Tuesday, December 17, 2013

இசைப்பிரியா போர்க்குற்றத்தின் சாட்சி -தீபச்செல்வன்

அண்மையில் பிரித்தானியாவில் உள்ள சேனல்-4 என்ற தொலைக்காட்சி, தமி ழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உத்தியோக பூர்வத்தொலைக்காட்சியான
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப் பிரியாவின் இறுதி நிமிடக் காட்சி ஒன்றை ஒளி பரப்பியது. மாபெரும் இன அழிப்புப் போர் ஒன்றின் முடிவில் அகப்பட்ட பெண் ஒருத்தி மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் போர்க்குற்றங்களின் ஆதாரமாக அந்தக் காட்சி அமைந்துள்து. குறித் த காட்சி ஈழத்தை மாத்திர மின்றி உலகமெங்கும் வசிக்கும் தமிழர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
சிங்கள அரசு நடத்திய மாபெரும் குற்றங்கள் நிரம்பிய இனப்படு கொலைப் போரின் ஆதாரமாகவும்,அது அமைந்திருந்தமை சிங்கள அரசையும் உலுப்பியி ருக்கின்றது.

ஒரு போரில் குழந்தைகளையும்,பெண்களையும் முதியவர் களையும் கொல் வது மரபல்ல.அவர்கள் மீது இரக்கம் காட்டி அவர்களை பாதுகாப்பான பிரதே சங்களுக்குச் செல்லுமாறு கோருவது பண்டைய கால போர் மரபு. ஆனால், சிங்கள அரசைப் பொறுத்தவரையில் குழந்தைகள் பெண்கள், முதியவர்கள் என்று யாவரையும் ஒரு இடத்தில் வருமாறு அழைத்துவிட்டு அந்த இடத்தில் குண்டுகளைப் போட்டு கொலை செய்வதே போர் மரபு.ஈழப் போர் தொடங்கிய காலம் தொட்டு குழந்தைகளும், பெண்களும் தொடர்ச்சியாக அழிக்கப் பட்டிருக் கிறார்கள். ஏனெனில் பெண்கள் ஒரு இனத்தை உருவாக்குகிறார்கள். குழந்தை கள் ஒரு இனத்தின் புதிய சந்ததி.அதன் காரணமாகவே ஈழத் தமிழ் இனத்தை அழிப்பதற்காக குழந்தைகளையும் பெண் களையும் சிங்கள அரச படைகள்
தேடித் தேடிக் கொலை செய்கின்றன.

ஈழத்தில் இவ்வாறு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர் களின் பிரதிநிதியாக இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் குழந்தை பாலச்சந்திரன். மற்றையவர் இசைப்பிரியா. இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்திய
மாபெரும் குற்றங்கள் நிரம்பிய இனப்படுகொலைப் போரில் குழந்தைகள் எப் படிக் கொல்லப் பட்டார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு இசைப் பிரியா சாட்சி. தனிப்பட பாலச்சந்திரன், இசைப்பிரியா என்று நாம் கருத முடி யாது. பாலச்சந்திரன்களும்,இசைப்பிரியாக்களும் இவ்வாறு சிங்கள இனப் படு கொலை அரசால் கொன்றழிக்கப்பட்டார்கள் என்பதுவே அங்கு அம்பலமா கின் றது. குழந்தைகள் மீதும் பெண்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும்.அவர்களை எதுவும் செய்யக்கூடாது என்கிற மரபைமீறி அவர்கள் மீது மிகப்பெரிய மனித
உரிமை மீறலை சிங்களப்படைகள் நிகழ்த்தின என்பதற்கு ஆதாரங்களேஇவை.


பிரித்தானியாவில் உள்ள சேனல்-4 தொலைக்காட்சி ஈழத்தின் முள்ளிவாய்க் கால் பகுதியில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் பல ஆதாரங்களைவெளி யிட்டு உள்ளது. முதன் முதலில் இலங்கை அரச படைகள் போரின் இறுதியில் கைப்பற்றிய ஆண்கள் சிலரை நிர்வாணமாக இருத்தி பின் பக்கமாக தலைக ளில் சுடும் காட்சியை வெளியிட்டது அதன்பின்னர் கொல்லப்பட்ட இசைப்பிரி யாவின் படங்களை வெளியிட்டது. இறுதி யுத்தக்களத்தில் சிறுவர்கள் உட்பட சிலர் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டு இருத்தப்பட்டிருப்பதை ஒளிபரப்பியது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மார்பில் துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கும் காட்சியையும் பின் னர்  பாலச்சந்திரன் இராணுவத் தின் பதுங்குகுழி ஒன்றில் உயிருடன் இருக்கும் காட்சி யையும் ஒளிபரப்பியது. தற்பொழுது இசைப்பிரியா இராணுவத்திடம் உயிருடன் உள்ள காட்சியை சேனல்-4 வெளியிட்டிருக்கிறது.

இசைப்பிரியா கொல்லப்பட்டுக்கி டக்கும் புகைப்படம் வெளியான பொழுது பிர பாகரனின் மகள் துவாரகாவே கொல்லப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால், சேனல்-4 தொலைக்காட்சி கொல்லப்பட்ட புகைப்படத்தில் இருப்பது துவாரகா அல்ல, இசைப்பிரியா என்று உறுதிப்படுத்தித் தெரிவித்தது.இறுதி யுத்தத்தின் போது பிரபாகரனின் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று சிங்கள அரசப்படைகள் கொடும் வெறியோடு அலைந்தன.ஈழப் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்றும்,இனியும் ஈழத் தமிழர்கள் போராடக்கூடாது என்றும் சிங்கள அரசு திட்டமிட்டது. பிரபாகரனின் குடும்பத்தை தப்ப விட்டால் அந்தப் பரம்பரை யில் வருபவர்கள் மீண்டும் துப்பாக்கியை ஏந்தக்கூடும் என்று அஞ்சிய சிங்கள
அரசு பிரபாகரனின் குடும்பத்திற்கு முள்ளிவாய்க்காலில் வலைவீசித்திரிந்தது.

பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி ஏற்கனவே யுத்தக்களத்தில் மர ணம் எய்தி இருந்த செய்திகள் உடனடியாகவே வெளியானது.

பிரபாகரனின் தந்தை மற்றும் தாயார் சிறை வைக்கப்பட்டு,உளவியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டு இறந்தனர்.பிரபாகரனின் இளைய மகனையும் பிர பாகரனின் மகளையும் சிங்களப் படைகள் தேடிய பொழுதே பாலச்சந்திரனும் இசைப்பிரியாவும் அகப்பட்டுள்ளனர். 12 வயதே யான பாலச்சந்திரன் பிஞ்சு மார்பு மீது துப்பாக்கிகள் வைக்கப்பட்டு கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டான். பிரபாகரனின் மகள் என்று நினைத்தே இசைப்பிரியா போர்க்களத்தில் சிங்கள
இராணுவத்தால் கொடூரமாக கற்பழித்துக் கொல்லப்பட்டார்.கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் படத்தை துவாராகவின் படம் என்று வெளியிடப்பட்டதும்
சேனல்-4 தற்பொழுது வெளியிட்டு இருக்கும் காட்சியில் இவள் பிரபாகரனின் மகள் என சிங்கள இராணுவத்தினன் ஒருவன் கூறுவதன் மூலமும் இதை அறி ய முடிகிறது.

‘அது நான் இல்லை’ என்று இசைப்பிரியா குறிப்பிடுகிறார்.ஆனால், இசைப்பிரி யாவை பிரபாகரனின் மகள் என்றே சிங்களப் படைகள் முடிவு செய்து இருக் கின்றன. இசைப்பிரியா மறுத்தபோதும் சிங்கள படைகள் அதை நம்பவில்லை.
இசைப்பிரியா யுத்தக் களத்தில் நிற்கும் காட்சியை மனித இனம் கண் கொண்டு பார்க்க முடியாது.நந்திக் கடற்கரை ஓரமாக நிர்க்கதி நிலையில் நிற்கின்றார். ஈழப்போராட்டம் என்கிற ஈழ மக்களின் வாழ்வுக்கான போராட்டத்தில் போரா ளியாக இணைந்த இசைப்பிரியா யுத்தக்களத்தின் முடிவில் ஒரு நிராயுதபாணி யாக நிற்கின்றார். பெண்களின் வீரமும் தீரமும் சிறந்து விளங்கியது. ஈழப்போ ராட்டம் தமிழ் மரபில் பெண்கள் தெடார்பாக இருந்த பழமைக் கருத்தை எல் லாம் உடைத்து பெண்களை தலைவர்களாகவும், போராளிகளாகவும், சிறந்த செயற்பாட்டாளர்களாகவும் மாற்றியது ஈழப்போராட்டம்.எழுத்திலும் செயலி லும் புதிய தொரு சூழலைப் பெண்கள் உருவாக்கினார்கள். அவ்வாறான எழுச்சி யான சூழலில் ஒரு ஊடகப்போராளியாக செயல்பட்டவர் இசைப்பிரியா.

2006 ஆம் ஆண்டில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப் பாளராக வேலைக்குச் சேர்ந்தேன். தமிழீழத் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட
காலத்தில் செய்திப் பிரிவுக்கும் பொறுப்பாக இசைப்பிரியாவே செயல்பட்டார். பின்னர் தொலைக் காட்சியின் மகளிர் பிரிவில் பல்வேறுபட்ட படைப்புகளை யும் உருவாக்கும் நடவடிக்கையில் இசைப்பிரியா ஈடுபட்டிருந்தார். இசைப்பிரி யாவின் முகம் ஈழத்து மக்களுக்கு மிகவும் பரிச்சயமானது. விடுதலைப்புலி களின் ஊடகப் பிரிவான ‘நிதர்சனம்’ துறை போராட்ட ஆரம்ப காலங்களில்
திரைப்படங்கள், குறும்படங்களைத் தயாரித்ததுடன் ‘ஒளிவீச்சு’ என்கிற வீடி யோ சஞ்சிகையை வெளியிட்டது.செய்தி, கள நிலவரம், சண்டைக் காட்சிகள், குறுந்திரைப்படம், பாடல், விவசாயம், பொருளாதாரம், கலைஞர் நேர்காணல்
என்று பல்வேறுபட்ட விடயங்கள் அடங்கிய வீடியோ சஞ்சிகை மாதம் மாதம் வெளியிடப்படும்.போர் நடந்த பிரதேசங்களுக்கான விநியோகங்களை தடை செய்து இருந்த அன்றைய காலத்தில் அது முக்கிய ஊடகமாயிருந்தது.

அந்த வீடியோ சஞ்சிகையான ஒளிவீச்சை பெரும்பாலும் இசைப் பிரியாவே தொகுத்து வழங்குவார்.ஈழ மக்களிடம் ஒளிவீச்சின் மூலம் அறிமுகமான இசைப்பிரியா பின்னர் திரைப்படங்கள், பாடல் கள் மூலமும் அறிமுகமானார்.
போராளி நிமலா இயக்கிய ‘ஈரத்தீ’ என்ற திரைப்படத்தில் இசைப்பிரியாதான் பிரதான பாத்திரம்.நிமலா இயக்கிய ‘வேலி’ என்ற குறுந்திரைப்படத்தில் நடித் தார்.ஈழச்சினிமா என்கிற அடையாளம் நிறைவாகக் காணப்படுவதற்கு இந்தப் படங்களில் இசைப்பிரியா இயல்பு நிரம்ப நடித்திருப்பதே காரணமாகும். ஈழத்தி ரைப் படங்களில் வேலியும் துடுப்பும் என்னை கடுமையாக பாதித்த படங்கள். இரண்டுமே பெண்கள் சார்ந்தது. ‘வேலி’ கணவன் இராணுவக் கட்டுப்பாட்டிற் குச் சென்று கொல்லப்பட்ட பெண்ணின் கதை. அவ்வாறான பெண்கள் மறும ணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை அப்படம் வலியுறுத்துகிறது.

கணவன் இல்லாமல் வாழும் ஒரு பெண் எத்தகைய துயரங்களை சந்திக்க நேரி டுகிறது என்பதை இசைப்பிரியாவின் இயல்பான நடிப்பு ஆழமாகப்பதிவுசெய்து
இருக்கிறது. அன்றைய காலத்தில் என்னை பாதிக்கும் ஈழப்படங்களை குறித்து பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தேன். வேலி மற்றும் துடுப்பு முதலிய இரண்டு திரைப்படங்கள் குறித்து வீரகேசரிப் பத்திரிகைக்கு ‘இரண்டு பெண்ணி யப்படங்கள்’ என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினேன். தொலைக்காட்சி
அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுது குரல் ஒலிப்பதிவு செய்யும்பொழு தும் ஒளிபரப்புக் கலையகத்திலும் மாதாந்திர கலந்துரையாடல்களின் பொழு தும் இசைப்பிரியாவைக் காண்பது உண்டு. ‘எங்கட படத்தைப் பற்றி வீரகேசரி யில் எழுதியிருந்தியள்.நன்றி. நல்லா இருந்தது சந்தோச மாயிருந்தது.நிமலாக் கவும் சொல்லச் சொன்னாவா’ என்று சொன்னார்.

தொலைக்காட்சியில் ‘துளிகள்’என்று ஒரு கவிதை விவரண நிகழ்ச்சி ஒளிபரப் பாவதுண்டு.அதில் புதுவை இரத்தினதுரை, ஆதிலட்சுமி, வீரா போன்ற ஈழக்
கவிஞர்களின் கவிதைகள் அடிக்கடி ஒளிபரப்பாகும். அதை நானும் அவ்வப் போது எழுதிச் செய்திருக்கிறேன். இசைப்பிரியா உள்ளிட்ட பெண் போராளி களும் அந்தத் தொகுப்பினைச் செய்து இருக்கிறார்கள்.

ஒருநாள் என்னிடம் வந்து கவிதை ஒன்று துளிகள் நிகழ்ச்சிக்காக எழுதும்படி கேட்டார். ‘தருகிறேன்’ என்று சொல்லி வாரக் கணக்காகி மாதக் கணக்கியது. ‘தீபச்செல்வன், என்ன மாதிரி கவிதை தருவிங் களோ? என்று காணும்பொழு
தெல்லாம் ‘எழுதித் தருகிறேன், எழுதித் தருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டி ருந்தேன்.பின்னர் ஒருநாள் அன்றைய சூழலை வைத்து ஒரு பிரதி எழுதிக் கொ டுத்தேன். சில நாட் களில் அதற்கு குரல் கொடுத்து படத் தொகுப்பாக்கம் செய் தார்.கவிதைக்கு ஏற்ப குரல் கொடுத்து அதற்கு ஏற்ப காட்சிகளையும் தொகுத் திருந்தார்.

இசைப்பிரியா என்றதும் எனக்கு ‘துயிலறைக் காவியம்’ என்ற விவரண நிகழ்ச் சிதான் ஞாபகத்து வருகிறது. அங்கு பணிபுரிந்த ஒவ்வொரு படைப்பாளிகளின்
பின்னாலும் அவர்களின் பெயர்கள் அடைமொழியாக இருக்கும்.அம்பலம் தமிழ்க்கவி, வேட்டைக்காரன் அஞ்சன், சிறகுகள் அம்புலி, அறிவுத்தேடல் தீபச் செல்வன் என்ற இந்த வரிசையில் ‘துயிலறைக் காவியம் இசைப்பிரியா’ என்று அழைக்கப்படுவது உண்டு.

இசைப்பிரியா குரல் கொடுத்து ஒளிபரப்பாகி வந்த துயிலறைக்காவியம் என்ற நிகழ்ச்சி அந்த நிகழ்ச்சியை எழுது பவரைவிட இசைப்பிரியாவின் குரலையே
அதிகமாய் நினைவு படுத்துகிறது.மிக இயல்பான எதார்த்தமான நவீனத் தன் மை மிக்க வாசிப்பும் குரலும் அந்த நிகழ்ச்சியை மிகவும் பெறுமதியாக்கியது.

இசைப்பிரியாவின் குரலில் ஒலித்த அந்த‘துயிலறைக்காவியம்’என்ற நிகழ்ச்சி மாவீரர்களைப் பற்றியது.துயிலறைக் கடிதங்கள் போல கடித அமைப்பில் உரு வாக்கப்படும்.மாவீரர் ஒருவரது வரலாறு குறித்து பதிவு செய்யும் அந்த நிகழ்ச் சியில் மாவீரர்களைப் பற்றி அவர்களது பெற்றோர், நண்பர்கள், சக போராளி கள் பொறுப்பாளர்கள்,தளபதிகள், தலைவர் பிரபாகரன் என அனைவரும் சாட் சியமாக அவர்களின் கதையைப் பதிவு செய்வார்கள்.

செவ்வாய்க்கிழமைகளில் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். ஈழக்கனவுக்காக போ ராடி வீழ்ந்த போராளிகளுக்கு அஞ்சலி யாகவும், பதிவாகவும் நினைவு படுத்த லாகவும் முக்கியம் பெறும் அந்த நிகழ்ச்சியில் இசைப் பிரியாவின் குரல் மிகத் தனித்துவமாக ஒலித்திருக்கிறது.

தேசியத் தொலைக்காட்சியில் அவர் பல வேலைகளைச் செய்து இருக்கிறார். படத்தொகுப்பு செய்வது, படைப்பது, பிரதிகளை எழுதுவது, காட்சிப் பிடிப்பு களை இயக்குவது, காட்சிகளை தேடிப் பெறுவது, கேமராக்களை கையாள்வது என எல்லாத் துறையிலும் அறிவுபூர்வமாகவும் நுட்பமாகவும் இயங்கினார். நாளுக்கு நாள் ஒவ்வொரு துறையிலும் அவர் வளர்ச்சி பெற்று வந்தார்.அன் றைய நாட்களில் பெண் போராளிப் படைப்பாளிகளின் தொலைக்காட்சித் தயா ரிப்புகள் தான் மிகச் சிறந்தவை என்கிற அளவுக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது.

செய்தித் தொகுப்பாளராகவும் செய்தி எழுதுபவராகவும் பணியாற்றிய இசைப் பிரியா உதிரிகளாக பல நிகழ்ச்சிகளுக்கு குரல் வழங்கியிருக்கிறார். நடனத்
திறமையும் கொண்டவர். நேர் காணல்களிலும் ஈடுபட்டு இருக்கிறார். கலை ஞர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளையும் ‘சாலை வழியே’ என்ற அபிப்பிராய
நிகழ்ச்சிகளையும் செய்து இருக்கிறார்.

‘இராஜகுமாரியின் கனவு’ என்ற குறும்படத்தை இயக்கியும் உள்ளார். இசைப்பி ரியா ஒரு செய்தி வாசிப்பாளர் மட்டுமல்ல, அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித்
தொகுப்பாளர், ஈழத்து திரைப்பட நடிகை, படத் தொகுப்பாளர்,பின்னணிக் குரல் கலைஞர்,நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இப்படி பல ஆளுமை கொண்டவர்.

தன்னை ஈழத்து மக்களுக்கும் போராட்டத்திற்குமான ஒரு முழுமையான ஊட கப் போராளியாகவே இசைப்பிரியா அர்ப்பணித்தவர். ஒரு குழந்தையை சுமந்து
இருந்த இசைப்பிரியா இரக்கமற்ற வகையில் கொல்லப்பட்டு இருக்கிறார்.

இசைப்பிரியா தொடர்பான படுகொலையை மறுக்கும் சிங்கள இராணுவம் அவர் புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர் என்று சொல்லுகிறது. ‘புலிகள்
இயக்கத்தில் இருந்த பெண்ணாக இருந்தால் இப்படித்தான் சித்திரவதை செய்து கொலை செய்வோம்’ என்றே சிங்கள இராணுவம் வெளிப்படையாக சொல்லு கிறது.

இதற்கு முன்னர் மனித இனம் இத்தகைய துயரங்களைச் சந்தித் திருக்கிறதா? உலகில் மனித இனங்கள் இவ்வாறு எல்லாம் அநீதிக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றதா? ஈழத்தில் இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் இடம் பெற்றி ருக்கின்றன.

மனித குலத்திற்கு விரோதமான இந்த அநீதிகள் தண்டிக்கப்பட வேண்டியவை. ஒரு ஈழத்தவளாக,ஒரு ஈழப் பெண்ணாக இருந்தமை யினால் இசைப்பிரியா வுக்கு இந்த அநீதி நேர்ந்திருக்கிறது. ஒரு பெண்ணுக்கு நேர்ந்த இந்த அநீதி
குறித்து உலக சமூகம் என்ன செய்யும்? சிங்களப் படைகள் இழைத்த குற்றங் கள் தண்டிக்கப் பட வேண்டியது. ஏனெனில் இனியும் உலகில் இப்படி ஒரு இனம் அழிக்கப்படக் கூடாது.இனியும் இப்படி ஒரு பெண்ணுக்கு அநீதி நேரக் கூடாது.

எமது இனத்திற்கு நேர்ந்த அநீதி எமது சகோதரிக்கு நேர்ந்த அநீதி, உலகத்தில் எங்கேனும் இனியும் நிகழக்கூடாது.

நன்றி: குமுதம் தீராநதி - டிசம்பர் 2013

No comments:

Post a Comment