Thursday, June 13, 2013

அன்றைக்கே நாங்கள் சொன்னோம்; இன்றைக்கு ஐ.நா. அறிக்கை சொல்கிறது!

தமிழகம் பொங்கி எழ வேண்டும்.நாடெங்கும் பிரச்சாரம் நடக்க வேண்டும் . இளைஞர் கூட்டம் ஆர்த்து எழ வேண்டும்.கட்சிக்கு வாருங்கள் என்று நான் அழைக்கவில்லை. உங்களுக்கு எந்தக் கட்சி பிடிக்கிறதோ, அங்கேயே இருங்கள். அல்லது, கட்சிகளே வேண்டாம் என்று கூட இருந்து கொள்ளுங்கள்.
ஆனால், தமிழகத்து இளைஞர்களின் மான உணர்ச்சி செத்துப் போய்விட வில் லை என்பதை மெய்ப்பித்துக் காட்டுங்கள்.-வைகோ 

ராஜபக்சே கூட்டத்தைக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பீர்!
தூக்குக் கயிற்றில் தொங்க விடுவீர்!

சென்னை கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ

ஈழத்தமிழரைப் படுகொலை செய்த சிங்கள அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.சபையை வலியுறுத்தி, 25.4.2011 அன்று சென் னையில், சைதை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப் பாட்டத்தில், பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...
மார்ச் 22 ஆம் தேதி மாலையில், மாவீரர் திலகம் அவர்களைத் தன் மணிவயிற் றில் பத்து மாதங்கள் சுமந்த நமது அன்னை பார்வதி அம்மையாருடைய ஈமச் சாம்பலை, வங்கக் கடல் அலைகளிலே தூவிட, அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களோடு, தமிழ் ஈழ உணர்வாளர்களும், பல்லாயிரக்கணக்கில் திரண்டு உள்ள நீங்களும், அன்றைக்கு அந்தக் கடற்கரை மணல்வெளியிலே ஒருசேரத் திரண்டோம்.



அதன்பின்னர், மார்ச் 30 ஆம் நாள், மூன்று கடல்கள் சந்திக்கின்ற குமரித் திரு வடி யில், அலைகளில் தூவி, தமிழ் ஈழ மக்களைக் காக்கச் சூளுரைக்க, பல்லா யிரக்கணக்கில் திரண்டு இருந்த தமிழ் மக்கள் மத்தியில், ஆருயிர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களும், உணர்ச்சிக்கவிஞர் காசி. ஆனந்தன் அவர்களும், தெற்குச் சீமையின் தமிழ் உணர்வாளர்களும் திரண்டோம்.

சிங்கள இராணுவத்தின் ஈனத்தனம்

இன்றைக்கு, தலைநகர் சென்னையில்,பல்லாயிரக்கணக்கில் பனகல் மாளி கைக்கு அருகில் உணர்ச்சிப்பிழம்பாகத் திரண்டு இருக்கின்றீர்கள்.அன்னை பார்வதி அம்மையார் மறைந்ததற்குப் பிறகு, வல்வெட்டித்துறையில் அவரது சடலம் சிதையில் வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டதற்குப் பிறகு, அந்தச் சிதை நெருப்பு அவிந்து அணைவதற்கு உள்ளாக, மூன்று தெருநாய்களைச் சுட்டு, அவற்றின் உடல்களை, பார்வதி அம்மையாரின் சிதையில் சிங்கள இராணுவத் தினர் கொண்டு வந்து போட்டுக் கொக்கரித்த கொடுமை, இதுவரை எங்கும் நடைபெற்று இருக்காத ஈனத்தனமான கொடுமை ஆகும்.

அதைக் கண்டித்து, அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களும், நானும், அண்ணன் தா.பாண்டியன் அவர்களும், சகோதரர் நடராசன் அவர்களும், ஓவியர் சந்தா னம், ஏர்போர்ட் மூர்த்தி, புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்ட, இந்த மேடையில் அமர்ந்து இருக்கின்ற எண்ணற்ற தோழர்களும், அநீதியை எதிர்த்துக் குரல்
கொடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டு, ஒரு மண்டபத்தில் கொண்டு போய் அடைக்கப்பட்டோம்.

இன்று, இந்த நிகழ்ச்சியை பிற்பகல் இரண்டு மணிக்குமேல் கொடுக்கப்பட்ட மேடை அமைப்பதற்கான அனுமதியோடு, என்னுடைய ஆருயிர்ச் சகோதரர் கள் வேளச்சேரி மணிமாறன், வழக்கறிஞர் சுப்பிரமணி ஆகியோர், மிகக்
குறைந்த நேரத்தில் உணர்ச்சிப் பிரவாகத்தோடு, இந்த ஏற்பாட்டைச் செய்து தந்து இருக்கின்றார்கள்.

இங்கே ஒரு குற்றவாளிக் கூண்டு அமைக்கப்பட்டு இருக்கின்றது. ராஜபக்சே யின் முகம் வரையப்பட்ட முகமூடியோடு, ஒருவர் அந்தக் கூண்டில் நிறுத்தப் பட்டு இருக்கின்றார். அவரை இங்கே அழைத்து வருகின்றபோது, ‘ராஜபக்சே தான் வருகிறான்’ என்று கருதிய பலர், அவரை அடித்து விட்டார்கள். இதுதான்,
இந்திய அரசுக்கு எச்சரிக்கை, ராஜபக்சேக்கு எச்சரிக்கை.

அவனைத் தூக்குமரத்தில் தொங்கவிடு என்று இங்கே முழக்கங்களை எழுப்பி னோம். மணியரசன் அவர்கள் கூறியதைப் போல, ஐ.நா.மன்றம், மன நிறைவு
அளிக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு விடவில்லைதான். அந்த ஐ.நா. மன்றத்தின் அங்கமாக இருக்கின்ற மனித உரிமைகள் ஆணையத்தில், ஜன நாயகத்தைக் காக்கத் துடிக்கின்ற, ஈழத்தமிழர்களை இனக்கொலை செய்த கொடியவனைத் தண்டிக்க, நாடுகள் சில கொண்டு வந்த தீர்மானத்தை, வரிந்து
கட்டிக் கொண்டு ராஜபக்சேயோடு சேர்ந்து, இந்திய அரசு தோற்கடித்தது.

‘இலங்கையில் அமைதியை நிலைநாட்டி விட்டான்; ஆயுதம் ஏந்திய ஒரு அமைப்பை முறியடித்து விட்டான்’ என்று, இலங்கை அரசு அதே மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை, கேடு கெட்ட இந்திய அரசு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்த மன்மோகன்சிங் அரசு, ஆதரித்து அந்தத் தீர்மானத்தை நிறை வேற்றியது.

உறக்கம் கலைகிறது

ஐ.நா.மன்றத்தின் அங்கமே, நீதியைக் குழிதோண்டிப்புதைக்கிறதே? நீதி செத்து விட்டதா? உலகத்தின் கண்கள், நிரந்தரமாகக் குருடாகி விட்டதா? மனிதகுலத் தில் தமிழ்ச்சாதி இல்லையா? நானிலத்தில் நமக்கு நாதியே கிடையாதா? என்ற வேதனை படர்ந்த வேளையில், இதோ, உலகத்தின் கண்கள், குருடாகிக்கிடந்த விழிகள், சற்றே விழிக்கத் தொடங்கி இருக்கின்றன. தமிழகத்திலும் உறக்கம் சிறிது சிறிதாகக் கலைகிறது.

இந்த உறக்கத்தைத் கலைப்பதற்காகத்தான், எங்கள் வீரத்தியாகி முத்துக்குமார்  தன் மேனிக்குத் தீயிட்டுக் கொண்டான். தமிழகத்தில், 16 பேர் நெருப்புக்குண்டத் தில் தங்கள் உடல்களை, உயிர்களைத் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.

கிருஷ்ணமூர்த்தியின் தியாகம்

இங்கே காவல்துறை நண்பர்கள் இருக்கின்றார்கள்.தமிழகத்தின் காவல்துறை தலைமை அதிகாரிகளுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். என் கிராமத்துக்குப்
பக்கத்தில், சீகம்பட்டி என்கின்ற கண் விழிக்காத ஒரு குக்கிராமத்தில், பொறி யியல் படித்துவிட்டு, ராஜஸ்தானிலே வேலை பார்த்து வந்த கிருஷ்ணமூர்த்தி,
18 ஆம் தேதி அன்று அதிகாலையில், தன் உடல் முழுக்கப் பெட்ரோலை ஊற்றி நனைத்துக் கொண்டு,நெருப்பு வைத்துக்கொண்டு, இலங்கையில் இவ்வளவு
தமிழர்களைக்கொன்று விட்டான்.பச்சைக்குழந்தைகளைக் கொன்று விட்டான். அதற்காகத்தான் நான் சாகிறேன் என்று குரல் எழுப்பியவாறு,உடல் பாதிக்கு மேல் கருகிக் கீழே விழுந்தான். தெருவிலே கொண்டு வந்து கிடத்தினார்கள். ஊர் மக்களெல்லாம் திரண்டு விட்டார்கள். ‘பச்சைப் பிள்ளைகளையெல்லாம்
கொன்று விட்டார்கள்; ராஜபக்சே கொன்று விட்டான்; அதுதான் நான் செத்துப் போகிறேன்’ என்று கூறியவனைக் கோவில்பட்டி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.

அந்த வண்டியில், அவனது உடன்பிறந்த தம்பி, அவனும் பொறியியல் படித்து இருக்கிறான். அவன் பக்கத்தில் இருக்கிறான். ஊர் இளைஞர்கள் இருக்கின் றார்கள். அப்போதும், ‘இலங்கையில் இப்படி அநியாயம் பண்ணி விட்டானே, அதனால்தான் நான் தீக்குளித்தேன்’ என்று சொல்லிக் கொண்டே வந்தான். கோவில்பட்டி மருத்துவமனையில் அவனது உயிர் பிரிகின்ற வேளை வரை யிலும் இதையே சொல்லிக்கொண்டு இருந்தேன்.அப்போது, குருவிகுளம் காவல்நிலையத்தின் துணை ஆய்வாளர் அங்கே வருகிறார். அவரிடத்திலும், அதையே சொல்லுகிறான்.

ஆனால், அந்தக் காவல்துறை அதிகாரி, அதைப் பதிவு செய்யவில்லை, எதுவும் எழுதவில்லை. அவன் உயிர் இழந்ததற்குப் பிறகு, முதல் தகவல் அறிக்கை யில் அவர் என்ன எழுதி இருக்கிறார் தெரியுமா? ஒன்றேமுக்கால் மணிக்கு கிருஷ்ணமூர்த்தி இறந்த செய்தி எனக்குக்கிடைத்தது.பனிரெண்டரை மணிக்கு, அவனது தந்தையாரிடம் பேசினேன். இதுதான் எஃப்.ஐ.ஆர்.அப்போது, அவனது தந்தையார் என்னிடம், என் மகன் இராஜஸ்தானிலே வேலை பார்க்கின்ற இடத் திலே சம்பளம் குறைவாக இருக்கிறது என்று வருத்தப்பட்டுப்பேசினான். அதற் குப்பிறகு, தீக்குளித்து இறந்து போனான் என்று எழுதி இருக்கிறார். அது மட்டும் அல்ல; கிருஷ்ணமூர்த்தியின் உடலை உடனே எரித்து விடவேண்டும் என்று கிராமத்து மக்களை அச்சுறுத்தி இருக்கிறார். அதனால் பயந்து போன அவர்கள், ஊருக்குக் கொண்டு போய் எரித்து விட்டார்கள்.

தாயின் கண்ணீர்

நான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடத்துகின்ற போராட்டத்துக்காக, தூத் துக்குடிக்குச் சென்று இருந்தேன். இரவு 11 மணிக்குத் தகவல் கிடைத்து, இரவு
12 மணிக்கு மேலே அந்த ஊருக்குச் சென்று, காலையில் அவனது தாய் தந்தை யரைப் பார்த்தபோது, அவர்கள் அழுது புலம்பிக்கொண்டே சொன்hனர்கள். அவ னதுதாயின் முகம், கைகள் எல்லாம் கருகி இருந்தன. நான் அவர்களிடம் கேட் டேன். நீங்கள் தீயை அணைப்பதற்காக, மகனைப் பிடித்தீர்களா? என்று.

அவர்கள் மிகத் தெளிவாக, கிராமத்து விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தச் சகோதரி சொன்னார்: நான் போய் அவனைப் பிடித்து இருந்தால், நானும் எரிந்து
போயிருப்பேனே? இரவு நன்றாகத்தான் பேசிக்கொண்டு இருந்தான். ஆனால், கடந்த பத்து நாள்களாக, இலங்கையிலே பிள்ளைகளைக் கொன்று விட்டான்,
பிள்ளைகளைக் கொன்று விட்டான் என்றே சொல்லிக்கொண்டு இருந்தான். காலையில் ஊருக்குக் கிளம்ப இருந்தவன், நான்கரை மணிக்கு எழுந்து, என்னி டம் டீ போடச் சொன்னான். அவன் எதையோ எழுதிக் கொண்டு இருந்தான்.

நான் டீ போட்டுக்கொண்டு இருந்தேன்.என்ன பெட்ரோல் வாடை வீசுது? என்று, பக்கத்து வீட்டில் முற்றம் தெளித்துக்கொண்டு இருந்தவர்கள் சத்தம் போட்டார் கள். அதைக் கேட்டு நான் ஓடினேன். இவன் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு நிற்கிறான். கையில் தீப்பெட்டி வைத்து இருக்கிறான். நான் பதறிப் போய், தீப்பெட்டியைப் பிடுங்கினேன். அவன் என்னை உதறித் தள்ளி விட்டு, கண் மூடிக்கண் திறப்பதற்குள், தீக்குச்சியைப் பற்ற வைத்துத் தன் மேலே போட்டுக்கொண்டு, எங்கே நான் வந்து அவனைப் பிடித்து விடுவேனோ என்று கருதி, வீட்டுக்குப் பின்னால் ஓடினான்.

நான் ஒருகுடம் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஓடினேன்.உடம்பெல்லாம் எரிந் த நிலையில்,அப்படியே தூணுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து விட்டான்.நான் தண் ணீரைக் கொண்டு போய் அப்படியே ஊற்றினேன்.அப்போது அடித்த அனலில் தான், என் முகமும், கையும் கருகிப் போய்விட்டது என்றார். அந்தச் சகோதரி,
இப்போது, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கின்றார்.

நான் காவல்துறைக்கும், அதை ஏவுகின்றோருக்கும் சொல்லுவேன். பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்கின்ற ஈனத்தனமான புத்தி இங்கே யாருக் கும் கிடையாது. ஒரு இளைஞனின் உயிர், ஈழத்தமிழ் இனத்துக்காகப்போயிருக் கின்றது.

அண்ணன் தா. பாண்டியன் அவர்கள், ஆங்கில இலக்கியம் படித்தவர். மரணம் கொத்திக்கொண்டு போகின்றபோது, அந்த உதடுகளில் உண்மையைத் தவிர
எதுவும் வராது என்று உலகில் பலர் எழுதி வைத்து இருக்கின்றார்கள். அந்த வேளையில், பொய் வராது.

காவல்துறையே, மனசாட்சி இல்லையா?

காவல்துறை அதிகாரிகளைக்கேட்கிறேன்,நீங்கள் இராஜபக்சேயின் கைக்கூலி களாக வேலை பார்க்கின்றீர்களா? இரத்தம் கொதிக்கிறது.

வாழ வேண்டிய வய தில், அந்த இளைஞன் தன்னை அழித்துக் கொண்டு இருக் கின்றான்.அந்தத் தாய் சொல்லுகிறார்: சம்பளத்தைப் பற்றி என் பிள்ளை பேச வே மாட்டானே? நாங்கள் அவனுக்கும், தம்பிகளுக்கும் கேட்டதை எல்லாம் கொடுத்து இருக்கின்றோமே? ஒருநாளும் அவன் சம்பளத்தைப் பற்றிப் பேசி யதே கிடையாதே?

போலீஸ்காரர்கள் மாறி மாறி வந்தார்கள். துருவித்துருவிக் கேட்டார்கள். நான் உண்மையைத்தான் சொன்னேன்,நடந்ததைத்தான் சொன்னேன். அதன்பிறகு, அவன் எழுதி வைத்த கடிதத்தில் சந்தேகம் இருக்கிறது. ஒரு கல்லூரிக்கு எழு திய கடிதத்துக்கும், இந்த எழுத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று, ஒரு பத்திரிகைக்குக் காவல்துறையினர் தகவலும் கொடுத்தார்கள்.

அவனுடைய வேதனையில் சொல்லுகிறான்.ஈழத்தமிழர்களுக்காக ஒரு நாடு உருவாவதற்கு எல்லோரும் பாடுபட வேண்டும். அதுவரையிலும், தமிழ்நாட் டில் யாரும் ஆட்சியை ஏற்கக் கூடாது என்று. அதற்கு அடுத்து, அவனுடைய நம்பிக்கையைச் சொல்லுகிறான். ‘அன்றைக்கு இராவணன் கொடுமை செய் தான். இன்றைக்கு இராஜபக்சே கொடுமை செய்து  விட்டான். அன்றைக்கு அனுமார் தீ வைத்தார்.அதுபோல, ஆஞ்சநேயரை அழைக்கிறேன். சூர்ப்பனகை
இந்திய அரசு என்று எழுதிவிட்டு, என் தாயே, தம்பிகளே என்னை மன்னித்து விடுங்கள். நான் உயிரோடு இருந்து பயன் இல்லை. அதற்காகத்தான் இந்த முடிவை எடுத்துக் கொண்டேன் என்று முடித்து இருக்கிறான்.

முத்துக்குமார் தீக்குளித்த போதும் மூடி மறைத்து இருப்பீர்கள்.ஆனால், அவ னது மரண சாசனம், உங்கள் கைகளில் சிக்கவில்லை. வடசென்னையில் தீக் குளித்த அமரேசன், ஐந்து பக்கங்கள் மரண சாசனம் எழுதி வைத்து இருந்தார். இன்றுவரையிலும், எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதைக் கைப்பற்றிக் கொண்டு போன கயவன் யார்? அயோக்கியன் யார்? 

ஆனால், காவல்துறை யினர் இப்படிச் செய்யக்கூடும் என்று கருதி, அமரேசன், தன் மகள், மருமகனுக்கு எல்லாம் இண்லேண்ட் லெட்டரில் எழுதி அஞ்சல்
பெட்டியில் சேர்ப்பித்துவிட்டு, இந்த மரண சாசனத்தைத்தன் பக்கத்திலே போட் டுக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். சீர்காழி இரவிச்சந்திரன் உடலைக் குழி யிலே போட்டு விட்டு, நானும், அண்ணன் பழ.நெடுமாறனும் சென்னைக்கு ஓடி வந்தோம், அமரேசன் உடலைப்பார்ப்பதற்காக. பள்ளபட்டி ரவி தீக்குளித்த போதும், அவனுக்கும், அவன் மனைவிக்கும் சண்டை என்று, காவல்துறை அதி காரி அறிக்கை கொடுத்தார். அவன் இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித் தான் என்று யாராவது பேசினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இன்றைக்குச் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருக்கின்ற அதி காரிதான் அறிக்கை விட்டார். அப்போது, அவர் அங்கே இருந்தார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்த பள்ளபட்டி ரவியைப்பார்த்த போது, பேச்சு அரையும் குறையுமாக வந்தது. அவனது மனைவி சித்ரா பக்கத் தில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருந்தார். அவரிடம் கேட்டபோது என்ன சொன்னார்கள்? எங்கள் வீட்டில் டி.வி. கிடையாது. பக்கத்து வீட்டில் எங்கோ போய் டி.வி. பார்த்துவிட்டு வந்தவர், மெட்ராசிலே யாரோ தீக்குளித்து விட்டார் களாம் என்று சொல்லி,அதைச் சொல்லியே புலம்பிக்கொண்டு இருந்தார். நான் தண்ணீர் எடுக்கச் சென்றேன். திரும்பி வந்தபோது, உன் புருசன் தீக்குளித்து விட்டான் என்று சொன்னார்கள். நான் ஓடி வந்தேன்.உடல் முழுவதும் எரிந்து போய் கீழே விழுந்துவிட்டார்.உடம்பில் பொட்டுத்துணி இல்லை. அம்மண மாகக் கிடந்தார். பக்கத்தில் கிடந்த கித்தான் சாக்கை எடுத்து அவரது இடுப்பில் கட்டினேன் என்று சொன்னார். 

நான் உடனே, அருகில் இருந்த காவல்துறை அதிகாரிகள், செய்தியாளர்களை அழைத்து, இந்தச் சகோதரி சித்ரா சொல்வதை எழுதிக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதே காவல்துறையில், அம்மைய நாயக்கனூர் உதவி ஆய்வா ளர் சுமதி என்கின்ற ஒரு நேர்மையான தங்கை இருந்தார். அப்படி காவல்துறை யிலும், மனச்சாட்சி உள்ளவர்கள் இருக்கின்றார்கள். அந்தத் தங்கை, முதல் தகவல் அறிக்கையில், நடந்ததை அப்படியே எழுதி பதிவு செய்து இருக்கிறார்.

அப்படி 17 பேர் தமிழகத்தில் தீக்குளித்து விட்டார்கள்.நாங்கள்,தீக்குளிப்பை ஊக் குவிக்கவில்லை. மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகின்றோம், யாரும் தீக்குளிக்கா தீர்கள். மக்களைத் திரட்ட வேண்டும்; போராட வேண்டும்.அதற்காக வாழ வேண்டும். அந்தக் கொலைகாரப் பயலைத் தூக்கில் போடுவதற்காக, மக்கள் சக்தியைத் திரட்ட வேண்டும் என்றுதான் நாங்கள் வேண்டுகோள் விடுக் கின்றோம்.

ஐ.நா.பொதுச்செயலரை அவமதித்த ராஜபக்சே

ஐ.நா. பொதுச்செயலருக்கு அறிக்கை கொடுப்பதற்காக,மூவர் குழு அமைக்கப் பட்டது. டப்ளின் தீர்ப்பு ஆயம்,இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க வேண் டும் என்று கூறியதற்குப் பிறகு அமைக்கப்பட்டது. இந்தோனேஷிய நாட்டின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி டாரிஸ்மன், தென்னாப்பிரிக்க மனித உரிமைப் போராளி யாஸ்மின் சுகா அம்மையார்,அமெரிக்க நாட்டின் முன்னாள் துணை அட்டர்னி ஜெனரல் ஸ்டீவன் ராட்னர் ஆகிய மூவர் கொண்ட குழு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமைக்கப்பட்டது.

உடனே ராஜபக்சே என்ன செய்தான் தெரியுமா? இதே போன்ற ஒரு மேடையை அமைத்து, மந்திரி ஒருவனை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி, அங்கே ஒரு
விளம்பர போர்டு வைக்க ஏற்பாடு செய்தான். Ban ki Moon is an international pimp என்று எழுதி இருந்தார்கள்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பது குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட தீர்ப்பு ஆயத்தின் நீதிபதியிடம், இந்த வரிகளை நான் அப்படியே
சொன்னேன். பிம்ப் என்ற வார்த்தையைக் கேட்ட உடனேயே, நீதிபதி ஒருமாதி ரியாகி விட்டார். நோ நோ, இதெல்லாம் வேண்டாம் என்றார். நானா சொன் னேன்? ராஜபக்சே மந்திரி ஒருவன், ‘ஐ.நா. பொதுச்செயலாளர், விபச்சாரத்துக் குக் கூட்டிக் கொடுக்கின்ற புரோக்கர்’ என்று எழுதி வைத்து இருந்தான். அந்த
மேடைக்குத்தான் ராஜபக்சே சென்றான்.

யார் கொடுத்த துணிச்சல்? இந்தியா கொடுத்த துணிச்சல், பாகிஸ்தான், சீனா கொடுத்த துணிச்சல்.ரஷ்யா, ஈரான், இஸ்ரேல் கொடுத்த துணிச்சல்.

உண்மை வெளியே வருகிறது

மூவர் குழு, இலங்கைக்கு உள்ளே வரக்கூடாது என்றான்.மிகுந்த போராட்டத் துக்குப் பிறகு சென்ற மூவர் குழு, தமிழர்கள் பாதிக்கப்பட்ட எல்லாப்பகுதிகளை யும் போய்ப் பார்த்து விடவில்லை. தமிழர்களையெல்லாம் சந்தித்து விடவில் லை. ஆயினும்கூட, அவர்கள் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில், செஞ்சி லுவைச் சங்கத்தின் கப்பல் தாக்கப்பட்டு இருக்கின்றது, ஐ.நா.மன்ற அலுவல கம் தாக்கப்பட்டது, உணவு வழங்குகின்ற மையம் தாக்கப்பட்டது என்பதை யெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும்விட, மருத்துவமனைகள் என்று தெரிந்தும், வேண்டு மென்றே அதையும் திட்டமிட்டுத் தாக்கினார்கள், குண்டுகளை வீசினார்கள்
என்பதைச்சொல்லி இருக்கின்றார்கள்.

3 லட்சத்து 30 ஆயிரம் பேர்களை, பாதுகாப்பு வலையத்துக்கு உள்ளே போங்கள் என்று சொல்லி ஒரு இடத்துக்கு மொத்தமாகக் கொண்டு வந்து குவித்து, அங் கே குண்டுகளை வீசி, பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று விட்டார்கள் என்று இந்த அறிக்கை சொல்லுகிறது.

அதைவிடக் கொடுமை, 2009 ஜனவரியில் இருந்து, மே 18 வரையிலும் எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டனர்? எத்தனைப் பெண்கள் பாலியல் கொடுமை களுக்கு ஆளானார்கள்,கற்பழிக்கப் பட்டார்கள்,கொல்லப்பட்டார்கள்?இளைஞர் கள் காடுகளுக்கு உள்ளே இழுத்துச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டார்கள்? இதை அப்போதே நாங்கள் பேசவில்லையா? தெருத்தெருவாகப் பேசினோம்.
அதைக் கேலி பேசினார்கள். கிண்டலாக எழுதினார்கள்.இவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றார்கள்.

நிலைமை மாறி விட்டது

ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. விடுதலைப்புலி களைப் பற்றிப் பேசினால், தேசத்துரோகக் குற்றச்சாட்டு பாயும்; தமிழக அரசி யலில் ஓரங்கட்டப்படுவார்கள் என்று விமர்சித்தார்களே,இன்றைக்கு நிலை மை தலைகீழாக மாறி விட்டதே? இனி விடுதலைப்புலிகளைப் பற்றி விமர் சனம் செய்வதற்கு, எந்த அரசியல்வாதிக்கும் துணிச்சல் இருக்காது. (பலத்த
கைதட்டல்) யாராக இருந்தாலும் சரி.

கருணாநிதியும் துரோகிதான்

2009 மே மாதத்துக்குப் பிறகு, கலைஞர் கருணாநிதி என்ன சொன்னார்? ராஜபக் சே ‘சுமூகத் தீர்வு ஏற்படுத்தி விட்டார்’ என்றார்.இலட்சக்கணக்கான தமிழர் களைக் கொன்று குவித்ததுதான் சுமூகத் தீர்வா?

அதற்குப்பிறகு, ‘இராஜபக்சேவை விமர்சித்தால், அவன் இன்னும் கோபப்படு வான்; அது தமிழர்களுக்கு நல்லது அல்ல’ என்று ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்தார்.

நாங்கள் கேட்கிறோம். அப்போது, இந்திய அரசில் அங்கம் வகித்த கட்சிகளைக் கேட்கிறோம். ஆயுதம் கொடுத்தபோது, ரடார் கொடுத்தபோது, தளவாடங்கள்
கொடுத்தபோது, விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக் கொண் டு, இலட்சக்ககணக்கான மக்களையும் கொன்று குவித்ததால், இலங்கை அரசு
போர்க்குற்றவாளி. அதற்கு உடந்தையாக இருந்த போர்க்குற்றத்தை இந்தியா செய்தது.

என்னுடைய அன்புக்குரிய தமிழ் மக்களே,

செயற்கைக்கோள்கள் மூலம், துல்லியமாக விடுதலைப்புலிகளின் பாசறை களை எல்லாம் படம்பிடித்து அடையாளம் காட்டி, வரைபடங்களைப்போட்டுக் கொடுத்து, ரடார்களைக் கொடுத்து, குண்டுகளையும் கொடுத்து, குறிபார்த்து அழிப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தது, இந்திய விமானப்படைதான்.

தமிழர்கள் சிந்திய இரத்தத்துக்கு மன்மோகன் சிங் அரசுதான் பொறுப்பு. தாயும், மகளும், சிங்களப் படையால் கற்பழிக்கப்பட்டார்கள். அவர்கள் தற்கொலை
செய்து கொண்டார்கள். இசைப்பிரியா கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு, அம்மண மாகக் கிடக்கிறபோது, அங்கே வெறிபிடித்த சிங்களச் சிப்பாய்கள் பேசியதை யெல்லாம் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதே? இதைவிடக் கொடூர மான காட்சிகள் இருக்கின்றன. அதை வெளியிட்டால் யாரும் தாங்க மாட்டார் கள் என்றும் அவர்கள் சொல்லி இருக்கின்றார்களே?

எட்டுத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, தரையில் உட்கார வைத்து, காலால் எட்டி உதைத்து உச்சந்தலையில் சுட்டுக் கொன்றதை ஊர் ஊராகப்
போய்ச் சொன்னோம். ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம் என்ற தலைப்பில் குறுந் தகடை வெளியிட்டோமே, அவையெல்லாம், இப்போது,
ஐ.நா.வில் ஆவணங்களாகி விட்டன.

இதையெல்லாம் இந்திய அரசு கண்டித்ததா? செஞ்சோலையில் 61 பிஞ்சுக்குழந் தைகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்ததா? சுனாமி மறுவாழ்வுத்
தொண்டர்கள் 17 பேர்களைச் சுட்டுக் கொன்றதைக் கண்டித்ததா? நான்கு நாடா ளுமன்ற உறுப்பினர்கள், ஈழத்தமிழர்கள், பட்டப்பகலில் நடு வீதியில் சுட்டுக்
கொல்லப்பட்டார்களே, அதைக் கண்டித்ததா? இல்லை.இந்திய அரசும் கண்டிக் கவில்லை, கருணாநிதி அரசும் கண்டிக்கவில்லை. இப்போது வாய் திறக்கின்ற
அம்மையாரும் அன்றைக்குக் கண்டிக்கவில்லை.

நான் இங்கே அரசியல் பேச விரும்பவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போதுதான் பேசுகிறேன்.குயிலை எந்தக் கூட்டுக்கு உள்ளே அடைத்தாலும், அது கூவத்தான் செய்யும்; புலியை எந்தக் கூண்டில் அடைத்தாலும், அது உறு மத்தான் செய்யும். நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும், எப்போதும்
விடுதலைப்புலிகளைத்தான் ஆதரித்து வந்து இருக்கிறோம். நேற்றும் ஆதரித் தோம்; இன்றும் ஆதரிக்கிறோம்; நாளையும் ஆதரிப்போம். பிழைப்புக்காக அரசி யல் நடத்தவில்லை ம.தி.மு.க. (பலத்த கைதட்டல்)

கருணாநிதியும் துரோகம் செய்தார் என்று குற்றம் சாட்டுகிறோம். காலம் மாறி இருக்கிறது. இன்றைக்கு அறிக்கை விடுகின்ற கருணாநிதி, முத்துக்குமார் செத் தபோது, ஒரு இரங்கல் அறிக்கை விடுத்தாரா? கருணாநிதியை விமர்சிக்கின்ற மற்றொரு கட்சியின் பொதுச்செயலாளர் ஒரு இரங்கல் அறிக்கை தந்தாரா?

நீ அப்போது கூட்டணியில் இருந்தாயே என்று கேட்டால்,அப்போதும் நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுக் கொடுத்தது இல்லை. இப்போது நிலைமை என்ன? இனி விடுதலைப் புலிகளைப் பற்றி விமர்சித்தால், தமிழக மக்கள் அவர்களைத் தூக்கி எறிவார்கள்.

நமது கடமை என்ன?

இப்போதும் நாம் வெற்றி பெற்று விடவில்லை. அறிக்கை தரப்பட்டு இருக்கின் றது. போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு ஐ.நா. மன்றம் ஏற்பாடு செய்ய வேண் டும் என்று பரிந்துரைத்து இருக்கின்றது. அதை எதிர்த்து, மே 1 ஆம் தேதி இராஜ பக்சே ஆள் திரட்டுகிறான். இனி ஈழத்தமிழர்களுக்காக நாம்தான் போராட வேண்டும்.

நூரெம்பர்க் நீதிமன்றம் அல்ல இது என்று அண்ணன் தா.பா. சொன்னார். அது உண்மைதான். அந்த நீதிமன்றத்தில் நாஜிப்படைகள் நிறுத்தப்பட்டதைப்போல, ஒரு சர்வதேசக் குற்றவியல் கூண்டில், ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும்;அவ னது கூட்டம் நிறுத்தப்பட வேண்டும். கம்போடியாவில் கெமர் ரூஜ் அதிகாரி கள், இன்றைக்குக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு விட்டார்கள். சூடான் அதிபர் அல் பசீர் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டதைப்போல,ராஜபக்சே குற்றவாளி என்று அறிவிக்கப்பட வேண்டும். அவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று சொல்லுகிறோம்.

கொடியவனே, எங்கள் குழந்தைகளைக் கொன்றாய், குடும்பம் குடும்பமாகக் கொன்றாய். உனக்குத் தண்டனை காத்து இருக்கிறது.

தமிழரை அவமதிக்கும் இந்தியா

அந்தக் கொலைகாரனை, இந்திய அரசு திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டு வந்து, நமது தலையில் மிதிப்பதைப் போல, திருப்பதி கோவிலில் பூரண கும்ப மரியாதை அளித்து கெளரவிக்கிறது. காமன்வெல்த் போட்டிக்கு இந்தக் குற்ற வாளி சிறப்பு விருந்தாளி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் அவன் தான் சிறப்பு விருந்தாளி.

அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதை ரசிகர்கள் கொண்டாடி னார்கள். ஆனால், தமிழக மீனவர்களின் தலையில் இடி விழுந்து விட்டது. இந் தியா வெற்றி பெற்றதால் ஆத்திரம் அடைந்த சிங்களக்கடற்படையினர், நான் கு மீனவர்களைப் பிடித்துக் கொண்டு போய்ச் சித்திரவதை செய்து, கொன்று
விட்டனர். ஒவ்வொரு உடலாகக் கடலில் வீசி எறிந்து விட்டு சிங்களவன் போய்விட்டான்.

தாய்த் தமிழகத்து மீனவர்களைக் காக்க வேண்டும்.நாதியற்றுப் போய் விட வில்லை ஈழத்தமிழர்கள் என்பதை நானிலத்துக்கு உணர்த்த வேண்டும். தமிழ கம் பொங்கி எழ வேண்டும்.நாடெங்கும் பிரச்சாரம் நடக்க வேண்டும்.இளைஞர் கூட்டம் ஆர்த்து எழ வேண்டும்.

கட்சிக்கு வாருங்கள் என்று நான் அழைக்கவில்லை. உங்களுக்கு எந்தக் கட்சி பிடிக்கிறதோ, அங்கேயே இருங்கள். அல்லது, கட்சிகளே வேண்டாம் என்று கூட இருந்து கொள்ளுங்கள்.

ஆனால், தமிழகத்து இளைஞர்களின் மான உணர்ச்சி செத்துப் போய்விட வில் லை என்பதை மெய்ப்பித்துக் காட்டுங்கள்.

முத்துக்குமார் வைத்த நெருப்பு எங்களைத் தட்டி எழுப்பி இருக்கிறது என்ற வகையில், நீங்கள் கிளர்ந்து எழ வேண்டும். விடுதலைப்புலிகள் மீதான தடை யை உடைத்து நொறுக்க வேண்டும்.இந்திய அரசு அந்தத் தடையை நீக்கவேண் டும். அதற்காக, நாங்கள் நீதிமன்றத்தில் போராடிக்கொண்டு இருக்கின்றோம்.

எந்தச் சட்டமன்றத்தில் பிரபாகரனைக் கைது செய்து கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்களோ, அதே சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்பட்டது என்ற தீர்மானத்தைக் கொண்டு வர மக்கள் சக்தியைத் திரட்டுவோம்.

ஐ.நா. மன்றம் நம்பிக்கை ஊட்டி இருக்கிறது. போர்க் குற்றங்களை விசாரிப் பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளட்டும். ஏழு கோடித் தமிழர்களின் சார்பில் கேட்கிறோம். எங்கள் தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத்தமிழர்களுக் காகக் கேட்கிறோம்.

தேள் கொட்டிய திருடன் நிலையில் இந்தியா

இந்திய அரசே, திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையில் இப்போது நீ இருக் கிறாய். கடந்த மூன்று நாள்களாக எதுவும் சொல்ல முடியாமல் வாய் மூடிக் கிடக்கின்றாய்.இனியும், இராஜபக்சே அரசுக்கு உதவினால், தெற்குச் சீமை, தமிழர்களின் மண், எரிமலையாக வெடிக்கும் என்கின்ற பயமும் உனக்கு இருக் கின்றது. நீ இதுவரை செய்து இருக்கின்ற துரோகங்களுக்கே மன்னிப்புக் கிடை யாது. நீயும் குற்றவாளி. இனிமேலும் துரோகம் செய்யாதே; ஒட்டுமொத்த எதிர்ப்பையும் தேடிக் கொள்ளாதே. தெற்கத்தி மக்களின் ஆத்திரத்துக்கு ஆளாகி விடாதே.

இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள கட்சிகளை,தலைவர்களைக் கேட் கிறேன். இந்தியா என்பது ஒரு நாடா? இந்திய ஒருமைப்பாடு என்பது உண்மை தானா? அப்படியானால், எங்கள் மக்களுக்காகக் குரல் கொடுங்கள்.

கடல் கொள்ளைக்காரர்களைப் பிடிக்க இந்தியக்கடற்படையை அனுப்புகிறா யே , எங்கள் மீனவர்கள் சாகின்றார்களே? நாங்கள் இந்தியக் குடிமக்கள் இல் லையா? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களே, இதை உணர்ந்து பாருங்கள்.

களத்தில் இறங்குங்கள்- கடமை ஆற்றுங்கள்!

மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்த சிங்கள அரசை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டுகின்ற நமக்கு, மக்கள் ஆதரவு தருகின்றார்கள்.தமிழகம் முழு வதும் உள்ள இளைஞர்கள் இந்தக் களத்தில் இறங்க வேண்டும்.இந்தியப் பொது உடைமைக் கட்சி நம்பிக்கை ஊட்டுகிறது. அவர்கள் மூலமாகக் கேட்கின் றோம். இந்தக் குரல் இந்தியா முழுமையும் எழ வேண்டும்.

ஈழத்தமிழர்களைக் காக்க, தமிழ் ஈழத்தை மலரச் செய்ய,கொடியவன் இராஜபக் சே கொட்டத்தை ஒடுக்க, அவனைக் கூண்டிலே நிறுத்தி உரிய தண்டனை யைப் பெற்றுக்கொடுக்க, நீங்கள் பல்லாயிரக்கணக்கிலே திரண்டு வந்தது, நம்பிக்கை ஊட்டுகின்றது.

தமிழர்களின் உணர்ச்சி எப்படிப்பட்டது என்பதை இங்கே வெளிப்படுத்தி இருக் கின்றீர்கள். அனைவருக்கும் நன்றி.

மலர்க தமிழ் ஈழம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment