Saturday, June 22, 2013

அமெரிக்காவின் ‘உளவு’

சங்கொலி தலையங்கம்

‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ (Confessions of an Economic Hit man) என்னும் நூல் 2003 ஆம் ஆண்டில், ஜான் பெர்க்கின்ஸ் என்ற அமெரிக்க ரால் எழுதி வெளியிடப்பட்டது. ஜான் பெர்க்கின்ஸ் பொருளாதாரத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணிபுரிந்தார்.

அமெரிக்க நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக உலக இயற்கை வளங்களை
அமெரிக்காவுக்கு சொந்தமாக்கிட அந்நாட்டு நிறுவனங்கள் எப்படியெல்லாம்
உலக நாடுகளை ஆட்டிப் படைக்கின்றன. கனிம வளங்கள், எண்ணெய் வயல் கள் ஆகியவற்றைக் கைப்பற்றி ஏகபோகம் ஆக்கிக் கொண்டு சுரண்டல் நடத்த அமெரிக்கா பல ஆட்சியாளர்களை எப்படி வளைக்கிறது? அமெரிக்க ஆதிக்கத் தின் கொடுங்கரங்கள் எவ்வாறு இந்தோனேஷியா, பனாமா, ஈக்வடார், சவுதி அரேபியா, நைஜீரியா மற்றும் ஈராக் நாடுகளைச் சுற்றி வளைத்தன.
அமெரிக்க ஆதிக்கத்திற்கு இடையூறாக இருந்த ஆட்சித் தலைவர்கள் ஈக்வடா ரின் அதிபர் ஜெய்மே ரோல்டோஸ், பனாமா அதிபர் ஒமர் டோரிஜோஸ் ஆகி யோர் சி.ஐ.ஏ., நிறுவனத்தால் எவ்வாறு விமான விபத்தின் மூலம் கொல்லப் பட்டனர்? ஈரான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு கள்; லத்தீன் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளங்களைக் கைப்பற்ற நடத்தப் பட்ட தாக்குதல்கள்; சிலி அதிபர் அலெண்டோ உள்ளிட்டோரின் படுகொலை கள். என அமெரிக்கா நடத்திய அனைத்து அக்கிரம நடவடிக்கை களையும் ஆதாரமாகத் தொகுத்து ஜான்பெர்க்கின்ஸ் எழுதிய நூல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் முகத்திரை கிழிந்தது. ஜனநாயக உணர்வு கொண்ட அமெரிக்க
மக்கள், தங்கள் நாட்டிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திட இந்த நூல் வழி
அமைத்துக்கொடுத்தது.

ஜான் பெர்க்கின்ஸ் போன்று தற்போது எட்வர்ட் ஸ்னோடன் என்ற அமெரிக்க
இளைஞர் அமெரிக்காவின் உண்மை முகத்தை வேறொரு கோணத்தில் அடை யாளம் காட்டி இருக்கின்றார். 29 வயதான ஸ்னோடன் 2003 இல் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர், ஒரு விபத்தில் இரு கால் களும் முறிந்த நிலையில், அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.-வின் தகவல் தொடர்புத்துறையில் பணியாற்றினார்.

இந்த இளைஞர் சமீபத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறி ஹாங்காங் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்து அவர் வெளியிட்ட தக வல்கள் அமெரிக்க நாட்டு மக்களையும், உலகம் முழுவதும் உள்ள மக்களை யும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

எட்வர்ட் ஸ்னோடன், ஹாங்காங்கில் இருந்தவாறு வெளியிட்ட ஆவணங்கள்,
அமெரிக்காவின் தனிமனித உரிமைக்கு எதிரான உளவு வேலைகளைஅம்பலப் படுத்தி இருக்கின்றன. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழும், இங்கிலாந்தின் ‘கார்டியன்’ இதழும், ஸ்னோடன் அளித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளன.

சி.ஐ.ஏ. 2007 இல் ஸ்னோடனை ஜெனீவாவுக்கு பணி நிமித்தம் அனுப்பி வைத் தது. அப்போது சுவீஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் விப ரம் அறிய வங்கிப் பணியாளர்களை கைக்குள் போட்டுக்கொண்டு, வங்கி ஆவ ணங்களைப் பெறுமாறு (திருடுமாறு?) அவருக்கு உத்தரவு இடப்பட்டது. 

பின்னர், அமெரிக்க மக்களின் தொலைபேசி உரையாடல்களையும், மின்னஞ் சல்களையும் கண்காணிக்கும் வேலைக்கு அவர் ஏவப்பட்டார். வளரும் உல கின் ஒரு முக்கிய சாதனமாகிவிட்ட இணையதளத்தை அமெரிக்க உளவு நிறு வனம் சி.ஐ.ஏ. கண்காணிக்கத் தொடங்கியது. உலகம் முழுவதும் உள்ள இணைய தளங்களை தம் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது. அனைத்து நாடுகளின் தகவல் தொடர்புகள் இணையதள பயன்பாடுகள் சி.ஐ.ஏ.வால் உளவு பார்க்கப்பட்டன.

“I’m willing to sacrifice all of that because, I can’t in good conscience allow the U.S.government to destroy privacy, internet freedom and basic liberties for people around the world with this massive surveillance
machine ther’re secretly Building.

I don’t want to live in a world where there’s no privacy and therefore no room for intellectual exploration and creativity”    -The Hindu, June 11, 2013

அமெரிக்காவின் இத்தகைய செயல்பாடுகளை அம்பலப்படுத்த என்னையே
அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டேன். தனிமனித சுதந்திரத்தை அழிப்பதையும்,
இணையதள சுதந்திரம் மற்றும் உலக மக்களின் அடிப்படை உரிமைகள்,அமெ ரிக்க அரசாங்கத்தால் பறிக்கப்படுவதையும் வேடிக்கைப் பார்த்திட என் மன சாட்சி இடம் தரவில்லை. எனவேதான், அமெரிக்க அரசின் கொடூர முகத்திரை யைக் கிழித்து இருக்கிறேன் என்று எட்வர்ட் ஸ்னோடன், கார்டியன் இதழுக்கு அளித்த நேர்காணலில் கூறி உள்ளார்.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் சென்று அடைக்கலம் தேடி உள்ள
ஸ்னோடனை, அமெரிக்கா கொண்டு வந்து அவரை கைது செய்து சிறையில்
அடைக்க அமெரிக்க அரசு துடித்துக்கொண்டிருக்கின்றது.இதற்கு சீன நிர்வாகத் தின் ஹாங்காங் துணைபோகாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஆத்திரத்திற்குக் காரணம், அமெரிக்க வரலாற்றில், தேசிய
பாதுகாப்பு முகமையின் (National Security Agency -NSA) ரகசிய நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வருவது இதுதான் முதல் முறை.

அமெரிக்காவின் இணையதள உளவு மோசடிக்கு இணையதள நிர்வாகங்கள்
துணைபோய் இருக்கின்றன. (Facebook, Google and Apple) அமெரிக்க நாட்டைப் பற்றிய ஒரு மதிப்பீடு எப்போதும் வழக்கமாக கூறப்படுகிறது.அமெரிக்கா, தனி மனித சுதந்திரத்தின் ஜனநாயகத்திற்கும், உயர்ந்த மதிப்பளிக்கும் நாடு என்று. ஆனால், அமெரிக்காவின் போலி பிம்பத்தை அந்நாட்டைச் சேர்ந்த டேனியன் எல்ஸ்பர்க், பிராட்லி மன்னிங் ஆகியோர் உடைத்து நொறுக்கியிருக்கின்றனர். அந்த வரிசையில் எட்வர்ட் ஸ்னோடனும் சேர்ந்துவிட்டார்.

அமெரிக்காவின் வேவு வேலைகள் எல்லா நாடுகளிலும் பரவி இருக்கின்றன.
அது திரட்டி உள்ள விவரங்களில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் திரட்டி
யவை இச்செயல் இந்தியாவின் இறையாண்மையை மீறிய செயல். அமெரிக் காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்.ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் வாய்மூடிக் கிடக்கிறார்கள். காரணம், அவர்களுக்கு இந்திய மக்களின் சுதந்திரத்தைவிட, அமெரிக்க நாட்டு பெரு முதலாளிகளின் மூல தனமே முக்கியமானது. அமெரிக்க நாட்டின் கூட்டுப் பங்காளியாகச் செயற் படும் இந்தியா, அமெரிக்காவின் இத்தகைய கீழ்மையான நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்கிறது.

உலக மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு அவர்களைப் பற்றிய
விவரங்களை இரகசியமாகத் திருடிக் கொண்டிருக்கும் அமெரிக்காதான் சீனா
தனது இரகசியங்களை திருடுவதாக குற்றம் சாட்டி வருகிறது. தான் செய்தால்
சரி, ஆனால் அதை மற்றவர்கள் செய்தால் தவறு என்பதுதான் அமெரிக்காவின்
வாதம். உலகம் முழுவதையும் தனது சுரண்டல் ஏகாதிபத்தியத்தை விரிவு படுத்தி வரும் அமெரிக்கா, அதைக் கட்டிக் காப்பாற்ற மிகப்பெரும் இராணுவ
அதிகார அமைப்பையும், உளவு நிறுவனங்களையும் கட்டமைத்து உள்ளது.

தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்வதற்காகவே பிற நாட்டு மக்களையும், நாடுகளின் அரசு நடவடிக்கைகளையும் வேவு பார்க்கும் அமெ ரிக்கா, தனது சொந்த நாட்டு மக்களையும் கண்காணிக்கத் தொடங்கி இருக்கின் றது. இதை எதிர்த்து ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க மக்கள் பேரணி நடத்துவ தாக அறிவிப்புகள் வந்துள்ளன.

அமெரிக்காவின் தலையீடுகளை பல்வேறு நாடுகளில் அதன் உளவு நிறுவனம்
சி.ஐ.ஏ. நடத்திய அத்துமீறல்களை ‘விக்கிலீக்ஸ்’ இணையதளத்தில் ஜூலியன்
அசாஞ்சே அம்பலப்படுத்தினார். உலகமே அதிர்ந்தது. அசாஞ்சேவை கைது
செய்து தண்டனை அளிக்க அமெரிக்கா செய்த முயற்சிகள் பலன் அளிக்க வில் லை. தற்போது எட்வர்ட் ஸ்டோனை ஒழித்துக்கட்ட அமெரிக்கா எல்லாவகை யிலும் முயற்சிக்கும். ஆனால், அந்த வீர இளைஞன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

‘I understand that I will be made to suffer for my actions.’ but, ‘I will be satisfied if the federation of secret law, un equal pardon and irresistible excutive powers that rule the world that I love are revealed even for an instant.’   - The Hindu, June 11, 2013

தன் உயிரைத் தியாகம் செய்யவும் துணிந்துள்ள எட்வர்ட் ஸ்னோடன் ஏற்றி
வைத்துள்ள தனிமனித சுதந்திரத்திற்கான சுடர், அமெரிக்க மக்களுக்கு மட்டு மல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் வெளிச்சம் தரும்; ஜனநாயகப் போராட்டங்களை கூர்மைப்படுத்தும்.

No comments:

Post a Comment