Sunday, June 30, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 2

இன்பச் சிலிர்ப்பு!

நெருக்கடி காலத்தில் சிறைச்சாலையின் உயர்ந்த மதில் சுவர்களுக்கு உள்ளே 12 மாத காலம் நான் அடைபட்டுக் கிடந்த 1976 ஆம் ஆண்டில், காற்றின் அலை களோடு தவழ்ந்து வந்த ஒரு பாடல் என் செவிகளில் மோதியபோது, என் உடலில் இன்பச் சிலிர்ப்பும், பரவசமும் ஏற்பட்டது.

ஒவ்வொரு நாளும் காலைப் பொழுதிலும், மாலையில் பறவைகள் மரங்க ளைத் தேடி ஓடுகிற வேளையிலும், அந்தத் திரை இசைப்பாடல் தொலைவில் இருந்து வர வர, இந்தப் பாடலைத் தந்தவர் யார்?இசை அமைத்தவர் யார்? கிராமத்து மணம் கமழுகின்ற இந்த இசை எங்கோ வயல் வெளிகளில் ஒலித் தத் தெம்மாங்குச் சத்தம் போல் கேட்கிறதே, அது ஒரு வித்தியாசமாகப் படு கிறதே என்று நான் திகைத்தேன். அந்தப் பாடல்தான்

தமிழ் ஈழம் மலரும்-பகுதி 3

முல்லைப் பெரியாறு அணை எந்த பூகம்பத்திற்கும் ஈடுகொடுக்கக்கூடிய அணை. வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன்பே பென்னி குக்
கட்டிய அணை. பூம்பத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய அணைதான். அதனை நிபு ணர்கள் எல்லாம் எத்தனையோ ஆதாரங்களோடு நிருபித்துவிட்டார்கள்.

அந்தப் பகுதியில் 3.5 ரிக்டருக்கு மேல் பூகம்பமே வராது என்றுகூடச் சொல்லி
விட்டார்கள். அப்படி 5 புள்ளி அளவிலே வருமானால், அங்கே இருக்கக் கூடிய
வல்லக்கடவு, வண்டிப்பெரியார், குமுளி  கேரளப் பகுதியில் இருக்கக்கூடிய
கட்டிடங்கள் இடிந்துவிழுமே தவிர முல்லைப் பெரியாறு அணை ஒருபோதும்
உடையாது என்பதைத் தெரிவித்து விட்டார்கள்.

தண்ணீர்..தண்ணீர்.. தண்ணீர்.. பகுதி -4

அரசின் ஆதரவுடன் நிலத்தடி நீர் கொள்ளை...

1000 லிட்டர் தண்ணீரை 18 ரூபாய்க்கு வாங்கி
ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பதற்குப் பெயர் என்ன?

நம் தமிழ்நாடு தண்ணீர்ப் பற்றாக்குறை மாநிலமாக ஆனதற்கு மாநிலங்களின்
எல்லைக்கோடு, வரையறுப்பதில் ஏற்பட்ட முறைகேடுகள்தான் முதல் காரண மாகும்.

டெல்லி, கொல்கத்தா, மும்பை,சென்னை முதலிய இடங்களுக்கு இடையி
லான நாடுகளைப் பல அரசர்கள், சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். அதில் இன்று (தெலுங்கானா பகுதியான) நிஜாம் என்ற மன்னர் ஆண்ட பகுதிக்குத் தென் கிழக் கேயும், திருவிதாங்கூர்-கொச்சி மன்னர் ஆண்ட பகுதிக்குக் கிழக்கேயும் பெரும் பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மன்னர்கள் யாரும் ஆட்சி செய்ய வில்லை.

Saturday, June 29, 2013

உத்தரகண்ட் உணர்த்தும் எச்சரிக்கை

சங்கொலி தலையங்கம்

‘கடவுள்களின் பூமி’ என்று பக்தர்களால் அழைக்கப்படும்உத்தரகண்ட் மாநிலம்
உருக்குலைந்து போய்விட்டது. ஜூன் 17 ஆம் தேதி, தொடங்கிய பருவமழை மூன்றே நாட்களில் உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள காட் டாறுகளில் பெருவெள்ளம் கரைபுரண்டோடக்கூடிய நிலையை உருவாக்கிற் று. பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை மாநில நிர்வாகம் கணிக்கத் தவறியதால், உத்தரகண்ட் மலைப்பகுதிகளில் வெள்ளச் சேதம் வரலாறு காணாத வகையில் சீரழித்துவிட்டது.

இந்துகளின் புனிதத் தலங்கள் நிறைந்த இமாலயப் பகுதிகளில் வழிபாடு நடத் தச் சென்ற மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தனர். கேதார்நாத், பத்ரிநாத், கங் கோத்ரி,யமுனோத்ரி போன்ற புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கினர். மலைப்பகுதி களில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் உணவு இன்றி யும், போதிய மருத்துவ உதவி இன்றியும் மரணத்தைத் தழுவுகின்ற பரிதாபம் நிகழ்ந்து இருக்கின்றது.

மாணவர்களை கல்வித் துறையே தேர்வு செய்க!

கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளில் சேரும் மாணவர்களைக் கல்வித் துறையே தேர்வு செய்ய வேண்டும் என்று, மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன், வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை:

அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த பள்ளிக் கல்வித் துறை உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க விரும்பாததால் இச் சட்டமே கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்ட விண்ணப்பங்கள் தருவதில்லை என்று புகார் வந்ததால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மக்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் குறைந்த அளவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மக்கள் மனதில் இமயமாக மதிமுக

ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு தேர்தல் நிதியளிப்புவிழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நென்மேனி ஜெயராமன் தலைமையில் நடந்தது.

விழாவில் மாவட்ட #மதிமுக. சார்பில் ரூ. 15 லட்சத்து 17 ஆயிரம் தேர்தல் நிதி வழங்கப்பட்டது. நிதியை பெற்றுக்கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் #வைகோ பேசியதாவது:-

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவு எடுத்த பின்னர்தான் ம.தி.மு.க. மக்கள் மனதில் இமயமாக உயர்ந்து நிற்கிறது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தால் 578 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவு பகுதியில் இலங்கை போர்க்கப்பலை நிறுத்தி மீனவர்களை விரட்டி வருகிறது. மத்திய அரசு இதை தடுக்கவில்லை. இந்திய, இலங்கை கடற்படையினர் கைகோர்த்து கொண்டாட்டம் போடுகின்றனர்.

Friday, June 28, 2013

பெட்ரோல் விலை-வைகோ கண்டனம்

பெட்ரோல் விலையை ஒரு மாதத்திற்குள் மூன்றாவது முறையாக உயர்த்திய மக்கள் விரோத மத்திய அரசு!

வைகோ கண்டனம்

மத்திய அரசினுடைய தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ரூபாயின் மதிப்பும் குறைந்து மிகக் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்துப் பண்டங்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. நடுத்தர மக்களும், மாத ஊதியம் வாங்குவோரும், அடித்தட்டு மக்களும், தினக்கூலி வாழ்வு நடத்தும் ஏழைகளும் இந்த விலைவாசி உயர்வால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோலின் விலை ஜூன் ஒன்றாம் தேதி லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப் பட்டது. ஜூன் 15-ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப் பட்டது. ஜூன் 28-ஆம் தேதி மூன்றாவது முறையாக லிட்டருக்கு ரூ.1.82 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இதில் விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரியைச் சேர்க்கும்போது விலை இன்னும் அதிகமாகும். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.71-க்கு விற்கப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கான ரூபாய் மதிப்பு குறைந்ததுதான் காரணம் என்பதை ஏற்க முடியாது. அந்த மதிப்பு கூடுவதும் குறைவதும் சராசரியாக நடக்கக் கூடியதுதான். எண்ணெய் நிறுவனங்கள் கோடி கோடியாகக் கொள்ளை லாபம் சம்பாதிக்க மத்திய அரசு அனுமதித்துவிட்டு பொதுமக்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்குக் கண்டனம் தெரிவிப்ப தோடு பெட்ரோல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வற்புறுத்துகிறேன்.

‘தாயகம்’                                                                                                 வைகோ
சென்னை - 8                                                                                  பொதுச்செயலாளர்
28.06.2013                                                                                          மறுமலர்ச்சி தி.மு.க.

Thursday, June 27, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 11

நாள் :- 26.10.2006

இலங்கைக் கடற்படை துப்பாக்கிச்சூடு:
தமிழக மீனவர்களைக் காப்பாற்றுக!
பிரதமருக்கு வைகோ தந்தி

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது
இலங்கைக் கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டி அடித்து இருக்கிறது.
இதனால் 3000 மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் வெறுங்கையுடன் தப்பி ஓடி வந்து உள்ளனர். இலங்கைக் கடற்படை தொடர்ந்து நடத்தி வருகின்ற
இத்தகைய தாக்குதல்களால், தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
அவர்களது அன்றாட வாடிநக்கை, கேள்விக்குறி ஆகி உள்ளது.

இப்பிரச்சனை குறித்து, பலமுறை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு
வந்து உள்ளேன். நாடாளுமன்றத்திலும் பேசி உள்ளேன். இலங்கைக் கடற் படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மறுமலர்ச்சி
தி.மு.கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

‘தாயகம்’                                                                                           வைகோ,
சென்னை - 8                                                                         பொதுச் செயலாளர்,
                                                                        மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

தமிழ் ஈழம் மலரும்-பகுதி 2

கார்த்திகை திங்கள் முடித்து மார்கழியிலே அடியெடுத்து வைத்திருக்கிறோம். பொழுது புலர்வதற்கு முன்னாலே வைகறை வேளையிலே மார்கழி திருப் பா வை, திருவெண்பாவை பாடல்களை உச்சரிக்கக்கூடிய பக்தர்கள் உண்டு. நான் இந்தத் தியாகராயர் நகர் கூட்டத்தில் இருந்து கேட்கிறேன். நல்லூர் கந்தசாமி
கோவில் இங்கே இருக்கக்கூடிய அறுபடை வீடுகளைப் போலப் புகழ்பெற்ற கோவில்தானே? திருச்செந்தூரைப் போல, திருப்பரங்குன்றத்தைப்போல,பழனி யைப்போல, ஆவினன்குடியைப்போல, திருத்தணியைப்போல, புகழ்பெற்ற கோவில்தானே. அந்த நல்லூர் கந்தசாமி கோவில் தமிழர்களின் புராதனமான அந்த முருகன் கோவில் சிங்கள இராணுவ அதிகாரிகளினுடைய ஆளுகைக்கு உள்ளே.

பேராயர் இருதயராஜ் அவர் கிறிஸ்தவர். வேதனையோடு தான் குறிப்பிடுகி றார். எல்லா இடங்களும் பெளத்த மயமாக்கப்பட்டு, சிங்களமயமாக்கப்பட்டு விட்டன.அதைவிடக் கொடுமை பெண்கள் சிங்களவர்களால் கற்பழிக்கப்பட்டு கருவைச் சுமக்க நேரிட்ட அந்த தமிழ் பெண்கள் மானத்தை, கற்பை உயிருக்கு மேலாக போற்றிவந்த அந்தப் பெண்கள் இந்தக் கொடுமையை தாங்கிக் கொள் ளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.


சீனம் சிவந்தது ஏன்?

“ஆசிய கண்டத்தின் தீர்மான சக்திகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன. சர்வ தேச வர்த்தகத்துக்கு மிகப்பெரிய உந்து சக்திகளாக இரு நாடுகளும் இருந்து வருகின்றன. இரு தரப்புக்கும் இடையே பிரச்சினைகள் இருக்கத்தான் செய் கின்றன. அவற்றை மூடி மறைத்திட விரும்பவில்லை.

கடந்த கால வரலாறு, இரு நாடுகளுக்கும் இடையே சில பிரச்சினைகளை விட் டுச் சென்றுள்ளது. ஆனாலும், அந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உள்ளது. இந்தி யாவும், சீனாவும் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை உள்ளது.அதற்குப் பேச்சுவார்த் தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதிலும்,இருவேறு கருத்துகளுக்குஇடம் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும்
உருவாக்கி, ஒரு புதிய அத்தியாயம் தொடங்க வேண்டியது அவசியமான கட மையும் ஆகும்”.

Wednesday, June 26, 2013

குற்றேவல் புரியும் கூடாரமா? வைகோ கேள்வி-பகுதி 3

கூட்டுக் குற்றவாளி இந்தியா

அவனை இங்கே அழைத்து வருவதற்கு என்ன காரணம்? அந்தப் படுகொலை களுக்கு இந்திய அரசும் உடந்தையான கூட்டுக் குற்றவாளி. அதுதான் காரணம். இவர்கள்தாம் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தார்கள்; ஆயிரம் கோடிப் பணம் கொடுத்தார்கள்; கொத்துக்குண்டுகளை வீசுவதற்கு உடந்தையாக இருந்தார் கள்; உலகம் தடை செய்த ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். இந்திய இராணுவ அதிகாரிகளை அனுப்பி போரை இயக்கினார்கள்.

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற கொலைகாரனை, காமன்வெல்த் போட்டிகளுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்துக் கொண்டு வந்து விருந்து வைத்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்த நேரத்தில் நீ அவனை இங்கே அழைத்து வந்து பரிவட்டம் கட்டினாய்.அவனை இங்கே அழைத்து வராதே என்றோம். அதையும் மீறி அழைத்து வந்தாய். 1200 தோழர் களோடு, மத்தியப் பிரதேச மாநிலத்தில், விந்திய சாத்புரா மலைச் சரிவுகளிலே வந்து போராட்டம் நடத்தினோம். அதற்குப் பிறகும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு வந்தாய். திருப்பதி எங்கள் தமிழகத்தின் பூர் வீக மண். இந்தியாவுக்கு உள்ளே அவன் எங்கே வந்தாலும், தில்லியில் பிரதமர் வீட்டை முற்றுகை இடுவோம் என்று அறிவித்து முற்றுகை இட்டோம். தில்லிக்கு வராமல் கட்டாக் வழியாக பீகாருக்கும், திருப்பதிக்கும் அழைத்துக் கொண்டு போனாய்.

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 1

உலகத்தில் தோன்றிய முதல் இசை-தமிழிசை
இசை சாம வேதத்திலிருந்து வந்தது அல்ல


திருவாசகம் சிம்ஃபொனி வெளியீட்டு விழா - #வைகோ இசை ஆய்வுரை

பொருநை ஆற்றின் சங்கீதம்
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கம்பீரம் 
நாட்டுப் புறப்பாடல்களின் பிரவேசம்  
தெற்குச் சீமையின் எங்கள் சீதனமாம் 

இளையராஜா அவர்களின்அருட்கொடையாக ஆன்மிகப் பாடல்களைப் பல் வேறு இசைக் கருவிகளோடும், பாடல் ஒலித்திடுகின்ற பல வகைக் குரலோ டும் பிணைத்து - இணைத்து இசைப்பெட்டகமாகத் ‘திருவாசகம் ஆரடோரி யோ’ என்னும் படைப்பினை வெளியிடுகின்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்றுச் சிறப்பித்து, கடமை காரணமாக விடை பெற்றுச் சென்று இருக்கின்ற மத்திய அமைச்சர் எனது இனிய நண்பர் மாண்புமிகு ஜெயபால் ரெட்டி அவர் களே, முத்தமிழ் நாட்டுக்கு இசையின் மூலமாகப் புகழ்முடி சூட்டிய இசை மாமன்னர்- இந்த விழாவின் நாயகர் இளையராஜா அவர்களே, கருத்து உரிமை யின் கவசமாகத் திகழ்கிற ‘இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் பெருமதிப்புக் குரிய என். ராம் அவர்களே, வெள்ளித் திரையில் ஜொலிக்கின்ற உன்னதமான நட்சத்திரம் பெருமதிப்புக்குரிய ரஜினிகாந்த் அவர்களே,

குற்றேவல் புரியும் கூடாரமா? வைகோ கேள்வி-பகுதி 2

அஞ்ச மாட்டோம்

இந்திய இராணுவத்தின் பயிற்சிக் கல்லூரியை முற்றுகை இடுவதாக நாங்கள் அறிவித்தோம்.தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதற்குப் பிறகு, 29 நாள்கள் கழித்து அவர்களைத் திருப்பி அனுப்பி இருக்கின்றாய்; அடுத்து மேலும் ஏழு சிங் கள இராணுவத்தினரை இங்கே பயிற்சிக்கு அழைத்து வருவதற்கு நீ திட்டம் வகுத்து இருக்கின்றாய்.

வெலிங்டனில் உள்ள இராணுவத்தினருள், தாய்த் தமிழகத்தின் மான உணர்வு உள்ள தமிழ் இளைஞர்களும் இருக்கின்றார்கள். எங்களுடைய இந்த உரைகள், அவர்களுடைய செவிகளுக்குப் போய்ச் சேரும்.

Tuesday, June 25, 2013

குற்றேவல் புரியும் கூடாரமா? வைகோ கேள்வி-பகுதி 1

வெலிங்டனில் இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியா?
அல்லது, கொலைகாரன் இராஜபக்சேவுக்குக்
குற்றேவல் புரியும் கூடாரமா?
குன்னூர் பொதுக்கூட்டத்தில் வைகோ கேள்வி!


கொலைவாளினை எடடா
மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா

என்ற பாவேந்தரின் பாட்டு வரிகளை, மான உணர்வு உள்ள தமிழர்கள் தம் நெஞ்சில் ஏந்தி, தமிழ்க்குலப் பகைவர்களை இனி இந்த மண்ணில் அனுமதிக்க மாட்டோம்; கேடு கெட்ட மத்திய அரசை எச்சரிக்கின்றோம் என்கின்ற வகை யில், பல்லாயிரக்கணக்கில் குன்னூரில் திரண்டு இருக்கின்றீர்கள்.

கோவையில், மேட்டுப்பாளையத்தில், குன்னூரில், கூடலூரில் என இந்த நீல கிரிப் பகுதி முழுவதுமே பலத்த மழை பெய்து கொண்டு இருக்கின்றது. அதற்கு நடுவிலும், கொலைகாரச் சிங்களவர்கள் நேற்று வெளியேற்றப்பட்டு விட்டார் கள்; எனவே, அறிவிக்கப்பட்ட போராட்டம் நிறுத்தப்பட்டு விட்டது என்ற செய்திக்குப் பின்னரும், உணர்ச்சிப் பெருக்கோடு இங்கே திரண்டு இருக்கின்ற
உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி கண்டன பொதுக்கூட்டம்

இன்று (25-ந்தேதி) வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்
டம் நடத்துவோம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்றே குன்னூர் வந்து விட்டார்.

போராட்ட அறிவிப்பால் வெலிங்டன் ராணுவ முகாமை சுற்றிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மாடசாமி தலைமையில் போலீசார் குன்னூர், ராணுவ மையத்துக்கு செல்லும் பிளாக் பிரிட்ஜ், கண்டோன்மென்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ் ஈழம் மலரும்-பகுதி 1

சென்னை - தியாகராயர் நகர், முத்துரங்கன் சாலையில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், 27.12.2011 அன்று நடைபெற்ற தமிழர் சூளுரை நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார். அவரது உரை வருமாறு:-

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பிலே நடைபெறுகிற தமிழர் சூளு ரை நாள் பொதுக் கூட்டத்தினுடைய தலைவர் அமைப்பினுடைய ஒருங்கி ணைப்பாளர், உலகத் தமிழர் பேரமைப்பினுடைய தலைவர் ஆருயிர் அண் ணன் பழ.நெடுமாறன் அவர்களே! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முன் னணித் தலைவர்களில் ஒருவரும், தியாகத் தழும்புகள் பெற்றவருமான மதிப் பிற்குரிய அண்ணன் நல்லகண்ணு அவர்களே, பெரியார் திராவிடர் கழகத்தினு டைய பொதுச் செயலாளர் அன்புச் சகோதரர் மானமிகு விடுதலை ராஜேந் திரன் அவர்களே! இந்த மாபெரும் கூட்டத்தை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து,
தீ எரிய அதிலே செந்நீர் பொழிகிறோம். தீ எரிக அதிலே தசைதனைப் பொழி கிறோம். தீ எரிக! காலக் கடைத்தீயாக கனன்று எழுக! என்ற முண்டாசுக் கவி யினுடைய வரிகளை நினைவூட்டுகின்ற வகையில் மாவீரர்களுக்கு வீரவ ணக்கம் செலுத்திடவும், தாய்த் தமிழகத்து உரிமைகளைக் காக்க சூளுரை மேற் கொள்ளவும் மிக ஆற்றலோடு இதை வடிவமைத்துத் தந்திருக்கின்ற வரவேற் புரை நிகழ்த்திய ஆருயிர் சகோதரர் வேளச்சேரி மணிமாறன் அவர்களே, பல் லாயிரக்கணக்கிலே திரண்டிருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே, தாய்மார்களே
பெரியோர்களே, மதிப்பிற்குரிய பத்திரிகையாளர்களே, ஊடகவியலாளர்களே,

தொண்டர்களுக்கு வைகோ கடிதம்

இமைப்பொழுதும் நீங்காது
என் இதயத்துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

இயக்கத்தின் இருபதாம் அகவையில், வெற்றியின் வெளிச்சம் பிரகாசிக்கப் போகிறது.கழக வளர்ச்சி நிதி -தேர்தல் நிதி திரட்டிட வேண்டிய அவசியம் வந்து விட்டதை விளக்கி, ‘இலட்சியச் சிகரம் நோக்கி இருபது ஆண்டுகள்’என்ற கடிதத்தில், ஆறு வாரங்களுக்கு முன்பே கண்ணின் மணிகளே உங்களுக்குக் கடிதம் தீட்டி இருந்தேன்.

நமது இயக்கத்தின் சார்பில் நிதி கேட்டால், எந்த இடத்திலும், எவரும் முகம் கோணாமல் பரிவோடு தங்களால் முடிந்ததைத் தருகிறார்கள். திட்டமிட்டு முறையாக, தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டங்களில் நிதி திரட்டும் பணி கள் நிறைவு அடையும் நிலையில் உள்ளது.

Monday, June 24, 2013

முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்

குன்னூர் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரி
முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்

வைகோ அறிக்கை

ஈழத் தமிழ் இனப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தின் அதிகாரிகளுக்கு தாய்த் தமிழகத்தில் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவப் பயிற் சிக் கல்லூரியில் பயிற்சி கொடுக்கும் இந்திய அரசின் துரோகத்தை எதிர்த்து, நாளை 25 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு திட்டமிட்டபடி முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

சிங்கள இராணுவ அதிகாரிகள் இன்று திருப்பி அனுப்பப்படவில்லை. ஈழத் தமிழர்கள் உரிமை காக்கவும், சிங்கள அரசுக்கு குற்று ஏவல் புரியும் இந்திய அரசின் துரோகத்தை எதிர்க்கவும் வீரமும் மானமும் கொண்டு போராடி வருகிற தாய்த் தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், உணர்வாளர்கள்அறப்போரில் பங்கேற்க ஆர்த்தெழுந்து வாரீர்!

‘தாயகம்’                                                                                         வைகோ
சென்னை - 8                                                                         பொதுச்செயலாளர்
24.06.2013                                                                                 மறுமலர்ச்சி தி.மு.க.

நெருப்போடு விளையாடாதே! -பகுதி 2

வன்னிக்காட்டில் நான் தம்பியோடு இருந்தபோது, ஒரு செய்தியை என்னிடம் சொன்னார். ஆங்கிலம் படிக்கவில்லை என்று அவருக்கு வருத்தம் இருந்திருக் கலாம். ஆனால், அருமையாகப் புரிந்து கொள்வார்; அதைப்பற்றி விளக்கமும் சொல்வார். மிக்கி மவுஸ் போல ஒரு கார்ட்டூன் படம். அந்த உருவம் ஆங்கிலத் தில் பேசுவது போல ஒரு குரல் வரும். அதை அருமையாகத் தமிழில் மொழி பெயர்த்துப் பிரபாகரன் சொல்லிக்கொண்டு இருந்தார் என்று மணி கூறினார்.

விடுதலை வேட்கையைத் தூண்டக்கூடிய படங்களைத்தான் அவர் விரும்பிப் பார்ப்பார். அது மட்டும் அல்ல, தன்னுடைய சகாக்களுக்கும் போட்டுக்காண்பிப் பார். அப்படிப்பட்ட படங்களில், பால் உணர்வைத் தூண்டுகின்ற காட்சிகள் மறைக்கப் பட்டு விடும். வன்னிக் காட்டில் அவரோடு இருந்தபோது, அப்படி இரண்டு மூன்று ஆங்கிலத் திரைப்படங்களையும் அவரோடு நான் பார்த்து இருக்கின்றேன். திரில்லர் படங்களைப் பார்ப்பார். யுத்தத்தை மனதிலே வைத் துக்கொண்டுதான், அதைப்பற்றிய படங்களைத்தான் பார்ப்பார். அவருக்கு நிகராகப் பணி அணிகளை நடத்தியவன் உலக வரலாற்றில் வேறு எவனும் கிடையாது.

“கச்சத் தீவு” தமிழருக்குச் சொந்தம்!

அன்னைத் தமிழகத்தின் இராமேசுவரத்தில் இருந்து 17 கி.மீ. வடக்கில் ஆள் அர வம் இல்லாத உயரம் குறைவான குட்டித்தீவு கச்சத்தீவு. 

பறவைகளின் ஒலிகளும், கடல் அலையின் ஒலியும்,மரங்கள் அசைவினால் ஏற்படும் ஒலியும் தவிரவேறு ஒன்றையும் கேட்க முடி யாத அமைதித்தீவாக இருந்த கச்சத்தீவு தற்போது இந்திய அரசியலில் புய லைக் கிளப்பி வருகிறது.

தமிழர் தலைவர் வைகோ
சுதந்திரத்திற்குப் பின் இந்தியக் கடலோரப் பகுதியில்,அதுவும் குறிப்பாக கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்குப் பின்னர், 600 தமிழக மீனவர்கள் சிங் கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Sunday, June 23, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 10

நாள் :- 30.08.2006

செஞ்சோலைப் படுகொலை!
பிரதமரிடம் வைகோ அளித்த கோரிக்கை !

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சி. கிருஷ்ணன், சிப்பிப்பாறை இரவிச் சந்திரன் ஆகியோர், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, இன்று பகல் 1.00 மணி அளவில் தில்லியில் - பிரதமர் அலுவலகத்தில் சந்தித் தனர். அப்போது அவர்கள் பிரதமரிடம் வழங்கிய கோரிக்கை விண்ணப்பம் பின் வருமாறு :

நெருப்போடு விளையாடாதே! -பகுதி 1

‘தந்தையும் தம்பியும்’ என்னும் பொ.தங்கபாண்டியன் எழுதிய நூல் வெளியீட்டு விழா 02.12.2011 அன்று சென்னை - தியாகராயர் நகரில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

நான் வயது முதிர்ந்த கிழவன் அதனால் நான் பலாத்காரத்தில் நம்பிக்கை இல் லாதவனாக இருக்கலாம். நாளைய இளைஞர்கள்,இரத்த வெள்ளத்திலே நின்று பிரிவினை கேட்பார்கள். கத்தி முனையிலே நின்று பிரிவினை கேட் பார்கள் என்ற தந்தை பெரியார் அவர்களுடைய காலத்தின் கல்வெட்டாகப் பதிக்கப் பட்ட வாசகங்களையும்,

தண்ணீர்..தண்ணீர்.. தண்ணீர்.. பகுதி -3

தண்ணீர் வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் கொள்ளையாகும்.விவசாயிகளின் நிலத்தில் உள்ள கிணறுகளைக்கூட நீர்க் கொள்ளை நிறுவனங்கள் விட்டு வைக்க வில்லை.

ஆறுகளைத் தேசியமயமாக்க வேண்டும்...
தனியார் வசமாக்குவது ஆபத்தான முடிவாகும்!

தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன.கட்சிகளின் அடிப்படை யில் மக்கள் மனம்போன போக்கில் சிதறிக்கிடக்கின்றனர். கொள்கை கோட் பா டுகள் சிறிதும் புரியாமலேயே கட்சித் தலைமையைப் போற்றுவது அறியாமை என்பதைவிட ஏதோ ஒருவிதமான எதிர்பார்ப்புகளால் ஆளும்கட்சித் தகுதி யுள் ளவர்களின் மீது துதி பாடித்திரிகின்றார்கள் என்பதே சரியான மதிப்பீடாகும்.

Saturday, June 22, 2013

தமிழ் இனம் உணர்வு பெறப் பாடும் கவிஞர்!

உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களின், “நறுக்குகள், பொழிச்சல், Fables Kasi Anandan” ஆகிய நூல்களின் வெளியீட்டுவிழா,சென்னையில் 10.11.2011அன்று பழ.நெடுமாறன் தலைமையில்,தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இந்நூல்களை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் இருந்து...

சொல்
இருக்கின்றேனா?
என் இலக்கியத்தில்...

தேடாதே
என் இலக்கியத்தில்
தாகூரை
புஷ்கினை
பாரதியை

சொல்
இருக்கின்றேனா?
நான்..

மதிமுக இளைஞர் அணி தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி ஆலோச னைக் கூட்டம், 22.06.2013 அன்று, தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. கழக இளைஞர் அணிச் செயலாளர், பொறியாளர் வே.ஈஸ்வரன் அவர்கள் தலை மை வகித்தார். இதில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

அமெரிக்காவின் ‘உளவு’

சங்கொலி தலையங்கம்

‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ (Confessions of an Economic Hit man) என்னும் நூல் 2003 ஆம் ஆண்டில், ஜான் பெர்க்கின்ஸ் என்ற அமெரிக்க ரால் எழுதி வெளியிடப்பட்டது. ஜான் பெர்க்கின்ஸ் பொருளாதாரத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணிபுரிந்தார்.

அமெரிக்க நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக உலக இயற்கை வளங்களை
அமெரிக்காவுக்கு சொந்தமாக்கிட அந்நாட்டு நிறுவனங்கள் எப்படியெல்லாம்
உலக நாடுகளை ஆட்டிப் படைக்கின்றன. கனிம வளங்கள், எண்ணெய் வயல் கள் ஆகியவற்றைக் கைப்பற்றி ஏகபோகம் ஆக்கிக் கொண்டு சுரண்டல் நடத்த அமெரிக்கா பல ஆட்சியாளர்களை எப்படி வளைக்கிறது? அமெரிக்க ஆதிக்கத் தின் கொடுங்கரங்கள் எவ்வாறு இந்தோனேஷியா, பனாமா, ஈக்வடார், சவுதி அரேபியா, நைஜீரியா மற்றும் ஈராக் நாடுகளைச் சுற்றி வளைத்தன.

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 9

நாள் :- 05.08.2006

சிங்கள இராணுவத்தினருக்குக் கோவையில் பயிற்சியா?



பிரதமருடன் வைகோ பேச்சு

இன்று (05.08.2006) காலை 10.40 மணிக்கு இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களோடு, வைகோ தொலைபேசியில் பேசினார்.வைகோ பிரதமரிடம் கூறியதாவது:

என்.எல்.சி. பங்குகள் விற்பனை- வைகோ கண்டனம்

என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை: வைகோ கண்டனம்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்னா தகுதி பெற்று தனிச் சிறப்புடன் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்திட மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

Friday, June 21, 2013

ஜூன் 25-இராணுவப் பயிற்சிக் கல்லூரி முற்றுகை

சிங்கள இராணுவத்தினருக்கு குன்னூர் வெலிங்டனில்
பயிற்சியைத் தொடரும் இந்திய அரசின் துரோகம்!

ஜூன் 25 செவ்வாய்கிழமை: குன்னூரில் இராணுவப் பயிற்சிக் கல்லூரி முற்றுகை

வைகோ அறிவிப்பு

தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டுசிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத் திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது.

Thursday, June 20, 2013

மரங்கள் வெட்டுவதற்கு மட்டுமா ! நடுவதற்கு இல்லையா ?

சாலை வசதிகளுக்கு வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக மீண்டும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டாமா ...

அரசு துறைகளை அதை கடைபிடிக்கவில்லை என்பது உண்மை ...

கடந்த வருடம் கோவை மதிமுக மாவட்ட செயலாளராக இருந்த இப்போது மாநில இளைஞர் அணி செயலாளராக செயல்படும் திரு.ஈஸ்வரன் அவர்களை
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை துறையிடம் பல கேள்விகளை எழுப்பினார் அதற்கு நெடுஞ்சாலை துறை தந்த பதில்கள் விவரம் இதோ:-

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 29

மாநில சுயாட்சி முழக்கம்

‘திராவிட நாடு’ பிரிவினை கோரிக்கையைக் கைவிட்ட பேரறிஞர் அண்ணா, நாட்டுப் பிரிவினை கேட்டதற்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றன என் றார். இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பின்னர், மாநிலங்க ளுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும். மாநில சுயாட்சி கொள்கை ஒன்றே, இந் தியாவின் ஒற்றுமைக்கு தீர்வாக இருக்கும் என்று அறிஞர் அண்ணா வரை யறுத்து, அதற்காக முதல்வராக இருந்தபோது குரல் எழுப்பினார்.

அறிஞர் அண்ணாவின் பாசறையில் வளர்ந்த தலைவர் வைகோ அதே கோட் பாட்டில் நின்று,நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு இருக்கின்றார். மாநில அரசு களைப் பந்தாடும் மத்திய அரசின் போக்கை இடித்துரைத்து, பல சமயங்களில்
வைகோ ஆற்றிய உரைகளில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.


இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறி ?

ஈழத்தமிழருக்கு நீங்கள் இழைக்கின்ற துரோகம் தொடருமானால், வருங்கால இளைய தலைமுறை இப்படியே இருக்காது.-வைகோ 

ஈழத்தமிழருக்கு இந்திய அரசின் துரோகம் தொடருமானால்
இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடும்!

தில்லி ஆர்ப்பாட்டத்தில் வைகோ எச்சரிக்கை!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில்12.8.2011 அன்று பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் தில்லி நாடாளுமன்ற சாலை யில், ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசு, அனைத்து நாடு கள் மன்றத்தில் சிங்கள அரசுக்குத்தரும் ஆதரவுப் போக்கினை நிறுத்திக் கொள் ளவும் சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்த குரல் கொடுத்திடக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத் தில் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்றனர்.பாரதீய ஜனதா கட்சி யின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், இந்திய தேசிய லோக்தள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரணவீர் சிங் பிரஜாபதி ஆகியோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்து உரையாற் றினர். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை வருமாறு:-

பி.எஸ். குமாரசாமி இராஜாவும் மதுஒழிப்பும்!

இந்திய சுதந்திர போராட்டத்தில் இராஜபாளையம் பகுதி ஒரு முக்கியப் போராட்டக் களமாக விளங்கியது. காரணம் இராஜபாளையம் பகுதியில் பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்தையும், அடக்குமுறையையும் எதிர்த்துப் பொதுமக்களே போராடினார். இராஜபாளையம் ஈன்றெடுத்த தலைவர் பி.ஸ்.குமாரசாமி இராஜா. இவர் தென்னக காந்தி என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

இவர் இராஜபாளையம் நகர மன்றத் தலைவராகவும், ஜில்லா போர்டு தலைவ ராகவும் தமிழக முதல்வராகவும் கவர்னராகவும் இருந்து பொதுவாழ்வில் பாடு பட்டார். இவர் அமைச்சரவையில் பூரண மதுவிலக்கு கொண்டுவந்தார்.

Wednesday, June 19, 2013

இளைஞர்களே கிளர்ந்து எழுங்கள் ! பகுதி 3

இளைஞர்களுக்குச் சொல்லுவேன். கொலைகாரன் ராஜபக்சே கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அது முடியும். உலகெங்கும் உள்ள தமிழ் இளைஞர்கள், ஒரு சேர எழ வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் பொங்கி எழுந்தால் போதும். நான் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை. நாங்கள் இதுவரையிலும் ஒரு சிறு 
வன்முறையிலும் ஈடுபட்டது இல்லை, ஊக்கம் அளித்ததும் இல்லை.-வைகோ 

அதைவிடக்கொடுமை, 2010 டிசம்பர் 2 ஆம் நாள் இன்னொரு காணொளியை ஒளிபரப்பியது சேனல் 4 தொலைக்காட்சி. அதைப் பார்க்க முடியாது. ஈழத்தில்
இனக்கொலை, இதயத்தில் இரத்தம் என்று நான் வெளியிட்ட குறுந்தகட்டிலே அரை நிமிடம் காட்டியதற்கே நான் துடித்துப் போனேன். பிறந்த மேனியோடு சிதைக்கப்பட்டுக் கிடக்கிறாள் இசைப்பிரியா. யாழ் வாசிப்பதிலே வல்லபி. அந்த அழகான பெண், அகல் என்ற பெயர் கொண்டதன்னுடைய நான்கு மாதக் கைக்குழந்தையைக் குண்டுவீச்சிலே பறிகொடுத்த அந்தத் தங்கை இசைப்பிரி யாவை, சிங்கள வெறிநாய்கள் கூட்டமாகக் கற்பழித்துக் கொன்று இருக்கின் றார்கள். அதைப்பற்றி அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம், செல்போன்களில்
பதிவாகி இருக்கிறது.

தாமிரபரணியைக் காப்போம்!

பாண்டி நாடே பழம் பதி, ‘ஆறில்லா ஊருக்கு அழகில்லை’ என்பதை மெய்ப்பிக் கும் வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளங்கொழிக்கச் செய் யும் வற்றாத ஜீவ நதி தாமிரபரணி.

‘தாமிரபரணி’ என்று மிகச் சாதாரணமாக இன்று வழங்கி வருகிறோம். இப்பெய ரின் வரலாற்றைச் சிறிது நோக்குவோம்.

மெகஸ்தனிஸ்

செல்யூகஸ் நிகேடர் அரசால் சந்திர குப்த மெளரியர் பேரரசரின் அவைக்கு கி.மு.302 இல் வந்தவர் மெகஸ்தனிஸ். ‘ தாப்ரபனே’, ‘த்வீபராவண’என்று அவர்
தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். (வி.எஸ்.வி. ராகவன், மெகஸ்தனிஸ் கி.மு. 302 - 296) 1978, பக். 81, 104, 260, 275.

Tuesday, June 18, 2013

வெலிங்டன் முற்றுகைப் போராட்டம் படங்கள்

ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த
இலங்கை இராணுவத்துக்கு, தமிழ்நாட்டில் பயிற்சி!

இந்திய அரசைக் கண்டித்து வெலிங்டன் முற்றுகைப் போராட்டம்

இலட்சக்கணக்ககான ஈழத் தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினருக்கு மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே, அதிலும் தமிழ்நாட்டிலேயே பயிற்சி கொடுத்த இந்திய அரசு, கடந்த மே 27 ஆம் தேதி முதல் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரி யில் இலங்கை இராணுவத்தின் விங் கமாண்டர் தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிச்சந்திராவுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறது.

இளைஞர்களே கிளர்ந்து எழுங்கள் ! பகுதி 2

3,30,000 பேர், அந்தப் பாதுகாப்பு வலையத்துக்கு உள்ளே கொண்டு வந்து திணிக் கப்பட்டார்கள். இதை நான் சொல்லவில்லை. ஐ.நா. மூவர் குழுவின் அறிக்கை
சொல்லுகிறது.

ஆனால், கேடு கெட்ட இந்திய அரசு, இந்திய நாடாளுமன்றத்தில் 2009 பிப்ரவரி 18 ஆம் நாள், 70,000 பேர்கள்தான் பாதுகாப்பு வலையத்துக்கு உள்ளே இருப்ப தாகச் சொன்னாய். இலங்கையில் ராஜபக்சே சொன்னதை, மூன்று நாள்களுக் குப் பிறகு, பிரணாப் முகர்ஜி இங்கே சொன்னார். கலைஞர் கருணாநிதியும்
அதையே சொன்னார்.

தண்ணீர்..தண்ணீர்.. தண்ணீர்.. பகுதி -2

தமிழகத்தைத் தவிக்கவிட இந்திய அரசின் திட்டமிட்ட சதி!

ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக இருந்தபோது தண்ணீர் பற்றாக் குறை யில்லாமல் இருந்தது.1953 இல் ஆந்திரா தனிமாநிலமாகப்பிரிந்தது. 1956 இல் மாநிலங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதன் விளைவாகவே தமிழகம் தண்ணீரை இழக்க நேர்ந்தது.

அறிஞர் அண்ணா ஆசைப்பட்ட (தென்னாடு) திராவிட நாடு மட்டும் அமைந்தி ருக்குமானால், நீர்வளம், நிலவளம், தொழில்வளம், மனித வளம் ஆகிய அனைத்து வளங்களும் பொருந்திய நாடாக அமைந்திருக்கும்.

Monday, June 17, 2013

இளைஞர்களே கிளர்ந்து எழுங்கள் ! பகுதி 1

தொடர்கிறது இந்தியாவின் துரோகம், மன்னிக்க மாட்டோம்! 
தமிழ் ஈழத்தை அமைக்க தமிழகத்து இளைஞர்களே கிளர்ந்து எழுங்கள்! 
- #வைகோ 

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொ லையில் உயிர் ஈந்தவர்களுக்காக 17.5.2011 அன்று, புரசைவாக்கம்,டாணா தெரு வில், நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பொதுச் செயலாளர் வைகோ, “தொடர்கிறது இந்தியாவின் துரோகம், மன்னிக்க மாட்டோம்!தமிழ் ஈழத்தை அமைக்க தமிழகத்து இளைஞர் களே கிளர்ந்து எழுங்கள்!” என்று உணர்ச்சி முழக்கமிட்டார். அவரது உரை வருமாறு...

பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும் 
எங்கள் கருப்பையும் ஆயுதம் ஏந்தும் 

தனியார் “ரெயில்பெட்டி” -சங்கொலி தலையங்கம்

சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டித் தொழிற்சாலை 1952 ஆம் ஆண்டு தொடங் கப்பட்டது. இதுவரை ரூ 46 ஆயிரம் கோடிக்கு ரெயில் பெட்டிகள் தயாரிக்கப் பட்டுள்ளது. நாட்டில் உள்ள 65 சதவீதம் ரெயில் பெட்டிகள் சென்னையில் தயாரிக்கப்பட்டவை.

ஆனால், தற்போது மத்திய அரசு, சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலை யைப் புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மின்சார ரெயில் மற்றும் சாதாரண ரெயில் பெட்டிகள் தயாரிப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க
ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. 2006 ஆம் ஆண்டிலிருந்து 80 சதவீதம் ரெயில் பெட்டி உதிரிபாகங்கள் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Sunday, June 16, 2013

இந்திய அரசின் அகங்காரமான திமிர் - வைகோ கண்டனம்

ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி யைத் தொடரும் இந்திய அரசின் அகங்காரமான திமிர்-வைகோ கண்டனம்

இலட்சக்கணக்ககான ஈழத் தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினருக்கு மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே, அதிலும் தமிழ்நாட்டிலேயே பயிற்சி கொடுத்த இந்திய அரசு, கடந்த மே 27 ஆம் தேதி முதல் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரி யில் இலங்கை இராணுவத்தின் விங் கமாண்டர் தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிச்சந்திராவுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறது.

மீனவர் ஒற்றுமை ஓங்கட்டும், உரிமைகளை வெல்லட்டும்!

என்னுடைய அருமைச் சகோதரர்களே,

ஒருமுறை கன்னியாகுமரியில் சொன்னேன்:பாகிஸ்தான் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்ற 19 மீனவர்களை மீட்டுக்கொண்டு வராவிட்டால், இந்த 
மாவட்டத்துக்கு உள்ளே கால் எடுத்து வைக்க மாட்டேன் என்று. அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். அதுபோல, உங்களைப் பாதுகாப்பதற்கு, உங்களுக்குத் தோள் கொடுப்பதற்கு 
என்றைக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
-வைகோ 

தமிழ்நாடு மீனவர் பேரவையின் வெள்ளி விழா 7.5.2011 அன்று சென்னை இம்பி ரீயல் ஓட்டலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் இருந்து....

அலைகடலும் ஓய்ந்து இருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?

கசக்கும் ‘சர்க்கரை’ -சங்கொலி தலையங்கம்

சர்க்கரை என்று சொன்னாலே இனிக்கும்; நாவில் இனிப்பு சுவை சுரக்கும். ஆனால், தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நடைமு றையைப் பார்த்தால், இனி சர்க்கரை, என்றாலே கசந்துவிடும்; ஏனெனில் கட்டுப்பாடற்ற விலை நிர்ணயம் செய்ய, தனியார் கரும்பு ஆலைகளுக்கு 
மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் என்பதைக் காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள்
அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலைகளை விருப்பம்போல் நிர்ணயித்துக்
கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை
உயர்ந்து கொண்டே போவதும், அதனால் விலைவாசி கட்டுக்கடங்காமல்
வானில் பறப்பதும் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன. தற்போது அதே நிலையை
சர்க்கரைக்கும் உருவாக்கிவிட்டது மத்திய அரசு.

பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்- வைகோ அறிக்கை

மக்கள் விரோத மத்திய அரசு பெட்ரோல் விலையை இந்த மாதத்தில் இரண் டாவது முறையாக லிட்டருக்கு ரூ.2.54 உயர்த்தி இருக்கின்றது. ஜூன் 1 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 பைசாவும், டீசல் விலை 50 பைசாவும் உயர்த்தப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இருப்பதால், பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக எண் ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை அதிரிக்கப்படும் போது, சர்வ தேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையையும், இந்திய ரூபாய் மதிப்புச் சரிவையும் காரணம் காட்டுவது மத்திய அரசின் வாடிக்கை ஆகிவிட்டது.

Saturday, June 15, 2013

இயக்குநர் மணிவண்ணன் மறைவு - வைகோ இரங்கல்

இயக்குநர் மணிவண்ணன் மறைவு
கலை உலக பகுத்தறிவுப் போராளி மறைந்தார்!

வைகோ இரங்கல்

காலத்தால் அழியாத காவியங்கள் பலவற்றை இயக்கியவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான மணிவண்ணன் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாகத் தாக்கிற்று. தாங்க முடியாத அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளானேன்.

எழுத்திலும் பேச்சிலும், அனைவரையும் வசீகரிக்கும் பேராற்றல் பெற்ற மணிவண்ணன், நடிகராகவும் முத்திரை பதித்தார்.

அழிவின் விளிம்பில் விவசாயம் ! அச்சுறுத்தும் ஏற்திர்காலம் !

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும்
கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை’

உழவர்கள் பயிர்த்தொழிலை விட்டு விட்டால் இந்நில உலகில் பற்றற்ற துறவி களும் வாழ முடியாது என உலகப் பொதுமறை நூலில் சொன்ன வள்ளுவப் பெருந்தகை, ‘உழவு’ எனும் அதிகாரத்தில் வேளாண்மையின் சிறப்புக்கு பத்து
குறட்பாக்களைத் தந்தார்.

வைகோவின் வாதத்திற்கு வலுசேர்க்கும் விவசாய அமைப்பு...

வறட்சி நிவாரனம் பற்றி வேளாண்துறை அமைச்சர் அளித்துள்ள விளக்கத் திற்கு மறுப்பு அறிக்கை.

கி.வே.பொன்னையன்-அமைப்பாளர்

தற்சார்பு விவசாயிகள் சங்கம்.

13/06/2013 அன்று வேளாண்துறை அமைச்சர் மாண்பு மிகு தாமோதரன் அவர்கள் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் கொடுத்துள்ள விளக்கம் பற்றி விவசாயிகள் சார்பில் நாங்கள் சில உண்மைகளை தெரிவிக்க விரும்பிகிறோம்.

Friday, June 14, 2013

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை செயற்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு அமைப்பதுதான் ஒரே தீர்வு! - வைகோ அறிக்கை

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஜூன் 12 இல் மேட்டூர் அணை யில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதை எண்ணி, காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். தென்மேற்குப் பருவ மழை எதிர்பார்த்த அளவுக்குக் கைகொடுக்கவில்லை. மேட்டூர் அணையில் குறைந்தபட்சம் 52 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தால் தான் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட முடியும். ஆனால், தற்போது வெறும் 3.53 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருக்கின்றது.

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் ஜூன் மாதத்தில் அளிக்க வேண்டிய தண்ணீரின் அளவு திட்ட வட்டமாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதன்படி 10 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயத்திற்கு மிக முக்கிய மான காலமான ஜூன், ஜூலை, ஆகÞடு மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங் களில், நீர்ப்பாசனத் தேவைக்காக தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம் 134 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நடுவர்மன்றம் சரியான உத்தரவை பிறப்பித்து இருக்கின்றது.

Thursday, June 13, 2013

வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன் கவனத்திற்கு.....

1998-99 ஆம் ஆண்டு 94.12 இலட்சம் மெ.டன் உணவு உற்பத்தி அடைந்த தமிழகம்  படிபடியாக குறைந்து உள்ளது , நீங்கள் அமைச்சரான பின் 83.51 இலட்சம் மெ.டன் இருகிறதே ?...

வைகோவின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளீர்கள் அதற்கு பதில் அளிக்கும் விதமாகவும் உங்களின் அறியாமையை சுட்டி காட்டவும் புள்ளி விவரங்களோடு இந்த பதிவை தருகிறேன் ...

வைகோ தனது அறிக்கையில், 'விவசாயிகள் தங்களின் ஒரே வாழ்வா தார மாகத் திகழ்ந்த நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலையில் விவ சாயத்தை விட்டு விட்டு, மாற்று வழி தேடிச் செல்லத் தொடங்கியதன் விளைவாகத்தான் தமிழகத்தில் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் விதத்தில் குறைந்துவிட்டதாகவும், கிராமங்களில் மக்கள் தொகை மிகவும் குறைந்து விட்டதாகவும், அதனால் நகர்ப்புறத்தில் மக்கள்தொகை பெருகி விட்டது எனவும் இதனால் விவசாயம் இன்னும் குறைந்து பெரும் உணவு பஞ்சம் ஏற்படும், கோடிக்கணக்கான விவசாயி கள் வாழ்வு பாலைவனமாகி விடும்' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அன்றைக்கே நாங்கள் சொன்னோம்; இன்றைக்கு ஐ.நா. அறிக்கை சொல்கிறது!

தமிழகம் பொங்கி எழ வேண்டும்.நாடெங்கும் பிரச்சாரம் நடக்க வேண்டும் . இளைஞர் கூட்டம் ஆர்த்து எழ வேண்டும்.கட்சிக்கு வாருங்கள் என்று நான் அழைக்கவில்லை. உங்களுக்கு எந்தக் கட்சி பிடிக்கிறதோ, அங்கேயே இருங்கள். அல்லது, கட்சிகளே வேண்டாம் என்று கூட இருந்து கொள்ளுங்கள்.
ஆனால், தமிழகத்து இளைஞர்களின் மான உணர்ச்சி செத்துப் போய்விட வில் லை என்பதை மெய்ப்பித்துக் காட்டுங்கள்.-வைகோ 

ராஜபக்சே கூட்டத்தைக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பீர்!
தூக்குக் கயிற்றில் தொங்க விடுவீர்!

சென்னை கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ

ஈழத்தமிழரைப் படுகொலை செய்த சிங்கள அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.சபையை வலியுறுத்தி, 25.4.2011 அன்று சென் னையில், சைதை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப் பாட்டத்தில், பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

Wednesday, June 12, 2013

மூடப்பட்ட பள்ளிகளில் பயின்ற குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்-மதிமுக இளைஞரணி கோரிக்கை

மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடித விவரம்:

கோவையில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட பள்ளிகளை மூட மாவட்டக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை ஏப்ரல் மாதத்தில் எடுத்திருந்தால் அனைத்து மாணவர்களும் வேறு பள்ளிகளில் சேர்ந்திருப்பார்கள்.

ஆனால் பள்ளி திறக்கும் நாளில் சீருடையோடு மகிழ்ச்சியோடு சென்ற குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது பிஞ்சு உள்ளங்களின் மனதில் ஏற்பட்ட மன உளைச்சலைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. மூடப்பட்ட பள்ளிகள் ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தான்; வேறு பள்ளிகளில் சேர்க்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 8

நாள் :- 02.08.2006

சிங்கள இராணுவக் கப்பலுக்கு இந்தியப் பாதுகாப்பா? 

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழர்கள் மனதில் பெருமை கவலைஅளிக்கின்ற பிரச்சினையைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

இலங்கைத் தீவில் போர் மேகங்கள் குவிந்து உள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத் தைத் திட்டமிட்டே மீறி உள்ள இலங்கையின் இனவாத சிங்கள அரசு, தமிழர் கள் மீது தனது இனக்கொலைத் தாக்குதலைத் தீவிரப்படுத்த முப்படை களை யும் ஏவி உள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட அப்பாவித் தமிழர்கள் குண்டு வீச்சால் கொல்லப்படுகின்றனர்.

இளைஞர்களே வாருங்கள்; இனம் காக்கச் சூளுரைப்போம்!

இந்தக் கடற்கரையில் இருந்து, தாய்த்தமிழகத்து இளைஞர்களை அழைக்கின் றேன். ஓட்டுக்காக அல்ல, சுயநலத்துக்காக அல்ல. நமது சொந்தச் சகோதரர் களின் வாழ்வு சுகவாழ்வாக அமைவதற்காக, தமிழனின் மானம் காப்பதற்காக,தரணியில் தமிழன் தலைநிமிர்ந்து நிற்பதற்காக, தாய்த் தமிழகத்து இளைஞர் களை அழைக்கிறேன். தமிழ் ஈழம் மலர்வதற்கு, நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வோம்.
-வைகோ (31.3.2011)

மாவீரன் பிரபாகரனின் அன்னை பார்வதிஅம்மையாரின் ஈமச்சாம்பலை கன்னி யாகுமரியில், கடலில் தூவி நீர்க்கடன் ஆற்றும் நிகழ்ச்சி, 31.3.2011 அன்று நடை பெற்றது.கழகப் பொதுச் செயலாளர் வைகோ,பழ.நெடுமாறன் மற்றும் தலை மைக் கழக நிர்வாகிகளும், முன்னணியினரும், தோழர்களும், தமிழ் உணர் வாளர் களும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து.

Tuesday, June 11, 2013

தமிழ் ஈழம் மலரக் கடமை ஆற்றுவோம்! பகுதி 2

அன்புச் சகோதரர்களே,

பல்வேறு துறைகளில் நீங்கள் இருக்கலாம். உங்களுக்கு அரசியல் எண்ணங் கள் இருக்கலாம். பல்வேறு சிந்தனைகள் இருக்கலாம். அது அவரவர் விருப் பம். ஆனால், நம்முடைய இலக்கு, நம்முடைய வாழ்நாளில், தமிழ் ஈழத்தைக் கட்டமைப்பதற்கு நாம் தோள் கொடுப்போம், துணை நிற்போம்.-வைகோ 



முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே.

தமிழகத்தைத் தாக்கும் பேராபத்து...

தண்ணீர்..... தண்ணீர்..... தண்ணீர்!

தமிழகத்தைத் தாக்கும் பேராபத்து...

வைகோதான் காப்பாற்ற வேண்டும்!

“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவர் வாக்கு.

மாந்தர் இனம் உயிர்வாழ ஆதாரமாக இருப்பது தண்ணீர்.மனிதர்கள் மட்டுமல் ல, மண்ணில் தோன்றிய எல்லா உயிர் இனங்களும் செடி கொடிகளும், வன விலங்குகளும், பறவைகளும் உயிர் வாழ்வதற்குத் தண்ணீர் அவசியமாகும்.

TO ensure proper protection and safety for Indian Citizens in Kuwait-VAIKO'S LETTER TO PM

Dear Dr. Manmohan Singhji,

Vanakkam. I would draw your kind attention to the sufferings and hardships of Indian expatriates in Kuwait. Kuwait is home to 2.6 million expatriates, who form 68% of the country's 3.8 million Kuwaiti population. The Kuwait Government has planned to deport around 100,000 expatriates every year for the next decade to reduce the number of foreigners living in Kuwait by 1 million. At present, more than 6,70,000 Indians live in Kuwait, forming the largest expat community in that country. The Indians with the sweat of their brow have been contributing for the economic prosperity and welfare of that country.

குவைத் வாழ் இந்தியர்கள் அல்லல் போக்க நடவடிக்கை எடுப்பீர்! பிரதமருக்கு வைகோ கடிதம்

பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று (11.06.2013) அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வரு மாறு குறிப்பிட்டு உள்ளார்:

“குவைத் நாட்டு அரசின் அண்மைக் கால நடவடிக்கையால், குறிப்பாக காவல் துறையின் கெடுபிடிக் கைதுகளால், சட்டப்படி அனுமதியோடும், முறையான விசா ஆவணங்களோடும் அங்கே வசித்து வருகின்ற இந்தியர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

குவைத் நாட்டின் மக்கள் தொகை மொத்தம் 38 இலட்சம் ஆகும்.இதில்,68 விழுக் காடான 26 இலட்சம் பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் 6 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவர்.

Monday, June 10, 2013

தமிழ் ஈழம் மலரக் கடமை ஆற்றுவோம்! பகுதி 1

எங்கள் மூதாதை கரிகாலனும், இராஜராஜனும், பராந்தகச்சோழனும், குலோத்துங்கனும், வருணகுலத்தானும் இங்கிருந்து படை எடுத்துச் சென்றதைப் போல, எதிர்காலத்தில் வீர வாலிபர்கள் கடல் கடந்து 
வருவார்கள். இந்தக் கடல் தடுக்க முடியாது. இது வெறும் பேச்சு அல்ல. இரத்தத் தில் இருந்து ஆவே சத்தோடு பீறிட்டு வருகின்ற வார்த்தைகள்.
வைகோ (21.02.2011 )

அன்னை பார்வதி அம்மையார் புகழ் அஞ்சலிக் கூட்டத்தில் வைகோ மாவீரன் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் அவர்களின் புகழ் அஞ்சலிக் கூட் டம், 21.02.2011 அன்று, சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

அன்புச் சகோதரர்களே, தமிழ் ஈழ விடுதலை இனஉணர்வாளர்களே, ஊடகவிய லாளர்களே, செய்தியாளர்களே, சகோதரிகளே, வணக்கம்.

மகாத்மா காந்தியும் மதுவிலக்கும்!

1905 களில் தென் ஆப்பிரிக்கா ‘இந்தியன் ஒப்பீனியன்’ இதழில் ‘ஆரோக்கிய வழி’ என்ற தலைப்பின் கீழ் மகாத்மா காந்தியடிகள் பல கட்டுரைகள் எழுதியுள் ளார். ஆங்கிலத்தில் எழுதிய அக்கட்டுரைகள் 1942 இல் தமிழில் மொழிபெயர்க் கப்பட்டன. அதில் மதுவிலக்கு குறித்து மகாத்மா காந்தியடிகள் கூறும் கருத்து கள் இதோ:

எதையும் செய்ய இயலாதநிலை

“மது வகையில், அந்நிய நாடுகளில் இருந்து ஏராளமாக இறக்குமதி செய்யப் படும் பானங்களுடன் நாட்டுச்சாராயமும் கள்ளும் அடங்கும். இவை அனைத் துக்கும் கண்டிப்பான தடை விதிக்கப்பட வேண்டும். மது அருந்திய ஒருவன் தன்னையே மறந்துவிடுகிறான்.போதை நீடிக்கும் வரையில் உபயோகமுள்ள எதையும் செய்வதற்கு அறவே இயலாதவனாக இருக்கிறான்.

இலங்கை இராணுவத்துக்கு, தமிழ்நாட்டில் பயிற்சி! மத்திய அரசின் பச்சை துரோகம் - வைகோ கண்டனம்

சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர் இனப் படுகொலையால், இரத்தம் கசியும் தமிழர்களின் நெஞ்சில் காங்கிஸ்தலைமையிலான இந்திய அரசு மேலும் ஒரு சூட்டுக்கோலை திணித்துள்ளது. தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள
இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும்.

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள அரசு தன் இராணுவத்தை ஏவி நடத்திய கோரமான கொலைக் குற்றத்திற்கு இந்திய அரசும் உடந்தையாகச் செயல்பட்ட கூட்டுக் குற்றவாளி ஆகும்.

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி-மதிமுகவினர் எதிர்ப்பு

வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவரை திருப்பி அனுப்ப வலியுறுத்தி, நேற்று (09.06.2013 ) போராட்டம் நடத்திய 136 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிபெற் றுவரும் பல்வேறு வெளிநாட்டினரோடு,கடந்த 27-ஆம் தேதி முதல் இலங்கை ராணுவ அதிகாரிகள் பண்டார தசநாயக, ஹரிஷ்சந்திர ஹெட்டியாரச்சிக ஆகிய இருவரும் பயிற்சி பெறுகின்றனர்.

Sunday, June 9, 2013

தமிழ் இனத்தின் இளைய தலைமுறையின் உள்ளத்தில், இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைக்காதீர்கள்.

சிங்கள விமானப்படைக் கொண்டாட்டத்தில் இந்திய விமானப்படை பங்கு ஏற்பதா ?
ஈழத்தமிழர் படுகொலையை, இந்திய அரசும் கொண்டாடப் போகிறதா ?
பிரதமருக்கு வைகோ கண்டன கடிதம் 

மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம். 

இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் அல்லாது உலகெங்கும் வாழ்கின்ற
தமிழர்களின் மனதிலே ஏற்பட்டுள்ள மனவேதனையை உங்கள் கவனத்திற்குக்
கொண்டுவர விரும்புகிறேன்.

ம.தி.மு.க. இயங்குவதற்கு நிதி உதவி வழங்குங்கள்: வைகோ வேண்டுகோள்

தமிழக அரசியலில், எத்தனையோ தடைகள், இருட்டடிப்புகளை எதிர்கொண்டு, இருபது ஆண்டுகளாக,தமிழகத்தின் வாழ் வாதாரங்களைப் பாதுகாக்கப் போரா டி வரும் நாங்கள், இமயம் நிகர்த்த சாதனைகளைச் செய்து இருக்கின்றோம். திராவிட இயக்கத்தின் இலட்சியப் பரிணாமமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது மறுமலர்ச்சி தி.மு.க. தமிழ்க் குலத்தை எங்கெல்லாம் துன்பம் தாக்குகின்றதோ, அதைத் தடுக்க, முனைமுகத்து முதற்சிப்பாயாகக் களத்தில் நிற்கின்றோம். முல்லைப்பெரியாறு அணை காக்க காவிரி, தென்பெண்ணை, பாலாறு உரிமை காக்க, கூடங்குளம் அணு உலையை அகற்ற நொறுங்கிக் கிடக்கும் விவசாயி களின் துயர் துடைக்க, சுற்றுச் சூழலை பாதுகாக்க, தமிழகத்தை நாசமாக்கி வரு கின்ற, மக்களின் வாழ்வைச் சீரழித்து வருகின்ற மது எனும் நச்சுச் சுழலில் இருந்து நம் தாயகத்தை மீட்க அறப்போர் நடத்தி வருகின்றோம்.

கருணாநிதியின் நெஞ்சுக்கு அநீதி!

கலைஞர் கருணாநிதிக்கு 90 வயது; நாமும் வாழ்த்துகளைக்கூறுவோம். அவரு டைய பிறந்தநாளையொட்டி தி.மு.க.சார்பில் 90 நாட்கள் விழாக்களாம்; அறிவா லய நிலைய வித்வான்களின் கச்சேரி; தமிழ் கொண்டு ஆராதிக்கிறோம் என்று கருணாநிதி அடிப்பொடிகள் ஏற்பாடு செய்துள்ள கவிஞர்களின் ‘கவிமாலை’ என்று கருணாநிதி பிறந்தநாள் விழாக்களை வழக்கம் போல அமர்க்களப் படுத் துகின்றனர்.

ஜூன் மூன்றாம் தேதி தன்னுடைய பிறந்தநாள் செய்தி என்ன என்று செய்தியா ளர்கள் கேட்டதாகவும், மாலையில் ஒய்.எம்.சி.ஏ திடல் கூட்டத்திற்கு வந்து கேளுங்கள் பதில் கூறுகிறேன் என்று கருணாநிதி கூறினாராம்.அவரே தனது பேச்சில் இதைச் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

Saturday, June 8, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 7

பிரதமருடன் வைகோ சந்திப்பு!

இன்று (19.7.2006) காலை 10.30 மணி அளவில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தில்லி பிர தமர் அலுவலகத்தில் சந்தித்தார். 25 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது. இலங் கைத் தமிழர் பிரச்சனை குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார். பிரதமரிடம் அவர் அளித்த கோரிக்கை, இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது:-

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக, இலங்கை அரசால் ஏவி விடப்பட்டு உள்ள, ஆயுதப் படையின் திட்டமிட்ட இனப்படுகொலைத் தாக்கு தல்களால், இலங்கை வாழ் தமிழர்கள் சொல்லொணத் துயரத்துக்கும், துன்பத் துக்கும் ஆளாகி உள்ளனர். இதுகுறித்த நிகழ்வுகளைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

கல்வி உரிமைச் சட்டம் என்ன ஆயிற்று? -சங்கொலி

தலையங்கம்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act - 2009) என்று அழைக்கப் படுகின்ற “குழந்தைகளுக்கான கட்டணமில்லாத, கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டம் (Right of children to Free and compulsory Education Act) 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப்பெற்று சட்டமாக்கப்பட்டது.2010 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்துள்ள “கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கின்றன. அனைவருக்குமான கல்வி வழங்கு வதை இச்சட்டம் உறுதி செய்யவில்லை. கோத்தாரி ஆணையம் முன் வைத்த
அனைவருக்கும் பொதுவான பொதுக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த
வழிவகை செய்யவில்லை என்று கல்வி உரிமைச் சட்டத்தின் மீது பல விமர்ச னங்கள் எழுந்தன.

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 28

இந்து ராஷ்டிரம் ஏற்படுத்த முயன்றால்  இந்தியா துண்டாடப்படுவதைத் தடுக்கவே முடியாது!

1992, டிசம்பர் 6, இந்திய வரலாற்றில் இரத்தம் தோய்ந்த நாள். பாகிஸ்தான் பிரி வினைக்குப் பின்னர் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்கா லம் குறித்த கவலையுடன் கண்ணீர் சிந்திய நாள். எது நடந்துவிடக்கூடாது என் பதற்காக நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ கர்ஜித்தாரோ, அந்தத் துயர சம்பவம் நடந்தேறிவிட்டது;

ஆம்: மதவெறியர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள்;
வரலாற்றில் முதல் முறையாக இந்திய அரசு காவிக்கூட்டத்தின் கொட்டத் திற்கு அடிபணிந்தது. இந்திய பூபாகம் இரத்தக்கோடுகளால் கிழிக்கப்பட்டு விட் டது. மதவெறி அமைப்புகளின் கரசேவை(?)யைத் தடுத்து நிறுத்தி பாபர் மசூதி யைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசும்; பிரதமர் நரசிம்மராவும் இராணுவப் பாதுகாப்புடன் மசூதியை இடிக்கத் துணைபோன கொடுமையைக்கண்டு நாடே கொதித்துக் கொந்தளித்தது.

அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்குக! வைகோ வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவி வந்ததால், விவசாயம் முழுமையாக பொய்த்துப்போய்விட்டது. விவசாயிகள் தங்களின் ஒரே வாழ்வாதாரமாகத் திகழ்ந்த நிலங்களில் பயிர் செய்யமுடியாத நிலையில் விவசாயத்தை விட்டுவிட்டு, மாற்றுவழி தேடிச் செல்லத் தொடங்கி யதன் விளைவாகத்தான் தமிழகத்தில் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் விதத்தில் குறைந்துவிட்டதையும், கிராமங்களில் மக்கள் தொகை யும் மிகவும் குறைந்துவிட்டதையும், அதனால் நகர்புறத்தில் மக்கள் தொகை பெருகி விட்டதையும் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தைக் குறித்த கடுமையான அபாய அறிவிப்பு ஆகும்.

விவசாயம் இன்னும் குறைந்து பெரும் உணவு பஞ்சம் ஏற்படும். கோடிக்கணக் கான விவசாயிகள் வாழ்வு பாலைவனமாகிவிடும்.

Thursday, June 6, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 6

கடலில் மூழ்கி மடியும் அகதிகளின் அவலம்! 

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,                                  26.05.2006

வணக்கம்.

இந்தியர்கள்அனைவருக்கும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய,இலங்கை அகதி களைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை, தங்கள் மேலான கவனத்திற் குக் கொண்டுவர விரும்புகிறேன்.

“இலங்கைத் தீவில் இருந்து தமிழ் அகதிகள் கூட்டம், கூட்டமாய்த் தமிழகக் கட லோரப் பகுதியை நோக்கி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கொந்தளிக் கின் ற கடலில் வருவது மிகுந்த வேதனை தரக்கூடிய காட்சியாக உள்ளது. இலங் கை இராணுவம் தமிழர் வாழும் பகுதிகளில் எப்படிப்பட்ட கொடூரமான தாக்கு தல் நடத்துகிறது என்பதை, அங்கிருந்து அகதிகளாக வரும் தாய்மார்கள் கண் ணீரும்,கம்பலையுமாக விவரிப்பது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.இத்தகை ய கொலைவெறித் தாக்குதலில் அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும் பெரு மளவில் இறந்தனர் என்ற செய்தி,பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் உயிர் என்ன கிள்ளுக் கீரையா ?

தமிழகத்து இளைஞன்,கரிகாலன் வழி வந்தவன்,இராஜராஜன் வழி வந்த வன், பராந் தகன் வழி வந்தவன், இராஜேந்திரன் வழி வந்தவன், வருண குலத்தான் வழி வந்தவன், உன் நாட்டின் மீது படையெடுத்து வென்ற இனத்துக்காரன், உன்னைத் தேடி வந்து உதைக்கிற காலம் வரும்.-வைகோ (6.2.2011 )

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து,நாகப்பட்டினத்தில் கழ கத்தின் சார்பில் 6.2.2011 அன்று நடைபெற்ற உண்ணாநிலை அறப்போரில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

உப்புக்கடல் சூழ்ந்த இந்த உருண்டை உலகத்தில்,ஒரு தீபகற்பமாகக் கருதப்படு கின்ற இந்தியத் துணைக்கண்டத்தில், 1076 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கடற் கரையைக் கொண்டு இருக்கின்ற தாய்த்தமிழகத்தில், இந்த அலைபாயும் கட லோ ரத்தில்தான் காவிரிப்பூம்பட்டினம் இருந்தது. கொற்கைத் துறைமுகம் இருந்தது. நாகையிலும் துறைமுகம் இருந்தது.

இரண்டு ஜப்பானியர்கள் சண்டை போடுவதைப் பார்க்க முடியாது!

தலைவர் வைகோ அவர்களின் ஆசியோடு, ஜப்பான் நாட்டில் 16 நாள்களும், ஹாங்காங், மகாவ்,சீனாவில் ஒரு வார காலமும் சுற்றுப்பயணம் மேற்கொண் டேன். ஜப்பான் நாடு, இந்த உலகில் உள்ள வேறொரு உலகம் என்பதை நேரில் கண்டேன்.ஜப்பான் பயண அனுபவங்களை,சங்கொலி வாசகர்களோடுபகிர்ந்து கொள்ளுமாறு தலைவர் வைகோ அவர்கள் கூறினார்கள்.தம்பி ஜெயசீலனோ டு நிகழ்த்திய உரையாடலை ஏற்கனவே பதிவு செய்து உள்ளேன். இந்த இதழில், பரமக்குடி குன்றாளன் அவர்களுடைய கருத்துகள் இடம் பெறுகின்றன. உரை யாடல்கள் தவிர, ஜப்பானில் நான் கண்டதும் கேட்டதும், அவ்வப்போது சங் கொலியில் இடம் பெறும்.

Wednesday, June 5, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 5

யாழ் பல்கலை மாணவர்கள்,பேராசிரியர்கள் மீது தாக்குதல்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

17.12.2005 அன்று யாழ்ப்பாணத்தில், தர்ஷணி என்ற இளம்பெண் இலங்கைக்
கடற்படையினரால் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு
உள்ளார். கல்லோடு கட்டப்பட்டு, நீரில் மூழ்கிய நிலையில் அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இப்படுகொலையால், தமிழர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழர் நலன் புறக்கணிப்பு , தமிழகம் கொந்தளிப்பு -காலம் காட்டும் எச்சரிக்கையைக் கவனிக்கத் தவறி விடாதீர்கள் ! பிரதமரிடம் வைகோ நேரில் வலியுறுத்தல்

தமிழக இளைஞர்கள் உள்ளத்தில், நாம் இந்தியாவின் குடிமக்கள் தானா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்தியக் கடற்படை,நமது கடற்படையா? என்ற எண்ணமும் எழுகிறது -பிரதமரிடம் வைகோ (22.1.2011 )

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்தியப் பிர தமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை, 22.1.2011 காலை பத்து மணி அள வில், தில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் சந்தித்தார்.

பத்து மணிக்கு சந்திப்பதற்கு நேரம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், 9.55 மணிக்கே அங்கு வந்த பிரதமர், வருகின்ற வழியில் வாயிலில் நின்று,வைகோ வைக் கட்டி அணைத்து வரவேற்றார்.

‘நீங்கள் சொன்ன தமிழ்ப்பெண் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டு விட் டார்’ என்று கூறினார்.

வைகோ எம்.பி. ஆனால் மட்டுமே கச்சத் தீவு முதல் காவிரி, முல்லைப் பெரியாறு வரை தீர்வு காண முடியும்!

இந்தியப் பிரதமர் நேரு மட்டுமல்ல,அவர் மகள் இந்திராகாந்தி வரை தமிழினத் திற்குத் துரோகம் இழைப்பதில் குறியாகவே இருந்தனர். இலங்கையின் சார் பில், எந்த நிர்ப்பந்தமும் இல்லாமலேயே அநீதியாக நமது கச்சத்தீவை எடுத்து தங்கத் தட்டில் வைத்து சிறிமாவோ பண்டார நாயகாவுக்குத்தாரை வார்த்துக் கொடுத்தவர் பிரதமர் இந்திரா காந்தி.

Agreement between India and Srilanka on the boundary in historic waters between the two countries and related matters (26 June 1974)

இந்த ஒப்பந்தத்தின் 5 ஆவது விதியின்படி இந்திய மீனவர்கள் (தமிழக மீனவர் கள்) கச்சத் தீவுக்கு எப்போதும் போல் வந்துபோகவும், கச்சத் தீவை அனுபவிப் பதற்கும் முழுஉரிமை உடையவர்களாவர். அதற்காக சிங்கள  அரசிடமிருந்து நுழைவு அனுமதி எதுவும் பெறவேண்டியதில்லை (will not be required)

Tuesday, June 4, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 4

இலங்கை-இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம்:வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் கருத்து குறித்து

பிரதமருக்கு வைகோ கடிதம் நாள் :-11.6.2005

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த ஜூன் நான்காம் நாள் தங்களை நேரில் சந்தித்து, இலங்கைத் தீவில் தற் போது உள்ள நிலைமையை விளக்கி, விரிவான கடிதத்தையும் தந்தபோது, உங் கள் பொன்னான நேரத்தை ஒதுக்கியதோடு, என்னுடைய கருத்துகளை மிகுந்த கனிவோடு பரிசீலித்துப் பதில் அளித்தீர்கள்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை உறுதி செய்த தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்திடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வைகோ ஆணித்தரமான வாதம்!

விடுதலைப்புலிகளைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ்
மத்திய அரசு தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து 2010 மே மாதத்தில் அறிவித்த ஆணையை உறுதி செய்வதற்கு அமைக்கப்பட்ட தீர்ப் பாயத்தின் தலைவர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு விக்ரம்ஜித் சென் அவர்கள் முன்னிலையில், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி விசாரணை நடந்தபோது, கழகப் பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி, தடையை
இரத்து செய்திட வேண்டுமென வாதிட்டதோடு, தன்னையும் அந்த விசாரணை யில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென மனுத் தாக்கல் செய்தார்.

நீதிபதி விக்ரம்ஜித் சென் 25.09.2010-இல் வெளியிட்ட ஆணையில், வைகோவின் கோரிக்கை மனுவை ஏற்க முடியாது என தள்ளுபடி செய்தார்.எனினும், அரசுத் தரப்புக்கு எதிரான கருத்துகளைத் தீர்ப்பாயத்தின் முன் எடுத்து வைக்க தகுதி
உடையவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மறுப்பதற்கு இல்லை என் றும் அந்த ஆணையில் குறிப்பிட்டார்.

காயிதே மில்லத் - ஜீவா குரல்களில் மதுவிலக்கு!

உமையம்மை - பட்டம்பிள்ளை தம்பதியரின் மகனாக பூதப்பாண்டியில் 21.8.1906 இல் பிறந்த சொரிமுத்து 1922 இல் 17 ஆவது வயதில் ஒத்துழையாமை இயக்கத் தில் பங்கேற்று அரசியல் வாழ்வைத்தொடங்கினார்.

1929 செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்டார். 1930 இல் ஈரோட்டிலும், 1931 இல் விருதுநகரிலும், இரண்டாவது,
மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்றார்.

1931 இல் காரைக்குடி - கோட்டையூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.இக்காலங்களில் மதுவிலக்குப் போராட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். (பகுதி உ.பக்கம் 1709,ப.ஜீவானந்தம்)

Monday, June 3, 2013

வைகோவின் "குற்றம் சாட்டுகிறேன் " -பகுதி 3

இலங்கைத் தமிழர் பிரச்சினை: வைகோவிடம் பிரதமர் உறுதி
நாள் :- 04.06.2005

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தீவில் நடைபெற்றுவரும் கவலைக்குரிய நிகழ்வுகளைத் தங்கள்
பார்வைக்குக் கொண்டு வருகின்றேன். இப்பிரச்சினையில், தாங்கள் அக்கறை யுடன் தலையிட வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

இலங்கைத்தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில், அந்த மண்ணின் பூர்வீ கக் குடிகளான தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு, அந்தத் தீவை ஆண்டுவரும் சிங்கள அரசு, கடந்த 50 ஆண்டுகளாக,வாழ்வியல் உரிமை களை மறுத்து வருகிறது. இதனால், தமிழர்கள் விவரிக்க முடியாத துயரங்க ளுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள்.

காவிரி மேற்பார்வைக் குழுவை ஏற்க முடியாது!-சங்கொலி தலையங்கம்

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், மத்திய
காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்ததன் காரணமாக
உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் இடைக்கால ஏற்பாடாக ‘மேற்பார்வைக் குழு’ ஒன்று மே 24 ஆம் தேதி மத்திய அரசால் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ‘மேற்பார்வைக் குழு’ அமைக்கப்பட்டதால் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் செயற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. 

காவிரி நடு வர்மன்றத்தின் இறுதி தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியா னது. ஆறு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி இறுதி தீர்ப்பு அரசிதழில் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் வழங்கி ய இறுதி தீர்ப்பில், மிக தெளிவாக, எவ்வாறு நடுவர்மன்ற உத்த ரவை நடை முறைப் படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இதன் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும். பக்ரா-பியாஸ் மேலாண்மை ஆணையத்தை முன் மாதிரியாகக் கொண்டு, மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத் தை அமைக்க வேண் டும் என்று வரையறுத்து நடுவர்மன்றம் ஆணையிட்டது.

தமிழ் ஈழம் கானல் நீரல்ல... இரத்தத்தால் தியாகத்தால் எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டை! பகுதி 3

இன்றைக்குச் சொல்கிறேன். பதவிகளுக்காக அல்ல.எந்தத் தமிழ் ஈழத்துக்காக நீங்கள், உன் தம்பிமார்கள்,உன் சகோதரிகள் ரத்தம் சிந்திப் போராடினார்களோ அந்தத் தமிழ் ஈழத்தைத் தட்டியெழுப்ப இந்தத் தாயகத்திலே தமிழர் தாயகத்தி லே எங்கள் தமிழ்நாட்டிலுள்ள வாலிபர்களை - இளைஞர்களைத் தயார்படுத்து வது என்னுடைய வேலை. அதற்குச் சூளுரைக்கிறேன்.-வைகோ (27.11.10)

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

கண்டிப்பாகப் போடக் கூடாது. இது பேராபத்தில் போய் முடியும் என்று நான்
சொன்னேன். ஐந்து கேபினட் மந்திரிகளைத் தனித்தனியே கூப்பிட்டு மன்மோ கன் சிங் கேட்டார். எனக்குத் தெரிய அந்த ஐந்து பேருமே ஒப்பந்தம் கூடாது என் றுதான் சொன்னார்கள்,”என்றார். அப்படியானால், மன்மோகன் சிங் அவர்களே! இந்த ஒப்பந்தத்தைப் போடாமலேயே இவ்வளவு ஆயுதங்களைக் கொடுக்க லாம் என்கின்ற ஏற்பாட்டைச் செய்ய உங்களைத் தூண்டியது யார்? இராஜபக் சே வுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஆயுதம் கொடுக்கச் சொல்லி- ராடார் கொடுக்கச் சொல்லி -உங்களைத் தூண்டியது யார்? இந்தக் கேள்விகள் எல்லாம் இன்றைக்கு விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விட்டன.

Sunday, June 2, 2013

மாணவர்களின் பிரதிநிதிகளையும் பல்கலைக் கழக நிர்வாகத்துக்குள் உறுப்பினராகக் கொண்டு வர வேண்டும்.-மதிமுக மாநில இளைஞரணிச் செயலர்

பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் துணைவேந்தர்கள் செயல் படக் கூடாது என்று மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் முதல் 200 இடத்துக்குள் இந்தியாவின் எந்த ஒரு பல்கலைக் கழகமும் இல்லை என்பது வருத்தமளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் நடக் கும் ஊழல்,நிர்வாகச் சீர்கேடுகளைக் களையாமல் அவர் கனவு காண்பது வீண்.

வைகோவின் "குற்றம் சாட்டுகிறேன் " -பகுதி 2

இந்தியா -இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கையைக் கைவிடுக!
பிரதமரிடம் வைகோ கோரிக்கை 
நாள் :- 10.11.2004

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்க முடியாத மன உளைச்சலோடும், வேதனையோடும் இந்தக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதி இருக்கிறேன்.

இந்தியாவும், இலங்கையும் இராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதாகவும், அதற்காக ஒரு உடன்படிக்கை கையெழுத்து ஆக இருப்பதாக வும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இதனால் இலங்கைத் தீவில் வாழ் கின்ற தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய பேராபத்து களையும், அழிவையும் தங் களின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக, மிகுந்த கவலையுடன் இக்கடி தத்தைத் தங்களுக்கு எழுதி இருக்கிறேன்.

என்னுடைய ஒவ்வொரு தோழனும் கோடிப் பொன்னுக்குச் சமம்;-வைகோ

விருதுநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 18.05.2013 அன்று விருதுநகர்- அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அனுமன் திருமண மண்டபத் தில் நடைபெற்றது.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி நன்கொடைச் சீட்டுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் இருந்து....

அடுத்த ஆண்டு, இதே மே 18 ஆம் நாள், நம் இயக்கத்தின் எதிர்காலம், ஒளிமய மானது என்று தீர்மானிக்கப்போகின்ற விருதுநகரில், அனுமன் மண்டபத்தில், உங்களை இந்தக்கோடையில் நான் சந்திக்கின்றேன்.இரவும் பகலும் சுழன்று வருவது போல, இன்பமும், துன்பமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து
நம் வாழ்வை முற்றுகை இடுவது போல, வெற்றிகளும், தோல்விகளும்,
இரண்டறக் கலந்ததுதான் ஒரு இயக்கத்தின் பயணம்.

தமிழ் ஈழம் கானல் நீரல்ல... இரத்தத்தால் தியாகத்தால் எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டை! பகுதி 2

மத்திய அரசுக்குச் சொல்கிறேன்: நீ ஊழல் மட்டும் செய்யவில்லை. ஏ.... மத்திய அரசே! மன்மோகன் சிங் தலைமையிலான அரசே! கேடுகெட்ட அரசே! தமிழ் இனத்தை அழிப்பதற்கு ஆயுதம் கொடுத்த அரசே! உனக்கு மன்னிப்பே கிடையாது.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

இது அல்ல என் கேள்வி. சிங்கள இராணுவத்துக்கு தமிழர் தாயகப் பகுதியில் இனி என்ன வேலை? நூறு மீட்டருக்கு ஒரு அரண் அமைத்து இருக்கிறான். வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் தாயகப் பகுதியில், யாழ்ப்பாணத்தில், கிளி நொச்சியில், மன்னாரில், வவுனியாவில், வல்வெட்டித்துறையில், மட்டக்களப் பில் இப்படி எல்லா இடங்களிலும் நூறு மீட்டருக்கு ஒரு அரண் அமைத்து
இருக்கிறான். இராணுவ முகாம்களை வைத்து இருக்கிறான்.இதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன்.

Saturday, June 1, 2013

வைகோவின் "குற்றம் சாட்டுகிறேன் " -பகுதி 1

தமிழக மீனவர்களைக் கொன்றது சிங்களக் கடற்படைதான்!
நாள் :- 18.09.2004

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

ஐக்கிய நாடுகள் சபை,அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தாங்கள் மேற்கொள்கின்ற சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்திட, என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவலை அளிக்கக்கூடிய கீழ்க்கண்ட முக்கியமான செய்தியை, தங்களின்
மேலான கவனத்துக்கு நான் கொண்டு வருகிறேன்.

கச்சத் தீவு தமிழ்நாட்டுக்குச் சொந்தம்: கட்டுக் கட்டாக ஆதாரங்கள் !

டச்சுக்காரர்களும் போர்ச்சு கீசியர்களும் இலங்கைத் தீவை வளைத்தபோதும்
கூட, கச்சத் தீவில் அவர்கள் கால் வைக்கவில்லை.

1874 ஆம் ஆண்டு கர்னல் வாக்கர்,அவரது உதவியாளர் மேஜர் பிரான் ஃபீல்டு ஆகியோர் இந்தியாவின் அளவைத்துறைக்காக கச்சத் தீவை அளந்தார்கள். அப் போது அந்தோணியார் கோவிலுக்கு முன்புறம் இந்திய அரசின் சர்வே துறை யினர் நட்ட தூண் இன்றும் உள்ளளது.

1895,1930 ஆம் ஆண்டுகளில் கச்சத்தீவு,மீண்டும் அளவை செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் 1952, 1956 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வரை படங்கள் அனைத்திலும் கச்சத் தீவை இராமேசுவரத்தின் ஒரு பகுதியாகவே சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.

தமிழ் ஈழம் கானல் நீரல்ல... இரத்தத்தால் தியாகத்தால் எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டை! பகுதி 1

சென்னை தியாகராயர் நகரில் 27.11.2010 அன்று, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற் றது. பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய எழுச்சி உரை வருமாறு:-

விடுதலைப் போர்க் களத்தில் செங்குருதி சிந்தி தங்கள் நல்லுயிரை மாய்த்துக் கொண்ட மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தவும், சூளுரை மேற்கொள்ள வும் தரணியெல்லாம் வாழும் தமிழர்கள் கடமை மேற்கொண்டு இருக்கின்ற இந்த மாவீரர் நாளில் தலைநகர் சென்னையில் முத்துரங்கன் சாலையில் நடை பெறுகின்ற இந்தப்பிரமாண்டமான கூட்டத்துக்குத்தலைமை தாங்கு கின்ற என்னுடைய ஆருயிர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களே!

கச்சத்தீவு அருகே இலங்கைப் போர்க்கப்பல்; சீன வீரர்கள்! பிரதமருக்கு வைகோ கடிதம்!

பிரதமருக்கு வைகோ கடிதம்!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று (1.6.2013), பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு எழுதி உள்ள கடிதம்: 

அன்புள்ள பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம். கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் இருப்பதையும், இக்கடிதத்தின் வாயிலாகத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.