Saturday, June 22, 2013

மதிமுக இளைஞர் அணி தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி ஆலோச னைக் கூட்டம், 22.06.2013 அன்று, தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. கழக இளைஞர் அணிச் செயலாளர், பொறியாளர் வே.ஈஸ்வரன் அவர்கள் தலை மை வகித்தார். இதில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
தீர்மானம் -1

இலட்சம் புதிய இளைஞர்கள் சேர்ப்பு

கழக இளைஞர் அணியை மேலும் வலிமைப்படுத்திட, அடுத்த ஆறுமாத காலத் திற்குள் ஒரு இலட்சம் புதிய இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க தீவிர பணியாற்றுவது என்றும்;

முதல் கட்டமாக அனைத்து ஒன்றிய-நகரங்களுக்கும், மாநகராட்சியின் அனைத்து பகுதி மற்றும் வட்டங்களுக்கும்,மாவட்டக்கழகத்தின் ஒப்புதலுடன், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை ஒருமாத காலத்திற்குள் (22.07.2013 ஆம் தேதிக்குள்) நியமித்து, பட்டியலை தலைமைக் கழகத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் மூலமாக மாவட்ட அமைப்பாளர்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்;

இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் ஒன் றிய-நகர இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநக ராட்சிகளில் பகுதி மற்றும் வட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டமும் நடத்தப்பட வேண்டும் எனவும்;

அவ்வாறு நடத்தப்படும் கூட்டத்தில், புதிய இளைஞர்களை கழகத்தில் சேர்ப் பதற்கான உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டு, ஒவ்வொரு ஒன்றிய, நகர இளைஞர் அணி அமைப்பும் குறைந்த பட்சம் 4 படிவங்களைப் பெற்று, நூறு இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் எனவும்;

மாநகராட்சிக்கு உட்பட்ட 820 வட்ட அமைப்பாளர்களும் குறைந்த பட்சம் ஒரு படிவத்தைப் பெற்று, தலா 25 இளைஞர்களைச் சேர்க்க வேண்டும். இப்பணியினை பகுதி அமைப்பாளர்கள் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் - 2

ஆய்வுக் கூட்டங்கள்

கழகத்தில் சேர்க்கப்படும் புதிய இளைஞர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டங்கள் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக நடைபெறும் எனவும்; அப்போது புதிதாக கட்சிகளில் சேர விண்ணப்பிக்கும் இளைஞர்களிடம் நேரி டையாக விண்ணப்பங்களை கழகப் பொதுச்செயலாளர், தலைமைக் கழக நிர்வாகிகள், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பெற்றுக் கொள்வார்கள் எனவும்;
முதல் கட்டமாக நவம்பர் 8 ஆம் தேதி காலை, திருநெல்வேலி மாநகர் மாவட் டம், மாலை திருநெல்வேலி புறநகர் மாவட்டம்,

நவம்பர் 9 ஆம் தேதி, காலை கன்னியாகுமரி மாவட்டம்; மாலை தூத்துக்குடி மாவட்டம்,

நவம்பர் 10 ஆம் தேதி காலை, விருதுநகர் மாவட்டம்; மாலை மதுரை மாநகர் மாவட்டத்திலும் இக்கூட்டங்கள் நடைபெறும் எனவும்;

அதன் பின்னர் ஒன்றிய, நகர, பகுதி அளவிலான இளைஞர் அணி பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்படும் எனவும்;

தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளிலும், ஊராட்சி இளைஞர் அணி அமைப்பாளர்களை நியமிப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் -3

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு - விருதுநகர்

விருதுநகர் நகரில் பேரறிஞர் அண்ணா பிறந்த திருநாளாம் செப்டம்பர் 15 இல் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா - கழக திறந்த வெளி மாநாட்டில் இளைஞர் அணியினர் 10,000 பேர் சீருடையில் பங்கேற்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் -4

தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த  இந்திய இராணுவ அமைச்சர் பதவி விலக வேண்டும்

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை இராணுவத் தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாட்டோம் என்று மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி தமிழகத்தில் உறுதிகூறிய அதே நாளில், பயிற்சிக் காக இலங்கை இராணுவத்தினரை, தமிழகத்தில் அனுமதித்திருப்பது இராணுவ அமைச்சரின் கண்ணியத்தையும், நேர்மையையும் கேள்விக்குரியாக்கி உள்ளது. இது இந்தியாவிற்கு அவமானச் செயலாகும்.

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி அப்பதவியை வகிக்க தகுதியற்றவராகிறார். அவர் உடனே பதவி விலக வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் -5

இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி கூடாது

இலட்சக்கணக்கான தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த, இலங்கை இராணுவக் கொலைகாரர்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து மட்டுமல்ல,இந்தியா வில் எந்த இடத்திலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும், அவர்களை உடனடி யாக வெளியேற்ற வேண்டும் என்றும், இனி எப்போதும் இந்தியாவில் இலங் கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கக்கூடாது எனவும் இக்கூட்டம் இந்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் -6

மத்திய அரசே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்து!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவையும் மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என இக்கூட்டம் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் -7

உயர்கல்வியில் சீர்திருத்தம் செய்க!

பல்கலைக் கழக நடைமுறைச் சட்டத்தில் உள்ள குளறுபடிகளை முற்றிலும் களைந்து ஊழலுக்கு இடம்தராத வகையில் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர் தேர்வு முதல் அனைத்து நிர்வாகிகள் தேர்வு, மாணவர்கள் சேர்க்கை ஆகியவை நடைபெறவும், பல்கலைக் கழகங்கள் சிறப்பான முறையில் வளர்ச்சி பெறவும் புதிய பல்கலைக் கழகச் சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும்;

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் சேர்க்கைக்கு ஒவ்வொரு பல் கலைக் கழகத்திலும் அனைத்துக் கல்லூரிகளையும் இணைத்து ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்;

சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் கல்விக் கட்டணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் எனவும்;

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பதுடன்;
தமிழகத்திலுள்ள 520 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், வருடம் தோறும் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியி யல் கல்வி பயில்வதற்காக சேர்கிறார்கள். எந்தப் பிரிவிற்கு எத்தனை வேலை வாய்ப்புகள் கிடைத்தது? வேலை இல்லாமல் எத்தனை மாணவர்கள் இருக்கி றார்கள்? என்ற விபரத்தை அரசு வருடம் தோறும் வெளியிட வேண்டும். புதி தாக பொறியியல் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு தாங்கள் பயிலப் போகும் பிரிவில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து அறிய உதவும் வகை யில் அரசு உதவ வேண்டும் எனவும் மத்திய-மாநில அரசுகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் -8

மத்திய அரசு 2008 இல் அறிவித்த உலகத்தர பல்கலைக் கழகத்தை உடனடியாக அமைத்திடுக!

உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களின் வரிசையில் முதல் 200 இடங் களுக்குள் இந்தியாவில் எந்தப் பல்கலைக் கழகமும் இல்லை.2008 ஆம் ஆண்டு அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அiமைச்சர் அர்ஜூன் சிங் கால் அறிவிக்கப்பட்ட 14 உலகத்தரப் பல்கலைக் கழகங்களில் ஒன்றுகூட இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. தமிழகத்தில், கோவைக்கு அறிவிக்கப் பட்ட இந்தப் பல்கலைக் கழகத்தை உடனடியாக நிறுவ மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் -9

தமிழக அரசு அறிவித்த, இந்தியப் பாரம்பரிய மருத்துவப் பல்கலைக் கழகத்தை உடனடியாகத் தொடங்கிடுக!

சித்தா, ஆயுர்வேதா உள்ளடக்கிய இந்திய மருத்துவத்துறை வளர்ச்சிக்காக இந்தியப் பாரம்பரிய மருத்துவப் பல்கலைக் கழகம் கன்னியாகுமரியில் அமைக்கப்படும் என்று 2010 ஆம் ஆண்டிலேயே தமிழக அரசால் அறிவிக்கப் பட்டது. ஆனால், இதுவரை இத்திட்டம் நிறைவேறவில்லை. தற்போதைய அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே 1.5 கோடியை தற்காலிக நிதியாக ஒதுக்கியும், அதனைப் பயன்படுத்தாமல் இத்திட்டம் இன்னமும் கிடப்பில் உள்ளது. உடனடியாக இப்பல்கலைக் கழகம் தொடங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் -10

மருத்துவம்

தமிழகத்தில் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதனை சரிசெய்ய மாவட்டத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளை விரைவில் ஏற்படுத்த வேண்டும் எனவும்;

சென்னையில் அமைய இருக்கின்ற ஹஐஐஆளு-க்கு இணையான, பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவ மனையைப் போல கோவையிலும், மதுரையிலும் அமைக்கப்பட வேண்டும் எனவும்;

சிறப்பு மருத்துவர்களின் தேவையை கருத்திற்கொண்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கையை உயர்த்து கின்ற வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் எனவும் மாநில அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் -11

தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்துக!

தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கிறது. பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சித்த மருத்துவச் சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்;

சித்த மருத்துவத் துறையில் உள்ள அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும் எனவும்; சித்த மருத்துவ விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள் ள வேண்டும் எனவும்;

தமிழைக் காப்பாற்ற போராடும் நாம், தமிழ் மருத்துவத்தையும் அதன் பயன் களை தமிழகம் மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் எடுத்துச் செல்கின்ற வகையில் இத்துறையினை மேம்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் -12

விளையாட்டுத் துறையை மேம்படுத்திடுக!
இளைஞர்களை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடும், சகோதரத்துவ எண்ணத்தோடும் வைத்திருக்க உதவுவது விளையாட்டு ஆகும். ஆனால், இன்று விளையாட்டு மைதானமே இல்லாத பள்ளிகளில்தான் மாணவர்கள் படிக்கின்ற நிலை உள்ளது.

இந்நிலை மாறிட அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் உடற்பயிற்சி கூடங் களும், விளையாட்டு மைதானங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும. சிறந்த விளையாட்டு பயிற்சியாளர்களைஅதிக அளவில் நியமனம் செய்ய வேண்டும். இதற்கு தனிக்கவனம் செலுத்தி, விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வண்ணம் அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் -13

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளிலும், ஊராட்சி அமைப்புகளிலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், சுற்றுச் சூழல் விதிகளின் படி மேலாண்மை செய்யப் படாததால், அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகிறது. நிலத்தடி நீரும், காற்றும் மாசுபடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு மக்கள் தாங்கமுடியாத துன்பத்திற்கு உள்ளாகிறார்கள்.

மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க, சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் மூலம் மக்களிடம் கருத்துகளைக் கேட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் மாநில அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் -14

யானை மனித மோதல்கள்

சமீப காலமாக மலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் யானை-மனித மோதல் கள் ஏற்பட்டு, மனித உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. விவசாயப் பயிர்களுக் கும் சேதம் ஏற்படுகிறது.இதனைத் தடுத்து நிறுத்த,

மிகவும் மந்த நிலையில் நடைபெற்று வருகின்ற அகழிகள் வெட்டும் பணியை முழுமையாகவும் விரைந்தும் செய்து முடிக்க வேண்டும் என்பதுடன், யானை விரட்டும் குழுக்களுக்கு அதிகமான பணியாளர்களையும், வனத்துறைப் பணி கள் செம்மையாக நடைபெற போதுமான வனப்பணியாளர்களையும் நியமனம் செய்ய வேண்டும் எனவும்;

வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இயற்கைக்கு பாதிப்பு இல்லாமல், வளர்ச் சிப் பணிகளை மேற்கொள்வதற்கு புதிய சட்டதிட்டங்கள் வகுக்கப்பட வேண் டும் எனவும்; யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்; தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் -15

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்திடுக!

தமிழகத்தில் 2000 ஆண்டு சாலை விபத்துகளில் இறந்தவர்கள் 8269 பேர். ஆனால், 2012 , இறந்தவர்கள் 15,400 பேர். விபத்து இறப்புகள் இருமடங்காக அதிகரித்து உள்ளது. பல்வேறு நாடுகளில் விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து, அவர்கள் எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்புகள் குறைந்திருக்கின்றன.

சாலை விபத்துக்கு முக்கியக் காரணம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தான். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும், தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் உள்ள டாÞமாக் கடைகளை தமிழக அரசு மூட நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது.

அதனால், முதல் கட்டமாக தமிழக அரசு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை களில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும்;

தினந்தோறும் 43 பேர் சாலை விபத்துகளால் உயிர் இழக்கின்றனர். இதனைத் தடுக்க வேகக்கட்டுப்பாடு, சாலைகளின் நிலை, போக்குவரத்து விதிகள் போன்ற பல காரணங்களை ஆராய்ந்து விபத்துகளை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் -16

தமிழகத்தின் இரயில்வே திட்டங்களை விரைவு படுத்திடுக!

தமிழகத்தின் பல்வேறு இரயில்வே வளர்ச்சித் திட்டங்களும், இரயில் பாதை அகலப்படுத்தும் பணிகளும் மிகவும் மெத்தனமாக நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. இதனால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. இப்பணி களை விரைவுபடுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்;இரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை, மாநில அரசு விரைவாக முடித்துத்தர வேண்டும் எனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் -17

மாநில அரசின் நிதிப் பங்கீட்டின் கீழ் புதிய இரயில்வே திட்டங்களைப் பெற்றிடுக!

பல மாநிலங்கள் இரயில்வே திட்டங்களில் தனது நிதி பங்கீட்டைத் தருவ தனால், பல புதிய திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று பயனடை கிறார்கள். கர்நாடாகா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்துகின்றன. ஆனால், தமிழகம் இந்த வாய்ப்பு களை பயன்படுத்துவதே இல்லை. அதனால் வரும் ஆண்டிலாவது, மாநில அரசு தனது நிதிப் பங்கீட்டினைத் தந்து புதிய திட்டங்களை தமிழகத்திற்குப் பெற்றுத் தர வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் -18

தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற நகரங்களிலும் மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துக!

மத்திய அரசு, இந்தியாவில் 19 நகரங்கள் மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல் படுத்த தகுதியான நகரங்கள் என அறிவித்துள்ளது. இந்த நகரங்களில் மெட்ரோ இரயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசும் தன் பங்கு நிதியை அளிக்கும். இரண்டாம் நிலை நகரங்களான கோவையும், கொச்சியும் இந்தப் பட்டியலில் வருகின்றது. கொச்சியில், கேரள அரசு இத்திட்டத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. ஆனால், தொழில் நகரான கோவையில் இத்திட்டத்திற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தத் திட்டம் நிறைவேற்றப் பட்டால், சாலைப் போக்குவரத்து நெருக்கடி பெருமளவில் குறையும்.

உடனடியாக கோவையில் இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என மாநில அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் -19

சாதி மோதல்களற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம்!

சாதி மோதல்கள் இல்லாத சமத்துவத் தமிழகத்தை உருவாக்க தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் பாடுபட்டார்கள். ஆனால் இன்று, ஜாதி மோதல்கள் உருவாகி மனிதாபிமானமற்ற முறையில் கொலைகளும், தீவைப்புச் சம்பவங்களும் நடைபெறுகின்றன. அனைத்து சாதி, மத மக்களும் சகோதரத்துவத்தோடும், அன்போடும், பாசத்தோடும், ஒற்றுமையோடும் வாழ்கின்ற சூழலை ஏற்படுத்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சீரிய தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க. இளைஞர் அணி தொடர்ந்து பாடுபடும் என இக்கூட்டம் உறுதி ஏற்கிறது.

தீர்மானம் -20

நடைப்பயண வீரர்களுக்கு பாராட்டு!

இளைஞர்களையும், மாணவர்களையும் சீரழித்து வருகின்ற கொடிய மதுப் பழக்கத்தில் இருந்து தமிழகத்தை விடுவிக்க, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் தமிழக 2012 டிசம்பர், 2013 பிப்ரவரி, 2013 ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 38 நாட்கள் நடைப்பயணத்தில் பங்கேற்ற நடைப்பயண வீரர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் பாராட்டுத் தெரிவிப்ப தோடு இலட்சோப இலட்சம் ஏழைத் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் நடைப்பயணம் பெரும் வரவேற்பைப் பெற ஒத்துழைப்பை நல்கிய மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சான் றோர் பெருமக்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

முழு மதுவிலக்கை அமல்படுத்திட வலியுறுத்தி மக்களைத் திரட்ட பொதுச் செயலாளர் வடிவமைக்கும் பிரச்சார இயக்கங்களில் இளைஞர் அணி முழுமை யாக பங்கேற்க உறுதி ஏற்கிறது.

No comments:

Post a Comment