Monday, March 25, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 1


மாசுபட்ட நகரம் தூத்துக்குடி 

சுற்றுச்சூழல் சீரழிவில் 'மாசுபட்ட நகரமாக' தமிழக அளவில் தூத்துக்குடி நகரம் 4வது இடத்திலும், சென்னை மாநகரம் 18வது இடத்திலும் இருப்பதாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நடத்திய ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகரம் 4வது இடத்தில் இருப்பதற்கான காரணம் இங்கே உள்ள ஸ்டெர்லைட் தாமிரத் தொழிற்சாலையானது தூத்துக்குடியின் சுற்றுச்சூழலைச் சீரழிவில் முதலிடம் வகிக்கிறது என்றால், இத்தொழிற்சாலையின் வரவே மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கிடையில் தான் தூத்துக்குடியில் நிறுவப்பட்டது.


அமெரிக்காவில் இருந்து ஆரம்பம் 

அமெரிக்காவில் 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டன் நகருக்கு அருகில்நிறுவப்பட்ட அசார்கோ எனப்படும், ஸ்டெர்லைட் போன்ற ஒரு தாமிர ஆலை, அந்த நாட்டிலேயே நிறுவப்பட்ட, தாமிரக் கம்பிகள் உற்பத்தி செய்யும் ஒரே ஆலை யாக இருந்தபோதும், சுற்றுச்சூழல் கெடுவதால் ஏற்பட்ட பொதுமக்கள் எதிர்ப்பால், 1984 இல் இழுத்து மூடப்பட்டது.

இந்த ஆலையின் மூலம், 500 சதவீதம் கொள்ளை இலாபம் கிடைக்கிறது என்பதால்,இந்தியாவிற்கு கொண்டுவர முனைந்தார்கள் ,அமெரிக்காவிலும், சிலி நாட்டிலும், இனி உதவாது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங் களைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து, தூத்துக்குடி கடற்கரை ஓரம் ஸ்டெர்லைட் ஆலை என நிறுவினார்கள். 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில் நுட்பத்தையும் கொண்டு தொழிற்சாலையை இயக்கினார்கள்.

குஜராத், குஜராத்தி 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் அனில் அகர்வால், இந்த அமெரிக்காவின் பழைய கழிவுகளை இந்தியாவிற்குள் கொண்டு வருகிறார். தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நிறுவ முனைந்தார் , அங்கே முடியவில்லை .

பின்னர் கோவாவில் நிறுவ முனைந்தார் அங்கும் முடியவில்லை , மூன்றாம் இடமாக , மராட்டிய மாநிலத்தில் நிறுவி, கட்டடங்களை எழுப்பி, இயந்திரங் களையும் அங்கே பொருத்தி, ஆலையை இயக்கி விடலாம் என்று ,இரத்தினகிரி என்ற இடத்தில்  200 கோடி ரூபாய் செலவழித்து 1994-ம் ஆண்டு வரை இதன் கட்டுமானப் பணி நடைபெற்றது. அன்றைய மகாராஷ்டிரா முதல்வர் சரத்பவார் அனுமதியும் கொடுத்துவிட்டார்.

மராட்டிய விவசாய்கள் எதிர்ப்பு 

இரத்தினகிரி மாவட்ட விவசாயிகள், குறிப்பாக, அல்போன்சா மாம்பழங் களைத் தரும் மாமரங்களை வளர்க்கும் விவசாயிகள், ஆலையை எதிர்த்து
அமைதிவழிப் போராட்டம் நடத்தினர். 

அது பயன் அளிக்காததால், பல்லாயிரக் கணக்கான மக்கள் கம்பி,
கடப்பாரைகளுடன் திரண்டு, ஆலையை உடைத்து நொறுக்கிய கிளர்ச்சி
வெடித்தபோது, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, மராட்டிய மாநில அரசு, தான் தந்து இருந்த ஆலைக்கான அனுமதியை ரத்துச் செய்தது. 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டுமான பணிகள் தரை மட்டம் ஆக்கபட்ட்டது 

இப்படி ஒவ்வொரு இடமாக அடிவாங்கி அடிவாங்கி இறுதில் வந்து சேர்ந்த இடம் தமிழகம் .

நச்சு ஆலை என்ன பாதிப்பு ?

இந்த தாமிர உருக்கு ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை, சுற்றுப் புறச் சூழலை அடியோடு நாசமாக்கும்; நீர் , நிலம் , காற்று என அனைத்தையும் மாசுபடித்தி விடும் , முதல் பத்தில் அதற்கான விளைவு என்ன என்பதை பார்த்தோம் .

நாற்பது கல் சுற்றளவுக்குப் புகை படியும்; விளை நிலங்கள் பொட்டல் காடுகளாக மாறும்; 

கடல்வாழ் உயிரினங்கள் அழியும். காற்று மண்டலத்தில் இந்த நஞ்சு பரவுவதால், அதைச் சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் புற்று நோயும், சரும
நோய்களும் ஏற்படும்.

தூத்துக்குடியில் துஷ்டன் 

மூன்று மாநிலங்களில் விரட்ட பட்ட இந்த ஆலை நான்காம் இடமாக தூத்துக்குடி-மீளவிட்டான் பகுதிக்கு வந்தது ,30.10.1994 அன்று தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இதன் கட்டுமான பணிக்கு ஜெயலலலிதா தலைமையில் ஆன அதிமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது.

14.10.1996 கருணாநிதி அரசால் திறந்து வைக்கப்பட்டு  இத்தொழிற்சாலை இயங்கி வருகிறது . இத்தொழிற்சாலை அடிக்கல் நாட்டப்பட்ட போது பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு போரட்டத்தை இடையில் நிறுத்திவிட்டது. ஆனால் மதிமுக தொடர்ந்து இன்றுவரை போராடுகிறது.

ஆலை கட்டி முடித்த பின்தானே அனுமதி தரப்படவேண்டும் , ஆலை கட்டுமானம் தொடங்கிய உடனே அனுமதி தரப்பட்டது என்பது உண்மை.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்

1995 நவம்பரில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, இதில் அரசியல் கட்சிகளான மதிமுக , கம்யூனிஸ்ட் கள் , பொது மக்கள் , சமூக ஆர்வலர்கள் , சுற்று சூழல் நல விரும்பிகள் , வியாபாரிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பும் ஒருங்கே இணைந்தது .

இத்தொழிற்சாலைக்கான தாமிர தாதுப் பொருளை ஏற்றி வந்த எம்.வி.ரீசா, எம்.வி. பரஸ்கவி என்ற கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது. விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் படகுகளுடன் சென்று தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட்ட போரட்டத்தின் வீரியத்தை உணர்ந்த அரசு வேறு வழியின்றி கப்பல்களை வெளியேற்றியது. கப்பல்லோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த மண்ணில் கப்பலை விரட்டிய வரலாறு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொழிற்சாலையின் கழிவுநீரை கடலில் கலக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தால் மீனவர்கள் தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் மீனவர்களை அணிதிரட்டி போராடியது.

நச்சை கக்கும் நரகாசூரன்

இத்தொழிற்சாலையின் கழிவுநீரை கடலில் கலக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தால் மீனவர்கள் தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் மீனவர்களை அணிதிரட்டி போராடியது.

இதனால் கலக்கமடைந்த ஸ்டெர்லைட் நிறுவனம் தொழிற்சாலையின் கழிவுகளை கழிவுநீர் தேக்கத் தொட்டியின் மூலம் பாதுகாப்பாக சுத்திகரிப்பு செய்வோம் என்று அறிவித்தது. பல்வேறு நெருக்கடிகள், மக்கள் மத்தியில் ஏற்பட்ட சாதிச்சண்டையால் மக்கள் பலவீனமாக இருப்பதை உணர்ந்த ஸ்டெர்லைட் நிர்வாகம் கட்டுமானப் பணியை விரைந்து நடத்தி தனது பொருள் உற்பத்தியைத் தொடங்கியது.

ஒரு சொட்டு நீரும், ஒரு பொட்டு மண்ணும் கெடாமல் தொழிற்சாலையை திறப்போம் என்று இந்நிர்வாகம் வீறாப்பு பேசியது. ஆனால் நடந்தது என்ன? ஸ்டெர்லைட் வளாகத்திலுள்ள புகைப் போக்கியால் வெளியேற்றப்படும் கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சுக்காற்றுகளால், மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்குள் மலைபோல் குவிக்கப்பட்டிருக்கும் 'அம்மோனியம் கார்பனேட்' கலந்த பாஸ்போ ஜிப்சம் என்ற திடக் கழிவிலிருந்து கதிர்வீச்சு வெளியாகிறது. இதனால் காற்று பெரிதும் மாசுப்பட்டு புற்றுநோய்கான ஆபத்து அதிகரித்துள்ளது. ஸ்டெர்லைட் வளாகத்தில் இருக்கும் கழிவுநீர் தேக்கத் தொட்டியில் உள்ள கழிவுகளும் கசிந்து 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீரும், கிணற்று நீரும் நச்சுத்தன்மை அடைந்துள்ளது.


இனி போராட்டங்களும் , நீதிமன்ற படையெடுப்புகளும் காண்போம் ...

                                                                                                   தொடரும் ...................

No comments:

Post a Comment