‘சிவகாமியின் சபதம்’ #வைகோ வின் இலக்கியச் சொற்பொழிவு
பரஞ்சோதி
நான் இதைக் குறிப்பிடக் காரணம் உண்டு. பார்த்திபன் கனவும் - சிவகாமியின் சபதமும் - பொன்னியின் செல்வனும் எழுதிக் குவித்த கல்கி ஆசிரியர் அவர் கள், சிவகாமியின் சபதத்தில் நான்கு பாகங்கள் வைக்கிறார் . முதல் பாகம், ‘பரஞ் சோதி யாத்திரை’; இரண்டாவது பாகம்,‘காஞ்சி முற்றுகை’; மூன்றாம் பாகம், ‘பிட்சுவின் காதல்’; கடைசி நான்காவது பாகம்,‘சிதைந்த கனவு’.
இந்த நான்கு பாகங்களை முன்வைக்கின்ற இந்தக் காப்பியத்தில், தொடக்கக் காட்சி ,எடுத்த எடுப்பில் காஞ்சிபுரத்தை நோக்கி வருகின்ற ராஜபாட்டையில் பரஞ்சோதி வருகிறான். கீழச் சோழ நாட்டில், திருச்செங்காட்டாங்குடியில் மாமாத்தியார் என்கின்ற வீரம்மிக்க குலத்தில் பிறந்து, தமிழ் படிக்கவும், சிற்பக் கலை பயிலவும் பரஞ்சோதி வருகிறான்.1 8 வயது துடிப்புள்ள வாலிபன்.அவன் முரட்டுப்பிள்ளை. காஞ்சிபுரத்திற்குச் சென்று, அப்பர் அடிகள் - நாவுக்கரசர் மடத்திற்குச் சென்று, அவரிடத்திலே தமிழ் படிக்க வேண்டும் என்று பரஞ்சோதி யை அனுப்பி வைக்கிறார்கள்.