கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத மாணவர்கள் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு #மதிமுக கோரிக்கை வைத்துள்ளது.
ம.தி.மு.க மாநில இளைஞர்அணி செயலாளர் வே.ஈஸ்வரன் கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:–
கடந்த 2013–ம் ஆண்டில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ–மாணவிகளின் சேர்க்கை விதிகளுக்கு புறம் பாக உள்ளது. ஆகவே இதை மறு ஆய்வு செய்து முறையான சேர்க்கை எண் ணிக்கையை மறு அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும் மறு ஆய்வு செய்த மாணவர்களின் சேர்க்கைக்கு மட்டும்தான் கட்டாய கல்வி உரிமை சட்ட நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
2014–15–ம் ஆண்டில் பள்ளிகளில் வெளிப்படையான சேர்க்கை நடைபெறவும், உண்மையான நலிந்த பிரிவு மாணவர்களுக்கு சட்டத்தின் கீழ் ஒதுக்கீட்டின் பலன் சென்றடையவும், ஒற்றை சாளர முறையில் பள்ளிக் கல்வித்துறையே மாணவர்களை தேர்ந்தெடுத்து பட்டியலை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
சேர்க்கையின் போதே முறையான வழிமுறைகளை கடைபிடிக்காமல் விட்டு விட்டால் பின்பு பல மாதங்கள் கழித்து முன்பு நடைபெற்ற சேர்க்கைகள் விதி களுக்கு புறம்பானது என்று ரத்து செய்தாலும் கூட, பள்ளிகளுக்கு அபராதம் விதித்தாலும் கூட, இதை கண்காணித்த அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுத்தாலும் கூட, தகுதி வாய்ந்த நலிந்த பிரிவு மாணவனுக்கு கிடைக்க வேண் டிய இடத்தை மீண்டும் பூர்த்தி செய்ய இயலாது. இது தகுதி வாய்ந்த மாணவ னுக்கு ஏற்படும் இழப்பாகும். ஆகவே இது குறித்து தெளிவான விதிமுறை களை வகுக்க வேண்டும்.
தமிழக அரசின் அரசாணையில் விதிகள் தெளிவாக இல்லாத காரணத்தல் இந்
த சட்டத்தை அமுல் படுத்தும்போது பள்ளிகள், பெற்றோர்கள் அதிகாரி களுக்கு பல குழப்பங்கள் ஏற்படுகிறது. அதனால் விதிகள் தெளிவாக வகுக்கப்பட வேண் டும். சி.பி.எஸ்.சி பள்ளிகளில் இந்த சட்டப்படி 25 சதவீத இட ஒதுக்கீடு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. மேலும் நடைபெற்ற சேர்க்கைகளை ஆய்வு செய்ய ஒரு பள்ளிக்கு கூட அதிகாரிகள் செல்ல வில்லை. ஆகவ வரு கிற கல்வியாண்டில் ஒற்றை சாளர முறையில் சி.பி.எஸ்.சி நிர்வாகமே மாண வர்களை தேர்ந்தெடுத்து பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் இந்த சட்டத்தில் இடஒதுக்கீட்டின் கீழ் பெற்றோர்களின் ஆண்டு வரு மானம் தமிழ்நாட்டில் ரூ.2 லட்சம் வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களைவிட அதிகம் ஆகும். ஆகவே அதிகமான விண்ணப் பங்கள் வரும்போது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை என்று அரசு விதிகளை வகுக்க வேண்டும். மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் இணைய தளத்தில் ஒவ்வொரு பள்ளியின் நுழைவு வகுப்பு எது என்பதையும், எந்த பள்ளிக்கு எந்தெந்த பகுதியில் வசிக்கும் மாணவர்கள் தகுதி உடையவர் கள் என்பதும் வெளியிடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment