Wednesday, June 19, 2013

இளைஞர்களே கிளர்ந்து எழுங்கள் ! பகுதி 3

இளைஞர்களுக்குச் சொல்லுவேன். கொலைகாரன் ராஜபக்சே கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அது முடியும். உலகெங்கும் உள்ள தமிழ் இளைஞர்கள், ஒரு சேர எழ வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் பொங்கி எழுந்தால் போதும். நான் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை. நாங்கள் இதுவரையிலும் ஒரு சிறு 
வன்முறையிலும் ஈடுபட்டது இல்லை, ஊக்கம் அளித்ததும் இல்லை.-வைகோ 

அதைவிடக்கொடுமை, 2010 டிசம்பர் 2 ஆம் நாள் இன்னொரு காணொளியை ஒளிபரப்பியது சேனல் 4 தொலைக்காட்சி. அதைப் பார்க்க முடியாது. ஈழத்தில்
இனக்கொலை, இதயத்தில் இரத்தம் என்று நான் வெளியிட்ட குறுந்தகட்டிலே அரை நிமிடம் காட்டியதற்கே நான் துடித்துப் போனேன். பிறந்த மேனியோடு சிதைக்கப்பட்டுக் கிடக்கிறாள் இசைப்பிரியா. யாழ் வாசிப்பதிலே வல்லபி. அந்த அழகான பெண், அகல் என்ற பெயர் கொண்டதன்னுடைய நான்கு மாதக் கைக்குழந்தையைக் குண்டுவீச்சிலே பறிகொடுத்த அந்தத் தங்கை இசைப்பிரி யாவை, சிங்கள வெறிநாய்கள் கூட்டமாகக் கற்பழித்துக் கொன்று இருக்கின் றார்கள். அதைப்பற்றி அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம், செல்போன்களில்
பதிவாகி இருக்கிறது.
இவ்வளவு கொடுமைகளையும் செய்த இராஜபக்சே கூட்டத்தைக் கூண்டிலே நிறுத்த வேண்டும் என்று உலகம் சொல்லிக் கொண்டு இருக்கின்றபோது,
முன்பு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அவனுக்கு ஆதரவாக வாக்கு களைத் திரட்டிக் கொடுத்த இந்தியா, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் போட்டபோது,
அவனுக்கு எல்லாப் பொருளாதார உதவிகளையும் செய்தது இந்தியா. அதுமட் டும் அல்ல, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சிறப்பு விருந்தின னாக அவனை அழைத்துக் கொண்டு வந்தும், திருப்பதியில் பூரண கும்ப வர வேற்பும் கொடுத்தார்கள். ஏழு கோடித் தமிழர்கள் குடிமக்களாக உள்ள இந்தியா நாடே ராஜபக்சேயை வரவேற்கிறது, அப்படியானால், அங்கே போர்க்குற்றம் எதுவுமே நடக்கவில்லை என்று உலக நாடுகளுக்குக்காட்டுவதற்காக இந்தியா செய்த துரோகம் இது. இதற்கு மன்னிப்பே கிடையாது.

இன்னமும் சொல்கிறேன், இந்திய அரசுதான் இந்தப் போரைத் திட்டமிட்டு இயக் கியது. வாஜ்பாய் அரசு இருந்தவரையில், தமிழ் ஈழ விடுதலைப் புலி களைப் பாதுகாக்கத் துணை நின்றது. ஆனால், இவர்கள் அழிப்பதற்குத் திட்டம் போட்டார்கள்.



அறிவுரை சொல்வது எளிது

இன்றைக்குச் சிலர், அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லுகிறார்கள். அப்படி அறிவுரை சொல்லுவது எளிது. கஷ்டப்பட்டால் தான் தெரியும்.நாங்கள் என்ன பிழைப்புக்காக அரசியல் நடத்து கின்றோமா? இந்த மண்ணில் பிறந்த கடமைக்காகத் தமிழ் இனத்தைக் காக்கப் பொது வாழ்க்கைக்கு எங்களை ஒப்படைத்துக் கொண்டு இருக்கின்றோம்.(பலத் த கைதட்டல்) ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியப் பிரதமரிடம் கெஞ்சி இருக் கின்றோம், மன்றாடி இருக்கின்றோம், போராடி இருக்கின்றோம் தெரியுமா?

இந்தியா உதவியோடுதான் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தோம் என்று இராஜபக்சேவே சொல்லி விட்டான்.அவனுடைய அமைச்சர்களும் சொன்னார் கள். இந்தியாதான் இந்தப் போரை நடத்தியது.

2008 நவம்பர் மாதம் 12 ஆம் தேதி, போர் நிறுத்தம் வேண்டும் என்று, தமிழகச்
சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்கள். 13 ஆம் தேதி அந்தப்பயல்
டெல்லிக்கு வந்தான். போர் நிறுத்தமா? அதெல்லாம் கிடையாது என்று,பிரதமர்
வீட்டு வாசலில் நின்றுகொண்டு சொல்லுகின்ற துணிச்சல் அவனுக்கு எப்படி
வந்தது? என்ன கொழுப்பு அவனுக்கு? இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து திட்ட மிட்டு இந்தப் போரை நடத்தியதால்தான் இப்போது அவனைப் பாதுகாக்கத் துடிக்கின்றார்கள்.

இந்தத் தேர்தலில்தான் மரண அடி கொடுத்து இருக்கின்றானே தமிழன்,58 இடங் களிலே காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து இருக்கின்றானே? அதற்காக, போயஸ் தோட்டத்துக்கு வாழ்த்துச் சொல்கிறாரா சோனியா? எங்களை எவ னும் ஏமாற்ற முடியாது.

எல்லாக் காங்கிரஸ்காரர்களையும் நான் குற்றம் சொல்லவில்லை. காங்கிரஸ் இயக்கத்தில் வளர்த்தவர்களுள் ஒருவர் அண்ணன் நெடுமாறன். அண்ணாவுக் குத் தம்பியாக இருந்தார், அவரது நெஞ்சங் கவர்ந்தவராக இருந்தார். காமராச ரின் நேசத்துக்கு உரியவராக இருந்தார். எனவே, காங்கிரஸ் என்ற இயக்கத்தை நான் ஒட்டுமொத்தமாகக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. இத்தாலிய சோனி யா காந்தி கூட்டம்தான் காரணம். பகத்சிங் பிறந்த பஞ்சாப்பில் பிறந்த மன் மோகன் சிங்கை நாங்கள் மதித்தோமே? இப்படிச் செய்யலாமா? எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்து விட்டீர்கள்?

இன்றைக்கு இரண்டு பேரும் சேர்ந்து அறிக்கை கொடுத்து இருக்கின்றார்கள். என்ன அறிக்கை தெரியுமா? அதைத் தொலைக்காட்சிகளில் எப்படி ஒளிபரப்பு கிறார்கள் தெரியுமா? இலங்கை அரசு,போரின்போது நடைபெற்ற மனித உரி மை மீறல்களை, தானே விசாரிப்பதற்கு, இலங்கை அரசே ஏற்பாடு செய்யும்
என்பது இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு, இந்திய அரசு அதை ஏற்றுக் கொண்டது என்று தொலைக்காட்சிகளில் சொல்லுகிறார்கள்.

ஆனால், அப்படி இல்லை. ஐ.நா. தலையிட்டு ஒரு குழு அமைக்கிறது என்று சொன்னவுடன், இந்தக் கொலைகாரப் பயல், அவன் ஒரு குழுவை நியமித்தான்.
Lessons Learned and REconciliation Commissions. . அதாவது, கற்றுக்கொண்ட பாடங்கள்,
நேர்ப்படுத்தும் ஆணையம். இது அவன் போட்டது.சுருக்கமாக, LLRC என் கிறான். இதற்கு, நான் எனன பெயர் வைத்தேன் தெரியுமா? Lies Launched and
Renegade Commission.

அவன் சொல்வதெல்லாம் பொய். அது, ஆளுங்கட்சிக்குச்சாதகமான ஆணை யம். நடுநிலையோடு விசாரிக்கவில்லை. இது ஒரு பித்தலாட்டம். இன்றைக் கு, இந்திய அரசும், இலங்கை அரசும் சேர்ந்து கொடுத்து இருக்கின்ற இந்த அறிக்கையில், நாங்களே எல்லாம் விசாரித்துக் கொள்வோம் என்று அந்தக் கொலைகாரப் பயல், இந்தியாவிடம் சொல்லி விட்டானாம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை 

இந்தியா என்ன செய்யப் போகிறது? அங்கே உள்ள மக்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்கு சீக்கிரமாக வேலை செய்யுங்கள் என்று சொல்லி விட்டார் களாம்.இலங்கையின் வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் சொல்லு கிறான், மனிதாபிமான முறையில், எங்களுக்கு இந்தியா உதவி செய்தது என் கிறான். கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு உதவியது. பலாலி விமான தளத் தை மேலும் பழுதுபார்த்துப் புதுப்பித்துக் கொடுப்பதற்கு, இந்தியா உதவி செய் கிறது.

அந்தப் பலாலி விமானதளத்திலே இருந்துதானே விமானத்தை ஏவி, செஞ் சோலையில் 61 குழந்தைகளைக் குண்டு வீசிக் கொன்றான்? 17 சுனாமி மறு வாழ்வுத் தொண்டர்களைக் கொன்றான்.இதையெல்லாம் இந்தியா கண்டிக்க வே இல்லை. பத்திரிகையாளர் சிவராம் தராக்கியை, நடுத்தெருவுக்கு இழுத்து வந்து சுட்டுக் கொன்றார்கள். வாகறை என்ற இடத்தில், 80 தமிழர்கள் கொல்லப் பட்டதைக் கண்டித்து, கொழும்பில், ஐ.நா. மன்ற அலுவலகத்துக்கு முன்பு, நட ராஜா துரைராஜ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். பட் டப்பகல் 1 மணிக்கு, நடுத்தெருவில் சுட்டுக் கொன்றார்கள். நான்கு நாடாளு மன்ற உறுப்பினர்களைக் கொன்றார்கள்.

ஜோசப் பரராஜ சிங்கம், 2005 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், தேவால யத்தில் மண்டியிட்டு ஜெபித்துக்கொண்டு இருந்தார். மனைவி அருகில் இருக் கின்றார்.சர்ச்சுக்கு உள்ளேயே வந்து, நேருக்கு நேராகச் சுட்டுக் கொன்றார்கள்.

எங்கள் புலிப்படை வீரர்கள், எத்தனையோ சகோதரிகள், அங்கே மண்ணுக்கு உள்ளே எலும்புகளாகக் கிடக்கின்றார்கள். ஆனால், விவிலியத்தில் எசேக்கி யல் என்ற பகுதியில், எலும்புகளுக்கு உள்ளே உயிர் வரட்டும் என்ற வாசகம் இருக்கின்றது. அதைப்போல, ஈழத்து மண்ணில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந் தையும், தங்கள் இனத்தைக் காக்க எழும். தங்கள் தாயகத்தைத் தனி நாடாக அமைக்க உரிமை உள்ளவர்கள். அதை யாரும் தடுக்க முடியாது. ஜெனீவா உடன்படிக்கை ஒப்புக் கொண்டு இருக்கின்றது.

களவாணி, கொலைகாரன் இந்தியா

ஆனால், இங்கே சொல்லுகிறான். காங்கேசன் துறை துறைமுகத்துக்கு இந்தி யா உதவியது.அதைவிட, இங்கே தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை. மின் வெட் டு. நம் தலைமீது அணு உலைகளை வைத்துவிட்டு, அதில் இருந்து வருகின்ற மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். எப்போது ஆபத்து வரும் என்று தெரியாது. ஆனால், இவன், இலங்கைக்கு மின் சாரம் கொடுக்கப் போகிறானாம். 2010 ஆம் ஆண்டு, ஒப்பந்தம் போட்டு விட்டா னாம். இலங்கையில் மின் நிலையங்களை அமைப்பதற்காக அப்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தை, இப்போது வெளியிடுகிறான்.

ஐ.நா. மன்றத்தின் குழு அறிக்கையை நாம் பேசி என்ன பயன்? என்ன இந்திய
அரசாங்கத்துக்கு வேண்டுகோள்? அவன்தான் குற்றவாளி. களவாணி,கொலை காரன் இந்திய அரசிடம் என்ன வேண்டுகோள்? அது மட்டும் அல்ல.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் இல்லையாம்

அது மட்டும் அல்ல. 26 அக்டோபர் 2008 ஆம் ஆண்டு இவர்கள் ஒப்பந்தம் செய்து
கொண்டபடி, மீனவர்களின் மீதான தாக்குதல் அடியோடு குறைந்து விட்டதாம்.
இது இன்றைக்கு வெளியிட்ட அறிக்கை.அதற்குப்பிறகு தாக்குதலே இல்லை யாம். பத்து நாள்களுக்கு முன்புதானே,கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது என்பதற்காக, தங்கச்சி மடத்தில் எங்கள் மீனவர்கள் நான்கு பேரைக் கொன்று போட்டான்? அதற்குச்சில நாள்களுக்கு முன்புதானே புஷ்பவனம் ஜெயக்குமாரை, கழுத்தில் கயிறைக் கட்டிக் கொன்றான்? அதற்குப் பத்து நாள் களுக்கு முன்புதானே புதுக்கோட்டை ஜெகதாபட்டினம் மீனவர் பாண்டிய னைக் கொன்றான்?

இவ்வளவு நடந்து இருக்கின்றது, இன்றைக்கு வெளியிட்ட அறிக்கையில், மீன வர்கள் மீது தாக்குதல் நின்று போய்விட்டது என்கிறான்.

அது மட்டும் அல்ல. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டுமாம். அதற்கு இவர்கள் யோசனை சொல்லுகிறார்களாம். அமெரிக்கா புலிகளைத் தடை செய்து இருக்கிறது. ஆனால், போரை நிறுத்தச் சொன்னது. பிரிட்டன் தடை செய்து இருக்கிறது. ஆனால், போரை நிறுத்தச் சொன்னது. அந்த நாடு களின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொன்னார்கள். அதிபர் பாரக் ஒபாமா வும் சொன்னார்.

கருணாநிதியின் கீறல் ரிகார்டைத் திரும்பப் போடாதீர்கள்

இப்போது, நாங்கள் சொல்லுகிறோம், இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.எந்தத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் புலிகளைத் தடை
செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டார்களோ,இப்போது தடையை நீக் கக் கோரி தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதெல்லாம் முடியாது, சட்டம் ஒழுங்கு என்று பூச்சாண்டி காட்டினால், அதையெல்லாம் வருங்காலத்தில் எங்கள் இளைஞர்கள் உடைத்துக் கொண்டு வருவார்கள்.

நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. அது இரண்டு நாடுகளுக்கு இடையே யான பிரச்சினை. மத்திய அரசுதான் தலையிட வேண்டும் என்று சொன்னால், அது கருணாநிதியின் கீறல் விழுந்த ரிகார்டு. அதைத் திரும்பப் போடாதீர்கள்.

எது இரண்டு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை? அது உள்நாட்டுப் பிரச்சி னையா? பங்களாதேஷ் பிரச்சினையை, உள்நாட்டுப் பிரச்சினை என்று சொன் னார்களா? அது சர்வதேச மனித உரிமைப் பிரச்சினை என்று இந்திரா காந்தி சொல்லவில்லையா? புபேஷ் குப்தா சொல்லவில்லையா? அன்றைக்கு இந்திய அரசியல் கட்சிகள் சொல்லவில்லையா?

பங்களாதேசிலே, டாக்காவிலே இவ்வளவு படுகொலைகளா நடந்தன? பெண் கள் குழந்தைகள் கொல்லப்பட்டார்களா? இங்கே எங்கள் இனமே அழிக்கப்பட்டு விட்டது. இது சர்வதேச மனித உரிமைப் பிரச்சினை.இந்திய அரசு இந்தப்போர்க் குற்றத்திலே பங்கெடுத்து இருக்கின்றது. இத்தாலிய சோனியாகாந்தி தான் முழு முதல் குற்றவாளி. ஆம். நான் குற்றம் சாட்டுகிறேன். எனக்கு எதைப்பற் றியும் பயமோ, கவலையோ துளியும் கிடையாது. (பலத்த ஆரவாரம்).

இந்த உயிர் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கும்? இதோ போய்விட்டான் முத்துக்குமார். புகழோடு வாழுகின்றான். நான் வாழ்க்கையின் பெரும்பகுதி யைப் பார்த்து விட்டேன். இலட்சியங்களுக்காக, பிறந்த பொன்னாடாம் தமிழ் நாட்டுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டு இருக்கின்றேன்.

இவ்வளவு கொடுமைகளா நடந்தன நம் காலத்தில்? வரலாறு நம்மைச் சபிக் கும். கரிகாலன் வாழ்ந்த தமிழகமா? இராஜராஜன் படையெடுத்துச் சென்ற தமி ழகமா? பராந்தகன் வாழ்ந்த தமிழகமா? வடதிசைக்குச் சென்று, குயிலாலுவத் திலே வென்று, கனக விசயன் தலையில் கல் எடுத்து வந்த சேரன் செங்குட்டு வன் வாழ்ந்த தமிழகமா? எல்லாம் வெறும் பழங்கதையா? வீரம் செத்து விடாது, மானம் அழிந்து விடாது.

இளைஞர்களுக்குச் சொல்லுவேன். கொலைகாரன் ராஜபக்சே கூண்டில் நிறுத் தப்பட வேண்டும். அது முடியும். உலகெங்கும் உள்ள தமிழ் இளைஞர்கள், ஒரு சேர எழ வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் பொங்கி எழுந்தால் போதும். நான் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை. நாங்கள் இதுவரையிலும் ஒரு சிறு
வன்முறையிலும் ஈடுபட்டது இல்லை, ஊக்கம் அளித்ததும் இல்லை. ஆனால், நம்முடைய மக்களுக்காக போராடுகிறோம்.

எனது ஈழப்பயணம்: நடந்தது என்ன?

அண்ணன் தா. பாண்டியன் அவர்கள் ஒரு புதிர் போட்டு விட்டுப்போய்விட்டார். கலைஞர் கருணாநிதி ஒரு விடுகதை போட்டு இருக்கின்றாராம். அன்றைக்குப்
பேச்சுவார்த்தை நடத்தியவர்களுள் இரண்டு பேர் இல்லை. இரண்டு பேர் இருக் கின்றார்கள். அதாவது ராஜீவ் காந்தியும், மாறனும் இல்லை. கருணாநிதியும்,
வைகோவும் இருக்கின்றார்கள் என்கிறார். இப்போது இல்லாத ஆள்கள் யார் என்று பார்த்து, அவர்கள் சொன்னதாக கருணாநிதி எதையாவது சொல்லுவார்.
இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, இத்தனாம் தேதி நடந்தது என்றெல் லாம் சொல்லுவார். எவனும் கண்டுபிடிக்க முடியாது. கடந்த மூன்று நாள்களா கத்தான் சும்மா இருக்கிறார். (பலத்த சிரிப்பு) அவரை நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம், பாவம். 

அவர் என்ன செய்தார் தெரியுமா? 89 ஆம் ஆண்டு, இவர் முதல் அமைச்சராக ஆவதற்கு முன்னால், போரை நிறுத்த வேண்டும் என்றார். அன்று நான் தி.மு. க.வின் வெறி பிடித்த தொண்டன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு இருந்த தொண்டன். ஆனால், எம்.ஜி.ஆர். அமெரிக்கா வில் நோய்ப்படுக்கையில் இருந்தபோது,போரை நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் மனிதர்.(பலத்த கைதட்டல்) அதனால்தான், அவரைக் கடவுளாக வைத்து இருக்கிறார்கள் ஈழத்திலே. விடு தலைப்புலிகளுக்கு ஆயுதக் களம் அமைத்துக் கொடுத்தவரே மனிதநேயராகிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இதை,அண்ணா தி.மு.க. தொண்டர்கள் உணர வேண்டும்.

வல்வெட்டித்துறையில் எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் சிலை வைத்து இருக்கி றார்கள். அதையும் உடைத்துப்போட்டு விட்டான். இந்திராகாந்தி படத்தை வீட்டுக்கு வீடு வைத்து இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் அவ்வளவு உதவி செய்தார்கள். அவருக்குத் தொலைநோக்குப் பார்வை இருந்தது. இன்றைக்கு,
நீங்கள் பாகிஸ்தானையும், சீனாவையும் அங்கே கால் ஊன்ற வைத்து விட்டீர் களே?

அவன் தாக்கினால், எங்கள் ஆவடி அல்லவா பாதிக்கப்படும்? கல்பாக்கம் அல் லவா நொறுங்கும்? விஜயநாராயணம், கூடங்குளம் அல்லவா தாக்கப்படும்?
எங்களுக்கு அல்லவா அழிவு நேரும்?

அன்றைக்கு, இந்தியா போரை நிறுத்த வேண்டும் என்றார் கருணாநிதி. 89 தேர் தலில் வெற்றி பெற்றார். அவரைப் பார்ப்பதற்காக, காசி ஆனந்தனும், நடேச னும் வந்தார்கள்.அவர்களைச் சந்திக்க மாட்டேன் என்று சொன்னார்.பிறகு, அவர்கள் எப்படியோ பார்த்தார்கள். அப்போது என்ன சொன்னார் தெரியுமா? ஆயுதங்களையெல்லாம் கீழே போட்டு விடுங்கள். அப்போதுதான், இந்தியா
சண்டையை நிறுத்தும் என்றார். அவர்கள் தலையில் இடி விழுந்ததுபோல, எண்ணண்ணே இப்படிச் சொல்கிறார்? என்றார்கள். அப்போது, டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் இருந்தது. இவரிடம் பேசி விட்டு, அங்கே வந்தவர்கள், என்ன செய்வது என்றே தெரியவில்லையே? என்றார்கள். அப்போது, நான் சொன்னேன். அங்கே உள்ள நிலைமையைப் பார்க்க நானே வருகிறேன். தம்பி யிடம் சொல்லுங்கள் என்றேன்.

என்ன கேலி செய்கிறீர்களா? சண்டை பலமாக நடக்கின்றது.போனால், உயி ரோடு திரும்ப வர முடியாது என்றார்கள்.நீங்கள் அவரிடம் சொல்லுங்கள்.நான்
வருவது என்று முடிவு செய்து விட்டேன். அதன்பிறகு சொன்னார்கள். அவரும் சண்டை கடுமையாக நடக்கிறது. எனவே வருவதில் ஆபத்து உள்ளது பயணம்
வேண்டாம் என்றனர். இல்லை நான் கண்டிப்பாக வருவேன் என்றேன். அதற் குப்பிறகு வரச்சொன்னார்.வெள்ளோட்டத்துக்கு ஒரு படகை அனுப்பினார்.இன் றைக்கு பெளர்ணமி. அன்றைக்குத் தை அமாவாசை நாளில் நான் சென் றேன். 

போவதற்கு முன்பு, என் உயிர் நண்பர் குட்டி மூலமாக,கலைஞர் கருணாநிதிக் கு ஒரு கடிதத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டேன். நான் அங்கே சென்று ஏதா வது ஆனாலும், இவர் மீது பழி வரவேண்டாம் என்பதற்காகக் கொடுத்துவிட்டுச் சென்றேன். என் உயிரே போனாலும், உங்களையோ, கட்சியையோ காட்டிக் கொடுக்க மாட்டேன்; அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், என்னை நானே பலி யிட்டுக் கொள்வேன் என்று எழுதி அனுப்பி விட்டேன்.

அந்தக் கடிதத்தை ஐந்தாம் தேதி இரவு என் நண்பர் குட்டியிடம் கொடுத்தேன். ஏழாம் தேதி காலை 6.30 மணிக்கு, கோபாலபுரம் வீட்டில் கொண்டு போய் கலை ஞரிடம் கடிதத்தைக் கொடுத்து விட்டார். இவர், 9 ஆம் தேதிதான் டெல்லியில் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். அதற்குப்பிறகு வந்து சொல்கிறார். நான் ஈழத் துக்குச் சென்று இருப்பது அவருக்குத் தெரியும்.ஆனால், அதை நான் எங்கேயா வது சொன்னேனா? மல்லிகையில் சொன்னேனா? எஸ்.ஐ.டி.யிடம் சொன்னே னா? இல்லை. அவருக்குத் தெரியாது என்றுதான் சொன்னேன். வைகோ, என் றைக்கும், யாருக்கும் துன்பம் இழைக்க மாட்டான். (பலத்த கைதட்டல்).

ஆனால், இவர் சட்டமன்றத்தில் என்ன சொன்னார் தெரியுமா? நான் போய் ராஜீவ் காந்தியைச் சந்தித்தேன்.தம்பி மாறனும் உடன் இருந்தார். அப்போது, ராஜீவ் காந்தி என்னிடம், நீங்கள் போய் பிரபாகரனைச் சந்தித்து விட்டு வாருங் கள், கோபால்சாமியையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்றார்.இதைத் தெரிந்து கொண்டு, முந்திரிக்கொட்டை போல தான் மட்டும் ஈழத்துக்குச் சென்று, காரியத்தைக் கெடுத்து விட்டார் என்று சொன்னார்.

இப்படி ஒரு பொய்யை உலகத்தில் எவனுமே சொல்ல முடியாது. நான்தான் ஆறாம் தேதி மாலையிலேயே ஈழத்துக்குப் புறப்பட்டுச் சென்று விட்டேன். இவர் ராஜீவ் காந்தியைப் பார்த்ததே ஒன்பதாம் தேதிதானே? அது மட்டும் அல்ல. கடிதத்தில் இவரைப் பற்றிப் பாராட்டி நான் எழுதி இருந்ததை மட்டும் சட்டசபையில் வாசித்துப் பதிவு செய்து விட்டு, மற்ற எதையும் அவர் சட்ட மன்றத்தில் குறிப்பிடவே இல்லை.

இதையெல்லாம் நான் இங்கே பேச வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், அண்ணன் பாண்டியன் அவர்கள் இதைப் பற்றிப் பேசி, இவர்கள் இரண்டு பேருக்கும்தான் நடந்தது தெரியும் என்று சொல்லிவிட்டுப் போய்விட் டதால், நான் இங்கே விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.

இப்போது, கலைஞர் மிகவும் நொந்து போயிருக்கிறார்.அவரை மேலும் கஷ்டப் படுத்த நான் விரும்பவில்லை.ஆனால், அவர் செய்த துரோகங்களுக்கெல் லாம் மன்னிப்பே கிடையாது.

அதைப்போல, சோனியா காந்தி ஈழத்தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளை நாங்கள் மறந்து விட மாட்டோம். அதுவும், இன்றைக்கு இந்திய அரசு வெளி யிட்டு இருக்கின்ற அறிக்கை மன்னிக்க முடியாதது.கடுமையாகக் கண்டனத் தைத் தெரிவிக்கிறேன்.

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்சேவை நிறுத்த வேண்டும்.ஆனால்,ஏழு கோடித் தமிழர்கள் இருக்கின்ற இந்தியாவே சும்மா இருக்கிறதே என்றுதான், மற்ற நாடுகள் முன்வரவில்லை. கேடே நாம்தான். அதைத்தானே நோர்வே நாட்டுக் காரர்கள் சொல்லுகிறார்கள்.

கிளர்ந்து எழுங்கள்

இப்படி ஒரு சிக்கலில் நாம் தவித்துக் கொண்டு இருந்தாலும், இதில் இருந்து மீள முடியும். அதற்காகத்தான், முத்துக்குமார் உள்பட கிருஷ்ணமூர்த்தி வரை 17 பேர் தங்கள் உயிர்களைத் தாரை வார்த்துக் கொடுத்து இருக்கின்றார்கள்.
முள்ளிவாய்க் காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் நிராதரவாய்த் தவித்தார் களே, பதறினார்களே, பச்சைக்குழந்தைகளைப் பறிகொடுத்தார்களே, அந்தப்
பாவத்துக்கு மன்னிப்பு உண்டா? நாதியே இல்லையா தமிழ்ச்சாதிக்கு?

இதைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ராஜபக்சேயைக் கூண்டில் நிறுத்தித் தூக்கில் இட்டால்தான் தமிழன் சாப்பிட்ட சோறு செரிக்கும். தமிழ்
ஈழம் மலர்வதை நாம் காணத்தான் போகிறோம். செய்த தியாகம் வீண் போகா து. சிந்திய இரத்தத்தின் மீது ஆணை. எரியும் தழல் நெருப்பின் மீது ஆணை.
மாவீரர்கள் செய்த தியாகத்தின் மீது ஆணை.தமிழ் ஈழத்தை மீட்டெடுக்க, தமிழ கத்து இளைஞர் கூட்டம் கிளர்ந்து எழ வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment