தமிழகத்தில் கடந்தாண்டு கார் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ததற்கு காப்பீடு இழப்பீடு தொகை வழங்குவதில் தமிழக அரசு மிகவும் காலதாமதம் செய்து வரு வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து பயிர்களும் கருகியது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு உழுந்து பயிருக்கு ரூ.36 பாசிப்பயறுக்கு ரூ.34ம், கம்பு பயிருக்கு ரூ.65ம், மக்காச்சோளத்திற்கு ரூ.137ம், பருத்திக்கு ரூ.356ம், எண்ணை வித்துக்களுக்கு ரூ.79ம், சோளத்திற்கு ரூ.48ம் என அனைத்து வகை பயிர்களுக்கும் ஏற்ற வகையில் பயிர் காப்பீடு பீரிமியம் தொகை செலுத்தினர். ஆனால் கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்தற் கான காப்பீட்டு தொகையை வழங்க அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத் தும் இதுவரை வழங்கப்படவில்லை.
காப்பீட்டு தொகை வழங்காத நிலையில் இந்தாண்டு வேறுவழியின்றி வெளி யிடங்களில் கடன் பெற்று, நகைகளை அடகு வைத்தும் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு விவ சாய தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு கடந்தாண்டு பயிர் காப்பீட்டு திட்டத் தில் காப்பீடு செய்ததற்கு காப்பீட்டு இழப்பீடு தொகை உடனடியாக வழங்க கோரி விவசாயிகள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தியும் நடவடிக் கை இல்லை. இதனால் விவசாயிகள் வேதனையும் ஏமாற்றமும் அடைந்துள் ளனர்.
இதுகுறித்து மதிமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் வரதராஜன் கூறுகையில், தமிழகத்தில் சுமார் 2 மில்லியன் விவசாயிகள் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். 35 வகையான பயிர் களுக்கு காப்பீடு செய்யலாம் என அரசு அறிவித்தது. இதன்அடிப்படையில் கடந்த ஆண்டில் பல்வேறு பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு பீரிமியம் தொகை செலுத்தினர். கடந்த ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரமும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும் அரசு நிவாரணம் வழங்கியது.
இந்த மனுவிற்கு பதிலளித்து வேளாண்மை இயக்குநர் ராஜேந்திரன் அனுப்பி
யுள்ள கடிதத்தில், 2012-13ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இந் திய வேளாண் காப்பீடு கழகத்தினால் ரூ.740.805 கோடிக்கு இழப்பீடு தொகை கணக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
யுள்ள கடிதத்தில், 2012-13ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இந் திய வேளாண் காப்பீடு கழகத்தினால் ரூ.740.805 கோடிக்கு இழப்பீடு தொகை கணக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மானியத்தில் மாநில அரசின் பங்கு தொகையான ரூ.303.405 கோடியை இந்திய வேளாண் காப்பீடு கழகத்திற்கு விடுவிக்க அரசுக்கு கருத்துரு அனுப் பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. மேலும் கருத்துருவின் அடிப்படை யில் அரசாணை பெறப்பட்டதும் இந்திய வேளாண் காப்பீடு கழகம் மூலம் விவசாயி களுக்கான நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment