சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டித் தொழிற்சாலை 1952 ஆம் ஆண்டு தொடங் கப்பட்டது. இதுவரை ரூ 46 ஆயிரம் கோடிக்கு ரெயில் பெட்டிகள் தயாரிக்கப் பட்டுள்ளது. நாட்டில் உள்ள 65 சதவீதம் ரெயில் பெட்டிகள் சென்னையில் தயாரிக்கப்பட்டவை.
ஆனால், தற்போது மத்திய அரசு, சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலை யைப் புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மின்சார ரெயில் மற்றும் சாதாரண ரெயில் பெட்டிகள் தயாரிப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க
ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. 2006 ஆம் ஆண்டிலிருந்து 80 சதவீதம் ரெயில் பெட்டி உதிரிபாகங்கள் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், தற்போது ரெயில் பெட்டிகளையே தனியார் நிறுவனங்கள் தயாரிக்க
அனுமதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ 750 கோடிக்கு இதற் கான ஒப்பந்தம் போடப்பட்டு, மூன்று தனியார் நிறுவனங்களுக்கு 308 ரெயில் பெட்டிகள் தயாரிக்க அனுமதி அளிக்க உள்ளனர்.
மேலும் ரூ 320 கோடிக்கு ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வாங்கப்பட்ட ரெயில்
பெட்டி தயாரிப்பதற்கான வரைபடம் மற்றும் ரெயில் பெட்டிகள் தயாரிப்புக்கு
தேவையான தளவாடங்கள் இரும்பு, ரெயில் சக்கரம், மின்சாதனப் பொருட் களையும் தனியாருக்கு வழங்குவதற்கு ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இதனால் ரூ 120 கோடிக்கு மேல் ரெயில்வே துறைக்கு இழப்பு ஏற்படும். மேலும்
ரெயில் பெட்டிகளின் தரம் மற்றும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். பெரம்பூர்
ரெயில் பெட்டி தொழிற்சாலை வேலைகள் தனியாருக்கு ஒப்படைக்கப்படுமா னால் 1500 தொழிலாளர்கள் வேலை இழக்க வேண்டிய நிலைமை உருவாகும்.
ரெயில்வே வாரியத்தில் புதிய பதவி பெறுவதற்காக ஒரு உயர் அதிகாரி ரெயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சால் மருமகனிடம் ரூ 10 கோடி பேரம் பேசி,90 லட்ச ரூபாய் அன்பளிப்பு கொடுத்தார் என்று சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதைப் பார்த்தால்,ரெயில்வே தனியார் மயத்தில் ஊழல் எங்கும் வியாபித்து இருப்பதை மத்திய அரசு மறுக்க முடியாது. தற்போது ரெயில் பெட்டி தயாரிப்பு ஒப்பந்தத்திலும் ரூ 130 கோடி ஊழல் நடந்துள்ளதாக தொழிற்

சங்கங்கள் புகார் கூறி, சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை
வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் செயற்படும் பாரம்பரிய பொதுத்துறை நிறுவனமான பெரம்பூர்
ரெயில் பெட்டித் தொழிற்சாலையைப் பாதுகாத்திட, தனியார் துறை ஒப்பந்தங் களை ரெயில்வே அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும் தொழிலாளர் நலனை யும் பாதுகாக்க வேண்டும் என்பதே, நமது எதிர்பார்ப்பு ஆகும்.

No comments:
Post a Comment