ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த
இலங்கை இராணுவத்துக்கு, தமிழ்நாட்டில் பயிற்சி!
இந்திய அரசைக் கண்டித்து வெலிங்டன் முற்றுகைப் போராட்டம்
இலட்சக்கணக்ககான ஈழத் தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினருக்கு மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே, அதிலும் தமிழ்நாட்டிலேயே பயிற்சி கொடுத்த இந்திய அரசு, கடந்த மே 27 ஆம் தேதி முதல் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரி யில் இலங்கை இராணுவத்தின் விங் கமாண்டர் தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிச்சந்திராவுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறது.
சிங்கள இராணுவத்தினரை வெளியேற்ற (இன்று) 18 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 11 மணி அளவில், குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியை பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வு அமைப்புகளும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த அறப்போரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர்கள் நீலகிரி அட்டாரி நஞ்சன், கோவை மாநகர் ஆர்.ஆர்.மோகன்குமார், கோவை புறநகர் குகன் மில் செந்தில், டாக்டர் வரதராஜன், ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் உள்ளிட்ட கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும், ஈழத் தமிழர் உரிமை காக்கும் உணர்வாளர்களும், வணிகப் பெருமக்களும், மாணவர்களும் ஆயிரக் கணக் கில் பங்கேற்கேற்று கைதானார்கள்.
இதன் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சி குழுவுடன் கூடி விவாதித்துவிட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
செய்தி & படங்கள் :- மின்னல் முகமது அலி
No comments:
Post a Comment