1996 ஆம் ஆண்டு
1996 பிப்ரவரி 24 இல் தூத்துக்குடி வ.உ.சி. திடலில், ஸ்டெர்லைட்டை எதிர்த்து, மதிமுக நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பல தரப்பட்ட மக்கள் பங்கேற்ப்பு , ‘ஆலையை அகற்றும்வரை போராடுவோம்’ என்று வைகோ அறிவித்தார்.
1996 பிப்ரவரி 24 இல் தூத்துக்குடி வ.உ.சி. திடலில், ஸ்டெர்லைட்டை எதிர்த்து, மதிமுக நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பல தரப்பட்ட மக்கள் பங்கேற்ப்பு , ‘ஆலையை அகற்றும்வரை போராடுவோம்’ என்று வைகோ அறிவித்தார்.
1996 மார்ச் 5 ஆம் நாள், வைகோ தலைமையில், தூத்துக்குடியில், பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.
1996 மார்ச் 12 ஆம் நாள், தூத்துக்குடியில் கடை அடைப்பும், கருப்புக்கொடிப் போராட்டமும் நடைபெற்றபோது, மறுமலர்ச்சி தி.மு.கழகம், முக்கியப்
பங்கு ஏற்றது.
இந்த ஆலையை எதிர்க்கும் போராட்டத்துக்கு, அனைத்து மீனவர் அமைப்புகளும், தூத்துக்குடி வணிகர் சங்கங்களும், முழுமையாக ஆதரவு தந்து, மதிமுக நடத்திய போராட்டங்களுக்கு ஒத்துழைப்பும், வாழ்த்தும் தந்தனர்.
1996 ஏப்ரல் 1 ஆம் நாள், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில், வைகோ தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான பேரணி, நகரையே
உலுக்கியது.
1996 டிசம்பர் 9 ஆம் நாள், தூத்துக்குடி குரூஸ் பர்ணாந்து சிலைக்கு அருகில், வைகோ தலைமையில் நடைபெற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தில், பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு ஏற்றனர்.
1997ஆம் ஆண்டு
1997 பிப்ரவரி 4 ஆம் நாள், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, வைகோ தலைமையில் மறியல் போராட்டம், தூத்துக்குடி மாவட்டத் துணை ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திலும், பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு ஏற்றுக் கைது ஆனார்கள்.
1997 ஏப்ரலில் கருணாநிதி வைகோ நாடகம் ஆடுகிறார் , வேடம் போடுகிறார் என சேற்றை வாரினார்.
1997 ஜூன் 2 ஆம் நாள், காலை பத்து மணிக்கு, திருவைகுண்டத்தில் இருந்து, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்கு மக்கள் சக்தியைத் திரட்ட, அது குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்த, கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்திக்க வைகோ மேற்கொண்ட நடைப்பயணத்தில், பல்லாயிரக் கணக்கான தோழர்களும், விவசாயிகளும் பங்கு ஏற்றனர்.
1997ஜூன் 3,4 ஆகிய தேதிகளிலும் நடைப்பயணத்தை தொடர்ந்து மேற் கொண்டு, 4 ஆம் தேதி துhத்துக்குடியில் நடைப்பயணத்தை நிறைவு செய்தார் வைகோ.
அன்றே 1997 ஆகஸ்ட் 30 தேதி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை முற்றுகை இடும் போராட்டத்தை, வைகோ அறிவித்தார்.
1997ஜூன் முதல் 1997 ஆகஸ்ட் வரை இதற்காக மக்களை திரட்டும் பணியில் மீனவர்கள், விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கு பெறச் செய்வதற் காக, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோர கிராமங்களிலும் மற்றும் அந்த மாவட்டங்களிலும், நெல்லை மாவட்டத்திலும் உள்ள நகரங்கள்,
கிராமங்கள் அனைத்துப் பகுதிகளிலும் இடைவிடாத பிரச்சாரத்தை மேற்கொண்டார் வைகோ.
1997 ஆகஸ்ட் 30 ஆம் நாள், ஸ்டெர்லைட் முற்றுகைப் போராட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி நகரமே அத்தகைய போராட்டத்தை, அப்போது கண்டது இல்லை எனும் பேரெழுச்சி காணப்பட்டது.
குறிப்பாக, மீனவ மக்களும், விவசாயிகளும், பொதுநலனில் அக்கறை உடைய பெருமக்களும் இந்த முற்றுகைப் போரில் கலந்து கொண்டனர்.
வைகோவும் , இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
‘இரத்தினகிரியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை உடைத்து நொறுக்கியதைப் போல, நாம் இங்கு வன்முறையில் ஈடுபடப்போவது இல்லை.
அது பிரச்சினையைத் திசைதிருப்பி விட்டுவிடும். ஏற்கனவே, ஸ்டெர்லைட் நிர்வாகம் என் மீது பழி போடுவதற்குப் பல வழிகளிலும் முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. எனவே, இனி அடுத்த கட்டப் போராட்டம் நீதிமன்றத்தில்தான்’ என்று வைகோ அன்று அறிவித்தார்.
அதே போல உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார் வைகோ
ஆகஸ்ட் 30 ஆம் தேதி முற்றுகைப் போராட்டத்தன்று இரவில், ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விபத்தில், இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர்.
ஸ்டெர்லைட் நிர்வாகம், ‘இது விடுதலைப்புலிகளின் சதி வேலை’ என்று பழி
சுமத்தியது.
ஆனால், அப்போது, தூத்துக்குடிகாவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஜாங்கிட் அவர்கள், ‘இது நாசவேலை அல்ல; தொழிற்சாலை இயந்திரங்களால் ஏற்பட்ட விபத்துதான்’ என்ற உண்மையை அறிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப்புகையால், அருகில்
இருந்த ரமேஷ் ஃபிளவர்ஸ் என்ற செயற்கைப் பூக்கள் நிறுவனத்தில் பணி ஆற்றிக் கொண்டு இருந்த 200 பெண்கள் மயக்கம் அடைந்து, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
வழக்கை வாபஸ் வாங்க சொல்லி நிர்பந்தம்
இதற்கு இடையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார். மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் வைகோ சந்தித்து, ஸ்டெர்லைட்டால் பாதிப்பு இருக்காது.
வழக்கை வாபஸ் வாங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஒருக்காலும் வாபஸ் வாங்க மாட்டேன் என்று வைகோ கூறிவிட்டார்.
ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநர் அகர்வால் உங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்டார்.
அவரைச் சந்திப்பதே தேவை அற்ற, பொய்யான வதந்திகளுக்கு இடம் கொடுத்து விடும். எனவே நான் சந்திக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டார் வைகோ.
அதன்பிறகு, தமிழ்நாட்டைச் சேர்ந்த, டெல்லியிலும், தமிழ்நாட்டிலும் அதிரடி அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருக்கின்ற ஒரு பிரபலமான ஆசாமியும்
வைகோ தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் வாங்குமாறு கேட்டுக் கொண்டபோதும், இதே பதிலைத்தான் வைகோ கூறினார்.
அதன்பின்னர், ஒரு நாள் தற்செயலாக சென்னை விமான நிலைய வரவேற்பு அறையில், தானாக வந்து வைகோவிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட அனில்
அகர்வால், பத்து நிமிடங்கள் தன்னைச் சந்திக்க வாய்ப்பு அளிக்குமாறு கேட்டபோதும்,
எனக்கு உங்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் கிடையாது; ஆனால், ஸ்டெர்லைட் தொழிற்சாலை தென் மாவட்டங்களுக்கு நாசம் ஏற்படுத்தும் என்பது எனது உறுதியான கருத்து. எனவே, உங்களைச்
சந்திக்க நான் விரும்பவில்லை.
நீதிமன்றத்தில் நமது போராட்டம் நடக்கிறது என்று கூறிவிட்டார் வைகோ.
ஏற்கனவே, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் ஒரு ரிட் மனு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
எனவே, வைகோவின் ரிட் மனுவை ஏற்கக் கூடாது என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் வாதாடியதை, உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இனி நீதிமன்ற நடவடிக்கைகளை பார்ப்போம் ..................
No comments:
Post a Comment