Wednesday, May 29, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 27

பாபர் அந்நியர் என்றால் கைபர், போலன் கணவாய் வழியே வந்த நீங்கள் யார்?

பாபர் அந்நிய நாட்டிலிருந்து வந்தவர் என்று விமர்சிப்பவர்களை நோக்கி நான்
கேட்பதெல்லாம் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? மத்திய ஆசியாவிலிருந்து ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு சிந்து நதி தீரத்திற்குள் நுழைந்த கூட்டம் தானே உங்கள் கூட்டம். -வைகோ 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

1991ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.அமெரிக்காவின் ஆக் கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையாக முழங்கி ய தலைவர் வைகோ அவர்கள், இந்தியா யார் பக்கம் நிற்கப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பியது தொடர்பாக 1991, பிப்ரவரியில் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று தலைவர் வைகோ ஆற்றிய உரை..
டைக்ரிஸ் நதிக்கரையில் இரத்த வெள்ளம்

“5000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த டைக்ரிஸ் நதிக்கரையில் சுமேரிய நாகரிகம் ஓங்கிச் செழித்திருந்ததோ அந்த நதிதீரத்தில் கடந்த 38 நாட்களாக மரண பயங் கரம் நிறைந்த யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.



பாக்தாதின் வீதிகளில் மரண ஓலம் கேட்கின்றது. பெண்கள், குழந்தைகள் உட் பட அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றார்கள். எங்கும் இரத்த வெள்ளம். அமெ ரிக்க ஏகாதிபத்தியமும் மற்றும் 27 நாடுகளும் ஈராக்கை எதிர்த்து கொடூரமான தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றன. குவைத்தை விட்டு ஈராக் வெளியேற வேண்டும்.அதற்காக பலாத்காரத்தையும் பன்னாட்டுப் படைகள் பயன் படுத்த லாம்” என்று பாதுகாப்புசபையின் 678 ஆவது தீர்மானம் அனுமதித்துள்ளது.

ஆனால், ஈராக்கை இடுகாடாக்குவதற்கு இந்தத் தீர்மானத்தைப் பன்னாட்டுப்
படைகள் பயன்படுத்த முற்படுவதை மனிதகுலம் சகித்துக்கொள்ளாது. ஈராக்
நாட்டுக்கு அனுதாபம் தெரிவித்து இங்கே இந்திரா காங்கிரஸ் உறுப்பினர்கள்
முதலைக் கண்ணீர் வடித்தார்கள்.அமெரிக்காவையும், பினாமி சந்திரசேகர்
சர்க்காரையும் கூட ஒப்புக்கு விமர்சித்தார்கள். இந்திய அரசியல் அரங்கத்தில் இராஜீவ்காந்தி நடத்தி வருகின்ற பல மோசடி நாடகங்களில் இதுவும் ஒன்று.

அமெரிக்க நாட்டுப் போர் விமானங்களுக்கு இந்திய நாட்டு விமான நிலையங் களில் பெட்ரோல் நிரப்பி அனுப்பியது மன்னிக்க முடியாத மாபெரும் குற்ற மாகும். யார் குற்றவாளி? என்று குற்றம் செய்தவனே கூச்சல் போடுவதைப் பார்க்கிறேன்.

குற்றவாளிக் கூண்டில் பிரதமர் சந்திரசேகர்

கடந்த ஜனவரி 5 ஆம் தேதி (1991) அமெரிக்கத் தூதர் டெல்லியில் சந்திரசேக ரைச் சந்தித்தார். இராஜீவ்காந்தியையும் சந்தித்தார் என்ற உண்மையை மறுப்ப தற்கு இங்கே இருக்கின்ற எந்த உறுப்பினருக்காவது தைரியம் உண்டா?

இராஜீவ்காந்தியும் சந்திரசேகரும் கொடுத்த ஒப்புதலின் பேரில் ஜனவரி 9 ஆம் தேதியிலிருந்து அமெரிக்க போர் விமானங்களுக்கு இந்தியாவில் பெட்ரோல் போடப்பட்டது. பிப்ரவரி 20 ஆம் தேதி வரை இந்தக் கொடுமை நீடித்தது. அந்த விமானங்களில் எத்தகைய பயங்கர ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டது என்பதை சோதனை செய்வதற்குக் கூட இந்திய அரசு முன்வரவில்லை.

ஈராக் மக்களைக்கொன்று குவிக்கப் புறப்பட்டுச்சென்ற போர்விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் தந்தது என்றால் நடைபெற்ற கொடூரமான படுகொலை களில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு. நம்மையும் யுத்தக் குற்றவாளிகளாகக் கூண்டிலே நிறுத்தலாம். 42 நாட்கள் இந்த அக்கிரமம் நடந்து இருக்கின்றது. இந் தியா இனிமேல் பெட்ரோல் கொடுக்காது. எரிபொருள் தர மாட்டோம் என்று இந்த நிமிடம் வரை அறிவிக்கவில்லை.

சந்திரசேகரின் ஆணவம்

நாடாளுமன்றம் கூடுகின்றதே, நாடெங்கும் ஆத்திரம் நிறைந்த கண்டனக்குரல் வலுத்து வருகின்றதே என்று அஞ்சிய சந்திரசேகரும், இராஜீவ்காந்தியும் அமெ ரிக்க நாட்டுக்காரர்களிடம் இச்சகம் பேசி, எங்களுக்கு மேலும் சங்கடம் வரா மல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சிக்கேட்டு, அதன்பின் இனிமேல் போர் விமானங்களை பெட்ரோலுக்காக இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் என்று அமெரிக்காகாரன் அறிவித்து இருக்கின்றான்.

ஒரிசாவுக்குப்போகின்ற வழியில் மானா விமான நிலையத்தில்,நிருபர்கள் கூட் டத்தில், சந்திரசேகர் ஆணவத்தோடும், ஏளனத்தோடும் சொல்லுகின்றார். பெட் ரோல் போடுவதை இந்த அரசு நிறுத்திவிட்டதாக பத்திரிக்கைகளில் தான் பார்த்துத் தெரிந்து கொண்டேன். நாங்களொன்றும் பெட்ரோல் போடுவதை நிறுத்தவில்லை. ஆனால், இப்பொழுது போடப்படவில்லை என்று.

மக்கள் நெஞ்சில் கொட்டிய நெருப்பு

இந்தியாவில் 14 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்த நாள் அபுல்கலாம்
ஆசாத் அவர்களின் நினைவுநாள். இந்திய அரசு அமெரிக்கப் போர் விமானங் களுக்கு பம்பாய், சென்னை, டெல்லி, ஆக்ரா, நாக்பூர் விமான நிலையங்களில் பெட்ரோல் நிரப்பியதன் மூலம் சிறுபான்மை மக்களின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டி இருக்கின்றது.

சதுராணன் மிஸ்ரா (இந்திய கம்யூனிஸ்ட்) :சிறுபான்மை மக்கள் மட்டு மல்ல, மொத்த இந்தியாவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது

வைகோ : உண்மைதான், ஆனால் இந்திரா காங்கிரஸ் கட்சி அரசியல் லாப
நோக்கத்திற்காக, இஸ்லாமியர்களின் கடுமையான வெறுப்பிலே இருந்து தப் பித்துக் கொள்வதற்காக, இந்தப் பிரச்சினையில் திடீரென்று கபட நாடகமாடு கின்றது. பெட்ரோல் நிரப்பியது தவறு என்று இராஜீவ்காந்தி சந்திரசேகருக்குக் கடிதங்கள் எழுதுகின்றார்.பெட்ரோல் போடத்தொடங்கி 30 நாட்கள் வரை முணு முணுப்பின்றி மூலையில் முடங்கிக் கிடந்த இராஜீவ்காந்தி,கடைசியில் கடி தங்கள் எழுதி அதனைப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த புறப்பட்டாரே, 30 நாட்களும் இராஜீவ் காந்தி ஏன் வாயைத் திறக்கவில்லை?

ரத்னாகர் பாண்டே (இ.காங்) : இராஜீவ்காந்தியைக் குற்றம் சாட்டாதீர்கள்.

வைகோ : 30 நாட்களாக நடந்தது இராஜீவ்காந்திக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியாது என்று நீங்கள் சொல்லத்தயாரா?

எம்.எம்.ஜேக்கப் (இ.காங்) :எதற்கெடுத்தாலும் இராஜீவ்காந்தியைக் குற்றம் சாட்டுகின்றீர்களே?

வைகோ : என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.முதல் 30 நாட்களும் இராஜீவ் காந்தி ஏன் வாய் திறக்கவில்லை? 30 நாட்களும் அவருக்கு நினைவு தவறி விட் டதா? பிரக்ஞை  இழந்து கோமாவில் இருந்தாரா?

(இ.காங் உறுப்பினர்கள் கூச்சல்)

வைகோ : உண்மை சுடத்தான் செய்யும். நீங்கள் ஆத்திரப்பட்டு என்ன பயன்?
பெட்ரோல் போட்ட குற்றத்திற்கு இராஜீவ்காந்தியும் பொறுப்பாளி.10 நாட் களில் பாக்தாதின் கதை முடியும் -சதாம் உசேன் கதை முடியும் என்று இராஜீவ் காந்தி போட்ட கணக்கு தப்புக்கணக்கானது. எனவே கடைசியாக சந்திரசேக ருக்கு பெட்ரோல் போட வேண்டாமென்று கடிதங்கள் போட ஆரம்பித்தார். நாட்டு மக்களை முட்டாள்கள் என்று கருதிக்கொண்டு இராஜீவ்காந்தி இந்தப் பித்தலாட்டத்தை நடத்துகின்றார்.

தொலைபேசியிலே அழைத்து சந்திரசேகரிடம் இராஜீவ்காந்தி சொல்ல முடியா தா?இராஜீவ்காந்தியின் கண் அசைவில்,காலடியில் சந்திரசேகர் சர்க்கார் இருக் கின்றது. இராஜீவ்காந்தி கண் சிமிட்டினால் போதும், தலையை லேசாக அசைத் தால் போதும், சந்திரசேகர் சர்க்கார் அக்கணத்திலேயே கவிழும். அனைவருக் கும் இது தெரியும்.ஆனாலும், இராஜீவ்காந்தி சந்திர சேகருக்குக் கடிதங்கள் எழுதுகின்றார்.

என்ன காதல் கடிதங்களா? நவீன ரோமியோ -ஜூலியட் கடிதங்களா? அந்த நாட கத்தில் ஷேக்ஸ்பியர் வர்ணித்தாரே பிரசித்த பெற்ற ‘பால்கனி’ காதல் சந்திப்பு.
அத்தகைய சந்திப்பை சந்திரசேகரும் இராஜீவ்காந்தியும் நடத்துகின்றார்களா?
இந்த ஏமாற்று வேலையெல்லாம் இனி எடுபடாது. இராஜீவ்காந்தி தொலை பேசி எண்ணைச் சுழற்றினால் போதும், தூக்கத்திலிருந்தால் கூட சந்திரசேகர்
துள்ளி எழுந்து தொலைபேசியைக் கையிலிருந்து தண்டனிடத் தயாராக இருக் கின்றாரே! பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுகின்ற வேலையில் இராஜீவ்காந்தி ஈடுபட்டு இருக்கின்றார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி இது பற்றி ஒரு தீர்மானம் போட்டு இருக்கின்றது. என்ன தீர்மானம்? பெட்ரோல் போடுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வையுங் கள், சஸ்பெண்ட் செய்யுங்கள் என்று. நிரந்தரமாக நிறுத்தச் சொல்லவில்லை.
இதிலிருந்தே தெரிகிறதே வேஷம் கலைந்துவிட்டது என்று. காஷ்மீர் பிரச்சி னையில் இந்தியாவுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாநாட்டில் சதாம் உசேன்
குரல் கொடுத்ததை மறந்துவிட்டீர்களா? 

இந்தியர்களைக் காப்பாற்றிய சதாம் உசேன்

அபாயகரமான சூழ்நிலையில் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் இந்தியர்களை குவைத்திலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக வெளியேற சதாம் உசேன் அனும தித்ததை மறந்துவிட்டீர்களா?

எல்லாவற்றிலும் பெரிய வெட்கக்கேடு என்ன வெனில், கட்சி மாறிய பச்சோந் தி வி.சி.சுக்லாவை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக பெல்கிரேடுக்கு அனுப்பியதுதான். அங்கு நடைபெற்ற நடுநிலை நாடுகள் மாநாட்டில் வி.சி.சுக் லாவின் முகத்தைப் பர்த்தவுடன் பிற நாடுகளின் பிரதிநிதிகள் கைகொட்டிச் சிரித்து இருப்பார்கள். உலக நாடுகளின் அரங்கத்தில் இந்தியாவுக்கு இதற்கு முன்பு உயர்ந்த மரியாதை இருந்தது. மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற புகழ் இருந்தது. அந்தப் பெயரையும் புகழையும் இராஜீவ்காந்தியும், சந்திரசேகரும் குழிதோண்டிப் புதைத்து விட்டார்கள். வி.சி.சுக்லா கட்சி மாறிய நாலாந்திர அரசியல்வாதி.

யஷ்வந்த் சின்கா (நிதி அமைச்சர்) :வி.சி.சுக்லாவைப் பற்றி கோபால்சாமி
இப்படியெல்லாம் பேச அனுமதிக்கக்கூடாது.

வைகோ : உண்மையைத்தான் சொல்கிறேன். அவர் கட்சி மாறவில்லை என்று சொல்ல யாராவது முன்வர முடியுமா? கொள்கைக்காக கட்சி மாறினாரா? வீசி எறியப்படுகின்ற பதவி என்கிற எலும்புத்துண்டுக்காக, எச்சில் பண்டங்களுக் காக கட்சி மாறிய ஒரு பேர்வழி இந்தியாவின் பிரதிநிதியாக நடுநிலை நாடுகள் மாநாட்டில் உட்காரலாமா? இந்தியாவுக்கு இது அவமானம் அல்லவா?

சந்திரசேகர் சர்க்கார் ஒரு குவிஸ்லிங் சர்க்கார். இராஜீவ்காந்தியின் கைக்கூலி
சர்க்கார். இந்திரா காங்கிரசின் எடுபிடி சர்க்கார்.

(இ.காங் எம்.பிக்கள் கடும் கூச்சல்; குறுக்கீடுகள்)

உலகமே சிரிக்கிறது

வைகோ : ஜனநாயகத்துக்கும் இந்திய மக்களுக்கும் இராஜீவ்காந்தி செய்துள்ள
துரோகத்தைக் கண்டு உலகமே எள்ளி நகையாடுகின்றது.இவ்வளவு நாள் அமெரிக்கப்போர் விமானங்களுக்கு இந்தியா பெட்ரோல் நிரப்பி அனுப்பிவிட்டு அதன்பின் அந்த வசதியை இலங்கையில் பெற்றுத் தருவதற்கு இதே வெளியு றவு அமைச்சர் கொழும்புவிற்கும் போனார். அமெரிக்காவின் ஏஜெண்டாக
இந்தியா செயல்படுகின்றது.

ஈராக் நாட்டை இடுகாடாக்குவதற்காக தாக்குதல் நடத்தச் செல்லும் அமெரிக் கப் போர் விமானங்களுக்கு பெட்ரோல் போட்டு அனுப்பிய இந்திய சர்க்காரே,
அராபிய இனத்தையே கருவறுப்பதற்கு அமெரிக்கக் காரனுக்கு நீ பெட்ரோல்
தருகின்றாய். ஆனால், அதே நேரத்தில் இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் மரண வளையத்திலே சிக்கியிருக்கின்ற எங்கள் தமிழினம் அழுது புலம்பிக்கொண்டிருக்கிறது.

அங்கே மின்சாரம் இல்லை.மெழுகுவர்த்தி இல்லை. தீப்பெட்டி இல்லை. மண் ணெண்ணெய் இல்லை.டீசல் இல்லை. ஒரு லிட்டர் டீசல் 400 ரூபாய். சிங்களப் படைகளால், விமானத் தாக்குதலால் மரண காயப்படுத்தப்பட்டு உயிர் ஊச லாடும் நிலையில் சாவோடு போராடும் எங்கள் தமிழ்மக்களை ஒரு இடத்திலி ருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லுவதற்கு வாகனங்களை
நகர்த்த பெட்ரோலும், டீசலும் கிடைக்காத இந்த நேரத்தில், குடாக் கடலைத் தாண்டி தமிழ்நாட்டின் கரையிலிருந்து இலங்கைக்குக் கொண்டு செல்ல 10 லிட்டர், 20 லிட்டர் அல்ல 50 லிட்டர் பெட்ரோலும், டீசலும் தமிழ்நாட்டின் கரை யோரங்களில் சில இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது பஞ்சமா பாதகம் என்று ஆகாயத்துக்கும் பூமிக்குமாக நீங்கள் குதிக்கின்றீர்கள்.

தண்டனை கிடைக்கும்

அரை லிட்டர் மண்ணெண்ணெய் பெற முடியாமல் அப்பாவித்தமிழ் மக்கள்அங் கே சாகின்றார்கள். ஈவு இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற இராஜீவ் காந்தியின் கூட்டம் இந்தியாவிலிருந்து பலகோடி ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலை பகிரங் கமாக ஈராக்கில் இனப்படுகொலை நடத்திட அனுப்பி வைக்கின்றது. இந்தக் கொடுமைக்கெல்லாம் உங்களுக்குத் தண்டனை நிச்சயமாகக் கிடைக்கும்.

எம்.எம்.ஜேக்கப் (இ.காங்) : நடந்ததற்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல.

வைகோ : மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், ஒருவேளை மனச் சாட்சி உங்களுக்கு இருக்குமானால், இந்திய மக்களை எப்படியும் ஏமாற்றலா மென்று ஆணவத்தோடு பினாமி சந்திரசேகர் சர்க்காரை நீங்கள் பயன்படுத்தி யிருக்கின்றீர்கள்.

சிவசங்கர் (இ.காங்) : சோவியத் அதிபர் கோர்பசேவின் அழைப்பை ஏற்று எங் கள் தலைவர் இராஜீவ்காந்தி நாளை மாஸ்கோவுக்கும், அதன்பின்னர் ஈரான்
நாட்டுத்தலைநகர் டெஹரானுக்கும் பயணம் புறப்படுகின்றார்.

வைகோ : இது இன்னுமொரு பித்தலாட்ட நாடகம். சிவசங்கர் அவர்களே, 
இந்தப் பயணத்தில் இராஜீவ்காந்தி சுவீடன் நாட்டுத்தலைநகர் ஸ்டாக்ஹோ முக்கும் விஜயம் செய்வாரா? (இங்குதான் போஃபர்ஸ் பீரங்கி ஊழல் நடந்தது).
நீங்களாகவே சோவியத் ரஷ்யாவிற்குச் சொல்லி அனுப்பி இப்படியொரு சுற் றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டீர்கள். ஏனெனில் இன்னும் ஒரு சில நாட்களில் வளைகுடா யுத்தம் முற்றுப்பெறலாம். போர் நிறுத்தம் நடைபெறும். சமாதானக் கொடி பறக்கலாம். இந்தப் பிரச்சினையில் ஈரானுக்கு இருக்கின்ற மதிப்புக்கூட இப்பொழுது இந்தியாவுக்குக் கிடையாது.எனவே சமாதானம் வெற்றி பெற்று விட்டால், பார் பார் எங்கள் தலைவர் இராஜீவ்காந்தி பறந்து போனார், “பாரீர் அமைதி நிலவுகின்றது பாரீர்” என்று இந்தியாவில் மக்களை முட்டாள்கள் என்று கருதிக்கொண்டு தம்பட்டம் அடிக்கலாம்.

உண்மையான மக்கள் பிரதிநிதிகள்

ஆனால், உங்கள் ஏமாற்றுக் கலைகளினால் இனி வெற்றி பெற முடியாது. இந் தியாவின் பிரதிநிதிகளாக இனி சர்வதேச அரங்கத்திற்கு இந்தியாவின் இன்றை ய எதிர்க்கட்சித் தலைவர்களைத்தான் அனுப்ப வேண்டும். அவர்கள்தான் உண் மையான மக்கள் பிரதிநிதிகள். நாளைய இந்திய அரசை நடத்தப் போகின்றவர் கள். இனி இராஜீவ்காந்தி பிரதமர் நாற்காலியில் எந்தக்காலத்திலும் அமர முடி யாது.வரலாற்றின் குப்பைத்தொட்டியிலே காங்கிரஸ் வெகு சீக்கிரத்தில் தூக்கி யெறியப்படும்.

எம்.எம்.ஜேக்கப் (இ.காங்) : தமிழநாட்டில் தேர்தல் வருகின்றதே அங்கு பார்க் கலாமா?

வைகோ : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.அரசை அயோக்கியத்தன மாகக் கவிழ்த்தீர்கள். வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் காங்கிரசுக்கும் அ தன் கொத்தடிமைகளுக்கும் மரண அடி தருவார்கள். இறுதியாக நான் ஆணித்த ரமாக வலியுறுத்தும் குற்றச்சாட்டெல்லாம் அமெரிக்கப்போர் விமானங்களுக் குப் பெட்ரோல் போட்டதன் மூலம் இராஜீவ்காந்தியும் சந்திரசேகரும் மன்னிக் க முடியாத மாபெரும் குற்றத்தைச் செய்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் மதசார்ப்பற்றக் கொள்கைக்காக மிகத்தெளிவான, துல்லி யமான கருத்துகளை முன்வைத்த தலைவர் வைகோ அவர்கள், சிறுபான்மை இன மக்களின் நலன் பேணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்தியாவில் மட்டுமல்ல - வெளிநாடுகளில் கூட,இந்திய அரசின் நடவடிக்கை கள் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்க வேண்டும் என்பதை எடுத்து ரைத்தார்.

1991 ஆம் ஆண்டு மே, ஜூன் திங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்
இராஜீவ்காந்தி கொல்லப்பட்ட அனுதாப அலையில் காங்கிரஸ் கட்சி கரை
சேர்ந்தது. ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாவிடினும், காங்கிரஸ் கட்சி
தனக்கே உரிய வழக்கமான வழி முறைகளைக் கையாண்டு, பி.வி.நரசிம்மராவ் தலைமையில் ஆட்சி அமைத்தது.பிரதமர் பதவியில் அமர்ந்த நரசிம்மராவ், மத வெறிக் கூட்டத்தின் கோர தாண்டவங்களை மெளனப் பர்வையாளராக வேடிக் கை பார்த்தார்.இந்நிலையில் மதவெறிப் பிரச்சாரம் செய்து வடபுலத்தில் பாரதி ய ஜனதா கட்சி அரசியலில் லாபம் கண்டது. பிரதான எதிர்க்கட்சி என்ற தகுதி யும் நாடாளுமன்றத்தில் அதற்குக் கிடைத்தது.

உ.பி.மாநிலத்தில் பி.ஜே.பி.கட்சி முதலமைச்சர் கல்யாண்சிங், திடீரென்று
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் 2.77 ஏக்கர் நிலத்தை அரசு கைய கப்படுத்துவதாக அறிவித்தார்.இதில் 2.04 ஏக்கர் நிலம் ஏற்கனவே விஸ்வ இந்து பரிசத் கட்டுபாட்டில்தான் இருந்தது. இந்தப் புதிய நிலைப்பாடு பாபர் மசூதி யைத் தகர்த்துவிட்டு இந்து அமைப்புகள் ராமர் கோயில் எழுப்புவதற்கான முன் னேற்பாடு என்று முஸ்லிம் அமைப்புகள் கவலை கொண்டன.அலகாபாத் உயர் நீதி மன்றத்திற்கும் இஸ்லாமிய அமைப்புகள் சென்றன. சர்ச்சைக்குரிய அந்த நிலத்தில் எத்தகைய கட்டுமானமும் கூடாது என்று 1991, அக்டோபர் 25 இல் அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், சங் பரிவாரங்கள் நீதிமன்றத்தீர்ப்பை மதிக்காமல், அயோத்தியில் சிறப்புப் பூஜையும், மறைந்த கரசேவகர்களுக்கு அஞ்சலி பூஜையும் நடத்துவ தாக அறிவித்தன. அக்டோபர் 31 ஆம் நாள் சங் பரிவாரங்களைச் சேர்ந்த வான ரப்படைகள், பாபர் மசூதியின் மீதேறி, காவிக்கொடியை ஏற்றினார்கள். மத்திய அரசு இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது.நாடே கொந்தளித்துக்கிடந் த அந்த வெப்பமான சூழலில், நாடாளுமன்றத்தில் 1991, நவம்பர் 20 ஆம் நாள் தலைவர் வைகோ, அயோத்திப் பிரச்சினை குறித்த விவாதத்தில் தன்னுடைய கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.

மன்னிக்க முடியாத மாபாதகம்

“சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் மதச்சார்பின்மை என்னும் தத்துவத்திற்கு
இதுவரை ஏற்படாத பேரபாயம் நேர்ந்துள்ளது. பிரச்சினைக்குரிய பாபர் மசூதி வளாகத்திற்குரிய நிலத்தை கையகப்படுத்திய செயல் மாபெரும் குற்றமாகும். மதச்சார்பற்ற கொள்கை மீது தொடுக்கப்பட்ட கொடூரத்தாக்குதல் ஆகும். மத வெறி அமைப்பான பஜ்ரங் தளத்தினரும், தீவிர மத வெறியர்களும் மூன்று விதானங்களின் உச்சியில் காவி வண்ணக்கொடி ஏற்றிய செயல் இந்திய ஒரு மைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும் செயலாகும். காவிக்கொடிகள் மூன்றினை
மசூதியின் மேல் ஏற்றிய நிகழ்ச்சி தேசப்பிதா மகாத்மாகாந்தியின் மெலிந்த
தேகத்தில் பாய்ந்த கோட்சேவின் மூன்று குண்டுகளை நினைவூட்டுகின்றது
இந்துகளும், முஸ்லிம்களும், கிறித்துவர்களும் பார்சிக்காரர்களும், பகுத்தறிவு வாதிகளும் தங்கள் நம்பிக்கைகளைப் பின்பற்றவும், இணைந்து வாழவும் உத்தி ரவாதம் தருவதே மதச்சார்பின்மை. இராமர் கோவிலா? அல்லது பாபர் மசூதி யா? என்பதல்ல கேள்வி, ஒன்றுபட்ட இந்தியாவா? அல்லது இந்து மதவெறியர் களை மட்டுமே பிரஜைகளாகக் கொண்ட இந்து ராஷ்ட்ராவா? என்பதுதான் இன்று பூதாகரமாக எழுந்திருக்கும் கேள்வி.

மதத்தின் பேரால் துவேஷம் தூண்டுவோர் தேசவிரோதிகள்

மதத்தின் பெயரைச் சொல்லி வகுப்பு துவேஷத்தையும் பகை உணர்ச்சியையும் தூண்டி விடுவோர் எம்மதத்தினராயினும் அவர்கள் இந்தியாவின் பொது எதிரி கள், தேசவிரோதிகள். உத்திரபிரதேசத்தில் பாபர் மசூதியை இடித்தால் முஸ் லிம் நாடுகளில் வாழும் இந்துகளின் நிலை என்னவாகும்?

மலேசியாவில் இருபது இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இஸ்லாமியர்கள்
பெருமளவில் வாழும் நாடு. மகாதிர் முகமதுதான் மலேசியாவின் அதிபர். இங் கே மசூதியை இடித்தால் மலேசியாவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கும், முருகன் கோவிலுக்கும் பாதுகாப்பு இருக்குமா?

அஸ்வின்குமார் (பி.ஜே.பி) : வாரணாசியைப் பற்றி பேசுங்கள். மலேசியா வைப் பற்றி பேசாதீர்கள்.

வைகோ : மலேசியாவில் வாழும் அனைவரும் இந்துகள் ஆயினும் தமிழர்கள் அல்லவா? மலேசியாவில்தான் தமிழன் இதுவரை பாதுகாப்பாக இருக்கிறான். அந்தப் பாதுகாப்பும் பாழாகிப்போகும். மதத்தின் பெயரால் உலகில் ஆண்டுக்க ணக்கில் யுத்தங்கள் நடந்துள்ளன. அதிக இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. பலநூறு வருடங்களாகக் கொடும் பகையுற்று ஒருவரை ஒருவர் அழிக்கத்துடித்த பால ஸ்தீனர்களையும், இஸ்ரேலியர்களையும் ஸ்பெயின் நாட்டின் தலைநகரில் நேருக்கு நேர் உட்காரவைத்து சமரசத் தீர்வுக்கு வல்லரசு நாடுகள் முழு முயற் சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், ஜனநாயக நாடான இந்தியாவில் மத வெறி யால் இரத்தக்களறி நடப்பதை எவ்விதத்திலும் சகித்துக்கொள்ள முடியாது.

பாபர் அந்நியர் என்றால் நீங்கள் யார்?

பாபர் அந்நிய நாட்டிலிருந்து வந்தவர் என்று விமர்சிப்பவர்களை நோக்கி நான்
கேட்பதெல்லாம் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? மத்திய ஆசியாவிலிருந்து ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு சிந்து நதி தீரத்திற்குள் நுழைந்த கூட்டம் தானே உங்கள் கூட்டம். நடந்து முடிந்துவிட்ட வரலாற்றை மாற்றி எழுதிவிட முடியாது.

மதவெறி எனும் கொடிய நச்சுக்காற்றை தமிழ்நாட்டில் பரப்புவதற்கு சில சக்தி கள் தீவிரமாக முயலுகின்றன. அதனை எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டிய
கடமை ஜனநாயகத்தை நேசிப்போர் அனைவருக்கும் உண்டு.இப்போதும் மூட் டுகின்ற வகுப்புவாத வெறி நஞ்சினும் கொடியது. அந்தக் கொடிய மதவெறி உணர்வை தென் இந்தியாவிலும் பரப்புகிற அக்கிரமத்தில் பாரதிய ஜனதாவும், விஸ்வ இந்து பரிசத்தும் ஈடுபட்டுள்ளன. சமய ஒற்றுமைக்கும், சமரச நெறிக் கும் இலக்கணம் வகுக்கும் எங்கள் தமிழ்நாட்டிலும் மதவெறி எனும் நாச சக்தி யை விதைத்து வளர்க்க முயலுகின்றனர்.

அதை எதிர்த்து தடுத்து நிறுத்துகிற அரணாக தி.மு.கழகம் திகழ்கிறது.மத வெறி யர்களின் பித்தலாட்டப் பிரச்சாரம் தடுக்கப்பட வேண்டும். இல்லையேல் அனு மான் தங்கள் கணவில் தோன்றினான் என்றும், இராமனின் பக்தனான நான் தங்கிய இடத்தில்தான் இந்திய நாடாளுமன்றம் கட்டப்பட்டு உள்ளது என்று சொன்னதாகவும் அதனால் நாடாளுமன்றக் கட்டடத்தை இடித்துவிட்டு அங்கே அனுமார் கோவிலைக் கட்டவேண்டுமென்று புதிய ஒரு கோரிக்கையை முன் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பகுத்தறிவுக்கு முரணான மடமையும், மதத்தின் பெயரால் ஆர்ப்பரிக்க அனும திக்கக்கூடாது. மனிதர் அனைவரும் சகோதரர் எனும் நேச உணர்வு நாடெங் கும் தழைக்க உறுதி எடுத்துக்கொண்டு உழைப்போம்.

தொடரும்...

நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment