கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் #மதிமுக செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான எஸ்.ரத்தினராஜ் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந் தார். நேற்று பிற்பகல் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.
ரத்தினராஜின் உடல் உரப்பனவிளையில் உள்ள குடும்ப கல்லறை தோட்டத் தில் அடக்கம் செய்யப்படுகிறது. ரத்தினராஜின் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
ரத்தினராஜ், வெள்ளிச்சந்தை அருகே உள்ள உரப்பனவிளையில் 1940–ம் ஆண்டு பிறந்தார்.
1980–ம் ஆண்டு குளச்சல் சட்டமன்ற தொகுதியிலும்,
1984–ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியிலும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
1977 முதல் 1982 வரை குமரி மாவட்ட தி.மு.க. செயலாளராக பதவி வகித்தார்.
மீண்டும் 1987 முதல் 1993 வரையும் குமரி மாவட்ட தி.மு.க. செயலாளராக பதவி வகித்தார்.
பின்னர் ம.தி.மு.க.வில் 1993 முதல் 2010–ம் ஆண்டு வரை மாவட்ட செயலா ளராக பதவி வகித்தார். ம.தி.மு.க. உயர்மட்ட குழு, ஆட்சி மன்ற குழு உறுப்பி னராகவும் பதவி வகித்துள்ளார்.
இவருக்கு சிந்தாதேவி என்ற மனைவியும், டாக்டர் அருண்குமார், எழில், அமு தன், சிவா ஆகிய 4 மகன்களும் உள்ளனர்.
ரத்தினராஜ் தன்னுடைய கண்களை தானம் செய்து இருந்தார். அவர் இறந்ததும் நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து வந்த மருத்துவக்குழுவினர் அவ ரது கண்களை பெற்றுச் சென்றனர்.
No comments:
Post a Comment