Saturday, June 8, 2013

கல்வி உரிமைச் சட்டம் என்ன ஆயிற்று? -சங்கொலி

தலையங்கம்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act - 2009) என்று அழைக்கப் படுகின்ற “குழந்தைகளுக்கான கட்டணமில்லாத, கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டம் (Right of children to Free and compulsory Education Act) 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப்பெற்று சட்டமாக்கப்பட்டது.2010 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்துள்ள “கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கின்றன. அனைவருக்குமான கல்வி வழங்கு வதை இச்சட்டம் உறுதி செய்யவில்லை. கோத்தாரி ஆணையம் முன் வைத்த
அனைவருக்கும் பொதுவான பொதுக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த
வழிவகை செய்யவில்லை என்று கல்வி உரிமைச் சட்டத்தின் மீது பல விமர்ச னங்கள் எழுந்தன.
நமது அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாழ்வு ரிமை (பிரிவு 2) கல்வி உரிமையையும் உள்ளடக்கியதாகவே கருதப்பட்டு வந் தது. தாராளமய- தனியார்மய கொள்கை 1992 இல் நடைமுறைக்கு வந்த போது, இந்திய அரசின் கல்விக் கொள்கையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. பன் னாட்டு நிதியம் (IMF) உலக வங்கி ஆகியவை அறிவித்த ‘கட்டுமானத் தகவ மைப்புத் திட்டத்தை (Stuctural Adjustment Programme -SAP) இந்திய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் தொடங்கியது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூகப் பொறுப்புகளில் இருந்து அரசு நழுவிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் அடிப்படையான கூறு ஆகும்.

1990 இல் உலக வங்கியும், உலக நாடுகள் அவையும் இணைந்து நடத்திய ‘எல் லோருக்கும் கல்விக்கான உலக மாநாட்டில்’ வெளியிடப்பட்ட பிரகடனம் இத னை உறுதி செய்கிறது.

1. அரசு குடிமக்களுக்குக் கல்வி அளிக்கும் அரசியல் சட்டக் கடமைகளிலிருந் து விலகிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, தொடக்கக் கல்வி பொறுப்பிலிருந்து
விலகிக்கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவி, தொண்டு
நிறுவனங்கள், கார்ப்ரேட்கள், மத நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமாகவே தொடக்கக் கல்வியைச் செயல்படுத்த வேண்டும்.

2. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் மற்றும் அரசியல் சட்டம் அளிக் கும் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான எல்லோருக்கும் பொதுவான இலவசக் கல்வி பெறும் உரிமை இனி மக்களுக்குக் கிடையாது.

3. கல்வி இனி உலகச் சந்தைகளில் ஒரு பண்டம் ஆக்கப்படும். நர்சரி முதல் உயர் கல்வி வரை இனி தனியார் மயம் ஆக்கி, வணிகப் பொருளாக்கப்படும்.

மேற்கண்ட பிரகடனம்தான் இன்று கல்வி என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைத்து, ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டதற்குக் காரணம் ஆகும்.

“விலை போட்டு வாங்கவா முடியும்?” என்று பாவேந்தர் கல்வி பற்றி பாடல் எழுதினார்.அது அந்தக்காலம். இன்றோ, விலை போட்டுத்தான் வாங்க முடியும் என்ற நிலைக்கு கல்வி, சந்தைப் பொருள் ஆகிவிட்டது.

1991 இல் உச்ச நீதிமன்றம், உன்னிகிருஷ்ணன் வழக்கில் அளித்தத் தீர்ப்பில், இந்திய குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வி பெறும் உரிமை இருக்கிறது என்று அரசியல் சட்டத்தின் பிரிவு 21 குறித்து விளக்கம் அளித்தது.

இதன் அடிப்படையில் கல்வியாளர்களும் மக்கள் நல அமைப்புகளும் குரல் எழுப்பியதன் விளைவாக, வாஜ்பாய் அரசு, 2002 ஆம் ஆண்டு 86 ஆவது அரசி யல் சடடத் திருத்தத்தை நிறைவேற்றியது.

அரசியல் சட்டத்தின் 21 ஆவது பிரிவில் 21அ என்கிற புதிய பிரிவும் அரசியல் சட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் (Directive Principle) 45 ஆவது பிரிவில் கூடுதல்
விளக்கமும் சேர்க்கப்பட்டது. ஆனால், இந்தப் புதிய பிரிவு (21அ)பிற அடிப்படை
உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளது போல, எல்லோருக்கும் கட்டாய இலவ சக் கல்வி பெறும் உரிமை உண்டு என நிபந்தனையின்றி அமையாமல் “அரசு இயற்றும் சட்டம் ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்படும் வடிவில் கட்டாய இலவ சக் கல்வி அளிக்கப்படும்” என்று வடிவமைக்கப்பட்டது. வேறு எந்த அடிப்படை உரிமையும் இப்படி ஒரு நிபந்தனையோடு அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி உரிமைச் சட்ட வரைவைத் தயாரிக்க மத்திய கல்வி நிர்வாக வாரியம் (CABE) குழு ஒன்றை 2005 இல் அமைத்தது. அக்குழு தயாரித்த வரைவு - கல்வி யாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், பார்வையாளர்கள் யாருடைய விரிவா ன விவாதத்திற்கும்விடப்படாமலும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்து ரைகள் ஏற்கப்படாமலும் தயாரிக்கப்பட்டு, சட்டம் ஆக்கப்பட்டது.

கல்வி உரிமைச் சட்டப்படி எல்லாக் குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல்வி என்பது உறுதி ஆக்கப்பட்டுள்ளது என்று சட்டத்தில் உள்ளதா? என்றால் இல் லை. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்குத்தான் கட்டாயக் கல்வி என்று இச்சட்டம் வரையறை செய்கிறது. தொடக்கக் கல்விக்கு முந்தை ய நர்சரி கல்வி,குழந்தை நலம் ஆகியவை ஏற்கப்பட்டு, 0-6 வயது வரையிலான குழந்தைகளையும் உள்ளடக்கியதாக 86 ஆவது சட்டத் திருத்தம் செய்யப் படுவ தற்கு முன்பு வரை இருந்தது. ஆனால், கல்வி உரிமைச் சட்டம் 0-6 வயது வரை யில் குழந்தைகளின் கல்வி மற்றும் நலப்பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கும் வகையில் இருக்கின்றது.

இவ்வாறு கல்வி உரிமைச்சட்டத்தின் மீது பல்வேறு விமர்சனப் பார்வைகள் இருப்பினும், இச்சட்டத்தின் மூலம் கிடைக்கின்ற குறைந்தபட்ச நலன்களை உறுதி செய்கின்ற பொறுப்பு மத்திய-மாநில அரசுகளுக்கு இருக்கின்றது.

கல்வி உரிமைச் சட்டப்படி, சமூகத்தில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமுதாயத் தைச்சேர்ந்த குழந்தைகளுக்கும் (Weaker sections and disadvantaged Communities) மற்றும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கும் தனியார் நடத்தும் பள்ளிகளில் 25 சதவிகி தம் இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது. தனியார் பள்ளி கள் இச்சட்டத்தின்படி நடத்துகொள்கின்றனவா? என்பதை தேசிய குழந்தைகள்
ஆணையம் கண்காணிக்கும் என்றும், கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது.

தமிழக அரசு 2011 நவம்பர் 8 இல் ஒரு அரசாணை பிறப்பித்து, இந்த 25 சதவீத
இடங்களில், கைவிடப்பட்ட குழந்தைகள், எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகள், பிற பாலின குழந்தைகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகி யோருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமா னம் இரண்டு இலட்சத்திற்குட்பட்டு உள்ள குழந்தைகள், பின்தங்கியவர்கள் என்று தமிழக அரசு ஆணை வரையறுத்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட் டன.தமிழ்நாட்டிலுள்ள 5934 மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் 200 மத்திய கல்வி வாரியப் பள்ளிகளும் (சி.பி.எஸ்.சி.) 25 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக வழங்கி உள்ளனவா? என்று இதுவரை தமிழக அரசின் கல்வித்துறை ஆய்வு நடத்தியதாக தகவல் இல்லை. அப்படி ஆய்வு நடத்தி இருந்தால், தனியார் பள்ளிகள் எந்த அளவுக்கு கல்வி உரிமைச் சட்டத்திற்கு மரியாதை தந்துள்ளன என்பது விளங்கும்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்வதற்கு விண்ணப்பங்கள் அளிக்கப்படுவதில்லை. பெற்றோர்கள் இந்த
சட்டப்படியான இடஒதுக்கீடு குறித்து அறிந்து, தனியார் பள்ளிகளை அணுகி னால் அரசு உத்தரவு வரவில்லை என்று அப்பள்ளிகள் கைவிரித்து விடுகின் றன. தங்கள் விருப்பப்படி சேர்க்கப்பட்ட குழந்தைகளை 25 சதவீதத்தில் கணக் குக் காட்டி, விண்ணப்பங்களை அதற்கு ஏற்ப பூர்த்தி செய்து கல்வி உரிமைச் சட்டம் பின்பற்றப்படுகிறது என்று நம்பச் செய்துவிடுகின்றன.

கல்வி உரிமைச் சட்டம் (2009) முழுமையாக நடைமுறைப்படுத்திட தமிழக அரசு கீழ்க்காணும் முக்கிய நடவடிக்கைகளை முழுவீச்சில் நிறைவேற்ற வேண்டும்.

1. கல்வி உரிமைச் சட்டப்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் மெட்ரி குலேஷன் பள்ளிகளிலும், இதர பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு பற்றிய
விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

2. பின்தங்கிய குழந்தைகளின் பெற்றோருக்கான ஆண்டு வருமானத் தொகை யை ஒரு இலட்சத்திற்கு குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

3. இச்சட்டப்படி, பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு வருமானச் சான்று, சாதி சான்று, மாற்றுத் திறனாளி சான்று, மருத்துவச் சான்று, பாலினச் சான்று ஆகி யவற்றை அரசின் பல்வேறு துறைகளுக்குச் சென்று அலைக்கழிக்கப் படா மல் உடனடியாகக் கிடைக்கும் வகையில் எளிமை ஆக்கப்பட வேண்டும்.

4. கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 10 இன் படி தமிழக அரசும், உள்ளாட்சி
அமைப்புகளும் இணைந்து 6 வயது முதல் 14 வது வரை உள்ள குழந்தைகளை
பள்ளிகளில் சேர்க்க முழு வீச்சுடன் பெற்றோர்களிடம் வலியுறுத்திட நடவடிக் கை மேற்கொள்ள வேண்டும்.

5. இச்சட்டத்தின் பிரிவு 12(2)இன் படி 25 சதவீதம் சேர்க்கப்படும் குழந்தைகளுக் கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கிட வேண்டும். இதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், இக்குழந்தைகளுக் கான சீருடைகள், காலணி, புத்தகங்கள், எழுது பொருள்கள் ஆகியவற்றுக்கான செலவுகளையும் தேர்வுக் கட்டணங்களையும் அரசே ஏற்க வேண்டும்.

6. இதன் சட்டப்பிரிவு 21 இன் படி, கல்வி உரிமைச் சட்டத்தை தனியார் பள்ளி கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கவும், குழந்தைகளின் கட்டாயக் கல்வியை உறுதி செய்யவும் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், பெற்றோர் ஆகியோர் அடங்கிய ‘பள்ளி மேலாண்மைக்குழு’ (School Management Committee -SMC)) அமைக்கப்பட வேண்டும்.

7. கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 28 இன் படி, தனியார் பள்ளி ஆசிரியர்கள்
தனிப்பயிற்சி நடத்துவதை தடை செய்ய வேண்டும்.

8. கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்திட இச்சட்டத்தில் இடமில்லாதது பெரும் குறையாகும். எனவே தமிழக அரசே கல்லூரிகளில் பொறியியல் மற்றும் மருத்துவ மாண வர்களை சேர்ப்பதற்கு பின்பற்றப்படும் ஒற்றைச் சாளர முறை திட்டத்தை 25 சதவீத இடங்கள் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க உரிய வகுப்புவாரி இட ஒதுக்கீட்டையும் சேர்த்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment