Tuesday, June 25, 2013

தமிழ் ஈழம் மலரும்-பகுதி 1

சென்னை - தியாகராயர் நகர், முத்துரங்கன் சாலையில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், 27.12.2011 அன்று நடைபெற்ற தமிழர் சூளுரை நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார். அவரது உரை வருமாறு:-

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பிலே நடைபெறுகிற தமிழர் சூளு ரை நாள் பொதுக் கூட்டத்தினுடைய தலைவர் அமைப்பினுடைய ஒருங்கி ணைப்பாளர், உலகத் தமிழர் பேரமைப்பினுடைய தலைவர் ஆருயிர் அண் ணன் பழ.நெடுமாறன் அவர்களே! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முன் னணித் தலைவர்களில் ஒருவரும், தியாகத் தழும்புகள் பெற்றவருமான மதிப் பிற்குரிய அண்ணன் நல்லகண்ணு அவர்களே, பெரியார் திராவிடர் கழகத்தினு டைய பொதுச் செயலாளர் அன்புச் சகோதரர் மானமிகு விடுதலை ராஜேந் திரன் அவர்களே! இந்த மாபெரும் கூட்டத்தை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து,
தீ எரிய அதிலே செந்நீர் பொழிகிறோம். தீ எரிக அதிலே தசைதனைப் பொழி கிறோம். தீ எரிக! காலக் கடைத்தீயாக கனன்று எழுக! என்ற முண்டாசுக் கவி யினுடைய வரிகளை நினைவூட்டுகின்ற வகையில் மாவீரர்களுக்கு வீரவ ணக்கம் செலுத்திடவும், தாய்த் தமிழகத்து உரிமைகளைக் காக்க சூளுரை மேற் கொள்ளவும் மிக ஆற்றலோடு இதை வடிவமைத்துத் தந்திருக்கின்ற வரவேற் புரை நிகழ்த்திய ஆருயிர் சகோதரர் வேளச்சேரி மணிமாறன் அவர்களே, பல் லாயிரக்கணக்கிலே திரண்டிருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே, தாய்மார்களே
பெரியோர்களே, மதிப்பிற்குரிய பத்திரிகையாளர்களே, ஊடகவியலாளர்களே,
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்க்கும் ஆற்றல் அதுவே படை என்ற வள் ளுவன் வாய்மொழிக்கு இலக்கணமாக, ஈட்டி பாய்ந்தாலும் இமைகொட்டாது
மார்பு காட்டும் கூட்டம்தான் தமிழர் உரிமை காக்க சூளுரைக்கும் இந்த வாலிப வேங்கைகளின் கூட்டம் என்று நிரூபித்துக்கொண்டிருக்கின்ற இளைஞர் பட் டாளமே, வணக்கம்.

நவம்பர் 27 ஆம் நாள் நடைபெற இருந்த நிகழ்ச்சி.அது மேலும் உறுதிகொள்ளும் நாளாக டிசம்பர் 27 ஆம் நாள் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பி லே இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சோதனைகள் தமிழ்க் குலத்தை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கிற வேளையில் தமிழகம் சிலிர்த்து எழுந்தி ருக்கக்கூடிய காலகட்டத்திலே இந்தக் கூட்டத்தை நாம் நடத்திக்கொண்டிருக் கின்றோம்.

மாவீரர்களுக்கு வீரவணக்கம் என்பதனை அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் உணர்ச்சிகரமாக இங்கே எடுத்துச்சொன்னார்கள்.தியாக வாழ்வை மேற்கொண் டிருக்கக்கூடிய அண்ணன் பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். ஆண்டுகள் பலவாக சிறைக் கொட்டடியிலே வாடியவரும், தலைமறைவு வாழ்க்கை நடத் தியவரும், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்கின்ற களத் தையும் தந்திட்ட ஒரு இயக்கத்தின் பிரதிநிதியுமான அண்ணன் நல்லகண்ணு
சூளுரைத்து அமர்ந்திருக்கிறார்.

இதே தியாகராயர் நகரில் தன் இறுதி மூச்சுஅடங்குவதற்கு முன்பாக, உனக்கும் எனக்கும் என்னடா உறவு? என்று தில்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கர்ஜித்த வெண்தாடி வேந்தரினுடைய எண்ணங்களை கருத்துகளை இதயத்தில் தாங்கி, கருஞ்சட்டைப் படை இயங்குகிறது என்ற வகையிலே திகழுகிற பெரியார் திரா விடர் கழகத்தினுடைய பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் முழக்க மிட்டு அமர்ந்திருக்கிறார்.

வாலிப வேங்கைகள் ஏராளமாக இந்தக் கூட்டத்திலே திரண்டிருக்கிறார்கள். மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதும் வீர வணக்கம் செய்து சூளுரைப்பதும்
அகிலமெங்கும் காணக்கூடிய ஒன்று என்பதனை இங்கே அவர்கள் சுட்டிக் காட் டினார்கள். 1989 ஆம் வருடம் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் திலகம் பிரபாகரன்
அவர்கள் வன்னிக் காட்டில் முதலாவதாக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்தி னார். லெப்டினன்ட் சங்கரினுடைய நினைவாக அந்த நாளைத் தேர்ந்தெடுத் தார்.எதிரிகளால் தாக்கப்பட்டு மேனியிலே குண்டுகள் பாய்ந்த நிலையில், குருதி வடிந்த மேனியோடு மரண வாசலை நெருங்கிக் கொண்டிருந்த நிலை யில் அலைகடல் தாண்டி வந்து தாய்த் தமிழகத்தில் தன் நெஞ்சிலே நேசித்த மாவீரர் திலகம் பிரபாகரனுடைய மடியிலே உயிர் சிறிது சிறிதாக பிரிந்திருக் கக்கூடிய அந்தக் கடைசி நேரத்திலும் தாயை நினைக்காமல், தந்தையை நினைக்காமல் தம்பி தம்பி என்று உச்சரித்தவாறு அந்த உதடுகள் அமைதிபெற கண்ணை மூடிக்கொண்ட லெப்டினன்ட் சங்கரினுடைய நினைவாக மாவீரர் நாள் நிகழ்வை பிரபாகரன் அவர்கள் 1989 வன்னிக் காட்டிலே நடத்தினார்.



பல்லாயிரக்கணக்கானவர்கள் இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். அவர்களுக்காக ஈகச் சுடர்களை ஏற்றுகின்றபோது, இதோ எரிகிறதே தீ இதைப்பற்றி பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் உரையிலே சுட்டிக்காட்டி இந்தத் தீ நாக்குகளின் நடனத் திலே ஒருஅதிசயமான காட்சியை நான் பார்க்கிறேன். மனித தீபங்கள் பல்லா யிரக்கணக்கிலே அணிவகுத்துச் செல்லுவதைப்போல, நெருப்பு நதி ஒன்று
நகர்ந்துசெல்வதைப்போல, என் மனதிலே அந்த அதிசயக் காட்சி தோன்று கிறது. நம்முடைய இதயக் கோவிலிலே வழிபட வேண்டியவர்கள். நாம் அவர் களை வணங்குகிறோம். நம்முடைய வீர பூமியினுடைய மார்பைப் பிளந்து அவர்களை உள்ளே புதைத்திருக்கிறோம். அந்த விதைகள் விருட்சங்களாக
எழும். தமிழீழ விடுதலையைப் பெறுவதற்கு சத்திய இலட்சிய நெருப்பாகத் திகழ்ந்துகொண்டிருக்கக்கூடிய இந்த மாவீரர்கள் மீது அவர்களுடைய தியாகத் தின் மீது ஆணையிட்டு, தமிழ் ஈழத்தை வென்றெடுப்போம் என்று அவர் உறுதி கூறினார். சூளுரைத்தார். அந்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.

இங்கே அண்ணன் நல்லகண்ணு அவர்கள் துயரம் நீங்கவில்லை. துன்பம் இன் னும் ஓராயிரம் மடங்கு அங்கே தாக்குகிறது. தமிழ் ஈழத்திலே அழுகையும் கண் ணீருமாக இருக்கிறது என்பதனை சுட்டிக்காட்டியதோடு,நெஞ்சைப்பிளக்கின்ற அந்த சோகத்தை காவியமாக படைத்துத் தந்த இயக்குநர் புகழேந்தி தங்கராசு வழங்கிய உச்சிதனை முகர்ந்தால், திரைக்காவியத்தை இங்கே எடுத்துச் சொன் னார்கள்.

இந்த நேரத்திலும் அங்கே எவ்வளவு துயரம் நேர்கிறது என்பதனை நம்முடைய அன்புக்குரிய கன குறிஞ்சி அவர்களும் பேராசிரியர் இருதயராஜ் அவர்களும், முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு இருமுறை சென்று வந்த செய்தி களை முள்ளி வாய்க்கால் இரத்த சாட்சியாக அந்த நூலிலே தந்திருக்கிறார் கள். அதைப் படிக்கிற போது, கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. இதயம்
வெடிக்கின்ற வேதனையை அந்த வார்த்தைகளில் அவர் வடித்துத் தந்திருக் கிறார்.

பல்லாயிரக்கணக்கிலே அவர்கள் இன்றும் நாசப்படுத்தப் படுகிறார்கள் என்ற செய்தியைப் படிக்கவே முடியவில்லை. இராணுவம் எல்லா இடங்களிலும்
நுழைந்திருக்கிறது. சிங்கள மயமாக்கல், பெளத்த மயமாக்கல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போரிலே பின்னடைவுக்கு என்ன காரணம் என்பதனை விடுதலை இராஜேந்திரன் இங்கே விளக்கிச் சொன்னார். யுத்த களத்திலே புலி களை நேருக்கு நேராக நின்று வீழ்த்தக்கூடிய வல்லமையோ ஆற்றலோ சிங் களவனுக்கு ஒருபோதும் கிடையாது. (கைதட்டல்)

ஆனால், சோனியா காந்தி அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கிற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 ஆம் ஆண்டு
பொறுப்பேற்ற நாளிலே இருந்து வழங்கிய ஆயுதங்கள்,அள்ளிக் கொடுத்த ஆயிரக்கணக்கான கோடி பணம்,வகுத்துத் தந்த போர் திட்டங்கள், இந்தியா வின் முப்படைகளுடைய பிரதிநிதிகள் அங்கே சென்று இலங்கையினுடைய இராணுவத் தளபதிகளோடு நடத்திய ஆலோசனைகள், அதன் பிறகு இவர்கள்
அனுப்பி வைத்த சாதனங்களின் துணை கொண்டு,உலகம் தடை செய்த ஆயு தங்களையும் பயன்படுத்தி விண்ணிலே இருந்தவாறு புலிப்படை அமைப்பு களுடைய பாசறைகளைக் கண்காணித்து அவர்கள் நகர்வுகளை அவ்வப்போது தெரிவித்து, ஆகாய மார்க்கமாக குண்டுகளை வீசியும் தரைமார்க்கமாக கனரக
ஆயுதங்களைப் பயன்படுத்தியும் ஏழு வல்லரசுகளுடைய ஆயுத பலத்தோடு ஈழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை போரிலே அவர்கள் தோற்கடிக்க முடிந் தது என்றால், ஏழு வல்லரசுகளை பிரபாகரன் எதிர்த்து நின்றார்.

அவர் ஏந்திய ஆயுதம்தான் தமிழர்களைப் பாதுகாத்து வந்தது. எத்தனை இலட் சம் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றதும், குருடாகிக் கிடந்த உலகத் தினுடை ய கண்கள் லேசாக விழிக்கத் தொடங்கியது. செயலற்றுக் கிடந்த ஐ.நா. மன்றத் தினுடைய பொதுச் செயலாளர் அதற்குப் பின்னர் வேறு வழியின்றி மனித உரிமைக் கமிஷனிலே தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தைத் தோற்கடித்த
போதிலும், அவர்கள் நியமித்த மூவர் குழு அங்கே போய் பார்வையிட்டு உண் மைகளை ஓரளவுக்கு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, இசைப்பிரியா நாச மாக்கப்பட்டதை, எட்டுத் தமிழர்கள் அம்மணமாக இழுத்து வரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதை, மருத்துவமனைகள் குண்டுவீச்சுக்கு இலக்கானதை கட் டாந்தரைகளிலே படுகாயமுற்று குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்தவர் கள் மருத்துவ சிகிச்சை இன்றி மடிந்ததை, கொத்துக் கொத்தாக தமிழர்கள்
கொல்லப்பட்டதை இந்த உண்மைகள் ஓரளவுக்கு உலகத்தின் கண்களுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிற நிலைமையில், முழுக்க முழுக்க இந்திய அரசு
இராஜபக்சேவினுடைய அரசாங்கத்திற்கு துணையாக இருந்தது.

நடைபெற்ற சம்பவங்களை அறிவதற்காக ஒரு ஆணையத்தை அறிவித்திருக் கிறோம் என்றார்கள். ஒரு கமிஷன் அறிவித்திருக்கிறோம் என்றார்கள். ராஜ பக்சே அரசு அறிவித்திருக்கிறது என்று இந்திய அரசு சொன்னது.

சிங்கள அரசு அறிவித்த அந்தக் குழு அறிக்கை தந்திருக்கிறது. முழு அறிக்கை யினுடைய உண்மைகளும் வெளிவராவிடினும், சிங்கள இராணுவம் தவறு செய்யாததைப்போல, அங்கொன்றும் இங்கொன்றும் ஏதோ தவிர்க்க இயலா மல் அது விடுதலைப்புலிகளின் நடவடிக்கையின் காரணமாக சம்பவங்கள் நடைபெற்றதாக அந்த அறிக்கையிலே சொல்லுகிறார். முழுக்க முழுக்க பொய் களையே அக்கிரமங்களையெல்லாம் மூடி மறைத்து ஒரு அறிக்கை தந்திருக் கிறார்கள்.

ஆனால், நம்முடைய சகோதரர்கள் அங்கே பார்த்துவிட்டு வந்து சொல்கிறார் கள். எல்லாம் பெளத்த மயம் ஆக்கப்படுகிறது. மாவீரர்களுக்கு வீரவணக்கம்
செலுத்துகிறோம். கார்த்திகைப் பூக்களைத் தூக்கிக் கொண்டுவந்து எங்களிடம் கொடுத்தீர்கள் - அண்ணன் நெடுமாறன் அவர்கள். செங்காந்தள் மலர்களைக்
கொண்டுவந்து தந்தீர்கள்.எப்படி நடுகல் வைப்பதும்,ஆயிரக்கணக்கானஆண்டு களுக்கு முன்பு வீரர்களுக்கு வீரக்கல் எடுத்து அவர்களுக்கு புகழ் அஞ்சலி
செலுத்துவதும் வழக்கமாக இருப்பதைப் போல, அங்கே செங்காந்தள் மலர் களை இந்த கார்த்திகைப் பூக்களைத் தூவி தீபச் சுடர்களை ஏற்றி, அவர்கள் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அவர்களுக்கு துயிலகங்களை ஏற்படுத் தினார்கள். இன்றைக்குஇங்கே நாம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

ஈழத்தில் பதினாறு பகுதிகளில் மாவீரர் துயிலகங்கள் அனைத்தும் தகர்க்கப் பட்டு, மண்மேடாக்கப்பட்டு அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களிலே எழுப்பப் பட்ட கல்லறைகள் தகர்க்கப்பட்டு முள்ளி வாய்க்கால் பகுதி முழுக்க முழுக்க இன்றைக்கு இராணுவக் கேந்திரமாக்கப் பட்டுவிட்டது. அந்த மண்ணுக் கடியி லே பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் எலும்புகள் உள்ளே கிடக்கின்றன. துயிலகங்களை எல்லாம் தகர்த்துவிட்டு, தமிழர்களின் அடையாளமே இல்லா மல் ஆக்கிவிட வேண்டும் என்று, சிங்களவன் கருதுகிறான். என்னுடைய
அன்புக்குரிய தமிழ் மக்களே, ஆலயங்களுக்குச் சென்று வழிபடுகின்ற தமிழ் மக்களே, இந்தப் பகுதியிலே இருக்கக்கூடிய வீடுகளிலே இருக்கக் கூடிய சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன், இது ஜாதி மத எல்லைகளைக் கடந்து, தாய்த்தமிழகத்திலே உணர்வு ஊட்டுவதற்காக நடத்தப்படுகிற கூட்டம். அங்கே
வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதும், அவை எல்லாம் உங்களிலே பலருக் குத் தெரிந்திருக்கும்.

தொடரும் ..............

No comments:

Post a Comment