.

கிரேட் பிரிட்டன், வடக்கு அயர்லாந்து, சுவிட்சர்லாந்து,சுலோவேனியா, சுலோ வேக்கியா, நெதர்லாந்து, மெக்சிகோ, இத்தாலி, ஜெர்மனி, ஃபிரான்ஸ், சிலி, கனடா, போஸ்னியா ஹெர்சகோவினா. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள்.

அர்ஜென்டைனா, கேபோன், ஜப்பான், மொரீஷியஸ்,தென் கொரியா ஆகிய நாடுகள், இரண்டு பக்கமும் வாக்கு அளிக்கவில்லை.

இலங்கை அரசு வெற்றிகரமாக நிலைமையைச் சமாளித்து விட்டது என்று பாராட்டுத் தீர்மானம் அது.

இன்றைக்கு, மார்சுகி தருஸ்மான் தலைமையிலான மூவர் குழுவின் கடைசிப் பரிந்துரை என்ன தெரியுமா? மிக முக்கியமானது.

அன்றைக்கு நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தை, ரத்துச் செய்வதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும்.மனித உரிமைகள் ஆணையத்தில்,இரண்டு ஆண் டுகளுக்கு முன்பு இலங்கை அரசைப் பாராட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தை ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை கொடுத்து இருக்கின்றார்கள்.

அது மட்டும் அல்ல. ஐ.நா. மன்றம் தன் கடமையில் தவறி விட்டது; ஆகவே, ஐ.நா. மன்றம், இந்தப் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு உரிய ஒரு அமைப் பை உருவாக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள்.

ராஜபக்சே தப்பிக்க முடியாது

இப்போது, அனைத்து உலக நாடுகளின் முன்பு உள்ள பிரச்சினை என்ன? 1946 இல் நூரெம்பர்க் நீதிமன்றத்தில் நாஜிகள் நிறுத்தப்பட்டதைப் போல. போர்க் குற்றம் செய்த மகிந்த ராஜபக்சே, கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அன்றைக் கு 12 நாஜித் தளபதிகள் தூக்கில் இடப்பட்டார்கள். அடால்ப் பிட்ஸ்மென் என்ற ஒருவன் தப்பித்து ஓடி விட்டான். அர்ஜென்டைனாவுக்குச்சென்று, வேறு பெய ரில் ஒளிந்து இருந்தான். பல தளபதிகள், பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்
பட்டார்கள். அர்ஜென்டைனாவில் இருந்தவனைத் தேடிப்பிடித்து, 1960 ஆண்டு கைது செய்து, இஸ்ரேலுக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தித் தூக்கில் இட்டார்கள்.

1948இல் டோக்யோ விசாரணை மன்றத்தில்,7தளபதிகளை போர்க்குற்றவாளி கள் என்று அறிவித்துத் தூக்கில் இட்டார்கள்.

செர்பிய இனப்பிரச்சினையில் குற்றம் சாட்டப்பட்ட மிலோசெவிக், சிறையில் அடைக்கப்பட்டு, மாரடைப்பால் செத்துப் போனான். இப்படி எத்தனையோ
எடுத்துச் சொல்லலாம். இப்போது, சூடான் நாட்டு அதிபர் அல் பசீர் மீது குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறான். அதுபோல, பெண்கள்,
குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானவர்களைப் படுகொலை செய்த ராஜ பக்சே எப்படித் தப்பிக்க முடியும்?

முள்ளிவாய்க்கால் சோகம்

அது மட்டுமா? இந்த அறிக்கையில் மேலும் சொல்கிறார்கள், இளைஞர்களை எல்லாம் தனியாகக் காட்டுக்கு உள்ளே கொண்டு சென்று, சுட்டுக் கொன்றார் கள். இதையெல்லாம் நாம் அப்போதே சொன்னோமே? அதைப் பல பேர் நம்ப வில்லை. இன்றைக்கு ஐ.நா. குழு சொல்லுகிறது. பெண்களை அம்மணமாக்கி இழுத்து வந்தார்கள்.

அவர்களை அடைத்து வைத்த இடங்களில்,எந்தவிதமான அடிப்படை வசதி களும் கிடையாது. இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சென்றபோதும்,சிங்களச் சிப்பாய்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். குளிப்பதற்கோ, கழிப்பறை வசதிகளோ கிடையாது. உயிரை விட மானத்தைப் பெரிதாகப் போற்றுகின்ற நம் சகோதரிகளின் நிலைமையைப் பார்த்தீர்களா?

உங்கள் பிள்ளைகள் பட்டினி கிடக்கின்றார்களே, எங்கள் பாலியல் இச்சை களைத் தீர்த்தால் உணவு தருகிறோம் என்று சிங்களச் சிப்பாய்கள் சொன்னதை யும், ஐ.நா. அறிக்கை சொல்லுகிறது. உலகத்தில் எங்கும் நடக்காத கொடுமை கள். தமிழச்சியாகப் பிறந்தது பாவம், தமிழனாகப் பிறந்தது பாவம். இதைத்தவிர வேறு என்ன பாவம் செய்தோம்?

கூட்டம் கூட்டமாகச் செத்துக் கிடந்தார்கள். அவர்களைப் புதைக்கவும் முடிய வில்லை, எரிக்கவும் முடியவில்லை. அந்த உடல்களின் நாற்றம், காற்று மண் டலத்தை நிரப்பியது என்கிறார்கள். இங்கே நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம். இந்தக் கூட்டம் முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பினாலும், அங்கே உங்களுக் குச் சோறு போட, உங்கள் தாய் இருப்பாள், தங்கை இருப்பாள், இல்லத்து அரசி இருப்பாள். ஆனால், காடுகளில்,மரக்கிளைகளுக்குக் கீழே கிடந்த அந்த மக்கள், உணவு இல்லாமல், பட்டினியால் செத்தார்கள். மருந்துகள் இல்லாமல் செத் தார்கள். அவர்களைக் காப்பாற்ற செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் வந்தது.அங்கே குண்டு வீசினான் என்று அறிக்கை சொல்லுகிறது. அந்தக் கப்பலை நோக்கி வந்த மக்கள் மீது, கடற்கரையில் குண்டு வீசினான். தப்பிச் செல்ல முயன்ற வர்களைக் கொன்று குவித்தான்.

நயவஞ்சகம்

தா.பா. சொன்னதைப் போல, செய்தியாளர்களை,ஊடகங்களை உள்ளே அனும திக்கவே இல்லை. எங்கள் ஆயுதங்களை மெளனித்து விட்டோம் என்று விடு தலைப் புலிகள் அறிவித்ததற்குப் பிறகு, 2009 மே 18 ஆம் நாள் அதிகாலையில், உங்களை நீங்கள் ஒப்படைத்துக் கொள்ளலாம்; எந்த ஆபத்தும் கிடையாது என்று ஐ.நா.மன்ற அதிகாரிகள் மூலம் தகவல் சொல்லி அனுப்பி, பிரிட்டன், நோர்வே, அமெரிக்காவுக்குத்தகவல் சொல்லி, அதற்குப்பிறகு,விடுதலைப்புலி களின் அரசியல் பிரிவுத் தலைவர் ஆருயிர்ச் சகோதரர் நடேசன்,அமைதிச்செய லகத்தின் தலைவர் பூலித்தேவன்,கர்னல் ரமேஷ் போன்றவர்களுக்குத் தகவல் கொடுத்து, வாருங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று வஞ்சகமாக வரவ ழைத்தனர். நடுவராக,இன்னொரு நாட்டின் பிரதிநிதி வரவேண்டும் என்று அவர் கள் கேட்டதையும் ஒப்புக் கொள்ளவில்லை.

மகிந்த ராஜபக்சே, கொத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே, சரத் பொன்சேகா மற்றும் அதிகாரிகள், நீங்கள் இந்தப் பாதை வழியாக வரலாம்; வெள்ளைக் கொடி பிடித்து வாருங்கள் என்று வரவழைத்து இருக்கின்றார்கள். அதேபோல, ஒரு வெள்ளை கொடிபிடித்து வந்த அவர்களை குடும்பத்தோடு மொத்தம் 300 பேர் வந்தனர். எல்லோரையும் சுட்டுக் கொன்று விட்டனர். நடேசனைச் சித்திர வதை செய்து கொன்று இருக்கிறார்கள். படங்கள் இருக்கின்றன.

உலகில் இதுபோல எங்காவது நடந்தது உண்டா? நயவஞ்சகமாக வரவழைத் துக் கொன்று இருக்கிறான் சிங்களவன். இதுதான் போர்க்குற்றம். எனவே, ஜெனீவா விதிகளின்படி இதை விசாரிக்க வேண்டும்.சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகளை, ஆதாரமாக இந்த அறிக்கை சொல்லுகிறது.

எட்டுத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக இழுத்து வந்தார்கள்.அவர்களுடை ய கைகளைப் பின்புறமாகக் கட்டி இருந்தார்கள். கண்களைக் கட்டி இருந்தார் கள். அவர்களை மண்டியிடச் சொல்லி மிதித்தான். ஒவ்வொருவராகப் பிடறி யில் சுட்டான், ரத்தம் சிதறி அடித்தது. தமிழன் துடிதுடித்துச் செத்தான். அதை இந்த அறிக்கை சொல்லுகிறது. இது பழைய படமாகத் தெரிகிறது என்று கலை ஞர் கருணாநிதி சொன்னார்.

ஆனால், அது உண்மைச் சம்பவம் என்று ஐ.நா. குழு சொல்லுகிறது. உலகத்தில் காட்டுமிராண்டியாக வாழ்ந்தவர்களுக்கும், ஆடை அணியும் கலையைக் கற்றுக் கொடுத்த தமிழனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தீர்களா?

தொடரும்.........

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment