Monday, June 24, 2013

“கச்சத் தீவு” தமிழருக்குச் சொந்தம்!

அன்னைத் தமிழகத்தின் இராமேசுவரத்தில் இருந்து 17 கி.மீ. வடக்கில் ஆள் அர வம் இல்லாத உயரம் குறைவான குட்டித்தீவு கச்சத்தீவு. 

பறவைகளின் ஒலிகளும், கடல் அலையின் ஒலியும்,மரங்கள் அசைவினால் ஏற்படும் ஒலியும் தவிரவேறு ஒன்றையும் கேட்க முடி யாத அமைதித்தீவாக இருந்த கச்சத்தீவு தற்போது இந்திய அரசியலில் புய லைக் கிளப்பி வருகிறது.

தமிழர் தலைவர் வைகோ
சுதந்திரத்திற்குப் பின் இந்தியக் கடலோரப் பகுதியில்,அதுவும் குறிப்பாக கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்குப் பின்னர், 600 தமிழக மீனவர்கள் சிங் கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றும் - இன்றும் - ஏன் நாளையும் கூட இந்த அவலம் தொடர்ந்து நடை பெற் றுக் கொண்டுதான் இருக்கிறது; இருக்கும்.

இதற்கு மாற்றாக கச்சத்தீவைத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழர் தலை வர் வைகோ அவர்கள் கூட்டங்களிலும், மாநாடுகளிலும், பொதுக்குழுவிலும்
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் அதை வலியுறுத்தியே வருகின்றன.கச்சத்தீவு தமிழருக்குச் சொந்தம் என்பதற்கு இரண்டு ஆவணங்களை இங்கே தருகிறேன்.

பசுமை நிறம் - ஆமை

டார்குயின் எனும் பச்சை ஆமைகள் நிறைந்திருந்ததால் பச்சைத்தீவு என்று அழைத்தனர். அதுவே கச்சத்தீவு ஆயிற்று. ‘கால் ஆழ்ந்து அழுந்திக் கடல்புக் குழி கச்சம் ஆகி’ என்பது கம்பராமாயணம். இதில் கச்சம் என்றால் ஆமை. ஆமைகள் மிகுதியாக வாழும் காரணத்தால் கச்சத்தீவு, கச்சா; கச்சு; கச்சம் என்னும் சிறு மீன் கிடைப்பதால் இத்தீவிற்கு கச்சத்தீவு என்று பெயர் வந்தது; கச்சத்தீவு தமிழர் தம் சொத்து; இதோ அதற்கான ஆதாரங்கள்.

23.06.1880

இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த எட்டு கிராமங்களையும், கச்சத்தீவு உள்ளிட்ட 4 தீவுகளையும் சாயவேர் சேகரிக்க இராமநாதபுரம் கலெக்டர் எட் வர்டு டர்னர் அவர்களிடம் இருந்து குத்தகைக்கு வாங்கினர்.

முகம்மது அப்துல்காதர் மரைக்காயர்

கீழக்கரையைச் சேர்ந்த சாயுபு மாப்பிள்ளை மரைக்காயர் மகன் முகம்மது அப் துல்காதர் மரைக்காயரும், இராமநாதபுரம் இராமசாமிபிள்ளை மகன் முத்து சாமி பிள்ளையும் சேர்ந்து கூட்டாக வருடம் ஒன்றுக்கு 700 ரூபாய்க்கு குத்த கைக்கு 23.06.1880 இல் எடுத்து உள்ளனர்.

கச்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளை குத்தகைக்கு எடுத்த ஆவணம் இராமநாதபுரம் பதிவு அலுவலகத்தில் 02.07.1880 இல் பதிவாகியுள்ளது. இதோ அந்த பத்திரம்
முழுவதுமாக...

02.07.1880; பதிவு எண் - 510/180;

02.07.1880; 1 புத்தகம் - 16 ஆம் வால்யூம் - ரிஜிஸ்டர்.பத்திரத்திற்கு நகல்; (ரூ.7 முத்திரைத்தாளில் எழுதப்பட்டுள்ளது)

1880 ஆம் வருஷம் ஜூன் மாதம் 23 ஆம் தேதி மதுரை டிஸ்டிரிக்கு ரிஜிஸ்தார் சரகத்து இராமநாதபுரம் சப் டிஸ்டிரிக்கு இலக்கம் இராமநாதபுரத்திலிருக்கும் மதுரை ஜில்லா ஸ்பெஷல் கலெக்டர் எட்வர்டு டர்னர் துரையவர்களுக்கு மேற் படி இராமநாதபுரம் டிஸ்டிரிக்கைச்சேர்ந்த கீழக்கரையிலிருக்கும் சோனக ஜாதி சாயபு மாப்பிள்ளை மரைக்காயர் குமாரர் வியாபாரமும், விவசாயமும் ஜீவ னம் முகம்மது அப்துல்காதர் மரைக்காயர் 1 இராமசாமிபிள்ளை மகன் விவ சாய ஜீவனம் முத்துசாமிபிள்ளை 2 பேரும் எழுதிக்கொடுத்த கறார் நாமா என்ன வென்றால் இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த சாயவேர்களின் பிரத்யேக மாய்க் குத்தகைக்குட்பட்டிருக்கிற ஏர்வாடி கிராமம் மேல் பக்க எல்லைக்கும், மேல் பக்கமிருக்கிற நான்கெல்லை ஜாப்தாவில் அடங்கிய மேற்படி பாலை யாத்துக்குக் கீழ்ப்பக்கம் முதல் இராமநாதபுரம் பரம்பன், முதுகுளத்தூர், திருவா டனை, சப் ரிஜிஸ்தி ராருக்குச் சேர்ந்த சாலைக்கரை வட்டகையென்று ஆத்தங் கரை, இராமேசுவரம், ஏர்வாடி, திருப்பாலைக் குடி, வகையறாவிலும் அதற்குள் ளடங்கின தீவுகளிலும் உண்டாகிற சாயவேர்களை இராமநாதபுரத்தில் சூராபீ சில் துரையவர்கள் முன்பாக நாளது மாதம் 21 ஆம் தேதி கிஸ்தியாரின் நிபந்த னையையும் உச்சரித்து யேலங் கூறினதில் கடோசியாக பசலி ஒன்றுக்கு ரூ.700. 

இந்த ஏழுநூறு வீதம் 1290- ஆம் பசலி முதல் 1294 ஆம் பசலி 5க்கு எங்களில் முத்துசாமிபிள்ளையாகிய நான் ஏலத்தில் ஒப்புக் கொண்டு அதற்காக பசலி குத்தகைத் துகையில் கால்வாசி துகை ரூ.175 தேதி 21 இல் டேவணியாகச் செலுத்தியிருப்பதால் மேற்படி தீவு வகையறாக்களில் உண்டாகும் சாயவேர் களை நாங்களிருவரும் மேற்படி 1290 ஆம் பசலி முதல் 1294 ஆம் பசலி வரை அனுபவித்துக் கொண்டு ஒவ்வொரு பசலிக்கும் ஏற்பட்டிருக்கும் மேல்கண்ட குத்தகைத் துகையை கிஸ்திப் பிரகாரம் நாங்களிருவரும் செலுத்தி வரவேண் டியது. டேவணித் தொகை கடேசிப் பசலி வாயிதாவுக்குச் செல் வைத்துக் கொள்ளவும்.

எந்தப் பசலியிலாவது கிஸ்திவாயிதாப் பிரகாரம் பணம் செலுத்தத் தவறினால் தவறின தேதி முதல் மாதம் 1க்கு 100க்கு ஒரு ரூபாய் வீதம் வட்டி சேர்த்திக் குடுக்கவும்.அப்படியாவது பசலி வகையறாக்குள் அந்தந்தப் பசலி குத்தகைத் துகையைப் பூரா செலுத்திவிடாத அடுத்த பசலி குத்தகை பாத்தியதையையும் டேவணியையும் இழந்துவிடவும் என்று ஏலம் கூறினதில் நஷ்டம் சம்பவித் தால் அந்த நஷ்டத்திற்கு உத்திரவாதம் செய்யவும் அனுபவித்த பசலிகளுக் குள்ள குத்தகைத் துகையை நிலுவையிருந்தால் செல்லாகும் தேதி வரை
வாயிதா தவறின தேதி முதல் மேல்கண்டபடி வட்டி சேர்த்துச் செலுத்தவும் நாங்களும் எங்களுடைய வாரிசுகளும் பிரதிநிதி வகையறாவும் உத்திரவாதி யாக இருப்போம்.

கிராமாந்தரங்களுக்கு விபரம்

மதுரை டிஸ்டிரிக்கு பாம்பன் சப் டிஸ்டிரிக்கு சேகரத்தில் மன்னாரு கரைக்கும், மேற்கு வடசமுத்திரத்திற்கும், தெற்கு சொக்கம்பிள்ளை மடத்திற்கும், கூத்தன்
புளிக்கும், முட்டக்கோன் வலசைக்கும், கிழக்கு குத்துக்கால் தீவு, முயல் தீவு, மன்னார் தீவு, தென்கரை களுக்கு வடக்கும், இந்நான்கெல்லைக்குட்பட்ட
கிராமங்களின் விபரம்:

இராமேஸ்வரம் உள்கடை உட்பட்ட கிராமம் - 1
பாம்பன் தங்கச்சி மடம் கிராமம் - 1
மண்டபம் கிராமம் - 1
மரைக்கான்பட்டினம் கிராமம் - 1
குஞ்சியா வலசை கிராமம் - 1
அருப்புக்காடு கிராமம் - 1
வேதாளை கிராமம் - 1
சாத்தன்கோன் வலசை கிராமம் - 1

ஆகக் கிராமங்கள் - 8

குத்துக்கால் தீவு - 1
முயல் தீவு - 1
மன்னாளித் தீவு - 1
கச்சத் தீவு - 1

ஆக தீவு - 4

(ஒப்பம்) முத்துசாமிபிள்ளை, முகம்மது அப்துல் காதம் மரைக்காயர்

04.02.1885

இராமநாதபுரம் சேதுபதி அரசரின் எஸ்டேட் மானேஜர் டி.ராஜாராமராயர் அவர் களிடமிருந்து இராமநாதபுரம் இராமசாமிபிள்ளை மகன் முத்துசாமிபிள்ளை என்பவர் சாயவேர் சேகரிக்க கச்சத்தீவு அடங்கிய பகுதியை ஆண்டுக் குத்தகை 215 ரூபாய்க்கு பெற்றார்.

இதோ அந்த வரலாற்று ஆவணம்... பதிவு எண் - 134/ 1885. ரிஜிஸ்டர் பத்திரத் திற்கு நகல் (ரூ.3 முத்திரைத் தாளில் எழுதப்பட்டிருக்கிறது).

1885 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மதுரை மாவட்ட ரிஜிஸ்திரார் சரகத்துக்கு இராமநாதபுரம் சப் ரிஜிஸ்தர் இலாக்கா இராமநாதபுரத்திலிருந்து ஆனரொரி டிப்டி கலெக்டர் அன்று மானேஜரும் இராமநாதபுரம் எஸ்டேட் மானேஜருமான டி.ராஜாராமைய்யர் அவர்களுக்கு மேற்படி இராமநாதபுரம் சப் டிஸ்டிரிக்கு மேற்படி இராமநாதபுரத்திலிருக்கும் அகம்படிய ஜாதி இராமசாமி பிள்ளை மகன் விவசாய ஜீவனம் முத்துசாமிபிள்ளை எழுதிக் கொடுத்து கறார் நாமா இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த சாயவேர்களின் பிரத்தியேக மாய் குத்தகை ஏற்பட்டிருக்கிற ஏர்வாடி மேல்பாற்கெல்லைக்கும், மேல்பக்கமி ருக்கிற பாலையார் முதல் வேம்பாத்து கீழ்பக்கம் வரையிலும்,அதற்குள் அடங் கிய தீவுகளும் நீங்கலாக அடியில் கண்ட நான்கெல்லையிலடங்கிய மேற்படி பாலையாத்துக்கு கீழ்ப்பக்கம் முதல் இராமநாதபுரம், பாம்பன், முதுகுளத்தூர், திருவாடானை சப்டிஸ்டிரிக்கு நேர்ந்த சாலைக்கரை வட்டகையென்று ஆற் றங்கரை, இராமேஸ்வரம், ஏர்வாடி, திருப்பாலைக்குடி வகையறாவிலும் அதற்குள்ளடங்கிய தீவுகளும் உண்டாகிற சாயவேர்களை இராமநாதபுரத்தில் மேற்படி மானேஜரவர்கள் முன்பாக நாளது 85 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 30 தேதியில் மேற்படியார் நிபந்தனையையும் எச்சரித்து ஏலம் கூறினதில்
கடேசியாக பசலி 1க்கு 215 ரூபாய் இந்த ரூபாய் 215 வீதம் 1295 பசலி முதல் 1299 வரை பசலி 5க்கு நான் ஏலத்தில் ஒப்புக்கொண்டு அதற்கான பசலி குத்தகைத்
துகையில் கால்வாசித் துகை ரூ.53 அணா 12 மேற்படி 30 தேதியில் டேவணி யாகச்செலுத்தியிருப்பதால் மேற்படி தீவு வகையறாக்களில் உண்டாகிற சாய வேர்களை நான் மேற்கண்ட 1295 ஆம் பசலி முதல் 1299 ஆம் பசலி வரை அனு பவித்துக் கொண்டு ஒவ்வொரு பசலிக்கும் ஏற்பட்டிருக்கிற மேல் குத்த கைத் தொகையை கிஸ்தி பந்தல் பிரகாரம் நான் செலுத்தி வந்து டேவணித் தொகை யை கடேசிப் பசலி கடைசி வாய்தாவுக்குச் செல் வைத்துக் கொள்ளவும். 

எந்தப் பசலியிலாவது கிஸ்தி வாயிதாப் பிரகாரம் பணம் செலுத்தத் தவறினால் தவறின தேதி முதல் மாதம் ஒன்றுக்கு 100க்கு ஒரு ரூபாய் வீதம் வட்டி சேர்த் துக் கொடுக்கவும் அந்தப் படிக்காக நாளது பசலி வகையறாக்குள் அந்தந்தப் பசலி குத்தகைத் துகையை உத்திரவாதம் செய்யவும் அனுபவித்த பசலிக் குள்ள குத்தகையத் துகையில் நிலுவையிருந்தால் அதற்குச் செல்லாக்கும் தேதி வரை வாயிதா தவறின தேதி முதல் மேல் கண்டபடி வட்டி சேர்த்துச் செலுத்தவும் உத்திரவாதியாக இருப்பேன் என எழுதிக் கொடுத்த கறார் நாமா.

கிராமாந்தரங்களுக்கு விபரம்

மதுரை டிஸ்டிரிக்கு பாம்பன் சப்டிஸ்டிரிக்கு சேகரத்தில் மன்னாருக்கரைக்கும் மேற்கு, வட சமுத்திரத்திற்கும் தெற்கு சொக்கபிள்ளை மடத்திற்கும் கூத்தன் புளிக்கும் முட்டக்கோன் வலசைக்கும் கிழக்கு குத்துக்கால் தீவு, முயல் தீவு, மன்னாளித் தீவு தென்கரைக்கும் வடக்கு இந்நான் கெல்லைக்குட்பட்ட கிராமாந்தரங்கள் விபரம்.

இராமேஸ்வரம் உள்கடை உட்பட்ட கிராமம் - 1
பாம்பன் தங்கச்சி மடம் கிராமம் - 1
மண்டபம் கிராமம் - 1
மரைக்கான்பட்டினம் கிராமம் - 1
குஞ்சியா வலசை கிராமம் - 1
அருப்புக்காடு கிராமம் - 1
வேதாளை கிராமம் - 1
சாத்தன்கோன் வலசை கிராமம் - 1

ஆகக்கிராமங்கள் - 8

குத்துக்கால் தீவு - 1
முயல் தீவு - 1
மன்னாளித் தீவு - 1
கச்சத் தீவு - 1

ஆக தீவு - 4

(ஒப்பம்) முத்துசாமிபிள்ளை

சாட்சி

இராமநாதபுரத்திலிருக்கும் குமாரசாமிபிள்ளை மகன் முத்துவீரபிள்ளை மேற் படியூரிலிருக்கும் மேனேஜ் மெண்டாபீஸ் கிளார்க் கிருஷ்ணசாமி ஐயங்கார் இந்தக் கறார் நாமா எழுதியது.

மேற்கூறிய இரண்டு ஆவணங்களிலும் பாம்பன் -முதுகுளத்தூர், திருவாடனை சப்டிஸ்டிரிக்கைச் சேர்ந்த சாலைக்கார வட்டகை என்ற ஆற்றங்கரை, இராமே சுவரம், ஏர்வாடி, திருப்பாலைக்குடி வகையறா விலும்,அதற்குள் அடங்கிய தீவு களும் என்று கூறப்படுவதில் கச்சத்தீவு ஒன்றாக மிகவும் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது.

கச்சத்தீவு தமிழர் தம் சொத்து என்பதற்கு யாரும் மறைக்க முடியாத, மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றுகள் பத்திரப்பதிவுகள் தெள்ளத்தெளிவாக இராம நாதபுரம் பதிவு அலுவலகத்தில் காணக் கிடைக்கிறது.

கச்சத் தீவு தமிழர் தம் சொத்து; அதனை தலைவர் வைகோ வழியில் மீட்டெடுக் க வேண்டியது தமிழர் தம் பொறுப்பு.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment