Saturday, December 7, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 9

ஈரோடு ,திருப்பூர் , கோவை பகுதிகளை இயற்கை வேளாண்மைப் பகுதிகளாக
அறிவித்திடுக!

நாடாளுமன்றத்தில் மதிமுக (ஈரோடு தொகுதி ) உறுப்பினர் அ.கணேசமூர்த்தி நிதி மசோதா மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு 29.04.2010 அன்று ஆற் றிய உரை

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே ! நிதி மசோதா மீது பேச வாய்ப்பு தந்த தற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் , எனது சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெட்ரோல் டீசல் மீதான சுங்கவரி 2.4 யில் இருந்து 7.5 சதவிகிதமாக உயர்த்தப் பட்டதாலும், கலால் வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டு உள்ளதா லும் , வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் மீது இறக்கு மதி வரி 5 சதவிகிதம் விதிக்கப்பட்டு உள்ளதாலும் பெட்ரோல்-டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ரூபாய் 48.48 க்கு விற்ற பெட்ரோல் தற்போது 3.01 ரூபாய் உயர்த் தப்பட்டு , ரூபாய் 51.59 க்கு விற்கப்படுகிறது. 34.28 க்கு விற்பனை செய்யப்பட்ட டீசல் தற்போது 2.80 ரூபாய் உயர்த்தப்பட்டு , ரூபாய் 37.78 க்கு விற்கப்படுகிறது.

சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அவசியமான பெட்ரோல் டீசல் விலை மீதா ன கலால் மற்றும் சுங்கவரிகள் உயர்த்தப்பட்டு உள்ளதாலும், உற்பத்திப் பொ ருட்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளதாலும் சிமெண்ட் விலை 50 கிலோ மூட்டைக்கு ரூபாய் 10 வரை உயரும் நிலை உருவாகி உள்ளது

பெட்ரோல் கச்சா விலை உயர்வினால் உரத்தொழிற்சாலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டு இரசாயன உரங்களின் விளையும் உயர்த்தப்பட்டு உள்ளது.

மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நிலக்கரி மீதான வரிவிதிப்பால் மின் கட்டணம் உயரும். பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் பொருள் போக்கு வரத்து மீதான கட்டணமும் உயரும். நிலக்கரி மற்றும் பெட்ரோல் டீசல் மீதா ன வரி விதிப்பு அனைத்துப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழி வகுத் துள்ளது . தற்போது ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்காத விலைவாசி ஏற்றத்தால் , ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

விவசாய உற்பத்தியை 4 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோ ளில் கடந்த 2007-08 ஆம் ஆண்டு தேசிய வேளாண் திட்டம் தொடங்கப்பட்டது. 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதற்காக 25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. 11 வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திற்குள் 1 கோடி டன் அரிசி உற்பத்தி செய்ய வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு நடந்த தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் தீர் மா னம் நிறைவேற்றப்பட்டது. 14 மாநிலங்களில் 136 மாவட்டங்களில் நெல் உற் பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. அது எதிர்பார்த்த பலனை தரவில்லை. அரிசி உற்பத்தி இலக்கை எட்ட முடியவில்லை. 44 இலட்சத்து 25 ஆயிரம் டன் அரிசியையே உற்பத்தி செய்யமுடிந்தது.


அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை விளைந்த உணவு தானியங்களை புள்ளிவிவரங்களைத் தெரிவித்துள்ளன. அதன் படி இந்த ஆண்டு நெல் விளைச்சல் கடந்த ஆண்டைவிடக் குறைவாக வே உள்ளது. கடந்த ஆண்டு 47 இலட்சத்து 55 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப் பில் நெல்விளைவிக்கப்பட்டது. அது இந்த ஆண்டு 44 இலட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேர் ஆகக் குறைந்து உள்ளது. அதாவது 3 இலட்சத்து 30 ஆயிரம் ஹெக் டேரில் நெல் உற்பத்தி குறைந்துள்ளது.

2.8 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேளாண் உற்பத்தி 2.2 சத விகிதமாகக் குறைந்து விட்டது. இதற்கு அரசின் தவறான கொள்கையே கார ணம். வேளாண் இடு பொருள்களின் விலையையும் தாங்கமுடியாத அளவுக்கு இந்த அரசு உயர்த்தி உள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய அரசு இடு பொருளான இரசாயன உர விலையினை கடும் எதிர்ப்புக்கு இடை யில் உயர்த்தி உள்ளது. உரமானியம் குறைக்கப்பட்டு உள்ளது. எனவே இடு பொருட்களின் விலைஏற்றத்தால் தேவையான உரத்தினை விவசாயிகள் பயி ருக்கு இடமுடியாத நிலை ஏற்பட்டு குறைந்த அளவு உரத்தையே பயிருக்கு இடமுடிந்ததால் விளைச்சல் குறைந்து போய் உள்ளது.

தற்போது இயற்கை வேளாண்மை முறை விவசாயிகளின் கவனத்தைப் பெரு மளவில் ஈர்த்துள்ளது.இயற்கை உரங்களையும் இரசாயன கலப்பில்லாத பூச் சிக்கொல்லிகளையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க விவசாயிகள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு அரசு எந்தவித ஆதரவும் வழங்குவதில்லை .

இரசாயன உரத்திற்கு மானியம் வழங்கப்படவதுபோன்று,இயற்கை வேளாண் மைக்கான இடுபொருள்களுக்கும் மானியம் தந்து இயற்கை வேளாண்மையை அரசு ஊக்கப்படுத்தத் தவறிவிட்டது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதன் மூலம் நச்சுத்தன்மை இல்லாத பொருட்களை உற்பத்தி செய்து , பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைக்க வழி செய்திடுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குப்படுத்த வேண்டும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை வேளாண்மை விவசாயிகளின் வர வேற்பைப் பெற்றிருப்பது போல், தமிழகத்தில் ஈரோடு ,கோவை , திருப்பூர் மாவட்டங்களில் இயற்கை விவசாயம் பெருமளவில் நடைபெறுகிறது.

எனவே ,தொழில் வளர்ச்சிக்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அறிவிக் கப்பட்டு நடைமுறைப்படுத்துவது போல இயற்கை வேளாண்மையை ஊக்கு விக்க ஈரோடு ,திருப்பூர் ,கோவை மாவட்டங்களை சிறப்பு இயற்கை வேளாண் மைப் பகுதியாக அறிவித்து, அரசு இயற்கை விவசாயத்தின் மேன்மைக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்திட வேண் டும்.

அ.கணேசமூர்த்தி எம்.பி இவ்வாறு உரையாற்றினார்.

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 8

No comments:

Post a Comment