Tuesday, December 10, 2013

புராதன இந்திய வரை படத்தில் திராவிட தேசம்

புராதன இந்திய வரை படத்தில் திராவிட தேசம்

இந்தியத் துணைக்கண்டத்தில் திராவிட இயக்கம் நூற்றாண்டு விழா கொண்டா டியிருப்பது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கிறது. இந்த நிலையிலும் கூட, திராவிடம் எங்கே இருக்கிறது? என்கிற கேள்வியை எழுப்பி, ஆரிய அடிவருடி களின் நூல்கள் பல வந்துள்ளன.

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் வெல்லும் சொல்வலர் வைகோ அவர்களும் போற்றி வருகின்ற திராவிடத்தை அறிவுப் பூர்வமாக மறுப்பதற்கு இயலாது என்பதனை புவியியல் அறிஞர்கள் பலரும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

எத்தனையோ பிரளயங்கள் தோன்றியும் அழிக்க முடியாத திருவிடம், திராவிட மாக உருப்பெற்று, இந்தியத் துணைக் கண்டத்தில் நிலை பெற்றிருப்பதற்கு அணி சேர்க்கும் விதத்தில் புராதன இந்திய வரைபடத்தில் ஒரு “தனித் திராவிட தேசம்” கண் சிமிட்டிக் கொண்டிருப்பதை நம் கழகத் தோழர்களின் கவனத்திற் குக் கொண்டு வருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இதற்கு முன் நாம் கண்ட புராதன இந்தியாவின் வரைபடத்தில் தனித் திராவிட
தேசம் ஒன்று இருப்பதாக நாம் அறியவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழி பேசும் மக்கள் பரவி வாழ்ந்த திராவிட நாட் டை வரையறுத்துக்காட்டிய பெருமை நம் திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உண்டு.

ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன்பு வி.ஆர்.ராம அய்யர் அண்டு கம்பெனியால்
வெளியிடப்பட்ட ‘புராதன இந்தியா’ என்ற நூலில் ‘திராவிட தேசம்’ என்று ஒரு தனி தேசம் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

புரதான இந்தியாவில் 56 தேசங்கள் இருந்தன. அந்த 56 தேசங்களையும் குறிப் பிட்டு விவரமாக எழுதினால் இக்கட்டுரை பல பக்கங்கள் நீளக்கூடும் என்ப தால், தென்புலத் தேசங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

தேசம் என்பது வடமொழி.நாடு என்பது தமிழ்.வடபுலத்தில் ஆரியர்களின் ஆதிக் கம் ஏற்பட்டபொழுது ஆரிய வர்த்தம், பிரம்மவர்த்தம், தட்சிணபாதம் என மூன் றாகப் பிரித்து வரலாறு எழுதத் தொடங்கினர்.

தட்சிண பாதம் என்பது தென்னாடு. இதில் 12 தேசங்களை மட்டும் உள்ளடக்கி னர்.விந்திய மலைக்குத் தெற்கில் உள்ள தென்னாட்டில் (திராவிடம்) உத்கல தேசம்-கலிங்க தேசம்-யவன தேசம்-கொங்கண தேசம்-மகாராட்டிர தேசம்-குளிந்த தேசம்-ஆந்திர தேசம்-கர்னாடக தேசம்-திராவிட தேசம்-சோழ தேசம்-பாண்டிய தேசம்-சேரள தேசம் என்னும் 12 தேசங்களையும் தட்சிணபாதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள புராதன இந்தியாவின் 56 தேசங்கள் எனும் நூல் வரைபடத்துடன் தனி திராவிடதேசம் ஒன்று இருப்பதனை வெளிப் படுத்தி உள்ளது. அதைக் கீழே உள்ள வரை படத்தில் காண்க.

1948-49 இல் உள்ள பிரிட்டிஷ் இந்தியாவின் தேசப் படத்தில் 9 மாகாணங்களும்,
500 க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களும் இருந்ததைச் சுட்டிக்காட்டு கிறது.

அன்றைய சென்னை மாகாணத்தில் நாம் குறிப்பிடும் (திராவிட நாடு) தென்னா டு பரந்த நிலப்பரப்பில் அமைந்திருந்தது.ஒரிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மா வட்டம்தான் நமது சென்னை மாகாணத்தின் வடக்கு எல்லையாக இருந்தது.

சென்னை மாகாணத்தில் மொத்தம் 25 மாவட்டங்கள் பரந்து விரிந்து இருந்தன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய திராவிட மொழி பேசும் மக்கள் அதில் வாழ்ந்தனர். ஆண்டனர் அரசோச்சினர்.

மேலே காட்டப்பட்டுள்ள வரைபடத்தில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள திரா விட தேசம் எப்படி வந்தது?

ஆழ்ந்தும் அகன்றும் உற்று நோக்குபவர்களுக்கு மட்டுமே இதன் உண்மை புரி யும்,கருதுகோள் அடிப்படையில் தான் இதைக் கணிக்க முடியும்.

திராவிடம் என்கிற சொல் எப்படி வந்தது என்பதனை முதன் முதலில் கால்டு வெல் அவர்களால் தொட்டு, துலக்கி, அதைத் தொடர்ந்து பாவாணர் உட்பட பல் வேறு மொழியியல் அறிஞர்களும் போதிய விளக்கங்களைத் தந்துள்ளனர்.ஆக வே,அந்தத் தடத்தைப் பின்தொடராமல் வேறு கோணத்தில் இந்தத் திராவிட தேசத்தைப் பார்க்கலாம்.

மொழி சார்ந்த நிலம், இனம் சார்ந்த நாடு என இரண்டு பகுதிகளாகப் பகுத்துப் பார்ப்பது அறிவியல் நோக்கில் புறம்பானதன்று.திராவிடத்திற்குத் தாய் எனக் கருதப்படும் சென்னை இராஜதானியில் இருந்து மொழி சார்ந்த நிலப்பகுதிகள் தனித் தனி மாநிலங்களாகப் பிரிந்து போய்விட்டன.அவரவர்களுக்கு உரிய பாகத்தைப் பிரித்துக் கொண்டு, ஆந்திரா என்றும், கர்நாடகா என்றும், கேரளா என்றும் மொழி சார்ந்த நிலங்களைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்.

அனைத்திற்கும் தாய் மடியாக விளங்கிய சென்னை மாநிலம் தமிழ்நாடு என ஒளி மகுடம் சூட்டிக்கொண்டது. முடிமன்னர் மூவேந்தர் புகழ் மணக்க மொழி யின் பெயரால் முதன் முதலாக ஒரு நாடு கண்ட பெருமை அறிஞர் அண்ணா வுக்கு மட்டுமே உண்டு.

மொழி சார்ந்த நிலங்கள் பிரிக்கப்பட்டு விட்டன.இனம் சார்ந்த நாடு என்ன ஆயிற்று? அதுதான் திராவிட நாடு.

இன்றுவரை திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே தெலுங்கு, கன்ன டம், மலையாளம், துளு மக்கள் அனைவரையும் நம் திராவிட இனம் என்று அர வணைத்துக்கொண்டிருக்கிறோம்.கட்சியின் பெயரில் திராவிட, எனும் சொல் லையும் சேர்த்துக் கொள்கிறோம்.ஆனால், ஆந்திர, கன்னட, மலையாள, மக்க ளிடையே உள்ள கட்சிகள் அவ்வாறு சேர்த்துக்கொள்வதில்லை.அந்த மாநிலங் களில் உள்ளவர்கள் தமிழர் மீது இன உணர்வு காட்டப்படுவதில்லை.

இனமானம் ஏற்படும் போது தான் அதற்கு மீட்டுருகாண முடியும். அது வரை திராவிடம் என்பது வரலாற்றிலும் வாய் மொழியிலும் பனுவல்களிலும் பாடல் களிலும் காலத்தால் அழிக்க முடியாத நிலையில் கலந்திருந்தே வாழும்.

அது இருக்கட்டும், மீண்டும் புராதன இந்தியாவில் உள்ள 56 தேசங்களில் ஒன் றான திராவிட தேசத்திற்கு வருவோம்.

ஜன கண மன அதி நாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
................................................
..............................................

என்று மகாகவி ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய தேசியகீதம் ஒலிக்கிறதே அந்தத்
“திராவிடம்” எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது?

ரவீரந்திரநாத் தாகூர் என்ன திராவிடர்கழகத்தைச் சார்ந்தவரா?அவர் கண்டதிரா விடம் ஒன்று இருக்கத்தானே வேண்டும். இல்லாத ஒன்றைத் தேசிய கீதமாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா?

“பஞ்சாபையும், சிந்துவையும், குஜராத்தையும், மராட்டியத்தையும், திராவிடத்
தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும்,உள்ளக் கிளர்ச்சியடையச் செய்கி றாயே! பாரதத் தாயே!” என்று மகாகவி இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய தேசிய கீதம் என்ன வெறும் சினிமா பாட்டா?

திராவிட மொழிகளில் துளுவும் ஒன்று தானே,அப்படியானால் துளு நாடு இருந்
ததா? என்று கேட்பீர்கள்.சரியான கேள்விதான். சங்ககாலத்தில் துளு நாட்டைத் தமிழ் மன்னர்கள் பலர் ஆண்ட வரலாறு உண்டு.

பொன்படு கொண்கான நன்னன்
நன்னாட்டு எழிற் குன்றம் (நற்றிணை)

சங்க காலத்தில் துளு நாட்டைச் சேர்ந்திருந்த இந்த எழில்மலை இப்போது மலையாள நாட்டில் மலபார் மாவட்டத்தில் சிறைக்கல் தாலுகாவில் சேர்ந்தி ருக்கிறது.நன்னன் ஆண்ட நாடு இது. மலையாளிகள் இப்போது “எலிமலா” என்று சொல்கிறார்கள்.

மலையாளிகள் எலிமலை என்று உச்சரிக்கப் படுவதைப் பார்த்து வடமொழி பேசு வோர் மூஷிகமலை என்று மொழி பெயர்த்துக் கொண்டு துளு நாட்டு மக் களை மூஷிக வம்சம் என்று கதை புனைகிறார்கள். துளு நாடு இப்படிச் சிதைந் துபோய்விட்டது.

கி.பி. 1799 ஆம் ஆண்டு வரை துளு நாடு தனியாகவே இருந்தது. வெள்ளையர்
ஆட்சி வந்த பிறகுதான் துளு நாடாகிய கொங்கண நாட்டை தென் கன்னடம் என்ற பெயரில் நமது சென்னை மாகாணத்தில் இணைத்து வைத்திருந்தார்கள்.

தேவனாம் பிரியர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றிருந்த அசோகச் சக்கரவர்த்தி
காலத்தில் உள்ள கல்வெட்டு சாசனங்கள் அடங்கிய தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் திராவிட இனத்தின் பெருமை விவரிக்கப் பட்டிருக்கிறது.

“சோடா பாடா ஸதியபுதொ கேதபுதோ ஆ தம்ப பம்ணி”என்று பிராகிருத மொழி யில்,பிராமி எழுத்தில் எழுதப்பட்ட வாசகம் இது. இந்த வாசகத்தின் பொருள் வருமாறு:-

“சோழ பாண்டிய சத்தியபுத்திர கேரளபுத்திர தம்ப்ரபரணி” என்று தமிழாக்கம் செய்யப் பட்ட நூல் விளக்கம் தருகிறது.

இதெல்லாம் சரிதான், அந்த புராதன இந்திய வரைபடத்தில் கோடிட்டுக் காட் டப்பட்ட “தனி திராவிட தேசம்” எப்படி வந்தது என்பதற்கு விளக்கம் தரவில் லையே? அதற்கு என்னதான் முடிவு?

சங்க காலத்தில் துளு நாடு என்றும்,கொங்கண நாடு என்றும் பெயர் பெற்றிருந் தது.அதில் ஒரு பகுதி அன்றைய பம்பாய் மாகாணத்திலும் தென்கன்னடமாவட் டமானது மைசூர் மாநிலத்திலும் இணைய நேர்ந்தது. இதுவே பழைய துளு
நாடாகும்.

அருந்தெறல் மரபிற் கடவுள் காப்பப்
பெருந்தேன் தூங்கும் நாடுகாண்
நனந்தலை
அணங்குடை வரைப்பிற் பாழி (அகம் 372)

பாழி நகரக் கோட்டையில் அரசர் நன்னன் பெரு நிதியாகச் சேர்த்துக் காத்திருந் தார் என்பதனை இதுபோன்று அக நானூற்றில் பல பாடல்களின் வாயிலாக அறியக் கிடைக்கின்றது.

நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன் (அகம் 258)

இவ்வாறு நன்னின் புகழ்பாடும் பாடல்கள் பலவற்றைச் சங்கப் பாடல்களில் காணலாம்.இமயவரமம்பன் நெடுஞ்சேரலாதன் சேர நாட்டை ஆண்ட காலத் தில் துளு நாட்டை முதலாம் நன்னன் ஆட்சி புரிந்தான். துளு நாட்டுத் தலை நகரமாக மங்களூர் இருந்தது.துளு மொழிக்குத் தனி எழுத்து இல்லை.அதனால் கன்னட எழுத்தையே பயன் படுத்திக் கொண்டனர்.

திராவிட இனம் வாழ்கின்ற இடப்பெயர்களில் ஊர் என்பது பொதுவான சொல் லாகும். துளு மக்களும் திராவிட இனம் என்பதற்கு அடையாளமாக துளு நாட்டி லேயும் ஊர்கள் என்ற பெயர் இன்றும் வழக்கத்தில் உள்ளன. பெர்டூரு, பார்கூரு,
பைத்தூரு, மங்களூரு, பாணெமங்களூரு,பசரூரு, கொல்லூரு,ஸீரூரு, பைலூ ரு,சங்வத்தூரு, ஜால்சூரு, புத்தூரு, வேணூறு என்னும் ஊர்கள் துளு நாட்டில் இப்போதும் உள்ளன.

இந்தியத் துணைக் கண்டத்தில் எந்தக் காலத்திலும் தனியாக ஒரு திராவிட தேசம் இருந்ததில்லை. ஆனால், புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங் களைக் கொண்ட தேசப்படத்தில் மட்டுமே திராவிட தேசம் பெயர் பெற்றுள் ளது.

இதனை ஆழ்ந்து நோக்கும்போது, ஒரே ஒரு உண்மை மட்டுமே நமக்குப் புலப் படுகிறது.

பாண்டிய தேசம், சோழ தேசம், கேரள தேசம், கர்நாடக தேசம், ஆந்திர தேசம்
ஆகிய இந்த ஐந்து தேசங்களின் பரந்த நிலப்பரப்புக்குள்ளே திராவிட தேசம்
ஆறாவது தேசமாக அமைந்திருப்பதைப்பார்க்கிறோம். இது எப்படி வந்திருக்கக்
கூடும்?

பண்டைக் காலத்தில் இருந்தே ராயல சீமா,கொண்டல சீமா, சமுத்திர சீமா என் கிற மூன்று பகுதிகளைக் குறிக்கும் விதத்தில் (திரிபிடா) என்ற ஒரு பொதுச் சொல் தெலுங்கு மொழியில் வழக்கத்தில் இருந்து வந்ததை நாம் அறிவோம்.

வட மொழியில் அமையப் பெற்ற புராண இதிகாசங்களில் வழங்கப்படும் திரா விட எனும் சொல்லுக்கு இந்த திரிபிடாவும் ஒரு காரணமாகும். திரிசொல் திசைச்சொல் திராவிடமாக உருப்பெற்று இந்தியா முழுவதும் பரவியது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,துளு ஆகிய திராவிட மொழிக் கலப்பு
இனமாகத் திகழும் மக்கள் அப்பகுதியில் பெரும் அளவில் வாழ்ந்திருக்கின் றனர்.அதன் அடிப்படையில், அப்பகுதிக்கு வடபுலத்தார் திராவிட தேசம் என்று
குறிப்பிடும் அளவுக்கு வந்திருக்கக்கூடும் என்று கருத இடமுள்ளது.

ஏனெனில், “56 தேசங்களைக் கொண்ட புராதன இந்தியா” எனும் நூல் ஆசிரியர்
பி.வி. ஜெகதீச அய்யர் முற்றிலும் சமஸ்கிருத நடையிலேயே அந்த நூலை
எழுதியிருக்கின்றார்.



எடுத்துகாட்டாக:-

“தஞ்சாவூர் அரண்மனை லைப்ரெரியில் இருந்தும் சில சாஸ்திரங்களைக் கண் ணுற்ற போது பாலகாப்ய மஹரிஷியினால் செய்யப் பட்ட கஜசாஸ்திரமே பூர்வ இந்தியாவின் பாக்யமென விளங்கிற்று. [ம்ஸ்கிருத பாஷையில் பல சாஸ்திரங்களைக் கற்று இருந்த பண்டிட் வி.விஜயராகவாச்சாரி யாரால் சோதிக்கப்பட்டு,” என்கிற எழுத்து நடையிலிருந்தே அவாள் எத்தகைய புரா ணங்களில் இருந்து பண்டைக்கால தேசங்களைத் திரட்டியிருக்கக்கூடும்
என்பதனைத் தெரிந்துகொள்ளலாம்.

எப்படிப் பார்த்தாலும் புராதன இந்தியாவில் குமரி முதல் இமயம் வரை நம் திராவிட இனம் பரந்து வாழ்ந்த தடயங்களை எக்காலத்திலும் எவராலும் அழிக்க முடியாது. வாழ்க திராவிடம். வளர்க வைகோ.

கட்டுரையாளர் :- கவிஞர் தமிழ்மறவன் மதிமுக தலைமை நிலையச் செய லாளர்

No comments:

Post a Comment