Thursday, June 6, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 6

கடலில் மூழ்கி மடியும் அகதிகளின் அவலம்! 

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,                                  26.05.2006

வணக்கம்.

இந்தியர்கள்அனைவருக்கும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய,இலங்கை அகதி களைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை, தங்கள் மேலான கவனத்திற் குக் கொண்டுவர விரும்புகிறேன்.

“இலங்கைத் தீவில் இருந்து தமிழ் அகதிகள் கூட்டம், கூட்டமாய்த் தமிழகக் கட லோரப் பகுதியை நோக்கி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கொந்தளிக் கின் ற கடலில் வருவது மிகுந்த வேதனை தரக்கூடிய காட்சியாக உள்ளது. இலங் கை இராணுவம் தமிழர் வாழும் பகுதிகளில் எப்படிப்பட்ட கொடூரமான தாக்கு தல் நடத்துகிறது என்பதை, அங்கிருந்து அகதிகளாக வரும் தாய்மார்கள் கண் ணீரும்,கம்பலையுமாக விவரிப்பது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.இத்தகை ய கொலைவெறித் தாக்குதலில் அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும் பெரு மளவில் இறந்தனர் என்ற செய்தி,பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 15 மாதங்களாக இந்தியாவுக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்தைக் கடந்து உள்ளது. பெருமளவில் இலங்கையில் இருந்து அகதிகளா க இடம் பெயர்ந்து வருபவர்கள், இன்னும் பலர் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கையில் இருந்து இந்தியா வர காத்துக்கொண்டு இருப் பதாகக் கூறுவது, இந்தப்பிரச்சினையில், இந்திய அரசு போதிய கவனத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் நடந்த ஒரு சோகமான நிகழ்வை, குறிப்பிடுவதற்கே மிகவும் வேதனையாக உள்ளது. இலங்கையின் மன்னார் தீவில் இருந்து படகில் வந்த
ஐந்து பேர், மோசமான வானிலையாலும், படகு செலுத்துவதில் போதியநுட்பம் இல்லாமையாலும், கடலில் மூழ்கி மடிந்தனர்.

துன்பத்துக்கு ஆளான தமிழர்கள், அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் இந்தி யாவை அடைய முற்படும்போது, கடலே அவர்களுக்குக் கல்லறை ஆகிவிடு கிறது. இந்த வாரம், ஒரு நார் இழைப்படகு கடல் அலைகளில் அடித்துச் செல் லப்பட்டது. அதற்கு முன்னர், இந்தியக் கடலோரக் காவல்படையினர், இலங் கையில் இருந்து அகதிகளை ஏற்றி வந்த சில படகுகளைக் கைப்பற்றிக் காவல் துறையிடம் ஒப்படைத்தபோது, அந்தப் படகுகளைக் காவல்துறையினர் பறி முதல் செய்து உள்ளார்கள்.

ஏற்கெனவே இந்திய அரசு, தமிழகத்தின் பல பகுதிகளில், பல்வேறு அகதிகள்
முகாம்களில் 75,000 இலங்கை தமிழ் அகதிகளைத் தங்க வைத்து பராமரித்து
வருகிறது. நம்மிடம் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ஏற்றுக் கொள்வ தையே நாம் ஒரு கொள்கையாகக் கொண்டு இருக்கிறோம்.

இன்று இலங்கைத் தீவில் நடப்பது, உள்நாட்டுப் பிரச்சினை மட்டும் அல்ல.அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கின்ற மனிதாபிமானப் பிரச்சினை.

மறைந்த பாரதப்பிரதமர் திருமதி.இந்திராகாந்தி அம்மையார்,அன்றைய கிழக்கு பாகிஸ்தான், இன்றைய பங்களாதேசத்தில் இருந்து அகதிகள் கூட்டம் கூட்ட மாய் இந்தியாவுக்கு வந்தபோது,

“அகதிகள் பிரச்சினை என்பது மனிதாபிமானப் பிரச்சினை; இது தொடர்பாக இந்தியா கண்மூடி இருக்க இயலாது,”

என்று குறிப்பிட்டதை, இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

என்றார் அவர்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும், இலங்கை வாழ் தமிழர்களுக்கும் தொப் புள் கொடி உறவு உண்டு. எனவே, இந்திய அரசு இலங்கை அரசுடன் அரசியல் பேச்சுகளை நடத்தி, தமிழர் பகுதிகளில் இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்தச் செய்ய வேண்டும். இந்தியா வந்து சேரும் அகதிகளுக்குப் போதிய பாதுகாப்பும், உதவிகளும் செய்ய இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியக் கடல் பகுதியில் அகதிகள் இறப்பதும், காணாமல் போவ தும் தடுக்கப்பட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள நாம் பெரிதும் கடமைப்பட்டு உள்ளோம்.

இந்நிகழ்வுகள் தொடர்பாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் கீழ்காணும் நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

1.பாம்பன் தீவில் இருந்து   ( இராமேஸ்வரம் தீவு) கிழக்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் பன்னாட்டுக்கடல் எல்லை உள்ளது.தனுஷ்கோடி பழைய அலை தாங்கியில் தொடங்கி,15 கிலோ மீட்டர் தொலைவு, சேது மணல் தொடரின்
வடக்குப் பகுதி முழுவதும், இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையின் 24 மணி நேர கண்காணிப்புப் பணி தொடர வேண்டும்.

2. அகதிகள் ஏற்றப்பட்ட படகுகள், தனுஷ்கோடியில் அகதிகளை எந்தப் பிரச்சி னையும் இன்றி இறக்கி விட்டு விட்டு, திரும்ப மன்னார் தீவுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

3. அகதிகள் இங்கு வந்து சேர்ந்ததும், அவர்களுக்கு உணவு, உடை,முதல் உதவி கள் அளிக்க வேண்டும்.

4. அடையாள அட்டை வழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள்மற்றும் அரசு சார் பில் செய்ய வேண்டிய சடங்குகள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, இந்திய அதிகாரிகள் அகதிகளை மண்டபம் முகாமுக்கு அழைத்துச் சென்று பாதுகாப் பாகத் தங்க வைக்க வேண்டும். இந்தப் பணியில் அரசு அதிகாரிகளுக்கு உதவி யாக சமூக ஆர்வலர்களின் உதவியைப் பயன்படுத்தலாம்.

மிகவும் இக்கட்டான இந்த நேரத்தில் எடுக்கப்படும் மேற்கூறப்பட்ட நடவடிக் கைகள், பாதுகாப்புக்காக அல்லல்பட்டுக் கொண்டு இருக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு, உரிய நேரத்தில் கிடைக்கின்ற பேருதவியாக இருப்பதோடு, அமைதியையும் அளிக்கும்.

தங்கள் அன்புள்ள,
வைகோ

26.05.2006

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment