Monday, December 9, 2013

தேர்தல் வருமுன்னே தெளிவுறுவாய் கண்ணே!

#மதிமுக தேர்தல் பணிச் செயலாளர் கட்டிளங்காளை கழககுமார் அவர்கள் விருதுநகர் தொகுதியில் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆற்றி யுள்ள பணிகள் மாற்றாரைமருளச் செய்திருக்கிறது.

திட்டமிட்டுப் பணியாற்றிடத் தொகுதிமுழுதும் தேர்தல் பணிக்குழு அமைத்து
இருப்பது, பொங்கி வரும் புதுவெள்ளம் போல் எழுச்சியுறச் செய்திருக்கிறது
உண்மையிலேயே பாராட்டுக்குரிய செயலாகும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின் குறிக்கோளை இளைய சமு தாயத்தினர் ஏந்திச் செல்லும்போது அதற்கு இடையூறாக எந்தச் சக்தியும் குறுக் கிட முடியாது.


நினைத்ததை முடிக்கும் நெஞ்சுரம் கொண்ட இளைஞர் பட்டாளம், வசந்தத்தின் தூதுவர் வைகோ அவர்களை வெற்றி பெறச் செய்திடும் முக்கியப் பணிகளை
இப்போதே மும்முரமாகச் செய்து வருகின்றனர்.

விருதுநகர் தொகுதிக்கு 
வருகை தரும் 
பருவமழையே!

பாசமிகு நல்லுறவே!

பழகுதமிழ் இலக்கியமே!

வைகோ அவர்களே!

வருக! வருக!!

இதுபோன்ற வரவேற்பு வளைவுகள் எல்லா நகரங்களின் முகப்புகளிலும் நின்று நம்மை வரவேற்கின்றன. கழகக் கண்மணிகளின் விழிப்புணர்ச்சிக்கும் விவேகத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்ளே எந்த ஊருக்குள் சென்றாலும்
மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வாசகங்கள் அடங்கிய வண் ணப் பதாகைகள் மூலை முடுக்குகளிலும்,சாலைகளின் சந்திப்புகளிலும் காட்சி தருகின்றன. சரித்திரம் காணாத சாதனை இது என்று கழகத் தோழர் களை மக்கள் பாராட்டிச் செல்கின்றனர்.

விருதுநகர் தொகுதிவாழ் மக்களே!

உங்கள் வீட்டுப் பிள்ளை நான்
ஊருக்கு உழைப்பவன் நான்

இனிக்கும் கரும்பாவேன்
மணக்கும் மலராவேன்
இருளுக்கு ஒளியாவேன்
வெயிலுக்கு நிழலாவேன்

உங்களுக்குத் தொண்டாற்றிட
வாய்ப்புத்தர வேண்டி
வாசலுக்கு வந்திருக்கிறேன்.

வணக்கம், வைகோ

மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று படித்து மகிழ்கிறார்கள். பரவசம் கொள்கின் றனர்.வைகோ அவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என உள்ளத்தில் உறுதி பூண்டவர்களெல்லாம் அடுத்தவர்களிடம் உரையாடும்போதும் நல்ல எண்ணத்தையும் நம்பிக்கையையும் பரிமாறிக் கொள்கின்றனர்.

அடுத்த தெருமுனையில் இதைவிட அற்புதமான வண்ணப் பதாகை அமையப் பெற்று இருக்கிறது.போய்ப்பாருங்கள் என்று அவ்வழியே வந்தவர்கள் ஆற்றுப் படுத்துகிறார்கள். அதையும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று மக்கள் திரளாக அங்கே செல்கின்றனர்.

ஊழலைத் தீண்டியதில்லை!
தடைகளைத் தாண்டியிருக்கிறேன்!
எத்தனையோ தோல்விகளைத்
தாங்கியிருக்கிறேன்!
எந்தப் பதவிக்கும் நான்
ஏங்கியதில்லை!

உரிமைக்குப் போராடும் இடம்
நாடாளுமன்றம்!

உங்கள் நலம் காத்திட
எனக்கு வாய்ப்பளியுங்கள்!

நாட்டுக்கு வளம் சேர்ப்பேன்;
நல்லோர்க்குத் துணையிருப்பேன்!

-- என்றும் உங்கள் வைகோ

விருதுநகர் தொகுதி முழுவதிலும் உள்ள நகரங்கள், சிற்றூர், பேரூர் என எங்கு
நோக்கினும் இத்தகைய கருத்தோவியங்கள் கண்ணைப் பறிக்கின்றன. வைகோ அவர்களின் உறுதிமொழி வாசகங்களைக் கண்டு வசப்படாத மனிதர் களே இல்லை.

நிரபராதிகள் தண்டிக்கப்படாமல்
நீதிமன்றங்களில் வாதாடியிருக்கிறேன்!

சட்டத்தின் முன்னே
கொள்ளைக் குற்றவாளியாக
ஒருநாளும் நான் கைகட்டி நின்றதில்லை!

சட்டத்தின் சந்து பொந்துகளில்
ஓடி ஒளிந்து
பதுங்கியவன் அல்ல நான்!

சட்டத்தின் இருட்டு அறைகளில்
ஏதிலிகளுக்காக
ஒளிவிளக்கை ஏந்தி நின்றிருக்கிறேன்!

நாடாளுமன்றத்தில் உங்களுக்காக வாதாட
நாட்டோரே! நல்லோரே!
எனக்கு அனுமதி தாருங்கள்!

என்றும் உங்கள் வைகோ

உலகத் தமிழினத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தலைவர் வைகோ என்றால் அது மிகையாகா. இளைய தமிழகத்தின் இரண்டாம் அண் ணனாக வைகோ ஒருவருக்குத்தான் இந்தியஅரசியல் நோக்கர்கள் மதிப்பளிக் கின்றனர்.

அரசியலில் அறிஞர் அண்ணா அவர்கள் வளரும்போது ஏற்றம் பெற்றிருந்த அரசியல் கட்சிகள் சில இருந்தன. தமிழக சட்டமன்றத்தில் அந்தக் காலகட்டத் தில் கம்யூனிஸ்டு கட்சி 62 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று மிகப் பெரிய எதிர்க்கட்சி யாக விளங்கியது.

இருப்பினும் அண்ணா கண்ட கழகம் தடையில்லாமல் வளர்வதற்கு தமிழகச்
சூழல்கள் தாராளமாக வழிவிட்டன.ஆனால், வைகோ கண்ட கழகம் அப்படி
அல்ல. பல்வேறு தடைகளைத் தாண்டி வளர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது
இயல்பானதேயாகும்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!

பாம்புப் புற்றுக்குள் குடம் குடமாய்ப்
பால் வார்த்தாலும்
நாகப்பாம்பு நஞ்சைத்தான் கக்கும்!

நாடாளும் மாண்புகள்
நடமாடும் பாம்புகள்!
பொது மக்களே புரிந்து கொள்வீர்!

(வைகோ)லைத் தின்று
பாலாகப் பொழியும்
பசுவைப் போன்றவர் நமது வைகோ

இப்போது சொல்லுங்கள்
உங்கள் ஆதரவு யாருக்கு?

நஞ்சைக் கக்கும் பாம்புக்கா?
பாலாகப் பொழியும் பசுவுக்கா?

-விருதுநகர் ம.தி.மு.க.

கழகத் தோழர்களின் கருத்தோவியம் இப்படிக் கேள்வி எழுப்பி, மக்களது சிந்த னையைக் கிளறி விடடிருக்கிறது. 

வைகோ அவர்கள் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது கார்மேகங்களின் ஊடே ஒளிபரப்பும் கதிரவனைப் போல மக்க ளைக் கவர்ந்தார் என்பது மறைக் க முடியாத உண்மையாகும்.


இன்றைய நிலையில் உலகளாவிய புகழ் மேவும் தலைவராக விளங்கும் வைகோ அவர்கள், நாடாளுமன்றப் பணியின் வாயிலாகத்தான் நாட்டுக்கு முதலில் அறிமுகம் ஆகின்றார். இந்தியத் துணைக் கண்டத்தின் ஆற்றல்மிக்க அரசியல் மேதை களின் பாராட்டுதல்களைப் பெற்றவர்.அறிமுகம் ஆகும் போதே நாடாளுமன்ற அரசியலில் புகழ்பூத்த அறிஞர்களின் வாழ்த்துரைகள் வைகோவை ஒளிமயமாக்கின.

கட்டுரையாளர் :-கவிஞர் தமிழ்மறவன் மதிமுக தலைமை நிலையச் செயலாளர்

No comments:

Post a Comment