அஞ்ச மாட்டோம்
இந்திய இராணுவத்தின் பயிற்சிக் கல்லூரியை முற்றுகை இடுவதாக நாங்கள் அறிவித்தோம்.தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதற்குப் பிறகு, 29 நாள்கள் கழித்து அவர்களைத் திருப்பி அனுப்பி இருக்கின்றாய்; அடுத்து மேலும் ஏழு சிங் கள இராணுவத்தினரை இங்கே பயிற்சிக்கு அழைத்து வருவதற்கு நீ திட்டம் வகுத்து இருக்கின்றாய்.
வெலிங்டனில் உள்ள இராணுவத்தினருள், தாய்த் தமிழகத்தின் மான உணர்வு உள்ள தமிழ் இளைஞர்களும் இருக்கின்றார்கள். எங்களுடைய இந்த உரைகள், அவர்களுடைய செவிகளுக்குப் போய்ச் சேரும்.
இந்திய அரசுக்குச் சொல்லுகிறேன்: உன்னுடைய எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ் சுகிறவர்கள் எவரும் இங்கே இல்லை. கோவை இராமகிருட்டிணன் ஆகட்டும், கொளத்தூர் மணி ஆகட்டும், நாங்கள் எல்லாம் பல ஆண்டுகள் சிறையில் அடைபட்டுக் கிடந்தவர்கள். அறிவாசான் தந்தை பெரியாரின் கருஞ்சட்டைப் பெரும்படையின் வீரர்கள் நாங்கள். மிசா சட்டம், தேசப் பாதுகாப்புச் சட்டம், தடா சட்டம், பொடா சட்டம் என உன்னுடைய அடக்குமுறைச் சட்டங்கள் அனைத்தையும் பார்த்தவர்கள் நாங்கள்.
இந்த வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரி இருக்கின்ற இடம், எங்கள் மண். இங்கே கொண்டு வந்து, சிங்களவர்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றாய். 1,37,000 பேர்களைக் கொன்று குவித்த சிங்கள இராணுவத்துக்காரன், தமிழர் களின் இரத்தகறை படிந்த கரங்களோடு, இந்தத்தமிழ மண்ணுக்கு வந்து பயிற்சி பெறுவதா? உன்னுடைய இராணுவத்தில் இருக்கின்ற எங்கள் இளைஞர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் கசப்பு அடைய எவ்வளவு நேரம் ஆகும்? நான் இப்படிப் பேசினால், இந்திய இராணுவத்தை எதிர்த்துப் பேசிவிட் டான் என்று உடனே என்னைக் கூண்டில் அடைக்க அவர்கள் முற்படுவார்கள். அதற்காக, அவர்கள் இந்த உரையைப் பதிவு செய்து கொண்டு இருக்கின்றார் கள் என்பதும் எனக்குத் தெரியும்.
ஜெயப்பிரகாஷ் நாராயண் விடுத்த அழைப்பு
இது, 2013 ஜூன் 25. 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள், நெருக்கடி நிலைக் காலத்தின்போது,தில்லி ராம்லீலா மைதானத்தில் உரை ஆற்றிய ஜெயப்பிர காஷ் நாராயண் சொன்னார்: இராணுவத்தில் இருக்கின்றவர்களே, எதேச்சாதி காரச் சட்டத்துக்கு உடன்படாதீர்கள்; அந்த உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாதீர்கள்; செயல்படாதீர்கள்; அவர்கள் ஏவுகின்ற இடங்களுக்குத் துப்பாக்கிகளோடு செல் லாதீர்கள்; இராணுவத்தின் கட்டளைகளை ஏற்காதீர்கள் என்று அறைகூவல் விடுத்தார். அன்று இரவிலேயே கைது செய்யப்பட்டார்.
அதுபோல, எங்கள் மக்களைக் கொன்று குவித்த கொடியவர்களை,இந்தத் தமிழ் மண்ணுக்கே அழைத்து வந்து பயிற்சி கொடுக்கின்றார்களே, போது, நாட்டைக் காக்கப் போராடுகின்ற என் அருமைச் சகோதரர்களே, உங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டால் நீங்கள் துடிக்க மாட்டீர்களா?
இது இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியா? அல்லது கொலைகாரன் இராஜ பக்சேவுக்குக் குற்றேவல் புரிகின்ற பயிற்சிக் கல்லூரியா? அல்லது, சிங்கள வனின் இராணுவப் பயிற்சிக் கல்லூரியா?
எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும். இந்தக் குன்னூரில் இருக்கின்ற பொதுமக்களைக் கேட்கின்றேன். இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களில் ஒரு பத்துப் பேரைப் படுகொலை செய்து விட்டு, அப்படிக் கொலை செய்த நாட்டுக்காரன் அந்த மாநிலத்துக்கு உள்ளே நுழைய முடியுமா? வங்காளி அனுமதிப்பாரா? மராட்டியர்கள் பொறுத் துக் கொள்வார்களா? மலையாளிகள் சகித்துக் கொள்வார்களா? பஞ்சாபியர்கள் தாங்கிக் கொள்வார்களா? இது நியாயமா?
நாம் மட்டும் மானம் அழிந்து போய்விட்டோமா? இது முத்துக்குமார்கள் பிறந்த மண். 1965 ஆம் ஆண்டிலேயே இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு மார்பு காட்டிய மாவீரர்கள் உலவிய மண் இது. அவர்களைச் சுட்டுக் கொன்று, அவர் களது உடல்களை அருகில் உள்ள மதுக்கரைக் காடுகளில்தான் கொத்துக் கொத்தாகப் போட்டுப் புதைத்தார்கள்.
தமிழனுக்கு மட்டும் அநீதியா?
வங்கதேசத்தை அமைப்பதற்காக, இந்திய இராணுவத்தை அனுப்பினீர்களே, உங்களுக்கு அங்கே என்ன வேலை என்று நாங்கள் கேட்க மாட்டோமா? மனித உரிமைகளைக் காக்க, மனிதாபிமானத்தின் அடிப்படையில் நாங்கள் படையை அனுப்புகிறோம் என்றாரே அம்மையார் இந்திரா காந்தி? அது உள்நாட்டுப் பிரச் சினை அல்ல பன்னாட்டு மனித உரிமைப் பிரச்சினை என்றாரே? அன்றைக்கு
இந்தியப் படைகளுக்குத் தலைமை தாங்கினாரே ஷாம் மனேக்ஷா, அவர் இந்த வெலிங்டன் மண்ணை நேசித்தவர். அன்றைக்கு வங்கதேசத்தை உருவாக்கிக் கொடுத்தீர்கள்.
இந்திய இராணுவத்துக்காக எத்தனையோ தமிழர்கள் இரத்தம் சிந்தி இருக்கின் றார்கள். சீறி வந்த குண்டுகளை மார்பில் தாங்கி மடிந்து, கார்கில் போர்முனை யில் திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவனே, எங்கள் காவிரி ஆற்றங்கரை யில் பிறந்த மேஜர் சரவணன். தனிநாடு கேட்ட அண்ணா, சீனம் படையெடுத்த போது, வீட்டுக்கு ஒரு பிள்ளை இராணுவத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள் ளச் சித்தமாகட்டும் என்று, வேலூர் சிறையில் இருந்தவாறு எழுதினார்: அள்ளி
வழங்குங்கள் நிதியை என்று அறிவித்தார். மதுரை முத்து தந்த தங்க வாளை, பாதுகாப்பு நிதிக்காகக் கொடுத்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எத்தனைத் தமி ழர்கள் உயிர் ஈந்தனர்? இந்த மண்ணில் பிறந்த இஸ்லாமிய இளைஞர்கள், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உயிர் கொடுத்தார்கள்.திணிக்கப்பட்ட

ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, நாட்டுக்காகப் போராடி இருக்கின்றார்கள்.
இந்த வேளையில், உத்தரகாண்டில், கேதார்நாத் பள்ளத்தாக்கில், இன்னமும்
பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றார்கள். அங்கும் எங்கள் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், தங்கள் உயிர்களைத் துச்சமாகக் கருதி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். ஆனால், கொள்ளிக்கட்டையைக் கொண்டு வந்து எங்கள் நெஞ்சில் திணிப்பதைப்போல, சிங்களவர்களைக் கொண்டு வந்து இங்கே பயிற்சி கொடுக்கின்றாய். இந்திய
இராணுவத்தை ஒன்றும் நாங்கள் வெறுக்கவில்லை. எங்கள் மக்களைக் கொன்றவனுக்குப் பயிற்சி கொடுப்பதைத்தான் எதிர்க்கின்றோம்.

No comments:
Post a Comment