Tuesday, December 3, 2013

தென்காசி மதிமுக சார்பில் கறுப்பு கொடி போராட்டம்

தென்காசி நகர #மதிமுக செயலாளரும், ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவ ருமான என். வெங்கடேசுவரன் வெளியிட்டுள்ள அறிக்கை

வளர்ந்து வரும் நகரமான தென்காசிக்கு ஆண்டு தோறும் சுமார் 50 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இங்கு அடிப்படை வசதிகள் இல்லை.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 மாதங்களுக் கு முன்பே முன்பதிவு முடிந்து விடுகிறது. எனவே கூடுதலாக ரெயில் இயக்க வேண்டும். 

செங்கோட்டையில் இருந்து ஈரோடு வழியாக கோவைக்கு ஒரு ரெயிலும், 

திருச்சியில் இருந்து நெல்லைக்கு வரும் இன்டர்சிட்டி ரெயிலை செங்கோட் டை வரை நீட்டித்தும் இயக்க வேண்டும்.


பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் எலி, மூட்டை பூச்சி தொல்லை உள்ளது. பெட்டி களில் மின்விசிறிகள், மின்விளக்குகள் சரியாக இயங்குவதில்லை. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பி யும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

எனவே தென்காசி ரெயில் நிலையத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களில் வரு கை தர உள்ள தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு ம.தி.மு.க சார்பில் கறுப்பு கொடி காட்டவும், தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் என்று கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment