Saturday, June 22, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 9

நாள் :- 05.08.2006

சிங்கள இராணுவத்தினருக்குக் கோவையில் பயிற்சியா?



பிரதமருடன் வைகோ பேச்சு

இன்று (05.08.2006) காலை 10.40 மணிக்கு இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களோடு, வைகோ தொலைபேசியில் பேசினார்.வைகோ பிரதமரிடம் கூறியதாவது:
“இலங்கைத் தீவில் பலத்த போர் மூளும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. தமிழர்
பகுதிகளில் சிங்கள இராணுவமும் விமானப் படையும் பலத்த தாக்குதல் நடத் துகின்றனர். எதிர்த்தாக்குதலில் புலிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்தப்பதட்டமான சூழலில், இலங்கையின் சிங்களக் காவல்படைக்கு, தமிழ் நாட்டில் கோவை யில் மத்திய பாதுகாப்புப் படைத்தளத்தில் பயிற்சி கொடுப்பது தமிழர்களின் உள்ளத்தைப் புண்படுத்தும் செயல் ஆகும். எனவே, அதைத் தடுத்து நிறுத்தி, அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தங்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.

‘என் கவனத்துக்கு வந்து விட்டது,அதுகுறித்துக் கவனிக்கிறேன்’ என்று எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உங்களைச் சந்தித்தபோது கூறினீர்களாம்.

தற்போது கோவையில் இருந்து சிங்களக் காவல்துறையினர் அனுப்பப்பட்டு
விட்டாலும், அவர்களுக்கு இந்தியாவில் வேறு இடங்களில் தொடர்ந்து பயிற்சி
கொடுக்கப்படுவதாக அறிகிறேன்.இந்தியாவில் எந்த இடத்தில் பயிற்சி கொடுத் தாலும், அது தமிழர்களின் உள்ளத்தைப் புண்படுத்துவது ஆகும்.எனவே, இந்தி யாவில் அவர்களுக்கு வேறு எங்கும் பயிற்சி கொடுக்கக்கூடாது” என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பிரதமர், “உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கிறேன்”என்று கூறினார்.

மேலும்,“இலங்கையில் தமிழ் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழ் தேசியக்
கூட்டு அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைச் சந்திக்க வாய்ப்பு
அளிக்குமாறு நான் கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதி நேரில் வேண்டிய போது, அதைச் சாதகமாகப் பரிசீலிப்பதாகக் கூறினீர்கள்.

தங்களைச் சந்திப்பதற்கு வாய்ப்புத் தருமாறு கேட்டு, இலங்கையின் தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்ப இருக்கின்றனர். அவர்களைச்
சந்திக்க வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று வைகோ சொன்ன போது,

“கடிதம் வரட்டும். அதைக் கவனிக்கிறேன்” என்று பிரதமர் சொன்னார்.

‘தாயகம்’

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment