Saturday, December 7, 2013

பழிக்கு பழி எண்ணம் இளைஞர்களிடம் கூடாது-வைகோ வேண்டுகோள்

மதுரையில் நடந்த வெடிகுண்டு வீச்சில் காயமுற்றோருக்கு ஆறுதல் கூறி னார் #மதிமுக பொது செயலாளர் #வைகோ

மதுரையில் கடந்த 2012ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று விட்டு வந்த போது சிந்தாமணி அருகே வெடிகுண்டு வீச்சுக்கு ஆளாகினர். இந்த சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கைதான நபர்கள் ஒரு ஆண்டுக்குப் பிறகு கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வரும் போது பழிவாங்கும் விதமாக வெடிகுண்டு வீசப்பட்டதில் முத்து விஜயன் என்பவர் கொல்லப்பட்டார். காயமடைந்தவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பாட்டம் சென்று, இறந்த முத்துவிஜயன் குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார். முத்துவிஜயனின் தாயார் சங்காயி மற்றும் உறவி னர்களிடம் பேசிய வைகோ, இலங்கை அதிபர் ராஜபக்சே மத்திய பிரதேச மாநி லம் சாஞ்சிக்கு வருகை தந்த போது முத்துவிஜயன் போராட்டத்தில் பங்கேற் றதை நினைவு கூர்ந்தார். இலங்கை தமிழர்கள் மீது முத்துவிஜயன் தனிப்பட்ட ஈடுபாடு கொண்டிருந்தார் என்றும் வைகோ தெரிவித்தார்.

நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் அந்த உணர்வோடுதான் தற்போது அஞ்சலி செலுத்த வந்ததாக கூறினார்.

தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அர்ஜூனன், முனீஸ் குமார் உட்பட நால்வரை வைகோ நேற்றிரவு (06.12.13 )சந்தித்தார். பின் அவர், ""பட்டப்பகலில் நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் சகோதரத்துவமாக வாழ வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டார்.


No comments:

Post a Comment