Thursday, June 27, 2013

தமிழ் ஈழம் மலரும்-பகுதி 2

கார்த்திகை திங்கள் முடித்து மார்கழியிலே அடியெடுத்து வைத்திருக்கிறோம். பொழுது புலர்வதற்கு முன்னாலே வைகறை வேளையிலே மார்கழி திருப் பா வை, திருவெண்பாவை பாடல்களை உச்சரிக்கக்கூடிய பக்தர்கள் உண்டு. நான் இந்தத் தியாகராயர் நகர் கூட்டத்தில் இருந்து கேட்கிறேன். நல்லூர் கந்தசாமி
கோவில் இங்கே இருக்கக்கூடிய அறுபடை வீடுகளைப் போலப் புகழ்பெற்ற கோவில்தானே? திருச்செந்தூரைப் போல, திருப்பரங்குன்றத்தைப்போல,பழனி யைப்போல, ஆவினன்குடியைப்போல, திருத்தணியைப்போல, புகழ்பெற்ற கோவில்தானே. அந்த நல்லூர் கந்தசாமி கோவில் தமிழர்களின் புராதனமான அந்த முருகன் கோவில் சிங்கள இராணுவ அதிகாரிகளினுடைய ஆளுகைக்கு உள்ளே.

பேராயர் இருதயராஜ் அவர் கிறிஸ்தவர். வேதனையோடு தான் குறிப்பிடுகி றார். எல்லா இடங்களும் பெளத்த மயமாக்கப்பட்டு, சிங்களமயமாக்கப்பட்டு விட்டன.அதைவிடக் கொடுமை பெண்கள் சிங்களவர்களால் கற்பழிக்கப்பட்டு கருவைச் சுமக்க நேரிட்ட அந்த தமிழ் பெண்கள் மானத்தை, கற்பை உயிருக்கு மேலாக போற்றிவந்த அந்தப் பெண்கள் இந்தக் கொடுமையை தாங்கிக் கொள் ளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.



உச்சிதனை முகர்ந்தால் அந்தப் படத்தில் எங்களுக்கு மனிதநேயம் தமிழர்களுக் கு மனிதநேயம் செத்துப்போய் விடவில்லை என்பதற்காக உச்சக்கட்டக் காட்சி
அமைத்தார்கள். அங்கே இருக்கக்கூடிய சகோதரிகள் இந்த இனத்தை அழிப்ப தற்கு,இந்த இனத்தை கலப்பினமாக்குவதற்கு சிங்களவனுடைய கருவை சுமப் பதா? என்று இந்தப் பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று ஆதா ரங்களோடு அதிலே தெரிவிக்கிறார்.


அதுமட்டுமல்ல, தமிழர்களின் வீடுகளுக்கு கதவுகள் இல்லை. தெருக்களிலே சிங்கள இராணுவத்தின் சிப்பாய்கள் வந்து நிற்கிறார்கள். ஓநாய்களை விட கொடிய மிருகங்கள். எந்தத் தமிழச்சிக்கு அங்கே பாதுகாப்பு இருக்கிறது என்று கேட்கிறார். எல்லா இடங்களிலும் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. கிரீஸ் சாத்தான்கள் என்று அவர்களை அழைக்கிறார்கள். அவர் சொல்லுகிறார், முகத் திலும் உடம்பிலும் கிரீசைப் பூசிக்கொண்டு, அவர்கள் உள்ளே நுழைகிறார்கள்.
பெண்களைப் பாழாக்குகிறார்கள். அவர்கள் அடையாளம் தெரியாமல் இருப்ப தற்காக, அப்படி அவர்களுக்கு கிரீஸ் சாத்தான்கள் என்று பெயர் வைத்திருக் கிறார்கள்.

இராணுவ முகாம்களிலிருந்தே வருகிறார்கள். அப்படி ஒரு ஊரில் இளம்பெண் கள் இருந்த வீட்டிற்குள்ளே நுழைந்த கிரீஸ் சாத்தான்களை அந்த ஊர் வாலிபர் கள் விரட்டிச் சென்றபோது, அவர்கள் இராணுவ முகாமுக்குள்ளே போய் நுழைந்துகொண்டார்கள். மக்கள் திரண்டு எங்கள் பெண்களை நாசப்படுத்த வந்த கொடியவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்றபோது, அவர்கள் அடித்து
விரட்டப்பட்டார்கள். அதற்குப் பிறகு அதே ஐந்து பேர் இராணுவ வாகனத்திலே ஏறிச்செல்லுகிறபோது, இராணுவ உடையிலே செல்லுகிறபோது, விரட்டிச்
செல்லுகிற மக்கள் தாக்கப்படுகிறார்கள்.

அதன்பின் நள்ளிரவுக்குப் பிறகு அந்த ஊருக்குள்ளே இராணுவம் நுழைகிறது. அத்தனை வாலிபர்களையும் அங்கே இருந்து கைது செய்துகொண்டுபோய் சித்ரவதை செய்கிறார்கள்.எத்தனை செய்திகள்... ஏழ்பனை நாடு என்று அழைக் கப்பட்ட அந்த பூமியில் நாற்பது இலட்சம் பனை மரங்கள் அடியோடு சாய்க்கப் பட்டுவிட்டன என்று குறிப்பிடுகிறார்.

கடலோடு போராடி, கடலோடு வாழ்ந்து, அந்தக் கடலில் மீன்பிடித்து வாழ்கிற அந்த மக்களுக்கு அவர் சொல்லுகிறார், குறிப்பிட்ட ஒருவேளை மீன் உணவு
அவர்களுக்குக் கிடையாது. இப்படி அந்த மக்கள் இன்றைக்கு இவ்வளவு கொடு மைகளுக்கும் ஆளாகி இருக்கிறார்களே.ஈழத்தில் விடுதலைப்புலிகளை தோற் கடித்துவிட்டோம் என்றும், அல்லது ஈழ விடுதலைப்போர் முடிந்துவிட்டது
என்றும், சிங்களவன் கணக்குப் போட்டால்,அவனைவிட முட்டாள் எவனும்
இருக்க முடியாது.

ஏனெனில், இங்கே குறிப்பிட்டதைப்போல, நான் யூதர்களினுடைய கொள்கை களை ஏற்றுக்கொள்பவன் அல்ல. ஆனால்,உலகெங்கும் சிதறிக் கிடந்த யூதர் கள் ஜெர்மனி ரிஸ்டாக்கைப் பற்றி அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் குறிப் பிட்டார்களே, நாஜிப்படைகளை முறியடித்து செஞ்சேனை பெர்லினுக்குள்ளே நுழைந்த அந்த பழைய வரலாற்றை நினைவூட்டினார்களே எத்தனை இலட்சம்
யூதர்கள் கொல்லப்பட்டனர் விஷவாயு அறைகளிலே, 60 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்களே. ஒருவர் பேசுகிற மொழி, இன்னொரு வருக்கு தெரியாது யூதர்களுக்கு செகோஸ்லேவோகியாவிலே இருக்கிற யூதனுக்கு போலந்திலே இருக்கிறவர்களுடைய மொழி தெரியாது. ரஷ்ய செர்பியிலே இருக்கிற யூதனுக்கு பிரான்ஸ் நாட்டிலே இருக்கிற யூதனு டைய மொழி தெரியாது.அப்படித்தான் இருந்தார்கள்.

அவர்களுடைய மொழி எங்கோ தேவாலயங்களில்,ஒன்றிரண்டு தேவாலயங் களில் நூல் இழையிலே ஊசலாடிக்கொண்டிருந்தது எபிரேயம் மொழி! ஒன்று
சேரவில்லையா அவர்கள். ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுவதற்குக் கூட முடியாத நிலையிலே இருந்த யூதர்கள், உல கெங்கும் சிதறிக் கிடந்த யூதர்கள் ஒன்றுசேர்ந்து தங்களுக்கு ஓர் தாயகம் உண்டென்று அவர்கள் அதை உருவாக்கிக் கொள்ள முனைந்து, அதே வேளை யில் பாலஸ்தீனியர்களுடைய உரிமையிலே கைவைத்ததன் விளைவாக இன்றும் அந்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், எல்லா நாடுகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்.புலம்பெயர்ந்த ஈழத் துத் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆகவே ஒரு தலைமுறை ஆவேசத்தோடு
வளர்ந்துகொண்டு இருக்கிறது. எல்லாவற்றையுவிட,இங்கே ஏழரைக்கோடிப் பேர் தமிழ் நாட்டிலே இருக்கிறோம். பதினெட்டுகல் தொலைவிலே. இதைவிட
ஒரு வாய்ப்பு ஒரு இனத்திற்கு இருக்க முடியுமா? நம்மை விட வீரமும் வேக மும் கொண்ட இளைஞர்கள் வருங்காலத்திலே வருவார்கள். உலகெங்கும் சிதறிக் கிடந்தாலும்கூட அவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டு தான் இருக்கிறார்கள். இது கணிப்பொறி யுகம். வலைதள யுகம், இணையதள யுகம்.எண்ணங்களை நொடிப்பொழுதிலே. பரிமாறக்கூடிய வாய்ப்பு இருக்கக் கூடிய யுகம். ஆகவே ஈழத்தை வென்றெடுக்க முடியும் என்று சூளுரைக்கத்hன் இங்கு கூடியிருக்கிறோம். (கைதட்டல்)

சிந்தப்பட்ட இரத்தம் ஒருபோதும் வீண்போகாது. செய்த தியாகம் ஒருபோதும் வீண்போகாது. இதில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவன்
இராஜபக்சே மட்டுமல்ல, இந்த இனக்கொலைக்கு துணைபுரிந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. இந்தியா என்ற நாட் டை மொத்தமாக குற்றம் சாட்ட விரும்பவில்லை. அது முறையும் ஆகாது. இந்த அரசு அதற்கு ஆயுதம் கொடுத்தது. துணை நின்றது. இத்தனை கொடுமை களுக்கும் பக்கபலமாய் இருந்தது.

கடற்புலிகளின் கலங்களை மூழ்கடிக்க இந்தியக் கடற்படை உதவியது.வரிசை யாக பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஆகவே, இந்த இனக்கொலையை நடத்துவதற்கு இந்திய அரசு துரோகம் செய்தது. கூண்டிலே நிறுத்தப்பட வேண் டும் இராஜபக்சே கூட்டம். அது நடக்கும். எத்தனையோ இலட்சம் பேர் உயிரி ழந்ததற்குப் பிறகுதான் தெற்கு சூடான் இன்றைக்கு ஒரு சுதந்திர பூமியாக மலர்ந்துவிட்டது.

சிங்களவனோடு சேர்ந்து வாழ முடியாது, ஈழத்திலே இருக்கக்கூடிய தமிழ னால். எனவே இந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிற நாளிலே நாம் சூளுரைப்பது தமிழீழ விடுதலைக்கு துணை நிற்கும். அங்கே ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், நடக்கும்.நிச்சயமாக அந்த நாள் வந்துதான் தீரும். இவ் வளவு அவர்கள் தியாகம் செய்கிறபோது, அந்த நிகழ்வுகளை படிக்கின்றபோது, நம்முடைய மனதிலே ஏற்படுகின்ற வேதனை தாங்க முடியாதவை.

ஒருவர் சொல்லுகிறார், சமைத்துக்கொண்டு இருக்கிறாள் அந்த அம்மா, பக்கத் திலே நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கிறார். நான் அவரிடம்போய் கேட் கிறேன், அவர் சொல்கிறார், பெயரைச் சொல்ல விரும்பவில்லை, ஒரு பல் கலைக் கழகத்திலே பேராசிரியர். ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு போக வேண்டும் என்கிறபோது இதோ ஐம்பதுபேர் கூட்டமாக இருக்கிறார்களே அந்த இடத்தில்
போய் கேளுங்கள் என்கிறார். அடுத்து குண்டு வெடிக்கிற சத்தம் கேட்கிறது. இவர் தாவி பக்கத்திலே இருக்கிற குழியிலே போய் விழுகிறார். அடுத்து சிறிது நேரம் கழித்து புகை மண்டலம் கழிந்ததற்குப் பிறகு பார்க்கிறார், அந்த நாற் காலி யில் அமர்ந்திருந்தாரே அவர் சிதறி சின்னாபின்னமாகிக் கிடக்கிறார்.
சமைத்துக்கொண்டிருக்கக்கூடிய அவர் மனைவி சிதறிக் கிடக்கிறார். பக்கத் திலே இரண்டு இளம் பெண்கள் அவர்களும் சிதறிக் கிடக்கிறார்கள். அடுத்து
சொல்கிறார், பதுங்கு குழியிலே இருந்து வருகிறார்கள் அண்ணா உங்கள் தங்கையாக இருந்தால் காப்பாற்ற மாட்டீர்களா என்று குரல் கேட்டு, நான் பார்க்கிறேன் இடுப்புக்குக் கீழே அந்தப் பெண்ணுக்கு எலும்புகள் தவிர ஒன்றும் இல்லை. அடுத்த ஒன்று இரண்டு நிமிடங்களுக்குள் அந்த உயிர் பிரிந்துவிட் டது. இப்படி எத்தனை சம்பவங்கள் இவ்வளவு கொடுமை களையும் செய்வ தற்கு ஆயுதங்களைக் கொடுத்து இலட்சகக்கணக்கான தமிழர்களைக் கொல்லு வதற்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்ததே.அப்படியானால், நாங்கள் கேட் கிறோம் அங்கே இலட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

விடுதலைப் புலிகளை அழிப்போம் என்று சொல்லி, போரிலே அவர்களை
முறியடிப்போம் என்று கூறி இவ்வளவு தாக்குதலுக்கும் இந்தியா உதவியாக
இருந்தது. எத்தனை இலட்சம் தமிழர்கள் மடிந்தால் என்ன? என்று கருதினீர்கள்.
உண்மைகளை மறைத்துவிட முடியாது.அது உடைத்துக்கொண்டு வெளியே
வரும். அந்த நிலைமையில்தான் இருக்கிறோம்.எனவேதான் மாவீரர் நாளைக் கொண்டாடுவது ஒப்புக்காகவோ, சம்பிரதாயத்துக் காகவோ அல்ல. அவர்கள் சிந்திய இரத்தம் வீண் போகக்கூடாது. தன் அண்ணன் படுகொலை செய்யப் பட்டார் என்பதற்காகத்தான் இளைஞனாகிய லெனின் சூளுரை மேற்கொண் டான். ஜார் சக்கரவர்த்தியினுடைய அதிகாரத்திலே தன் சகோதரனுக்கு மரண தண்டனை என்பதனாலேதான், லெனின் சூளுரைத்தான். அவன் உள்ளத்திலே
வெடித்துக்கிளம்பியது, பொதுவுடைமைப் பூங்காவாக மலர்ந்தது.

அதைப்போல, 1927 ஆம் வருடம் இலட்சக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார் கள் சீனத்திலே கோமின்டாங் இராணுவத் தாக்குதலிலே.அதிலே ஒரு குறிப் பிட்ட நாளிலே மாத்திரம் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். மே 27, 1927 ஆம் வருடத்தில். அப்பொழுது பத்து கட்டளைகளை சபதமாகச் சொன்னார் மா சேதுங். மோசஸ் பத்துக் கட்டளைகளை சொன்னதைப்போல,
மாவோ பத்துக் கட்டளைகளைச் சொன்னார் 1927 இல். 22 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் செய்த சபதம் நிறைவேறி பீஜிங் ராஜ மாளிகையிலே செங்கொடி யைப் பறக்கவிட்டார்.

எந்தக் குடியானவர்கள் அழிக்கப்படுவதற்கு,தொழிலாளர்கள் கொல்லப்படு
வதற்கு கோமின்டாங் இராணுவம் ஆயுதம் வீசியதோ அதே குடியானவர்கள்,
அதே தொழிலாளர்கள் கரங்களில் ஆயுதம்.

லாலா லஜபதிராய் கபாலம் உடைக்கப்பட்டு, சிரசிலே அடிபட்ட காரணத்தி னாலே மருத்துவமனையிலே உயிருக்குப் போராடி கடைசியில் மரித்துப் போனார் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய். அவரது உடல் எரிக்கப்பட்ட
நதிக்கரையிலே சபதம் எடுத்துக் கொண்டார்கள். சூளுரைத்தார்கள்.

அவர்கள்தான் பகத்சிங் ராஜகுரு, சுகதேவ். பகத் சிங் அங்கே சூளுரை மேற் கொண்டான். அந்த ஆத்திரம்,ஆவேசம் அவனுடைய நெஞ்சிலே கனலாக சூளுரைக்கக் காரணமாக இருந்தது. சூளுரை என்பது சபதத்தை நிறைவேற்றிக் கொள்வது. அப்படி சபதத்தை நிறைவேற்றிக் கொள்கிற வழக்கம், வஞ்சினம் கூறுகிற வழக்க நெடுங்காலமாக தமிழகத்திலே இருந்து வந்திருக்கிறது. பல் லவப் பேரரசு தாக்குதலுக்கு உள்ளாகி, காஞ்சி முற்றுகையிடப்பட்டு, அந்தத் தொண்டை மண்டலத்தினுடைய பல்வேறு ஊர்கள் சாளுக்கிய மன்னனால் சூரையாடப்பட்டதற்குப் பிறகு, மாமல்ல நரசிம்மன் சூளுரைத்தான், இதற்கு பழிவாங்கியே தீருவேன் என்று கூறியது மட்டுமல்ல, வாதாபியை நோக்கிப் படையெடுத்துச் சென்று அவர் சூளுரையை நிறைவேற்றிக் கொண்டார்.

எனவே, என் உயிர் போவதானாலும், எடுத்த கொள்கையிலே வெற்றியைப் பெற்றுக் காட்டுவேன் என்பதற்காகத்தான் சூளுரைத்தார்கள். அந்த சூளுரை மேற்கொள்ள வேண்டிய கட்டம் இங்கே வந்திருக்கிறது. தூங்குகிற புலியை இடறாதே என்று ஒரு சொற்றொடர் இருக்கிறதல்லவா? அதைச் சொன்னவன் சோழன் நலங்கிள்ளி. புலி பொதுவாக எல்லா இடங்களிலும் தூங்காது. அது குகையிலேயும், யாரும் பார்க்காத மறைவிடங்களிலேதான் தூங்கும் என்று வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். நினைத்த இடத்தில் எல்லாம் சிங்கம்கூட படுத்துத் தூங்கிவிடும், ஆனால், புலி எல்லா இடத்திலும் தூங்காது. அப்படி தூங்கிக் கொண்டிருக்கிற புலியைப்போய் இடறிய சிதடன் தப்பவே முடியாது. (கைதட்டல்) முல்லைப் பெரியாறில் இப்போது அதுதான் நடந்துகொண்டிருக் கிறது.

கேரள நண்பர்களுக்கு இந்தத் தொலைக்காட்சிகள் மூலமாக, ஊடகங்கள் மூல மாக நான் தெரிவிக்க விரும்புகிறேன். வாழ்நாளெல்லாம் நாட்டின் விடுதலைக் காக போராடி, பொதுவுடைமை இயக்கத்திற்காகப் போராடி ஒரு இலட்சியத் திற்காகவே நேர்மையாக,நியாயமாக எதற்கும் அஞ்சாது போராடிக்கொண்டி ருக்கக்கூடிய இந்த நாட்டினுடைய ஒருமைப்பாட்டிலே அசைக்க முடியாத நம் பிக்கையும் வைத்திருக்கக்கூடிய அண்ணன் நல்லகண்ணு இருக்கிற மேடை யிலே பேசுகிறேன்.

அதைப்போல அண்ணாவினுடைய நம்பிக்கைக்குரிய ஒரு தம்பியாக வளர்ந்து அதற்குப் பிறகு ஒரு கட்டத்திற்குப் பிறகு தியாகச்சுடர் பெருந்தலைவர் காம ராஜருடைய நம்பிக்கைக்கு உரிய தளபதியாக தளகர்த்தராக தமிழகத்திலே உலவி அதுமட்டுமல்ல, எத்தனையோ கால கட்டங்களில் 1980 இல் முதன் முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்தில், இந்த முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அன்றைக்கு முதலமைச்சராக இருந்த போது, முல்லைப் பெரியாறில் கேரளம் செய்கின்ற அநீதியை எதிர்த்து முரசு
கொட்டியவர் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் இந்த மேடையிலே
அமர்ந்திருக்கிறார்.

அணை உடையாமலே இந்தியா உடைந்து போகும் என்பதிலே அசைக்க முடி யாத நம்பிக்கை வைத்திருக்கின்ற விடுதலை இராஜேந்திரன் இங்கே உட் கார்ந்திருக்கிறார்.

நான் கேரளத்தைச் சார்ந்த நண்பர்களுக்குத் தெரிவிக்கின்றேன், இது முக்கிய மான கூட்டம், நாங்கள் உங்களுக்கு கேடு செய்ய வேண்டும் என்று நினைக்க வில்லை. உங்களுடைய அரசியல் கட்சிகளும், உங்களுடைய அரசியல் தலை வர்களும் உங்களுடைய முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும் உங்களை தவறான பாதைக்கு கொண்டுபோய் நிறுத்திவிட்டார்கள்.

அணை உடையும் என்றும்,இலட்சக்கணக்கான மக்கள் மடிய நேரிடும் என்றும், அச்சுதானந்தன் ஆட்சி காலத்திலே ஐந்து இலட்சம் குறுந்தட்டுகளை கேரள மக் களிடத்திலே விநியோகித்து,பொய்ப் பிரச்சாரத்தை திரும்பத்திரும்ப செய்து,1979 இல் தொடங்கப்பட்ட பிரச்சாரம். மலையாள மனோரமா பத்திரிகை யிலே தொடங்கி வைத்த பிரச்சாரம். அணை உடையும் என்றும், அதனால் ஆபத்து நேரும் என்றும், ஒரு பொய்பிரச்சாரத்தை வைத்தார். அணை ஒரு போதும் உடையாது. அணையை உடைக்க தமிழகம் ஒருபோதும் அனுமதிக் காது.மத்திய அரசுக்கு நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றைக்கு மாலையில் வந்திருக்கிற செய்தி, பேரிடர் மேலாண்மை ஆணை யத்தின் மூலமாக முல்லைப் பெரியாறில் ஆபத்து ஏற்பட்டால், பூகம்பம் ஏற் பட்டால் எப்படி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டக் குழு இந்த அறிவிப்பு நிறுத்தி வைக் கப்பட்டிருக்கிறது என்று மாலையிலே ஒரு செய்தி வந்திருக்கிறது. தமிழக அரசினுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று செய்தி வந்திருக்கிறது.

மத்திய அரசுக்குச் சொல்கிறோம். அங்கே இருக்கக்கூடிய அணையைப் பாது காக்க வேண்டும் என்று சொன்னால், பூகம்பத்தால் ஆபத்து வரப்போவது
இல்லை. எந்த பூகம்பத்திற்கும் அது ஈடுகொடுக்கக்கூடிய அணை. வலுவான
நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன்பே பென்னி குக் கட்டிய அணை
பூம்பத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய அணைதான். அதனை நிபுணர்கள் எல்லாம் எத்தனையோ ஆதாரங்களோடு நிருபித்துவிட்டார்கள்.

தொடரும் .....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment