இரயில் பாதைக்காகக் கையகப்படுத்தும் நிலங்களுக்குச் சந்தை விலையை நிர்ணயித்திடுக! நாடாளுமன்றத்தில் #மதிமுக அ.கணேசமூர்த்தி வலியுறுத் தல்
ஈரோடு - பழனி புதிய இரயில் பாதை திட்டம் -விளைநிலம் மற்றும் குடியிருப்பு களை இழக்கும் மக்களுக்கு இழப்பீட்டு தொகை தற்போதுள்ள சந்தை மதிப்பில் கொடுக்க வேண்டி, விதி எண்.377 -இன் கீழ் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச் சனை குறித்து நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வலி யுறுத்தினார்.07.12.2010 அன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை வரு மாறு:
“ஈரோடு - பழனி புதிய இரயில் பாதை அமைப்பதற்கு விவசாயிகளிடமிருந்து வீடு, விளை நிலங்களை கையகப்படுத்துவது குறித்து மத்திய அரசின் கவனத் திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
மக்கள் நலத் திட்டமான ஈரோடு - பழனி புதிய இரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு,அதனால் பாதிக்கப்படுகிற மக்கள் மீது கவனம் செலுத்தி முறையான சரியான இழப்பீட் டுத் தொகையைக் கொடுத்து மறுவாழ்வு அளிக்க முன்வரவேண்டும். விளை நிலத்தையும் வீட்டையும் இழக்கும் ஏழை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
இதுபோன்ற திட்டங்களுக்கு கையகப்படுத்தும் விளைநிலங்களுக்கும் வீடுக ளுக்கும் அந்தந்த மாநில அரசு தான் பழைய வழிகாட்டுநெறி மதிப்பீட்டின்படி விலை நிர்ணயம் செய்கிறார்கள்.இப்போது நிலங்களுக்கும், வீடுகளுக்கும் பன் மடங்கு விலை கூடியிருக்கிற சூழலில்,தற்போது நிலவுகின்ற சந்தை மதிப் பீட்டு விலையை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையாக கொடுக்க மாநில அரசு முன்வர வேண்டும்.
நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படுகிற மக்களின் இந்தக் குறைகளை சரி செய்து அவர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை வழங்கி மறுவாழ்வு அளித்திட வேண்டுகிறேன்.இவர்களுக்கு இயற்கையின் நியதிப்படிநியாயமான இழப்பீடு கொடுக்கும் பட்சத்தில் விவசாயிகள் அரசு திட்டப் பணிகளுக்கு முழு
ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய இரயில்வே அமைச்சர் அவர்கள், தற்போதுள்ள சந்தை மதிப்பீட்டு விலையை நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக கொடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாநில அரசை வலியுறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
2005 இரயில்வே போர் டின் வழிகாட்டுதல்படி கட்டுமானப் பணிக்குக் கட்டணம் செலுத்தியுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிய உத்திரவை அமல்படுத்த நாடா ளுமன்றத்தில் மதிமுக உறுப்பினர் அ. கணேசமூர்த்தி வலியுறுத்தினார். 29.11.2010 அன்று அவர் ஆற்றிய உரை வருமாறு:
“இரயில்வே துறையில் சரக்குகளை அதிகமாகக் கையாள்வதற்கான வழி முறைகளை எளிதாக்குவதற்கு 2005 ஆம் ஆண்டு இரயில்வே போர்டு வழிகாட் டுதல்களை ஒரு சுற்றறிக்கையாக வெளியிட்டது. தனியார் மூலமாக சரக்கு களைக் கையாள வாகன ஓடுபாதைகள் அமைப்பதற்கு உண்டான சாராம் சங் கள் ஒரு சுற்றறிக்கையாக 2005 இல் வெளியிடப்பட்டது.
அந்தச் சுற்றறிக்கைக்குச் சிறப்பான வரவேற்பு இருந்தது. ஏராளமானோர் அந்த விதிகளின்படி மனு செய்தார்கள். முதல்கட்டப் பரிசீலனைக்குப் பிறகு பதிவுக் கட்டணத்தை உடனடியாகச் செலுத்த வலியுறுத்தப்பட்டு, அதுவும் நிறைவேற் றப்பட்டது.மனுக்கள் பரிசீலனை முடிந்த பிறகு தகுதியான விண்ணப்பதாரர் களின் பெயர்களைப் பட்டியல் செய்து இரயில்வே துறையில் பெற வேண்டிய துறை ரீதியான அனுமதியை முறைப்படி வழங்கியதற்குப்பின்னர் கட்டுமானப் பணியினை மேற்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டது.
ஆனால், 2008இல் இரயில்வே அமைச்சகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளி யிட்டு, 2005 இல் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மாற்றிஅமைத்தனர். இந் தப் புதிய விதிகளின் காரணமாக ஏற்கனவே மனு செய்து, கட்டணம் செலுத்தி,
கட்டுமானப் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், அந்த வேலையைச் செய்ய இரயில்வே நிர்வாகம் அனுமதி மறுக்கின்றது.
எனவே, 2005-இல் அனுமதி வழங்கப்பட்ட மனுதாரர்களுக்கு நீதி கிடைக்க 2008
சுற்றறிக்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மேலும், அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும்
கேட்டுக் கொள்கிறேன்.”
அ. கணேசமூர்த்தி எம்.பி., இவ்வாறு உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment