Saturday, June 29, 2013

மாணவர்களை கல்வித் துறையே தேர்வு செய்க!

கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளில் சேரும் மாணவர்களைக் கல்வித் துறையே தேர்வு செய்ய வேண்டும் என்று, மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன், வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை:

அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த பள்ளிக் கல்வித் துறை உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க விரும்பாததால் இச் சட்டமே கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்ட விண்ணப்பங்கள் தருவதில்லை என்று புகார் வந்ததால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மக்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் குறைந்த அளவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதை முதன்மைக் கல்வி அலுவலகம் பள்ளிகளுக்கு அனுப்பியதாகத் தெரி
கிறது. ஆனால், பெற்றோர் அணுகும்போது பெரும்பாலான பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஏற்கெனவே பூர்த்தி செய்துவிட்டதாகக் கூறுகின்றனர். சேர்க்கை முடிந்திருந்தால் அப்பள்ளிகளில் இருந்து சேர்க்கைப் பட்டியலை கல்வித் துறை ஏன் வாங்கவில்லை? விண்ணப்பங்களை விநியோகிக்கும்போது பெற்றோர்களிடம் கல்வி அதிகாரிகள் இதை ஏன் தெரிவிக்கவில்லை?

பல மாதங்களுக்கு முன் பள்ளி நிர்வாகம் தேர்வு செய்து நன்கொடையும் கட்டணமும் வாங்கி சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களையே, இப்போது இடஒதுக்கீட்டில் சேர்த்துவிட்டதாகப் பல பள்ளிகள் தெரிவித்துள்ளன. இதனால், ஏழை மாணவர்கள் கல்வி பயில அரசு ஒதுக்கும் நிதி, பணம்படைத்த பெற்றோருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் மூலமாக ஏழை மாணவர்கள் பயனடைய வேண் டும் என்று உண்மையில் கல்வித் துறை விரும்புமானால் மாணவர்களைக் கல்வித் துறையே தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த பட்டியலை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

சேர்க்கை முடிந்த பின் பள்ளிகளில் சேர்கையை கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது வீண் வேலை. சேர்க்கையின்போதே முறையான வழிமுறை களைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு கோவை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் எத்தனை விண் ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் எத்தனை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து தரப்பட்டன. முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்த மாணவர்களில் எத்தனை பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர் என்ற விவரத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும்.

No comments:

Post a Comment