Sunday, December 1, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 7

தமிழக அரசின் மெத்தனப் போக்கு! தமிழக திட்டங்களுக்கு குறைந்த தொகை ஒதுக்கீடு!

இரயில்வே நிதிநிலை அறிக்கை விவாதத்தில் நாடாளுமன்றத்தில் அ.கணேச மூர்த்தி குற்றச்சாட்டு

இரயில்வே நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத் தில் கலந்து கொண்டு, நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப்பினர் அ.கணேச மூர்த்தி (ஈரோடு தொகுதி) 9-03-2010 அன்று ஆற்றிய உரை:

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! இரயில்வே துறை மானியக்கோரிக் கையின் மீதான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

உடனடியாகக் கிடைக்கும் பலனை மட்டும் கருதாமல், நாட்டின் வளர்ச்சியை யும் மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, நமது இரயில்வே துறை நடை போட வேண்டும் என்ற இரயில்வே துறை அமைச்சர் அவர்களின் மு னைப்பை இந்த இரயில்வே துறை நிதி நிலை அறிக்கையில் காண முடிகிறது.
அதற்காக எனது பாராட்டுகள்.

இரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தாக்கல் செய்துள்ள
இந்த நிதி நிலை அறிக்கையில், பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணம் உயர்த் தப்படாதது - இரயில்வே தேர்வாணையத் தேர்வுகள் அந்தந்த மாநில மொழி களில் நடத்திட அறிவிப்பு -பயணிகளுக்கு குறைந்த விலையில் குடி தண்ணீர் -
இரயில்வே பணியாளர்களுக்கு வீடுகள் மற்றும் சமூக நலத்திட்ட அறிவிப்பு கள் ஆகியவற்றுக்கு எனது பாராட்டுகள்.

கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்திலும், கடிதம் மூலமும்
மாண்புமிகு அமைச்ச ருக்கு வைத்த எங்கள் பகுதியின் தேவைகள் பற்றிய
கோரிக்கைகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளமைக்கு எனது நன்றி. குறிப் பாக,ஈரோடு முதல் கோயம்புத்தூர் வரை அறிவித்துள்ள MEMU’s மின்சார இர யில்,ஈரோடு இரயில் சந்திப்பில் பல்நோக்கு வணிக வளாகம், ஈரோட்டில் இயங்கி வரும் இரயில்வே மருந்தகத்தை புற நோயாளிகள் பிரிவு மற்றும் நோய் கண்டறியும் மையமாகவும் தரம் உயர்த்தியமை,ஈரோடு சாஸ்திரி நகர் அருகில் உள்ள இரயில் பாதையைக் கடக்க புதிய பாலம் (L.C.No.124), ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரை புதிய இரயில் பாதை ஆய்வுக்கு நிதி ஒதுக்கிய மை போன்றவற்றை இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்ததற்கு எனது நன்றி. தேவைகளுக்கு எல்லை என்பது இல்லை.எனவே, எங்களது கோரிக்கை களுக்கும் முடிவு என்பது இல்லை. ஆகவே, எங்களது தொகுதியில் நிறைவே றாத கோரிக்கைகள் சிலவற்றை உங்களின் கவனத் துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

1. ஈரோடு முதல் பழனி வரை புதிய இரயில் பாதை அமைப்பதற்காக வழித் தட ஆய்வுப் பணி முடிவடைந்து உள்ள நிலையில், மேற்கொண்டு அத்திட்டத்
தினை விரைவில் மேற்கொள்ள ஏதுவாக இந்த நிதி நிலை அறிக்கையில், நிதி
ஒதுக்கீடோ குறிப்போ ஏதும் இல்லை.ஈரோடு, சென்னிமலை, காங்கேயம்,
தாராபுரம் போன்ற தொழில் நகரப் பகுதிகளையும் பழைமையான புகழ் பெற்ற
புனிதத் தலமான பழனியையும் இணைக்கும் இந்தத் திட்டத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணியினை விரைவுபடுத்திட வேண்டுமென வலி யுறுத்துகிறேன்.

2. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச் சகத்தின் ஒத்துழைப்போடு 50 புதிய
கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளீர்கள். எனது
தொகுதிக்குட்பட்ட ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மருத்துவக்
கல்லூரி, 15 மருந்தகக் கல்லூரிகள், 22 பொறியியல் கல்லூரிகள், 33 கலை அறி வியல் கல்லூரிகள், 18 தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் உள்ளன. ஆனால்,  உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் போதுமானதாக இல்லை.அதிலும் குறிப் பாக, மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குழந்தைகளும்,ஏழை எளிய மக்களின் பிள்ளைகளும் படிக்க போதுமான சி.பி.எஸ்.பாடத்திட்டம் உள்ள பள்ளிகள் இல் லை. எனவே, தங்களால் அறிவிக்கப்படவுள்ள 50 கேந்திர வித்யாலயா பள்ளி களில் ஒன்றாக ஈரோட்டையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.

3. சுற்றுலா இடங்களை இணைக்கும் “Bharath Tirth”மூலம் அறிவிக்கப்பட்டு உள்ள மதுரை - ஈரோடு - புனே - உஜ்ஜை யின் - நாசிக் - ஹைதராபாத் - சென்னை- மதுரை புதிய இரயில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் ஆலயங்களும் அபூர்வமாக ஒரே வளாகத்துக்குள் அதுவும் காவேரி ஆற்றங்
கரையில் அமைந்துள்ள புனிதத் தலமான கொடுமுடி இரயில் நிலையத்திலும்
நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும்.

4. காட்பாடி முதல் சேலம் வரை இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டு உள்ள புதிய மின்சார இரயில் (MEMU’S) ஈரோடு சந்திப்பு வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.

5. வண்டி எண் 1063/1064 சென்னை முதல் சேலம் வரை இயங்கும் இரயிலை
ஈரோடு வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.

6. வண்டி எண் 879/880, 883/884 திருச்சிராப்பள்ளி - கரூர் பாசஞ்சர் இரயிலை
ஈரோடு வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

7. திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை இயங்கும் வண்டி எண் 6344/6345
அமிர்தா எக்ஸ்பிரஸ் ஈரோடு வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

8. ஈரோடு நகரின் நெரிசலான பகுதியில் அமைந்துள்ள இரயில்பாதையைக் கடக்கும் L.C எண் 121 L.C எண் 122 ஆகிய இரண்டு இடங்களிலும் இரயில்வே
மேம்பாலம் அமைத்து போக்குவரத்து இடையூறைப் போக்கிட வேண்டும்.

9. கொடுமுடி இரயில் நிலையத்தையொட்டி இயங்கி வந்த லெவல்கிராசிங்
இரயில்நிலைய நடைமேடை நீட்டிப்பு செய்யப்பட்டதால் தற்போது மூடப்பட்டு
விட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கும்,கொடுமுடி கோவிலுக்கும், மருத்துவ
மனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றுக்குச் செல்வதற்கும் வசதி
யாக நடைபாதை பாலம் (Foot Over Bridge) அவசியத் தேவையாக உள்ளது.என வே, உடனடியாக அந்த இடத்தில் நடைபாதை பாலம் ஒன்று அமைத்துத் தர வேண்டுகிறேன்.

பயணிகளின் வசதிகளைப் பொறுத்து உணவு வழங்குவதில் புதிய திருத்தங்
களைக் கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளீர்கள். சென்னை மத்திய இரயில்
நிலையத்தில் இரயில்வே துறை நடத்தும் சைவ உணவகமும் உள்ளது. அதே போல் தனியார் நடத்தும் உணவகமும் உள்ளது.இவற்றில் தனியார் உணவகங் களை நாடியே மக்கள் செல்கிறார்கள்.விற்பனைக் கணக்கைப் பார்த்தாலே இது
தெரியும். காரணம், இரயில்வே துறை நடத்தும் உணவகங்களை விட தனியார்
உணவகங்களில் தரமான ருசியான உணவு கிடைப்பது தான் காரணம்.இரயில் வண்டிகளிலும் இதுவே தான் நிலைமை. எனவே, இரயில் வண்டிகளில் தற் போதுள்ளது போல் தனியாருக்கு குத்தகைக்கு விட்டு அவர்களுக்கு தட்டுப்பா டில்லாமல் தேவையான பேன்ட்ரி கார்டு போன்றவற்றில் சமையல் செய்யும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை முறையாகக் கண்காணித்தாலே பயணிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற சேவையை வழங்க முடியும்.

இந்த ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பே இரயில்வே
வட்டாரங்கள் சார்பில் சில கருத்துகள் வெளியிடப்பட்டன. தற்போதுள்ள பொருளாதாரச் சூழ்நிலையில் இரயில்வே திட்டங்களுக்கான செலவில் பாதி யை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டால், அந்த மாநிலத்துக்கு தேவையான பெரும் பாலான திட்டங்களுக்கு இரயில்வே முன்னுரிமை அளித்து புதிய திட் டங்கள் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப் பட்டது. கர்நாடகா, மகாராஷ் டிரா,ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள், திட்டச் செலவில் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டு, இந்த ஆண்டு நிறைய திட்டங் களைப் பெற்றுள்ளன. தமிழக இரயில்வேதிட்டங்களை நிறைவேற்ற இந்த நிதியாண்டில் ரூ.3,000 கோடி தான் தேவை என தென்னக இரயில்வே தெரிவித்திருந்தது.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் போல மாநில அரசின் பங்காகக் கணிசமான தொகை ஒதுக்கீடு செய்யாத தமிழக அரசின் மெத்தனப் போக்கினால் இந்த ஆண்டு தமிழக இரயில்வே திட்டங்களுக்கு வெறும் 798 கோடி ரூபாய் தான் ஒதுக்கப் பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட இது குறைவா னதே. எனவே, மொத்தத்தில் வரவேற்கப்படும் நிதிநிலை அறிக்கை என்றாலும் தமிழகத்திற்கு இதுஏமாற்றத்தைத்தான் அளிக்கிறது.

ஈரோடு அ. கணேசமூர்த்தி எம்.பி., இவ்வாறு உரையாற்றினார்.

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 6

No comments:

Post a Comment