Wednesday, December 18, 2013

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீடு -வைகோ உரை -பாகம் 2

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ உரை ஆற்றினார். அவரது உரை பாகம் 1 யின் தொடர்ச்சி வருமாறு:

குழந்தைகள் படுகொலை

தமிழ் தின விழா நடக்கிறது.மாணவ, மாணவியருக்கு நாடகப்போட்டி நடக்கி றது. அதில் காத்தவராயன் நாடகத்தை ஒரு பள்ளி நடத்துகிறது. ஞானசெளந் தரி நாடகத்தை மற்றொரு பள்ளி நடத்துகிறது. ஞானசெளந்தரி நாடகத்துக்கு முதல் பரிசு. ஆனால் நடிப்பில், காத்தவராயனில் நடித்த ராமுவுக்கு முதல் பரிசு; ஞான செளந்தரியில் நடித்த பாத்திமா என்ற கிறித்துவக் குழந்தைக்கு
இரண்டாவது பரிசு. விழா முடிந்தது. மாணவ, மாணவியரும்,ஆசிரியர்களும், மகிழ்ச்சியோடு பேருந்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு வருகிறார்கள். கிளைமோர் குண்டு வந்து தாக் குகிறது. பேருந்து துண்டுதுண்டாகச் சிதறுகிறது.அடுத்த கணத்தில், எல்லோ ரும் உடல் சிதறி இறந்து போகிறார்கள்.இது உண்மையாக நடந்த நிகழ்வு.

அதில் 11 குழந்தைகள் கிறித்துவர்கள். மடு மாதா தேவாலயத்துக்கு வருகிறார் கள் அடைக்கலம் கேட்டு. அதற்குப் பக்கத்தில் இருந்த கோவில் மீதும் குண்டு
களை வீசுகிறார்கள். அங்கே இருந்த 40 பேர், துடிதுடித்துச் சாகிறார்கள். கொடு மையான காட்சிகள். இனி இந்த ஊரில் வாழ முடியாது என்று கருதி வெளி யேறு கிறபோது, காணி, நிலம், மிளகாய்ச் செடி, வாழ்ந்த வீடு எல்லாவற்றை யும் விட்டு விட்டுப் புறப்படுகிறார்கள். கையில் இருந்த கொஞ்சம் நெல்லை மட்டும் எடுத்து மாட்டு வண்டியில்,டிராக்டர்களில் போட்டுக்கொண்டு போகி றார்கள். முருகரும், பரம சிவமும் போகிறார்கள். இந்தச் செங்காரிப் பசுவை அங்கேயே விட்டுவிட்டுப் போகிறார்கள்.

கிளியின் பாசம்

என்னுடைய அன்புக்கு உரியவர்களே, இதற்குப்பிறகுதான், நீங்கள் ஒரு துக்க மான நிகழ்வு. வில்லவன் என்ற ஒரு தளபதி. இந்தக் கதையில் வருகின்ற தள பதிகள் அனைவரும் உண்மையில் வாழ்ந்த மனிதர்கள். கற்பனைப் பாத்திரங் கள் அல்ல. ஆனால்,பெயர்களை மட்டும் மாற்றி எழுதி இருக்கிறார். தளபதி வில்லவன், பல களமுனைகளில் வெற்றி பெற்றவன். அவன் ஒரு கிளி வளர்க் கிறான். அது அவன் தோளில் தொற்றிக்கொள்ளும்.எங்கேயாவது அவன் சண் டைக்குப் போய்விட்டுத் திரும்பும்போது,வில்லவா எங்கே? என்று கத்தும்.
அதைக்கேட்டு அவன் அதை எடுத்துக் கொள்வான். ஒரு சண்டையில் அவன் கொல்லப்பட்டு விட்டான். அவனது உடலைக் கொண்டு வருகிறார்கள்.அப் போது, சிவம் நினைக்கிறான்.இப்போது கிளி வில்லவன் எங்கே என்று கேட்கு மே?

ஆனால், அந்தக் கிளி அறிவுள்ளது.அவன் உடம்பு அசைவற்றுக் கிடப்பதைப் பார்த்து, வில்லவன் எங்கே? என்று கேட்கவில்லை; வில்லவா, வில்லவா என்று கதறிக் கொண்டே, அவனது உடலைச் சுற்றிச்சுற்றிப் பறக்கிறது. அடக் கத்துக்கு எடுத்துக்கொண்டு போகிறார்கள். சிவத்தின் தோளில் வந்து உட்கார் கிறது. உடலை அடக்கம் செய்கையில், அங்கே இருக்கின்ற ஒரு தூணில் போய் உட்கார்கிறது. பிறகு அங்கிருந்து பறந்து போகிறது. திரும்பி அங்கே
வரவே இல்லை. இதுவும், உண்மையில் நடந்த நிகழ்வு.

மலையவன்-மதனி

மலையவன் என்பவன் ஒரு பெரிய போர்வீரன். ‘மலையாண்டி அண்ணே’ என் று அழைக்கிறாள் ஒரு பெண்.அவள் பெயர் வதனி.

அங்கே,வினியோகப்போராளிகள் என்று ஒரு படை அணி இருக்கின்றது. அவர் களுடைய பணி, சண்டை யின் போது, குண்டுகள் தீர்ந்தால், உடனே கொண்டு போய்க் கொடுக்க வேண் டும்; அதில் பெண்களும் இருப்பார்கள். இறந்து போன வீரர்களின் உடல்களை,அவர்கள் வித்து உடல்கள் என்றுதான் சொல்வது வழக் கம்.ஆம்; அவர்கள் தான் வித்துக்கள், விதைகள். அந்த வித்து உடல்களைத் தூக் கிக் கொண்டு போக வேண்டும்.இதுதான், வினியோகப் போராளி களின் பணி. அவர்களுள் ஒருத்தி தான், இந்த வதனி. அவள்,தேநீர் கொண்டு கொடுக்கிறாள்.
அப்போது பகடி அடி நடக்கிறது.பகடி என்றால் கேலி பேசுவது. மலையவனுக் குத் தேநீர் கொடுத்துவிட்டுப் போகிறாள்.கொஞ்ச நேரத்தில் அவளது குரல்;
அண்ணா ஆர்மிக்காரன் பிடிச்சுட்டான்; காப்பாத்துங்கோ என்று கத்துகிறாள். அது இரவு நேரம்.அவர்களிடம் இரவு நேரத்திலும் பார்க்கின்ற கருவி இருந்தது.

நான் ஒன்றே முக்கால் மணி நேரம் கழுத்து வரை தண்ணீருக்குள் மூழ்கிய வாறு, சாலைத் தொடு வாய் ஆறும் கடலும் கலக்கின்ற அந்த இடத்தில் நடந்து
சென்றேன். அப்போது, என்னுடன்,57 புலிகள் வந்தார்கள். அவர்கள் தலைகளில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு நடந்தார்கள்.எனக்கு மட்டும் ஒரு சுமையும்
இல்லை. என்னுடைய உடைமை களையும் அவர்கள்தான் சுமந்து கொண்டு வந்தார்கள்.பக்கத்தில் இந்தியப்படைகள் இருந்தன.அவர்கள் நைட் விசன் கேம ராவில் பார்த்து இருந்தால், எங்கள் தலைகள் எல்லாம் சிதறி இருக்கும் என்று பின்னர் புலிகள் சொன்னார்கள். அப்படி ஒரு கருவியில் பார்க்கிறான் மலைய வன்.வதனியின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு போகிறார்கள்.காலால் மண்ணை உதைத்துக் கொண்டே போகிறாள். குறி பார்த்துச் சுடுகிறான். வதனி யை இழுத்துக்கொண்டு போகிறவன் செத்துக் கீழே விழுகிறான்.அதற்குள் அங் கே மேலும் சிங்கள இராணுவத்தினர் வந்து விடுகிறார்கள். வதனியைப் பிடித் துக் கொள்கிறான். இப்போது மலையவன் சுட முடியாது.அவளை அவர்கள் கொண்டு போனால், சீரழித்துக் கொல்லுவார்கள். உலகத்தில் எங்கேயும் இது நடக்கவில்லை. நாஜிகள் கூட இப்படிச் செய்தது இல்லை.

அப்போது வதனி கத்துகிறாள்: ‘சுடுடா, என்னைச் சுடுடா’ என்கிறாள். எப்படி மனசு வரும்? ஆனாலும் வேறு வழி இல்லை; அவள் தொடர்ந்து கத்துகிறாள்.
சுடுகிறான். அவளது உடல் கீழே விழுகிறது.அந்த உடலைக்கூட சிங்களப்படை யினர் கொண்டு போய்விடக்கூடாதே; அதையும் சீரழித்து விடுவார்களே என்று
பதறுகிறார்கள். மிருகங்கள் செய்யாததைச் சிங்களர்கள் செய்வார்கள். உலகத் தில் இதை விடக் கொடுமையான இனப்படுகொலை வேறு எங்கேயும் நடந்தது
கிடையாது தம்பிகளே.

எனவே, அந்த உடலைக் கொண்டு வரத்துடிக்கின்றார்கள். சத்தம் கேட்டு மே லும் பல சிங்களர்கள் அங்கே வந்து விட்டார்கள்.உடலை எடுக்க முடியவில் லை.இரண்டு நாள்கள் கழித்து வருகிறார்கள். அந்த உடல் அங்கேயே கிடக்கின் றது. அதை எடுத்துக்கொண்டு போய் அடக்கம் செய்கிறார்கள்.



அவர்களும் தமிழர்கள்தானே?

ஏதோ பொருளை எடுத்துக் கொண்டு வருவதற்காக, சுந்தரம் போகிறான். வீட் டுக்குப் போகிறான். குண்டு வந்து விழுகிறது. செங்காரிப் பசு ஒரு கன்றுக்குட்டி யை ஈன்று இருந்தது.அதுவும், அந்தக் குண்டில் அடிபட்டுச் செத்துப் போய்க்
கிடக்கின்றது.அதைத் தூக்கிய போது, அவன் உடலில் இரத்தம் படுகிறது. அப்ப டியே ஓடி வருகிறான்.

அப்போது வருகிறாள் வதனி.‘சண்டையில் நமக்கு அயல்நாடு களில் இருந்து தமிழர்கள் உதவுகிறார்கள். ஆனால், இங்கே ஆள் பற்றாக்குறையாக இருக் கிறது.நிறையப்பேர் படையில் சேர வேண்டும் அல்லவா?’ என்கிறான்.அப்பா அம்மாகிட்ட கேட்டால்,அண்ணன் போய் படையில் சேர்ந்து இருக்கின்றானே? நீ போக வேண்டாம் என்பார்கள்.இனி படையில் சேர்ந்து விட வேண்டும் என்று அவன் முடிவு எடுக்கிறான்.அப்பா அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டுமே? நாம் திருமணம் செய்து கொள்வோம் என்கிறான்.

அவள் சொல்லுகிறாள்: நான் மலையகத்துப் பொண்ணு. நீங்க யாழ்ப்பாணத்துக் காரங்க. நானும் படையில் சேர்ந்து, சண்டையில் சாகிறேன் என்கிறாள். என் னுடைய தாய் தந்தையும் நோயாளிகள்; உன்னுடைய தாய் தந்தையும் நோயா ளிகள். அவர்களைக் காப்பாற்ற வேண்டுமே? நாம் இப்போது திருமணம் செய்து
கொள்வோம். ஒரு மாதம் கழித்து நான் போய்ப் படையில் சேர்ந்து விடுகிறேன் என்று உறுதிமொழி கொடுக்கிறான்.

திருமணத்தை எப்படி நடத்துவது? அவங்க மலையகத்திலே இருந்து வந்தவங் களாயிற்றே என்கிறார் தாய்.ஏம்மா,அவங்களும் தமிழர்கள்தானே?அப்பாஎன்ன சொல்லுவாரோ? வேட்டைக்காரர் முருகர் நடந்து வருகிறார். உன் சின்னவ னுக்குக் கல்யாணத்தைப் பண்ணிவை. முத்தம்மா அழகான பொண்ணு, நல்ல பொண்ணு என்கிறார். என்னடா மலைநாட்டுத் தமிழன். அவனும் தமிழன்தான்.
கல்யாணத்தைப் பண்ணிவை.உனக்கு உதவியாக இருப்பாள் என்கிறார். திரு மணம் நடக்கிறது.மூத்தவன் சிவம் வந்து கலந்து கொண்டுவிட்டுப்போகிறான்.

பிறகு பாரிய தாக்குதல் நடக்கிறது.அதைப்பற்றி இந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதி இருக்கின்றார் அரவிந்தகுமாரன். ஒவ்வொரு நிகழ்வையும் நான் முழு மையாக விவரித்துக்கொண்டு இருக்க நேரம் கிடையாது.நீங்கள் இதைப்படிக்க
வேண்டும். ஒரு சிறிய எடுத்துக்காட்டைச் சொல்லுகிறேன்.

எப்படித் தாக்குவது?

சிங்களவன் ஷெல் அடிக்கிறான்.இவர்கள் ஆர்டிலரியில் பீரங்கியில் இருந்து அடிக்கின்றார்கள்.ஆர்டிலரியில் இருந்து வீசுகின்ற குண்டு போய் அங்கே விழுந்து,அவன் திரும்ப ஷெல் அடிப்பதற்கள், இவர்கள் இந்த ஆர்டிலரியை அங்கிருந்து எடுத்துக்கொண்டு வேறு இடத்துக்கு ஒடி விட வேண்டும். இல்லா விட்டால்,அவன் குறிபார்த்து ஆர்டிலரி மீது ஷெல் வீசினால் பீரங்கியும் அழிந் து போகும்; அங்கே நிற்கின்ற புலிகளும் இறந்து போவார்கள்.அதனால், ஒரு குண்டை வீசியவுடனே, ஆர்டிலரியை இரண்டு பேர் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும்; அடிதாங்கியை நான்கு பேர் தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்.மொத் தம் ஆறு பேர் வேண்டும். இதில் சில நொடிகள் தாமதித்தாலும், ஆறு பேரும்
காலிதான். இப்படித்தான் விடுதலைப் போராளிகள் போராடினார்கள்.

ஒருநாள் சிவத்தினுடைய தளபதி காலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டு இருக்கின்றார். எண்ணண்ணே? என்று கேட்கிறார். 500 தோப்புக்கர ணம் அப்பா என்கிறார். எதற்கு? அண்ணை சொல்லிட்டாரு என்கிறார். அண் ணை என்றால், பிரபாகரன்.

நான் நேற்று ஊடறுத்துப் போகின்ற ஒரு தாக்குதலைப் பற்றி அண்ணையிடம் சொன்னேன்.இவரும் தலைவரோடு நேரடியாகப் பேசக்கூடிய ஒரு முக்கியத் தளபதி.நான் சொன்னதைக் கேட்டு அண்ணை,இன்றைக்கு இராத்திரி தண்ணிய மட்டும் குடிச்சுட்டுப்படு. ஒன்றும் சாப்பிடாதே.காலையில் எந்திரிச்சு, 500 தோப் புக்கரணம் போட்டுட்டு எங்கிட்டத் தொடர்பு எடு. இதுதான் உனக்குத்தண்டனை என்று சொல்லிவிட்டார்.அதுதான் போட்டுக்கொண்டு இருக்கிறேன் என்கிறார்.

எதற்காகத் தோப்புக்கரணம் போடச் சொன்னார் தெரியுமா? செட்டிகுளத்துக்குப் பக்கத்திலே சிங்களவர்கள் கிராமம் இருக்கிறது. அங்க போயி, சிங்களவனை யெல்லாம் வெட்டிக் கொன்னு போட்டோம்னா, நம்ம மக்கள்ட்ட வரப் பயப்படு வான் என்று அண்ணையிடம் சொன்னேன். அதற்குத்தான் அந்த 500 தோப்புக்கர ணத்தண்டனை.

என்ன சொன்னார் தலைவர் தெரியுமா? சிங்களவர்களோ,முஸ்லிம்களோ அல் லது வேறு எவருமோ நமக்கு எதிரிகள் அல்ல.சிங்கள இனவாத அரசும், அவர் கள் நம்மீது ஏவுகின்ற ஆயுதப்படைகளும்தாம் நம் எதிரிகள் என்கிறார்.

துரோகத்தில் தப்பித்த தலைவர்

அது மட்டும் அல்ல.காட்டிக் கொடுக்கின்ற துரோகிகள் எப்படிஇருப்பார்கள் என் பது இந்தக் கதையில் வருகிறது. மாத்தையாவும், கிருபனும் அப்படித்தான்
துரோகிகள் ஆனார்கள். அவர்கள் மூலமாகத் தலைவரைக் கொல்ல இந்திய உளவுத்துறையான ‘ரா’ தான் ஏற்பாடு செய்தது. மூன்று கட்டத் திட்டம் வகுத் தார்கள்.ஒன்று அவர் வருகிறபோது தாக்குவது; அல்லது படுக்கைக்குக் கீழே குண்டு வைப்பது; அல்லது பக்கத்தில் இருந்து சுடுவது.இதுதான் திட்டம்.

செங்கல்பட்டில் காவலில் இருந்து இவர்கள் எப்படித்தப்பித்து வந்தார்கள்?என் று பொட்டு அம்மானுக்குச் சந்தேகம் வந்தது. இங்கே இருப்பவர்களைத் தொடர் பு கொண்டு கேட்டார்.சந்தேகம் வலுக்கிறது. ஒருவனைப் பிடித்து விசாரித்த போது, திட்டத்தை உளறி விட்டான்.அதைக்கேட்டு பொட்டு அம்மான் விழுந்த டித்து ஓடுகிறார். தலைவர் முன்பு கிருபன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக் கின்றான்.இடுப்பில் பிஸ்டல் இருக்கிறது.பிடித்து விட்டார்கள். உண்மையை
ஒத்துக்கொண்டான் கிருபன்.மாத்தையாவைப் பிள்ளையைப் போல வைத்து இருந்தார் தலைவர். நான் ஒன்றும் நாட்டுக்குத் தலைவர் ஆகப்போவது இல் லை. மாத்தையாவைத்தான் தலைவர் ஆக்கு வேன் என்றார். அந்த மாத்தையா வும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதை வீடியோவாகப்பதிவு செய்து வைத்து
இருக்கின்றார்கள்.

இதேபோன்ற ஒரு காட்சி, இந்தக் காவியத்திலும் வருகிறது. அதை நீங்கள் படிக்க வேண்டும்.

நாச்சிக்குடா அருகில்,ஒரு மண் அணை வைத்து இருந்தார்கள்.அங்கே கண்ணி வெடிகளையும் பதித்து வைத்து இருந்தார்கள்.அதைக்கடந்து சிங்களப்படைவர முடியாது என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால், இந்தியாவின் உத வி யோடு மிகுந்த கவனத்தோடு, அந்த மண் அணையை உடைத்து விட்டார் கள்.

முள்ளிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரையிலான கதை இந்த முதல் பாகத் தில் வருகிறது.தொடரும் என்று போட்டு இருக்கிறார் அரவிந்தகுமாரன்.இனி கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை அடுத்த பாகம்.புதுவெள்ளம் என்று பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தை கல்கி ஆசிரியர் முடித்த போது, அடுத்த பாகம் எப்படி இருக்குமோ? என்று நான் ஆர்வத்தோடு இருந் தேன்.அதுபோல இவர் இந்த பாகத்தை முடிக்கின்றபோது, சிவம் உயிரோடு
இருக்கிறான்; சுந்தரம் இருக்கிறான். வேட்டைக்குப் போன முருகரைப் பிடித்து விடுகிறார்கள்.அவர் கையாலேயே ஒருவன் கழுத்தை நெரித்துக் கொல்லு
கிறார். அவரை அவர்கள் கொன்று விடுகிறார்கள். இந்தச் செய்தி அறிந்து இவர் களுடைய தந்தை பரமசிவத்துக்குப் பக்கவாதம் வந்துவிடுகிறது. இவர்களுக் குத் திருமணம் ஆகி விட்டது.

அடுத்த பாகம். பாலப்பட்டியில் இருந்து பள்ளமடு வந்து பெரியமடு வந்து பா லையாறு வரை வந்து விட்டார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது? தம்பி களே,அந்த அலம்பில் காட்டுக்கு உள்ளே நான் சென்றவன். முள்ளிக்குளம் வழி யாக கிளிநொச்சி வரையிலும் புலிகள் என்னை நடத்தி அழைத்துக்கொண்டு
போனார்கள். அந்தப் பாதையை நான் கடந்து இருக்கிறேன்.

வீரகாவியங்களைப் படியுங்கள்

வரலாற்றில் வீர உணர்ச்சியை ஊட்டுகின்ற காவியங்களை,நீங்கள் இப்போது படமாகப் பார்க்கலாம். ‘பிரேவ் ஹார்ட்’ என்று ஒரு படம். அது உண்மைச் சம்ப வம். ஸ்காட்லாந்து நாட்டு விடுதலைக்காக வில்லியம் வாலஸ் வாள் ஏந்திப் போராடிய கதை.அந்தக் காவியத்தைப் பாருங்கள். இந்தக் கதையை இராபர்ட் பர்ன்ஸ் எழுதி இருக்கின்றார். அதைப் படியுங்கள். வால்டேரும்,ரூசோவும் எழு திய வரிகள், பிரெஞ்சுப்புரட்சிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தன. ஷெல்லி யின் கவிதைகளை, இராபர்ட் பர்ன்சின் கவிதை களைப் படியுங்கள். வீரத்தைப்
பெறலாம். மராட்டியத்துச் சிவாஜியின் தாயார் சொன்ன கதைகளைக் கேட்டு வீரம் பெற்றதாக அவன் சொல்லுகிறான்.மகேந்திரபல்லவச் சக்கரவர்த்திக்கு, மகாபாரதத்தின் விராட பருவத்தை, ஊர் ஊராக வாசிக்கச்சொன்னார், வீர உணர்ச்சியை ஊட்டுவதற்காக. குருசேத்திரப் போர்க்களத்தை, அபிமன்பு வீரத் தை வாசிக்கச் சொன்னதாக கல்கி எழுதி இருக்கிறார்.

அலெக்சாண்டர் டிரையாலஜி என்று ஒரு அற்புதமான புத்தகம்.உண்மைச் சம்ப வங்கள். மூன்று பாகங்களாக இருக்கின்றது.அதைப் படியுங்கள். கீழே வைக்க
முடியாது. அலெக்சாண்டர் என்ன நினைக்கிறான். ஹோமர் எழுதிய இலியட் ஒரு கற்பனைக்கதை.மகாபாரதம்,இராமாயணம் போல அதுவும் ஒரு கற்பனை தான்.அந்தக் கதையில் வருகின்ற அக்கிலிஸ் பெருவீரன். அந்தக் கதையைப் படித்துத்தான் அலெக்சாண்டர் வீரம் பெற்றான்.அத்தகைய உணர்வுகளை, அர விந்தகுமாரனின் நீந்திக் கடந்த நெருப்பாறு நமக்குத் தருகிறது.

சிங்களப் படைகளுக்கு உதவிய இந்தியா

யானை இறவுப் போரிலே,தங்களை விட 40 மடங்கு பலம் வாய்ந்த சிங்களப் படையை,தலைவர் பிரபாகரனின் புலிப்படை தோற்கடித்தது. அந்தக் களத்தில்
ஒன்றாக நின்றவர்கள்தான் சிவமும், கணேசும். உயிருக்கு உயிராகப்பழகினார் கள். அக்னி அலைகளில், ஓயாத அலைகளில் சிங்களப் படைகளைத் தோற்
கடித்து விரட்டினார்கள். பின்னர் ஏன் இந்தத் தோல்வி ஏற்பட்டது?

இந்திய அரசு உதவியது.முப்படைத்தளபதிகளை அனுப்பித்திட்டங்களை வகுத் துக் கொடுத்தது. ஆயுதங்களை அனுப்பியது. சிங்கள வான் படைக்கு ராடார் களைக் கொடுத்தது.புலிகளின் தளங்களைக் காட்டிக்கொடுத்துக் குண்டு போ டச் செய்தது. இந்தியக் கடற்படை,நேரடியாகவே தலையிட்டது.புலிகளுக்கு வந்த 16 கப்பல் களைத் தாக்கி மூழ்கடித்தது.சோனியாகாந்தி இயக்குகின்ற, மன் மோகன்சிங் தலைமை தாங்குகின்ற காங்கிரஸ் அரசு,சிங்களப் படைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது.நேரடியாக யுத்தத்தை இயக் கினார்கள். நாம் ஏழு கோடித்தமிழர்கள் இங்கே வாழ்கிறோம்.இந்த இந்தியாதான், நமது
சகோதரர்களை அழிக்க அனைத்து உதவிகளையும் செய்தது.

அடுத்த கட்டம் என்ன? அதை நாம் முன்னெடுத்துச் செல்லுவோம்.உலக நாடு களின் ஆதரவைத் திரட்ட முடியும். திரட்டுவோம்.அடுத்து இந்தியாவில் அமை கின்ற அரசு, எக்காரணத்தை முன்னிட்டும் இனி காங்கிரஸ் அரசாக இருக்கக் கூடாது. இந்தியாவின் ஒருமைப்பாடு காப்பாற்றப்பட வேண்டுமானால், காங் கிரசை வீழ்த்த வேண்டும். சுதந்திரத் தமிழ் ஈழம் அமை வதற்குப் பொது வாக்கெ டுப்பு நடத்த வேண்டும்.அதைச் செய்ய முடியும்.அதற்காக நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.உங்களைப் போன்ற இளைஞர்கள், மாணவர்கள் உறுதி எடுத்துக்
கொள்ள வேண்டும். அங்கே இளம் புலிகள் போராடிச் செத்தார்கள். இளம்பரு வத்தில்தான் இலட்சிய தாகம் மிகுந்து இருக்கும்.

மாணவக் கண்மணிகளே,உங்களுக்கு நான் அறிவுரை கூறுவதாக நினைக்கா தீர்கள்.புலிகள் குளிர்பானங்கள் அருந்த மாட்டார்கள். புலிகள் என்று சொல் லும்போது வெறுமனே கைதட்டினால் மட்டும் போதாது.பெண்களை ஏறெடுத் தும் பார்க்க மாட்டார்கள். புகை பிடிக்க மாட்டார்கள், மது அறவே கிடையாது. தலைவன் எப்படியோ அப்படி அந்தத் தம்பிகளும் இருந்தார்கள். (பலத்த கைதட் டல்). பல தலைவர்களின் வரலாறுகளை நான் படித்து இருக்கின்றேன். அவர் களிடம் கூடச் சில பலவீனங்கள் இருந்தன.அப்படி எந்தக் குற்றமும் சொல்ல
முடியாத பத்தரை மாற்றுத் தங்கம் எங்கள் தலைவன் பிரபாகரன்.(கைதட்டல்)

நெருப்பு நதியைப் பார்க்கிறேன் என்றார் மாவீரர் நாளில் பிரபாகரன்.நெருப்பு நதியை வலம் வந்து இருக்கின்றார்கள். அந்த நெருப்பு நதி நம் நெஞ்சங்களில் எரியும்; அதில் முத்துக்குமார்களைப் பார்க்கிறேன். திலீபன்களை, கிட்டு, கும ரப்பா,புலேந்திரன்,ஜானி, விக்டரை,அங்கயற்கண்ணியை, கேப்டன் மில்லரைப்
பார்க்கிறேன். மாவீரர்களின் உயிர்களைத் தணலாக ஏந்திக்கொண்டு வருகின் றது நெருப்பு நதி. நீந்திக் கடந்த நெருப்பாறு.எல்லாம் அக்கினிக் குஞ்சுகள்.நீங் களும் அக்கினிக் குஞ்சுகள் ஆகுங்கள்.

என்னைக் கொண்டு வந்த படகு பின்னாளில் உடைந்து விட்டது.அப்போது, 1989 ஆம் ஆண்டு,சிவகாசித் தேர்தல் களத்தில் எனக்குத் தோழர்கள் கொண்டு வந்து கொடுத்த நிதி மீந்துபோய் இருந்தது.இந்தப்பணத்தை,அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள் என்றார் என் துணைவியார். அதில் என் குழந்தைகளுக்கு ஒரு நகை வாங்கிப் போட வேண்டும் என்ற எண்ணம் வரவில்லையே. நான் கொடுத்து
வைத்தவன். தமிழ்நாடு புலிகளின் பொறுப்பாளர் அன்பை அழைத்துச் சொன் னேன்.ஐயோ,காசு வாங்க மாட்டோம் அண்ணா என்றார்.வாங்காவிட்டால், என் வீட்டுக்கு வராதீர்கள் என்றேன். எப்போதுவந்தாலும், நான் இல்லாவிட்டாலும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுப் போவார்கள்.தலைவரும் பலமுறை வந்து
சாப்பிட்டு இருக்கின்றார்.

என்னிடம் அந்த அன்பு சொன்னார்.அண்ணா உங்கள் பேச்சுகளின் ஒலிநாடா வைப் போட்டுக் கேட்போம். எங்கள் நரம்புகள் முறுக்கேறி விடும் என்றார்கள்.
தம்பி உங்களைப் போலத் துப்பாக்கி ஏந்திக் களத்தில் இறங்கிச் சண்டை போட என்னால் முடியாவிட்டாலும், உங்கள் நரம்புகளை எனது பேச்சு முறுக்கேற்று கிறது அல்லவா? அதுவே எனக்குப் போதும் என்றேன்.

தமிழ் ஈழம் நமது இலக்கு. நாம் அதை உறுதியாகக் காண்போம்.என் வாழ்நா ளில், உலகில் தமிழனுக்கு ஒரு நாடு அமைய வேண்டும். அதை நான் காண் பேன்! உலக விடுதலைப் போர்க்கள வரலாற்றில்,பிரபாகரனுக்கு நிகரான ஒரு தலைவர் வேறு எவரும் கிடையாது.உங்களைப் போன்ற தம்பிகளிடம் நான் எதிர்பார்க்கிறேன். புரட்சி எப்போது வெடிக்கும்? யார் நடத்தப் போகிறார்கள்? எதுவும் தெரியாது. உங்களுள் சிலர் மிகப்பெரிய புரட்சியை நடத்திக்காட்ட முடி யும். ஒழுக்கமாக இருங்கள். நமது பிள்ளைகள் பேருந்துகளில் கொட்டம் அடிப்
பதை, கல்லூரிகளுக்கு இடையே அடிதடி சண்டை போட்டுக்கொள்ளுகின்ற செய்திகளைப் படிக்கும்போது என் மனது மிகவும் வலிக்கின்றது. நான் ஏதாவது
சொன்னால்,இவர் என்ன அறிவுரை சொல்லுவது?என்ற எண்ணம் வந்துவிடும்.  அதனால் நான் சொல்லுவது இல்லை. ஆனால்,மார்ச் மாதம் நடந்த போராட் டக் களத்தில் அனைவரும் வீதிக்கு வந்தார்களே?

கையை மடக்கி வைத்து இருக்கின்றவரையிலும்தான் எதிர்பார்ப்பு இருக்கும். திறந்து காட்டி விடக்கூடாது. ஆயத்தப்படுத்தவேண்டும். அதைத்தான் தலை வர் சொல்லுகிறார். அது இந்தப் புத்தகத்தில் இருக்கின்றது.தற்காப்போடு தாக்க வேண்டும்;பலத்தை இழந்து இடத்தை வெற்றி கொள்ளும்போது, பின்னர் இடத் தையும் இழந்து பலத்தையும் இழந்து விடுவோம் என்கிறார்.இடத்தை இழந்தா லும், பலத்தைப் பெறுவதால், பின்னர் இழந்த இடத்தையும் பெற்றுக் கொள்ள லாம். (கைதட்டல்).

ஆயத்தப்படுத்துவோம்; உங்களுக்கு உதவ நான் இருக்கிறேன்.

ஆகையால் எப்போது நடத்துவது? இப்போது தேதியைச் சொல்ல வேண்டாம். முத்துக்குமார் இறந்த போது, எல்லா வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்றுவோம் என்று சொன்னார்கள். அப்படி ஏதும் இப்போது சொல்லாதீர்கள்.எல்லோரும் ஏற்றி விடுவார்களா? சில நூறு வீடுகளில் மட்டுமே ஏற்றினால், தமிழ்நாட்டில் ஒரு விழுக்காடுதான் ஆதரவு என்று ஏடுகளில் எழுதி விடுவார்கள். முத்துக் குமார் இறந்தபோதே, இளைஞர்கள் கொதித்து எழுந்து இருந்தால், இந்திய அர சுக்கு இவ்வளவு துணிச்சல் வந்து இருக்குமா? அவர்களுக்கு உதவி காட்டிக் கொடுத்த தமிழகத்தின் சில கட்சிகளுக்கு, இனியும் தொடர்ந்து ஏமாற்றலாம் என்ற துணிச்சல் வந்து இருக்குமா?

ஆகவே, முதலில் மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும்; ஆயுதங்களைக் கூர் தீட்டிக் கொண்டுதான் களத்துக்குச் செல்ல வேண்டும். முன்பு பல முறை கை யெழுத்து இயக்கங்களை நடத்தினார்கள். எத்தனை பேர் கையெழுத்துப் போட் டார் கள்? ஐம்பது பேர், நூறு பேர்தான் போட்டார்கள்.ஆகவே,நான் பட்ட காயங் களால் உங்களுக்குச்சொல்லுகிறேன்.ஒரு கட்டம் வரட்டும்.அதுவரை பொறுத் து இருங்கள். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்து விடு தலைக்காக வில்லியம் வாலஸ் போராடினான்.அடுத்த ஆண்டு, செப்டெம்பர்
மாதம்தான் ஸ்காட்லாந்து தனிநாடு அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு நடக் கப் போகிறது.அப்படி ஒரு கட்டத்துக்கு வருவோம். மக்கள் கருத்தை உரு வாக் குவோம். அதுவே நம் இலட்சியத்தின் வெற்றிக்குத் துணையாக அமையும். எந் தத் தன்னலமும் இன்றி, உங்களுக்கு உதவுவதற்கு நான் இருக்கிறேன். மலரட் டும் தமிழ் ஈழம் என்று முன்பு சொன்னேன். இப்போது சொல்லுகிறேன்: மலரும் தமிழ் ஈழம். நன்றி வணக்கம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment