Wednesday, December 4, 2013

காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசை வலியுறுத்தி டெல்டா பகுதிகளில் காவிரி உரிமை மீட்புக்குழு வினர் நேற்று (03.12.13) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் #மதிமுக உட்பட பல கட்சிகள் பங்கேற்றன .

தஞ்சையில் 

ரயில்வே ஸ்டேஷன் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் உதய குமார், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், வக்கீல் நல்லதுரை, அயனாவரம் முருகேசன் உள்பட மீட்புக்குழு நிர்வாகிகள் பங் கேற் றனர்.

தொடர்ந்து, தஞ்சை காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கூறியதாவது: தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், அடுத்தாண்டு ஜன., 28ம் தேதி வரை தினமும் 2 டி.எம்.சி., தண்ணீரை, காவிரி மேற்பார்வைக்குழு உத்தர வுப்படி கர்நாடகா மாநில அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அப்போது தான் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் பயிர்கள் கருகி விடும்.தமிழகத்துக்கான பங்களிப்பு நீரை தர கர்நாடக மாநில அரசு மறுத்து வருகிறது. இதை வழங்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட வேண்டும். காவிரி மேலாண் வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும்.

தமிழகத்தில், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, பிரதிநிதிகளை அழைத்துச் சென்று, பிரதமரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும். காவிரி எழுச்சி நாள் அறிவித்து, தமிழக அரசு பேரணியை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கள் கூறினர். இப்போராட்டத்தில், ம.தி.மு.க.,வினர், விவசாயிகள் சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

திருச்சியில் 

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மலர் மன்னன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் சேரன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச் செயலாளர் இந்திரஜித், தமிழ் தேச பொதுவு டைமை கட்சி கவித்துவன், தமிழக விவசாய சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜா சிதம்பரம், தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில கொள் கை பரப்பு துணைச் செயலாளர் விடுதலை அரசு, பெரியார் பாசறை அன்பழ கன், தமிழ் தேச பொதுவுடைமை கட்சி முத்துக்குமாரசாமி, விடுதலை தமிழ் புலிகள் அக்பர்அலி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் இளவழகன், திராவிடர் விடுதலை கழகம் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள்.

சிதம்பரத்தில்

வடக்கு வீதி தலைமை அஞ்சலக வாயிலில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில், 

ம.தி.மு.க. குமராட்சி ஒன்றியச் செயலாளர் திரு பா.இராசாராமன்,தமிழக வாழ் வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு முடிவண்ணன்,  தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் திரு. தங்க.கென்னடி, மனித நேய மக்கள் கட்சி நகரப் பொறுப்பாளர் திரு ஜமால் உசேன், நாம் தமிழர் கட்சி நகர பொறுப் பாளர் திரு இராமதாசு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க செயற்குழு உறுப்பினர் திரு விடுதலைச்செல்வன், மக்கள் உரிமைக் கூட்ட மைப்பு மாவட் டத் தலைவர் திரு கீ.செ.பழமலை, முற்போக்கு சிந்தனையாளர் இயக்க நகரத் தலைவர் திரு.இரா.ராகவேந்திரன்,தமிழக இளைஞர் முன்னணி தமிழக துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.



No comments:

Post a Comment