Saturday, December 14, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 2

‘சிவகாமியின் சபதம்’ #வைகோ வின் இலக்கியச் சொற்பொழிவு

கல்கி நாவல்களின் தொடர்ச்சி

அமரர் கல்கி அவர்கள், பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது, பல கேள் விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தா ளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னாரே, அந்த அடிப்படை யில்,மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப்பிராட்டியையும் அருள் மொழி வர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத் தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தையும், ‘குலோத்துங் கன் சபதம்’ என்ற நாவலையும் எழுதிய விக்கிரமன் அவர்கள், இந்த விழாவுக் குத் தலைமை தாங்குகிறார்.

‘சேது பந்தனம்’ ‘ஈழவேந்தன் சங்கிலி’ போன்ற சரித்திர நாவல்கள் எழுதிய கவு தம நீலாம்பரனுக்கு இங்கே விருது வழங்கப்பட்டது. சரித்திர நாவல்களைப் பலரும் எழுதி இருக்கிறார்கள். ‘கயல்விழி’யும், ‘வேங்கையின் மைந்தனும்’ அகிலன் தந்தார். அற்புதமான நாவல்களைப் படைத்து இருக்கக்கூடிய மணி வண்ணன் என்ற பெயரில் ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’ நாவல்களை எழு திய நா. பார்த்தசாரதி அவர்கள், ‘பாண்டிமாதேவி’ , மணிபல்லவம்’ என்ற பெயர் களில் அருமையான சரித்திர நாவல்களை எழுதினார்கள்.

அப்படி அதே உணர்வோடுதான் ‘கன்னிமாடம்’ தொடங்கி ‘ராஜமுத்திரை’வரை யில்,‘யவனராணி’, ‘மன்னன் மகள்’ என எத்தனையோ நூல்களை எழுதிக் குவித்தார் சாண்டில்யன். இப்படிப் புகழ்மிக்க எழுத்தாளர்கள் பலரும், சரித்திர நாவல்களை எழுதி இருக்கிறார்கள்.

இங்கே ‘சிவகாமியின் சபத’த்தைப் பற்றிப் பேசுகிற காரணத்தால், தமிழிலே சரித்திர நாவல்களை தந்தவர்களைச் சொல்ல வேண்டியது என் கடமை. எண் ணற்ற சிறந்த எழுத்தாளர்கள் சரித்திர நாவல்களை எழுதி இருக்கிறார்கள் என் கிறபோது, ‘பொன்னர் சங்கர் - ரோமாபுரிப் பாண்டியன் - பாயும்புலி பண்டாரக வன்னியன் - தென்பாண்டிச் சிங்கம்’ஆகிய வரலாற்று இலக்கியங்களை டாக் டர் கலைஞர் அவர்கள் தந்தார்கள். ‘வீரபாண்டியன் மனைவி’ என்று நெடுநாள் களுக்குத் தன்னுடைய ‘காதல்’ பத்திரிக்கையில் அரு. இராமநாதன் எழுதி வந் தார். ‘திருச்சிற்றம்பலம்’ என்கிற அற்புதமான சரித்திர நாவலை ஜெகசிற்பியன் தந்தார். ‘குடவாயில் கோட்டம்’ என்கின்ற நாவலை கோவி. மணிசேகரன் தந்தார்.

சரித்திர நாவல்களின் சிறப்பு

‘சரித்திர நாவல் என்பது, எண்ண அற்புதத்தையும் இயல்பையும் ஒன்றாக இணைக்கின்ற அரிய கலை என்று சொன்னான் வால்டர் ஸ்காட். அவன் சரித் திர நாவல்களை அழகாகத் தந்தவன், 18ஆம் நூற்றாண்டில் ஆங்கில நாட்டில், அவன் எழுதிய ‘ஐகோவா’ என்கின்ற அற்புதமான சரித்திர நாவல் ,அதைப் போ லத்தான் அலெக்ஸாண்டர் டூமாஸ் எழுதிய ‘மூன்று வீரர்கள்’ (Three Musketeers) இப்படிப்பட்ட நூல்களை எல்லாம் நான் குறிப்பிடுகிற வேளையில், நம்முடை ய இராஜகோபாலன் அவர்கள் பிரெஞ்சுப் புரட்சியைப்பற்றி இங்கே சொன்னார் கள்.‘பிரெஞ்சுப் புரட்சி’ அதிலே ரோபர்ஸ்பியரை வெட்டுப் பாறைகளில் கொண்டுபோய்த் தலைகளைத் துண்டிக்கிற இடத்திலே, அவன் தலையும் துண்டிக்கப்பட்டதே அந்த ரோபர்ஸ்பியரையும் கதாபாத்திரமாக்கி கார்லைல் எழுதினான்.

கார்லைல் எப்பேர்ப்பட்ட எழுத்தாளன்! ‘வலிமை அற்றவனின் பாதையில் தடையாக இருக்கின்ற கருங்கல் பாறை, வலிமை மிக்கவனின் பாதையில் இருந்தால், அதுவே படிக்கட்டாக மாறும்’ என்று சொன்னார். அதைச் சுட்டிக் காட்டியவர் அறிஞர் அண்ணா. எல்லை கடந்த பெருமையைப் பெற்றவர் கல்கி ஆசிரியர். மாணவப் பருவத்தில் இருந்து நான் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வன்.

கல்கியின் சிறைவாசம்

கல்கியின் புகழ் விழாவில் கல்கியைப் பாராட்டுகிறானே என்றால், நாட்டின் விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட கல்கி அவர்கள், சோழ மண்டலத்தில் புத்தமங்கலத்தில் பிறந்த கல்கி அவர்கள், நாட்டு விடுதலைக் காக மூன்று முறை சிறை சென்று இருக்கிறார். அந்த சிறையின் அனுபவங்க ளைப் பற்றி. சிறைச்சாலைக்குக் கொண்டு செல்கிற போது முசிறி கிளைச் சிறையில் 34 நாள் கொண்டுபோய் வைத்து இருந்து, அதற்குப் பிறகு திருச்சி நடுவண் சிறைச்சாலைக்குக் கொண்டு போகின்ற வேளையில், அவருடைய கால்களில் விலங்கு பூட்டப்பட்டு, அதில் சங்கிலி போடப்பட்டு இருக்கிறது. 14 நாட்கள் அந்தக் காப்பும் சங்கிலியும் அவர் கால்களைப் பிணைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த முறையில்தான் அவர் சிறைக்கோட்டத்திற்குப் போனார்.

நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவர், அதேகாலத்தில் விடுதலைக்குப் போராடடிய ஒரு இயக்கத்தில் பற்றுகொண்டு, அந்த இயக்கத்தின் மதிப்புமிக்க தலைவராக இருந்த ராஜாஜியின் நேசத்திற்கு உரிய நண்பராக இருந்தார். 1947 இல், திராவிட இயக்கம் அனலாக எழுந்து கொண்டு இருந்த காலம். தந்தை பெரியார் அவர்கள் பக்கத்தில், அறிஞர் அண்ணா இருந்த காலம். திராவிடர் கழ கத்தில் அறிஞர் அண்ணா இருந்தபோது,கல்கி அவர்களின் அணுகுமுறைக்கு நேர் எதிர்நிலையில் அண்ணா அவர்கள் இருந்தபோதுதான், 1947 டிசம்பர் திங் களில், ‘கல்கி’ இதழில் ஆசிரியர் எழுதுகிறார்.


இங்கே ஓர் பெர்னார்ட் ஷா

1947 நவம்பர் 15 அன்று, திருச்சியில் ரத்தினவேல் தேவர் மண்டபத்தில் நடிப்பு இசைப் புலவர் கே.ஆர். இராமசாமி அவர்கள் நடித்த, அண்ணாவின் ‘ஓர் இரவு’ நாடகத்தைப் பார்க்கிறார். அந்த நாடகத்திற்குக் கல்கி தலைமை தாங்குகிறார். கல்கியின் பின்னணி, அவருடைய அரசியல் ஈடுபாடு, நாட்டு விடுதலைக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட நிலை. இச்சூழ்நிலையில் அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார். என்ன அழகாக வருணிக் கிறார்!

“தற்காலத்து நாடகக் கலையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித் த மேதாவிகள், பெர்னாட் ஷாவையும், கிப்சனையும் நினைத்து ஒரு குரல் அழு வது வழக்கம். “நாடகம், கீடகம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால், ஒரு பெர்னாட் ஷாவுக்கும், ஒரு கிப்சனுக்கும் எங்கே போவது? திரு டப் போக வேண்டியதுதான்” என்று சொல்லுவார்கள். அப்படியெல்லாம் திருட வும், கிருடவும் போக வேண்டாம், தமிழ்நாடு நாடக ஆசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன். இரண்டு வாரத்துக்கு முன்பு திருச்சினாப்பள்ளியில் ‘ஓர் இரவு’என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது .பார்த்ததன் பயனாக ,"இதோ ஒரு பெர்னாட்ஷா தமிழ்நாட்டில் இருக்கிறார் !கிப்சனும் இருக்கிறார் !இன்னும் கால்ஷ்வொர்தியும் கூட இருக் கிறார் " என்று தோன்றியது .நடிக்கக்கூடிய நாடகத்தை எழுதும் ஆற்றல் மிக வும் அரியது .அந்த ஆற்றல் திரு .அண்ணாதுரையிடம் பூரணமாக அமைந்தி ருக்கிறது என்பதை 'ஓர் இரவு நாடகத்தில் கண்டு மகிழ்ந்தேன்”.

இது கல்கியில், கல்கி ஆசிரியர் அவர்கள் எழுதியது!

ஒரு எழுத்தாளர், இன்னொரு எழுத்தாளனைப் பாராட்டி எழுதுகிறார். அரசியல் எல்லைகளைக் கடந்து எழுதுகிறார். ஆகவேதான், இலக்கிய உலகில் அரசியல் எல்லைகள் உடைந்து நொறுங்கிவிடும். கல்கி ஆசிரியர் அண்ணாவைப்பற்றி இப்படி எழுதினார்கள் என்றால், ‘சரித்திரத்தின் பெருமைகளை அடுப்பங்கரைப் பெண்களும் எட்டிப் பார்க்கின்ற நிலையை உருவாக்கியவர்’ என்று கல்கியைப் பற்றி அண்ணா எழுதினார்.

தொடரும் ....

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 1

No comments:

Post a Comment