Tuesday, June 25, 2013

சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி கண்டன பொதுக்கூட்டம்

இன்று (25-ந்தேதி) வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்
டம் நடத்துவோம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்றே குன்னூர் வந்து விட்டார்.

போராட்ட அறிவிப்பால் வெலிங்டன் ராணுவ முகாமை சுற்றிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மாடசாமி தலைமையில் போலீசார் குன்னூர், ராணுவ மையத்துக்கு செல்லும் பிளாக் பிரிட்ஜ், கண்டோன்மென்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவரும் நேற்று மாலை வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவர்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



வெலிங்டனில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட தால் ம.தி.மு.க.வின் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக குன்னூர் வி.பி. தெருவில் இன்று காலை கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் வைகோ மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

முற்றுகை போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெலிங்டன் ராணுவ முகாம் மற்றும் குன்னூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

No comments:

Post a Comment