Wednesday, December 11, 2013

முற்றங்களும்... முடிவடையா யுத்தங்களும்!

“சாகப் பயந்தவன் தரித்திரன் ஆகிறான்.சாகப் பிறந்தவன் சரித்திரம் ஆகிறான்!”
-வேலுப்பிள்ளை பிரபாகரன்

“இந்த சமூகத்தின் கட்டமைப்பே வீர வழிபாட்டில்தான் அமைந்து கிடக்கிறது” என்றான் இங்கிலாந்து நாட்டின் தாமஸ் கார்லைல். ஆம்! நாட்டினுக்காய் உயி ரை ஈந்தோ ரின் “நடுகல்” வழிபாட்டிலும் - கொற்றம் அமைத்துக் கோலோச்சிய நம் மூதாதை மன்னர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் -முன்னின்று போரா டிகளச் சாவினுக்கும் - கொடுந்தண்டனைக்கும் தன்னுயிர் ஈந்த மாமன்னர்க ளின் வீர வழி பாட்டிலும் தாய்த் தமிழகம் பன்னூறு ஆண்டுக் காலமாய் பற்றி வருகிற வீர வரலாறாகும்.

போரில் வீரம் காட்டி இறந்து நடுகல்லாய் நிற்கும் உண்மை வீரர்களே, தமிழர் களின் தெய்வங்கள் என்று புற நானூறு பேசும்!. அந்த வகையில் - அந்த வழி யில் சாதனைச் சரித்திரம் பேசும் சரித்திர மனிதர்களின் சதுக்கங்களே நினைவு முற்றங்களாக முகிழ்த்து நிற்கின்றன நாடுகள் தோறும். அந்த சதுக்கங்கள் பேசும் சரித்திரம் ஒன்றல்ல - இரண்டல்ல -ஓராயிரம். அந்த ஓராயிரத்தில் ஒரு
சிலவற்றை நினைத்துப் போற்ற -நினைவில் நிறுத்தத் தான் முற்றங்களும்! முடிவடையாயுத்தங்களும்!!.

ஒரு அறிஞன் சொன்னது போல “நினைவுகள் இறக்கும் போது மனிதன் உயி ரற்ற பிணமாகி விடுகிறான்” ஆக நினைவுகளை உயிர்ப்பித்துக் கொள்ள இலட் சிய குருதியோட்டத்தை சீராக்கிக் கொள்ள நினைவு முற்றங்களை நோக்கி முன்னேறிச்செல்வோம். ருஷ்யாவின் ஸ்டாலின் சதுக்க மானாலும் -லெனின் சதுக்க மானாலும் -செஞ்சீனத்தின் தியானென்மென் சதுக்கமானாலும் - எகிப் தின் “தஹ்ரீர்” சதுக்க மானலும் -துருக்கியின் தக்சிம் சதுக்கமானாலும் - ஈரோட்டு பூகம்பம் புதைந்திருக்கிற பெரியார் சதுக்கமானலும் - காஞ்சிப் பகல வன் கண்ணுறங்கும் அண்ணா சதுக்க மானாலும் - ஈழத்தின் மாவீரர் துயிலக மானாலும் அத்தனை முற்றங்களும் ஒரு வரலாற்றைபதிவு செய்கின்ற காலக்
கண்ணாடிகள் தாம்!

வரலாறு என்பதே கூட என்ன? “நேற்று இறந்தவனுக்கும் -இன்று இருப்பவனுக் கும் - நாளை பிறப்பவனுக்கும் இடையில் உருவாகும் ஓர் ஒப்பந்தமே” என்று பேரறிஞர் பர்க் பேசுவார்.அப்படி வரலாறு சொல்கிற முற்றங்களைக் கடந்து
செல்கையில் நாம் காண்கின்ற காட்சிகள் அத்துணையும் யுத்த களக் காட்சிகள் தான் - மாட்சிகள்தான்.

“மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள் ஆகாவென்றெழுத்தது பார் யுகப் புரட்சி” என்று முண்டாசுக் கவிஞன் பாரதி பாடுவானே அந்த ரஷ்யாவின்
ஸ்டாலின் சதுக்கமும் - லெனின் சதுக்கமும் சந்தித்த ஏகாதிபத்திய- பாசிச எதிர்ப்ப்புப் போர் கொஞ்சமா? நஞ்சமா??

ஸ்டாலின் சதுக்கமும் - லெனின் சதுக்கமும் தனது வீரத்தையும் -இணையற்ற தியாகத்தையும் தனது ரத்தத்தினாலே பதிவு செய்தது! ஆம்! அடால்ப் ஹிட்ல ரும் - முசோலினியும் ஆன சர்வாதிகாரிகள் கூட்டணி அமைத்து யுத்தத்தை தொடுத்தார்கள். ஸ்டாலின் - லெனின் சதுக்கங்களை நோக்கி! 

சாதாரணமாக அல்ல, ஐம்பத்தி ஐந்து லட்சம் பேர் கொண்ட இராணுவத்தை - நாற்பத்தி ஏழு ஆயிரம் பீரங்கிகளை -ஐந்தாயிரத்திற்கும் அதிகமான போர் விமா னங்களை கொண்டு அந்த வரலாற்று முற்றங்களை முற்றுகையிட்ட போது அந்த அடக் குமுறை ராணுவத்தை மூலைக்கு மூலை - சந்துக்கு சந்து- தெரு வுக்குதெரு - வீட்டுக்கு வீடு சந்தித்து பின்னங்கால் பிடரியில் அடிபட சர்வாதி கார ராணுவத்தை விரட்டியடித்த வீரம் செறிந்த யுத்தங்கள் தான் அங்கே நம் கண்முன் கால வெள்ளத்தில் அழியாத கல்வெட்டுகளாய் காணக்கிடக் கிறது.

இதோ நம் காலத்தில் - சமீப நாட்களில் நடந்திட்ட எகிப்திய புரட்சி! எங்கே “தஹ்ரீர்” என்ற சதுக்கத்தில் - முற்றத்தில்! ஆட்சி யாளர்களின் வரிசை அடுக் கடுக் காய் குவிந்த போதும் - மாற்றம் வேண்டிய மக்கள் மமதையாளர் களை மண்ணைக் கவ்வ வைத்த சாகசம் நிகழ்த்திய எகிப்தின் “தஹ்ரீர்” முற்றம்!.


கொஞ்சம் கடந்தால் -கண்ணோக்கிப் பார்த்தால் இதோ துருக்கி தென்படுகிறது. அது பிரித்தாளும் சூழ்ச்சி செய்கின்ற ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடத்தையும் சொல்லித் தந்தது. ஆம்! மதத்தைச் சொல்லி -ஜாதியைச் சொல்லி மக்களை
பிரித்து வைத்து அவர்களுக்குள் கலகம் விளைவித்து பிரித்தாளும் சூழ்ச்சி செய்து ஆட்சி தேரில் அன்றாடம் பவனி வந்தவர் களை மக்கள் புரிந்து கொண் டு மதத்தை ஒதுக்கி வைத்து - ஜாதியை தூக்கி எறிந்து “தக்சிம்”என்ற அரச சதுக் கத்தில் துருக்கியர்களும் -துருக்கியின் குர்தியர்களும் ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைந்து சர்வாதிகாரத்தை சாய்த்த வரலாற்றை “தக்சிம்” என்ற அந்த வரலாற்று முற்றத்தில் நாம் கண் முன் காண்கிறோம்!.

இத்தனை சதுக்கங்களைச் சொன்ன நான் செஞ்சீனத்தின் தியானென்மென் சதுக்கத்தை -முற்றத்தை முற்றாக மறந்து விட்டேனோ என்று எண்ணி விடா தீர்கள். எண்ணிலடங்கா கேள்விகள் புதைந்திருக்கிற - இரத்த கறை படிந்த அந்த முற்றத்தின் அர்த்தமுள்ள கேள்வி கள், இங்கே இசத்தின் பெயரால்
கொலு மண்டபத்தில் கோலோச்சு பவர்களுக்கும் பொருந்தும் என்பதால் நிதா னித்தேன் என்பதைத் தவிர வேறில்லை!.

ஆம்! “மாவோ” இசத்தின் பெயரால் செஞ்சீனத்தை ஆண்ட ஆட்சியாளன் “டெங் பியாங்”.ஆட்சிகாலத்தில் எந்த மாவோ பொதுவுடமைக் கோட்பாட்டிற்கு பதி யம் போட்டானோ? எந்த மாவோ முதலாளித்துவகொள்கைகளை ஆழப்புதைத்
தானோ? அதன் பெயரால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளன் “டெங்” பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியின் பெயரால் முதலாளித்துவ கொள்கை களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பாட்டாளி வர்கத்திற்கு பெரும் துரோகம் இழைக்கும்
துரோகச் செயலைக் கண்டித்து தியாகிகளின் பலிபீட மான தியானென்மென் சதுக்கத்தில் அறப் போர் நிகழ்த்திய பல லட்சம் மாணவர்கள் மீதும் பாட்டளிச்
சொந்தங்கள் மீதும் படை அணியை ஏவி விட்டு பல்லாயிர வர்களை கொன்று தொலைத் தான் சீனத்தின் ஆட்சியாளன்!

ஆட்சியை தக்க வைக்க மாவோவின் படம் வேண்டும் -அவன் நிறுவிய கட்சி வேண்டும்- அவன் பிடித்த கொடி வேண்டும். ஆனால் அவன் நிறுவிய கொள் கைகள் மட்டும் தேவையில்லை என்பதைப் போல தான் நம் தாயகமாம் இந்தத்
தமிழகத்தில்! தமிழ்தாயின் தலை மகனாம் நம் அண்ணா!. கடல் நீர் உப்பாக கரிக்கிறதடா தம்பி! 

கடலுக்கப்பால் தமிழன் வடித்த கண்ணீரடா தம்பி! என்று வேதனையாயிரம் பாடி - விழி நீர் சிந்தி இனம் காக்க தூண்டினாரோ அந்த அண்ணன் கண்ட இயக் கத்தை கபளீகரம் செய்தவர் களும் - அந்த அண்ணனின் உருவத்தை கொடி யிலே தாங்கி இயக்கம் நடத்துவோரும் அந்த அண்ணனின் ஈழ லட்சியத்தை
ஆழக் குழி தோண்டி புதைத்து விட்டு போலித் தீர்மானங்களாலும் - பொழுது போக்கு கடுதாசிகளாலும் தமிழினத்தை ஏமாற்றி இன உணர்வை நீர்த்துப்போக செய்கின்ற ஒரு கால கட்டத்தில்!

இதோ - தஞ்சை விளாரில் அடிமைத்தனத்தை கொளுத்த விரும்பும் மக்களுக்கு - சுதந்திரக்காற்றை சுவாசிக்க சாவைத் தழுவ தயங்காத மக்களுக்கு - சாதி -
சமய - பேதம் மறந்து தமிழின உணர்வு கொண்ட மக்களுக்கு - எங்கே இன உணர்வென்று கரை தெரியாத கால சமுத்திரத்தில் தேடும் மக்களுக்கு வழி காட்டும் கலங்கரை விளக்கமாக விளாரில் முள்ளி வாய்க்கால் நினைவு முற் றம் முகிழ்த்து நிற்கின்றது!.

தாங்கிக் கொள்ள இயலுமா இன விடுதலைப் போரை - அதன் தேசியத் தலை வனை பழித்தோர்க்கு? இன அழிப்பிற்கு துணை போன பட்டினி நாடகம் நடத் திய படு மோசக்காரர்களுக்கு, எனவேதான் பின்னது முற்றத்தை பார்த்து அப ஸ்வரம் இசைக் கின்றது. முன்னது முற்றத்தை முறியடிக்க ஏவல் படையை ஏவி விடுகிறது. இன்று நேற்றல்ல இவர்கள் எப்போதும் இன விடுதலைக்கு எதிரானவர்கள் தாம்!.

எனவேதான் தன் தேசீய இனத்தின் அடையாளத்தை நிலை நிறுத்த களத்தில் நின்ற காவலர்களை - விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்பதற் காகவே மக்கள் தலைவர் வைகோ மீதும் எங்கள் சகாக்கள் மீதும் பொடாவை பாய்ச் சி யது ஒன்றென்றால் - மற்றொன்று ஈழத்தை ஆதரித்து பேசுவதே நாட்டை துண் டாடுவது என்று என் தலைவன் வைகோ மீது தேச பாதுகாப்ப்பு சட்டத்தை ஏவி யது என்பது நாடறிந்த சேதிதான்!.

ஆக ஒரு முடிவில்லா யுத்தம் முள்ளிவாய்க்கால் முற்றத்தின்மீது தொடங் கி யாயிற்று என்பதே சகலரும் அறிவது. இனக் கொலை நாட்டில் மாவீரர் துயி லகம் எனும் வரலாற்று முற்றம் இடிக்கப்பட்டால் - இங்கே இன உணர்வின் நினைவு முற்றத்தின் முற்றம் இடிக்கப்படுகிறது. முதல் கட்டமாக! அங்கே இருக்கிற மகிந்தனுக்கும் இங்கே இருக்கிற மகுடமேந்திகளுக்கும் வேறுபாடு
இல்லை போலும்!.

ஒன்றை நினைவுபடுத்துகிறேன்.அது கண்ணனின் பிறப்பை கம்சன் அங்கீகரித் ததாக இதிகாசத்திலும் இடம்பெற வில்லை. ஆக ஈழம் மலர்ந்தால் இங்கே இன
உணர்வு பூக்கும் - இன உணர்வு பூத்தால் பேரறிஞர் அண்ணாவின் மொழி மான மும் முகிழ்க்கும் -தந்தை பெரியாரின் இன மானம் பூகம்ப மாய் புறப்பட்டு வரும் என்பதாலேயே வருமானம் தவிர வேறு எந்த மானமும் நாடாதஇவர்கள் அறிவிக்கபடாத சுதந்திர தமிழீழ நாட்டை - அரசை - அதன் ஆதர்ஷ புருஷனாம் எங்கள் தம்பியை அங்கீகரிக்க மறுத்தார்கள்.

அங்கீகரிக்க மறுதலித்தவர்களையும் மறுத்தவர்களையும் -வருமானம் தவிர எந்த மானத்தையும் இவர்கள் வரவில் வைத்ததில்லை என்பதை எதிகால தமி ழகம் வரவில் வைக்கும் -நினைவில் நிறுத்தும் என்பதற்காகவே முற்றங்களை யும் - முகவரிகளையும் இவர்கள் முறியடிக்க நினைக்கிறார்கள் என்பதே நிலைக்கும் நிதர்சனமாகும்.

ஒன்றை இவர்களுக்கு உரத்துச் சொல்கிறோம்! இது ஒன்றும் சமாதிகளில் சின்னம் வைத்து சுயலாபம் தேடும் புள்ளிகள் போடும் கள்ள அரசியலில்லை! மாறாக தமிழீழ புரட்சிக்கு நாற்றங்கால்களை உருவாக்கியவர்களுக்கு -வீதி சமைத்தவர்களுக்கு - விதையாய் விழுந்தவர்களுக்கு -ஆவியைத் தந்தோர்க்கு -அன்றாடம் அன்னைத் தமிழகத்திற்கு சாதி இனம் எனும் சழுக் கறுத்து இன உணர்வு ஊட்டுவதற்கு அமைந்திட்ட நினைவு முற்றம் என்பதை மறவாதீர்!.

இந்திரா காலத்தில் “டைம் கேப்சூல்ஸ்” என்று இந்தியாவின் வரலாற்றை தொகுத்து பூமிக்கடியில் புதைத்து வைத்தார்கள் பாதுகாப்பாக டெல்லியிலே!.
இங்கோ பூகம்ப விதைகளாய் பூமியில் புதைந்த எம் இனமானச் சொந்தங்கள் ஏந்திய இலட்சிய தீபச் சுடரை மண்ணுக்குமேலே மகத்தான இன உணர்வு
முற்றமாக கல்லில் செதுக்கி -கலை நயத் தால் உருவாக்கி தந்திருக்கிறார்கள்.

எப்படி முகமதியர்களுக்கு ஒரு மெக்கா-மதினாவோ; எப்படி கிருத்துவர் களுக் கு ஒரு ஜெருசலேமோ! அப்படி உலகத் தமிழினத் திற்கு இந்த முள்ளி வாய்க் கால் நினைவு முற்றம்! என்பதை நினைவிற் கொள்க.அதை விடுத்து எடுப் பேன் - கவிழ்ப்பேன் -இடிப்பேன் கைது செய்வேன் - காராகிரகத்தில் பூட்டுவேன் என்று சண்டித்தனம் செய்தால்,

நாளெல்லாம் ஈழவிடுதலை விதையை விதைத்து வருகிற தலைவர் - இனக் கொலைகாரன் மகிந்தனை இந்திய மண்ணில் கால் பதிக்க அனுமதி யோம்
என்று இந்திய சாத்பூரா மலை கடந்து படை யெடுத்து சென்ற பழைய பண் பாட்டின் புதிய வடிவம். மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில்
“முற்றம் காக்க முடிவில்லா யுத்தம்” தொடரும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவிற்கொள்க.

“காற்றை விதைத்தவர்கள் -புயலை அறுவடை செய்வார்கள்!.

கட்டுரையாளர் :- செ.நக்கீரன் மதிமுக மீனவர் அணிச் செயலாளர்

No comments:

Post a Comment