Wednesday, June 12, 2013

இளைஞர்களே வாருங்கள்; இனம் காக்கச் சூளுரைப்போம்!

இந்தக் கடற்கரையில் இருந்து, தாய்த்தமிழகத்து இளைஞர்களை அழைக்கின் றேன். ஓட்டுக்காக அல்ல, சுயநலத்துக்காக அல்ல. நமது சொந்தச் சகோதரர் களின் வாழ்வு சுகவாழ்வாக அமைவதற்காக, தமிழனின் மானம் காப்பதற்காக,தரணியில் தமிழன் தலைநிமிர்ந்து நிற்பதற்காக, தாய்த் தமிழகத்து இளைஞர் களை அழைக்கிறேன். தமிழ் ஈழம் மலர்வதற்கு, நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வோம்.
-வைகோ (31.3.2011)

மாவீரன் பிரபாகரனின் அன்னை பார்வதிஅம்மையாரின் ஈமச்சாம்பலை கன்னி யாகுமரியில், கடலில் தூவி நீர்க்கடன் ஆற்றும் நிகழ்ச்சி, 31.3.2011 அன்று நடை பெற்றது.கழகப் பொதுச் செயலாளர் வைகோ,பழ.நெடுமாறன் மற்றும் தலை மைக் கழக நிர்வாகிகளும், முன்னணியினரும், தோழர்களும், தமிழ் உணர் வாளர் களும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து.


அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களே, என் ஆருயிர்ச்சகோதரர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களே, மறுமலர்ச்சி தி.மு.க.தலைமை நிர்வாகி களே, தமிழ் உணர்வாளர்களே, அன்புத் தாய்மார்களே, அருமைப் பெரியோர் களே, கழகக் கண்மணிகளே, உலகின் புகழ்மிக்க கடற்கரையில் திரண்டு இருக் கின்றோம். இந்துமா கடலும், அரபிக் கடலும், வங்காள குடாக் கடலும் ஒன்றை யொன்று தழுவிச் சங்கமிக்கின்ற குமரிக்கரையில் திரண்டு இருக்கின்றோம்.

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்தைத் தன் கடலுக்கு உள்ளே பொதிந்து வைத்து இருக்கக்கூடிய தென்குமரி முனையிலே, மானஉணர்ச்சி உள்ள தமிழர் கூட்டம் இங்கே திரண்டு இருக்கின்றது. இந்த அலைகடல் எழுப்புகின்ற ஓசை, இதே கடலின் இன்னொரு பக்கத்தில் வல்வெட்டித்துறைக் கரையில் மோது கிறது. அந்தக் கடற்கரையைக் கண்டவன் நான்; அந்த மண்ணை மிதிக்கின்ற பாக்கியம் பெற்றவன் நான்.

வல்வெட்டித்துறையில் பிறந்த தமிழ் அன்னையின் தவமைந்தன், உலகம் இது வரை கண்டும் கேட்டும் இராத ஆயுதப் போரை நடத்தி,தரணியில் தமிழன் என்ற பெயருக்கு இணையற்ற மதிப்பைத் தேடித் தந்த மாவீரன் பிரபாகரனை,
தன் மணிவயிற்றில் சுமந்த அன்னை பார்வதி அம்மையார் அவர்களது ஈமச் சாம்பலை, மறைந்த 31 ஆம் நாள், கடந்த 22 ஆம் தேதி அன்று,அறிஞர் அண்ணா கண் உறங்கும் சென்னை மெரீனா கடல் அலைகளில் துhவினோம். எங்கள்
கண்ணீர்ப்பூக்களையும் தூவினோம்.


இந்தக் கடல் நீர், தமிழன் சிந்திய கண்ணீரால் உப்புக் கரிக்கிறது என்று சொன்ன அண்ணா அவர்களே, இந்தக் கடல் நீர் கரித்துப்போயிருக்கிறது. இதில், தமிழர் களின் இரத்தம் கலந்து இருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம், எங்கள் தாய்த்தமிழகத்து மீனவர்கள் சிந்திய இரத்தம், எங்கள் கடலில் கலந்து இருக்கின்றது. எந்தச்சக்தியாலும் எங்களைப் பிரிக்க முடியாது. இந்தக்கடலுக்கு அப்பால் இருக்கின்ற தமிழ் ஈழ மக்களைக் காக்க, தாய்த் தமிழகத்தில் இருந்து இலட்சக்கணக்கான வீர வாலிபர்கள், இந்தக் கடலைத் தாண்டிச் செல்லுகின்ற காலம் வரும்.

அருமைச்சகோதரர் சிவாஜிலிங்கம் அவர்கள் அனுப்பிவைத்த அன்னை பார் வதி அம்மையார் அவர்களுடைய மேனியின் எலும்புத்துகள்கள் கலந்து இருக்கின்ற ஈமச்சாம்பலை, இந்தக் குமரிக் கடல் அலைகளில் தூவி இருக் கிறோம்.வீர உணர்ச்சியோடு உறுதி பூணுகிறோம்.அம்மையாரின் சிதைக்குத் தீ மூட்டப்பட்டபோது,தமிழர் நெஞ்சமெல்லாம் தகித்தது.

ஈழப்போரிலே காயம்பட்ட சிங்கள வீரர்களுக்குச் சிகிச்சை தந்தார்; இறந்த வீரர் களின் உடல்களை உறவினர்களுக்கு அனுப்பி வைப்பார்;அல்லது நல்லடக்கம் செய்வார் பிரபாகரன். ஆனால், தாயக விடுதலைக்காகக் களத்தில் போராடிய
கரும்புலிகள் 21 பேர் மடிந்ததற்குப் பிறகு, அவர்களுடைய ஆடைகளை அவிழ்த்து அம்மணமாக்கி, அந்த உடல்களைக்காலணிகளால் அடித்து உதைத் து மிதித்து,இழிவுபடுத்தினார்கள் சிங்களச் சிப்பாய்கள். நம் சகோதரிகள் கொடூ ரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அதற்குப்பிறகு, மிருகங்களை விடக் கேவலமான முறையிலே நம் சகோதரிகளின் உடல்களைச் சின்னா பின்னம் செய்தார்கள். பச்சிளம் குழந்தைகளைக் கொன்றார்கள்.

நம் சகோதரி பத்மா இங்கே வந்து இருக்கிறார்.அவர் வல்வெட்டித்துறைக்குச் சென்று அன்னை பார்வதியைத் தொட்டு வணங்கினார், மருத்துவமனையில். அங்கயற்கண்ணி சென்று வந்தார். மூன்று வயது, நான்கு வயதுப் பிள்ளைகள் பசியால் பரிதவிக்கின்றன.‘சாப்பிட்டீர்களா?’ என்று அவர் கேட்டபோது, ‘நேற் றுக் காலையில் சாப்பிட்டோம்’ என்று சொன்னார்களாம். பசி,பட்டினியால் சாகிறார்கள்,நோய்க்கு மருந்து இன்றிச் சாகிறார்கள்.

இன்றைக்கு விக்கிலீக்ஸ் இணையத்தில் வந்த ஒரு செய்தியை, அண்ணன் நெடுமாறன் அவர்களுக்குக் குறுஞ்செய்தியாக ஒரு தம்பி அனுப்பி இருக் கிறார். சிங்கள இராணுவம், மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களைப் பிடித்த தாகவோ, அழித்ததாகவோ, எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

என் சகோதரனே, மாவீரர் திலகமே, தரணியில் தமிழனுக்கு ஒரு முகவரியைப் பெற்றுத்தந்தவனே, நீ இருக்கும் இடம் நோக்கிச் சொல்லுகிறோம்: நீ செய்ய வேண்டிய நீர்க்கடனை, தாய்த்தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான, இலட்சக் கணக்கான தமிழர்கள் செய்கிறார்கள். நீ பதினைந்து வயதில் வீட்டை விட்டு வந்தாய். தாயை, தந்தையைப் பிரிந்து வந்தாய். தமிழ் ஈழ விடுதலைக்காகக் களம் அமைத்தாய். தரைப்படை, வான்படை, கடல்படை என உலகில் எவரும் செய்ய முடியாத, எந்தப் புரட்சி இயக்கமும் செய்ய முடியாததைச்செய்தாய். ஆனால், இந்திய அரசு உள்ளிட்ட உலகின் பல வல்லரசுகள், சிங்களவனுக்குத்
தந்த ஆயுத பலத்தால்தான், உனக்குப் பின்னடைவு ஏற்பட்டதே தவிர, சிங்கள வன் புலிகளை எதிர்த்துக் களத்தில் நிற்க ஒருபோதும் முடிந்தது இல்லை.

ஓயாத அலைகளிலே, அக்னி அலைகளிலே, யானை இறவிலே பின்னங்கால் பிடறியில் அடிபடஓடினான் சிங்களவன். அப்படிப்பட்ட களங்கள் மீண்டும் எழும். நாங்கள் இங்கே உறுதி எடுக்கிறோம். இந்தக் கடல் அலைகளின் மீது
ஆணை. இது பழந்தமிழர் மண். இதற்கு அப்பால் பரந்து விரிந்த லெமூரியாக் கண்டம் இருந்தது.இன்றைக்குக் கடல் அலைகள் நம்மைப் பிரித்து இருக்க லாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஒன்றாகத்தான் இருந்தது. தாய்த் தமிழகம், ஈழமும் ஒன்றாகவே இணைந்து இருந்தன.

அங்கே தமிழ் ஈழம் அமைந்தால், இங்கே தனிநாடு கேட்பார்கள் என்று குதர்க்க மாகப் பேசுகிறவர்களுக்கு, அக்கிரம இந்திய அரசுக்குத்தெரிவிக்கிறோம். அவர் கள் போராட்டத்தில் தனி ஈழம் கேட்டார்கள்; இங்கே தனித்தமிழ்நாடு கேட்க வில்லை. ஆனால், தமிழ் ஈழத்துக்கு நீ செய்கின்ற துரோகம் தொடருமானால், எதைச் சொல்லி இப்போது எச்சரிக்கின்றாயோ, அது வருங்காலத்தில் நடந்தே தீரும். (பலத்த கைதட்டல்)

அன்னை பார்வதி அவர்கள் இந்தத் தாயகத்தில் கால் எடுத்து வைக்க,அக்கிரமக் காரர்கள் அனுமதிக்க வில்லை. ஆனால், எங்கள் தாயை வணங்குகிறோம், எங்கள் நெஞ்சத்தில் சுமக்கிறோம். இராஜபக்சே கூட்டத்துக்குச்சொல்வோம்; நீ செய்த கொடுமைக்குப் பழி தீர்க்காமல் விட மாட்டோம்.

முத்துக்குமார் தீ வைத்துக் கொண்டான் தன் உடலுக்கு. 17 பேர் தங்கள் இன்னு யிரைத் தணலுக்குத் தந்தார்கள். அந்த வீர உணர்ச்சி தமிழகத்தில் ஒருபோதும் மறையாது. அந்தத்தணல், எங்கள் நெஞ்சில் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.

எங்கள் கண்ணுக்கு முன்னால், வங்கதேசம் புதிய நாடாக அமைந்தது. தெற்கு சூடான் புதிய நாடாக மலருகிறது. உலகில் பல புதிய நாடுகள் அமைகின்றன, புரட்சிகள் வெடிக்கின்றன.

அதைப்போல, தமிழர்களின் தாயக மண்ணில்,தமிழ் ஈழ நாட்டை அமைப்ப தற்கு, தாய்த்தமிழகம் என்றைக்கும் தோள் கொடுக்கும், துணை கொடுக்கும் என்ற செய்தியை, ஓ கடல் அலைகளே, வல்வெட்டித்துறைக்குச் சொல்லுங் கள், மட்டக் களப்பிலே சொல்லுங்கள், யாழ்ப்பாணத்துக்குச் சொல்லுங்கள், தொண்டை மானாற்றில் சொல்லுங்கள், திரிகோணமலையில் சொல்லுங்கள்.

தமிழர்களைப் படுகொலை செய்த இராஜபக்சே,பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலைமை வரும். எந்தக் கயிற்றால் எங்கள் மீனவர்களின் கழுத்தைச் சுருக்கிட்டுக் கொன்றாயோ, அதே கயிறு
துhக்குக்கயிறாக உனக்கு மாறும்; அதற்காக நாங்கள் நீதிமன்றத்தில் போராடு வோம். மக்களைத் திரட்டுவோம், இளைஞர்களைத் திரட்டுவோம்.

இந்தக் கடற்கரையில் இருந்து, தாய்த்தமிழகத்து இளைஞர்களை அழைக்கின் றேன். ஓட்டுக்காக அல்ல, சுயநலத்துக்காக அல்ல. நமது சொந்தச் சகோதரர் களின் வாழ்வு சுகவாழ்வாக அமைவதற்காக, தமிழனின் மானம் காப்பதற்காக,
தரணியில் தமிழன் தலைநிமிர்ந்து நிற்பதற்காக, தாய்த் தமிழகத்து இளைஞர் களை அழைக்கிறேன். தமிழ் ஈழம் மலர்வதற்கு, நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வோம்.

வாழ்வு சிறிது. எல்லோரும் ஓர் நாள் மறைந்தே தீர வேண்டும். உயிர் நிலை யானது அல்ல. ஆனால், புகழ் எனின் உயிரையும் கொடுப்பர், பழியெனின்
உலகுடன் பெறினும் கொளலர் என்றான் நம் மூதாதை. அந்த உணர்வோடு வாழ்வோம்.தமிழகத்தில் இருக்கின்ற எந்த அரசியல் கட்சியையும் சாராத இளைஞர்களை அழைக்கின்றேன். நமது தொப்புள்கொடி உறவுகளைக் காக்க, அவர்களது உரிமைகளை மீட்க, அவர்கள் மானத்தோடு வாழ, அவர் களுக்குத் தோள் கொடுக்க நாம் சூளுரைப்போம்.

இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும். புலிப்படை வீரர்களை எண்ணிப்பாருங்கள். வாழ்க்கையின் வசந்தங்களைத்தேடாமல், சுகங்களைத் தேடாமல் அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தியாக வேள்வியில் அர்ப்பணித் துத் தங்கள் உயிர்களைத் தாரை வார்த்துத் தந்து இருக்கிறார்கள். அந்த உயிர்த் தியாகம் வீண் போகாது; அவர்கள் சிந்திய இரத்தம் வீண் போகாது, கண்ணீர் வீண் போகாது.தமிழ் இனத்தைக் காக்க, அன்னை பார்வதியின் சாம்பல் தூவப் பட்ட இந்தக் கடல் அலைகளுக்கு முன்னர் சபதம் ஏற்போம்.

வாழ்க மாவீரர் திலகம் பிரபாகரன்!

வாழ்க அன்னை பார்வதி அம்மையார் புகழ்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment