1998 ஆம் ஆண்டு
சென்னை உயர்நீதிமன்றம் ஆணையின் படி, 17.11.1998 ல் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த நீரி நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்தது.
அறிக்கையின் சுருக்கம்
ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மீளவிட்டான், மடத்தூர், காயலூரணி கிராமங்களில் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நிலத்தடி நீரிலும், கிணற்று நீரிலும் 0.98 ஆர்சனிக் இருக்கிறது. ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள கழிவுநீர் தேக்கத் தொட்டியில் அனுமதிக்கப்பட்டதைவிட 100 மடங்கு ஆர்சனிக் இருக்கிறது.
என ஸ்டெர்லைட் ஆலையின் கொடுரத்தை நீரி சுட்டி காட்டிவிட்டது.
1998, டிசம்பர் 9,10,11 ஆகிய நாள்களில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி லிபரான், மூத்த நீதிபதி பத்மநாபன் அமர்வு நீதிமன்றத்தில் வைகோ வின் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வாதாடுவதற்கு, வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் தூத்துக்குடி கிருஷ்ணன், மதிமுக சட்ட துறை செயலர் வழக்கறிஞர் தேவதாஸ் ஆகியோர் பெரிதும் உதவினர்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில், புகழ்மிக்க உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வாதாடினார்.
சுற்றுப்புறச் சூழலுக்கான தேசிய அறக்கட்டளையின் சார்பில், வழக்கறிஞர் பிரகாஷ் வாதாடினார்.
இந்த மூன்று நாள்களிலும், மொத்தம் 7 மணி நேரம் ஸ்டெர்லைட்டை எதிர்த்து தனது வாதங்களைத் தக்க ஆவணங்களுடன் எடுத்து உரைத்தார் வைகோ
நீதிமன்றத்தில் நடந்த ஒரு சம்பவம்
இந்த விசாரணையின்போதுதான்,
தலைமை நீதிபதி லிபரான்:- “வைகோ அவர்களே, உங்களுடைய நேர்மைக்கும், நாணயத்துக்கும் எவரும் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை. அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நீதிமன்றமும் அறியும். இந்த வழக்கில் மிகத் திறமையாக வாதாடினீர்கள்”
இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால், உங்கள் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள்தானே கலந்து கொண்டார்கள்? என்று கேட்டார்.
வைகோ :- சுதந்திரப் போராட்டத்தில், 40 கோடி மக்கள் இருக்கும்போது, சில ஆயிரம் பேர்தானே போராடினார்கள்? என்று வைகோ கூறியதை, நீதிமன்றம்
வரவேற்றது.
நாக்பூரில் உள்ள நீரி (National Environmental Engineering Research Institute - NEERI) அமைப்பின் நேர்மையான இயக்குநர் டாக்டர் கண்ணா, கூண்டில் ஏறி, இந்த ஸ்டெர்லைட் ஆலை, நீர், நிலம், சுற்றுச்சூழல் அனைத்தையும் நாசமாக்கி
விடும் என்று வாக்குமூலம் கொடுத்தார்.
வழக்கில் ஆலையை மூடும் உத்தரவு வந்து விடும் என்று பயந்த ஸ்டெர்லைட் நிறுவனம், நீதிபதி பத்மநாபன், வைகோவின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்; வைகோவுக்கு வேண்டியவர்; எனவே, இந்த வழக்கை, இந்த நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் புகார் செய்தனர். (1998 யில் மூடிய வேண்டிய வழக்கு இன்றுவரை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது )
உச்சநீதிமன்றம் இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிடினும், நீதிபதி பத்மநாபன், இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன் என்று மறுத்து
விட்டார். இதனால், வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது.
1998, டிசம்பர் 16 ஆம் நாள், வேறு ஒரு அமர்வில் வந்த இந்த வழக்கில் , மீண்டும் வைகோ ஒரு மணி நேரம் வாதாடினார்.
பின்னர் நாக்பூர் நீரி நிர்வாகத்தில் புதிதாகப் பொறுப்புக்கு வந்தவர்களை ஸ்டெர்லைட் நிறுவனம் சரிக்கட்டி விட்டது.
எனவே, இடைக்காலத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், பிரதான வழக்கு நிலுவையிலேயே இருந்தது.
இப்படி பல வருடங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
1999 ஆம் ஆண்டு
1999,ஆம் ஆண்டு , அன்றைய திமுக அரசு , ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும் ,வைகோ மீது பொய்களை பரப்ப தொடங்கியது.
திமுக அமைச்சர் ரகுமான் கானை வைத்து பணம் வாங்கி பையை நிரப்பி கொண்ட வைகோ , பாக்கி வரவில்லை என பாய்கிறா என முரசொலியில் கட்டுரை எழுத வைத்தார் கருணாநிதி .
யார் பணம் வாங்கியது என்று இன்று புரிந்து இருக்கும் மக்களுக்கு
பிப்ரவரி 4 ஆம் நாள் -1998 ஆண்டு வெளிவந்த முரசொலி |
2004 ஆம் ஆண்டு
சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள் நடந்து இருந்த காலகட்டத்தில் ,2004 ஆம் ஆண்டு நார்வே அரசு அமைத்து இருக்கின்ற பொதுநல அமைப்பு (Council on Ethics), ஆய்வு நடத்தி, ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுப்புறச்சூழலுக்கு நாசம் விளைவிக்கும்; மக்கள் உடல் நலனை அழிக்கும்’ என்று அறிக்கை தந்து விட்டது.
2006 ஆம் ஆண்டு
உயர் நீதிமன்றம் அமைத்த ஆய்வு குழுவும் அறிக்கையும் , 2006 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆபத்தை சுட்டு காட்டிவிட்டது.இந்த கால கட்டத்தில் வைகோ தரப்பில் நீதிமன்றத்தி நார்வே அறிக்கையும் , ஆய்வு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. தென் தமிழகத்து மக்களைப் பாதுகாக்கின்ற வகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் தனது வாதங்களை எடுத்து வைத்தார் வைகோ.
2010 ஆம் ஆண்டு
15 ஆண்டுகளாக வைகோ நடத்திய அறப்போர், மகத்தான வெற்றியைப் பெற்றது.
ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடும்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாண்புமிகு எலிப்பி தர்மராவ், பால் வசந்தகுமார் ஆகியோர், 2010 செப்டெம்பர் 28 ஆம் நாள் தீர்ப்பு அளித்தனர்.
உலக கோடிஸ்வரன் ஆலை அதிபர் அணில் அகர்வால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற சென்றான் .
வைகோவும் , விடவில்லை , தானும் தனது பங்குக்கு உச்ச நீதிமன்றம் சென்றார் .
இனி உச்ச நீதிமன்றத்தில் நடப்பதை பார்ப்போம் ....
No comments:
Post a Comment