Wednesday, December 11, 2013

நாடு நலம் பெற, வாழ்வு வளம் பெற அயராது பாடுபடும் தலைவர் வைகோ!

நாடு நலம் பெற, வாழ்வு வளம் பெற அயராது பாடுபடும் தலைவர் #வைகோ வோடு நாமும் பாடுபடுவோம் என்று விருதுநகர் மாநாட்டில் ஆர்.ஞானதாஸ்
உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

66ஆண்டுகால இந்தியநாடாளுமன்ற வரலாற்றில் நாட்டின் நதிகளை இணைத் து, நாட்டை செழிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதிநீர் இணைப்பு என் ப தை தனிநபர் மசோதாவாக முதன் முதலாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் து சரித்திரம் படைத்து, தமிழர்க்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட்ட மக்கள் தலைவர் வைகோ உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்.

செய்தித்தாளிலே ஒரு கவிதைப் படித்தேன். அது அனைவரையும் சிந்திக்கத் தூண்டுகிறது.

“என் தாத்தா தண்ணீரை ஆற்றில் பார்த்தார்
நான் கிணற்றில் பார்த்தேன்
என் மகன் தண்ணீரைப் பாட்டில்களிலும்,
பாக்கெட்டுகளிலும் பார்க்கிறான்
என் பேரக்குழந்தை?”

தண்ணீர் எதிர்காலத்திலே ஒரு கேள்விக் குறியாக போகின்றது என்பதை அது சுட்டிக் காட்டுகின்றது. ஆம்! எங்கு பார்த்தாலும்,தமிழகத்திலே பல மாவட்டங்
களில் தண்ணீர் தட்டுப்பாடும்,தண்ணீர் பஞ்சமும் தலை விரித்து ஆடுகிறது. ஒரு புறம் வறட்சி ஏற்பட்டு வாடுகிறது. மறுபுறம் பெரு வெள்ளம் ஏற்பட்டு உயிர்ச்சேதமும், பொருள் சேதமும் ஏற்படுத்தி, கடலிலே போய் தண்ணீர் வீணாகக் கலக்கின்றது.

இந்த நிலையை மாற்ற வேண்டும். இதை மாற்றுவதற்கு நாட்டிலுள்ள நதி களை எல்லாம் இணைத்து கடலில் வீணாகப் போய் சேருகின்ற தண்ணீரை
தடுத்து நிறுத்தி, தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நாட்டின் பல் வேறு பகுதி களுக்கு கொண்டு சென்று அதை முறையாகப் பயன்படுத்தி நாட் டை வளப்படுத்த நமது தலைவர் அவர்கள் தொலை நோக்கு பார்வையோடு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததுதான் அந்த நதிநீர் இணைப்பு மசோதா
வாகும்.

நதிநீர் இணைப்பு மசோதாவில் பல நன்மைகளை சுட்டிக் காட்டுகின்றார். நதி கள் இணைப்பதால் வெள்ளத்தால் ஏற்படும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும்
தவிர்க்கப் படும். கூடுதலாக பல ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு கொண்டுவர லாம். அதிகமான உணவுப் பொருளை உற்பத்தி செய்யலாம். நாட்டில் விவசா யம் செழிக்கும். உள்நாட்டுப் போக்குவரத்து சரக்குகளை குறைந்த கட்டணத் தில் அனுப்பலாம்.

நெடுஞ்சாலைகளிலே வாகன விபத்து குறையும். எரிபொருள் மிச்சமாகும். அன்னிய செலவாணி மிச்சமாகும். அதிக மின் சாரம் தயாரிக்கலாம். சுற்றுச் சூழல் நன்றாக அமையும். சுற்றுலாத் துறை மேம்பாடு அடையும். புதியதாக தொழிற் சாலைகள் உருவாகி வேலைவாய்ப்புகள் பெருகும் என்று பல நன்மை களை இந்த நதி நீர் மசோதாவில் நம் தலைவர் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.



இவ்வளவு நன்மைகள் தருகின்ற நதிநீர் இணைப்பு மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ததோடு மட்டுமல்லாமல்,நதி நீர் இணைப்பை வலி யுறுத்தியும், நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நெல்லை முதல் சென்னை வரை 1600 கி.மீ தூரம் 42 நாட்கள் 3000 சீருடை அணிந்த 
தொண்டர்களோடு, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, மக்களுக்காக நடைப்பயணத்தை மேற்கொண்டார் நமது தலைவர் அவர்கள்.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் பல்லடத்தில் நடைபெற்ற கழக விவ சாய மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார்,வைகோ அவர்கள் கொண்டு வந்த நதிநீர் இணைப்பு மசோதா தான் நாடாளுமன்றத்திலே முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அதற்காக அவரைப்பாராட்ட வேண்டும். நதிநீர் இணைப் பை வலியுறுத்தி அவர் மேற்கொண்ட நடைப்பயணம்,தமிழகத்திற்கு மட்டு மல்ல, மற்ற மாநிலங்களுக்கு பயனளிக்கும் என்று பெருமையோடு பாராட் டினார். நம் தலைவர் அவர்கள் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தல் முடிந் தவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல் திட்டத்திலே, இந்த நதி நீர் இணைப்புத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்து அதை அறிவிக்கச் செய் தார். ஆனால். அதே நேரத்தில் கருணாநிதி அவர்கள் தனக்கு வேண்டிய இலா கா பட்டியலைத் தந்து கொண்டிருந்தார் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. நமது தலைவர் நாடு செழிப்பாக இருக்க வேண்டும். வளம் பெற வேண்டும். மக் கள் நலமோடு இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு செயல்பட் டுக் கொண்டிருந்தார்.

ஒரு முறை கிரேக்க ஞானி அரிஸ்டாட்டி லிடம், உயர்ந்த தலை வருக்கான இலக்கணம் என்ன வென்று கேட்டார்கள். அதற்கு அரிஸ்டாட்டில் பதில் சொன் னார்.நாடு நலமோடு இருக்க வேண்டும். நாடு செழிப்பாக இருக்க வேண்டும். மக்கள் நலமோடு வாழ வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையையும், செயல் பாட்டையும் கொண்டு இருப்பவர்தான் உயர்ந்த தலைவர் என்று கூறினார்.

நாடாளுமன்ற வரலாற்றிலே முதன் முதலாக நாட்டின் நதி களை இணைத்து எல்லா பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்
தான் தலைவர் வைகோ நதிநீர் இணைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

முல்லைப் பெரியாறு, காவிரி,தென் பெண்ணை, பாலாறு போன்ற நதிகளின் உரிமைக்காக தலைவர் அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றார். நம் தலை
வரிடத்திலே மக்கள் நலமோடு வாழ வேண்டும் என்ற சிந்தனையும் செயல் பாடும் இருப்பதால் தான் 60 ஆயிரம் குழந்தை களுக்கு இலவசமாக மஞ்சள்
காமாலை தடுப்பு ஊசிப் போட்டு மகிழ்ந்தார்.

உலகில் முதன் முதலாக ஆற்றைத் தடுத்து அணை கட்டி தண்ணீரை முறை யாகப் பயன் படுத்தியவன் தமிழ் மண்ணைக் காத்த கரிகால் பெருவளத்தான்.
அதே போன்றுதான் இந்த நாட்டில் நதிகளையெல்லாம் இணைத்து வீணாகச் செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தி நாட்டை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றத் துடிக்கிறார் தலைவர் வைகோ. அந்த கரிகால் பெருவளத்தானும், கறுப்புத் துண்டு அணிந்த வைகோவும் ஒன்றுதான் என்று கூறி விடை பெறு கிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு ஆர்.ஞானதாஸ் உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment