Tuesday, December 3, 2013

கொலைவெறியன் ராஜபக்சேவை கூண்டில் ஏற்றுவோம்!

கொலைவெறியன் ராஜபக்சேவை கூண்டில் ஏற்றுவோம்!
பொதுவாக்கெடுப்பில் தமிழ் ஈழம் மலரச் செய்வோம்!!

விருத்தாசலம் இரயில் மறியல் கிளர்ச்சியில் #மதிமுக ஆ.வந்தியத்தேவன் சூளுரை

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந் து கொள்வதைக் கண்டிப்பதற்காக, முழு அடைப்பு மற்றும் இரயில் மறியல்
போராட்டத்தில் கலந்து கொண்டு ஆர்த்தெழுந்து போராட அணி திரண்டு வந் துள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகம், வணிகர்சங்கம், பெரியார் திராவிடர் கழகம், தமிழக வாழுவுரிமைக்கட்சி, தமிழ் தேச பொது உடமைக் கட்சி, மனித நேய மக் கள் கட்சி, ஆகிய அமைப்புகளின் தோழர்களுக் கெல்லாம் கனிவான வாழ்த்து
களையும் பாராட்டுகளையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள் ளக்கூடாது என்பதற்காகத்தான் நாம் இப்போது போராடிக் கொண்டு இருக்கி றோம். ஆனால், இது மட்டுமே நமது கோரிக்கை அல்ல! காமன் வெல்த்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமான இலங்கையின் கழுத்தைப் பிடித்து
வெளியேற்ற வேண்டும்.இனப்படுகொலை நடந்த இலங்கைத் தீவில் மாநாட் டை நடத்தக் கூடாது. கொடியவன் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்துத் தண்டிக்க வேண்டும். பொது வாக் கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் மலர்ந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். போருக் குப்பின்னரும் ஈழத்தமிழர்கள் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறைகள் அரச வன் முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதையெல்லாம் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இதற்காகப் போராடி வருகிறோம்.

கடந்த ஆண்டு மார்ச் திங்களில் இங்கிலாந்தின் அரசி ராணி எலிசபெத் அம்மை யார் காமன் வெல்த்தின் கொள்கையாக புதிய பிரகடனம் ஒன்றை அறிவித்தார்;
“இனம், மொழி, நிறம், அரசியல் கொள்கை உள்ளிட்ட எவற்றிலும் காட்டப்படும் எந்த வகையான பாகுபாடுகளையும் காமன்வெல்த் உறுதியாக எதிர்க்கும் 
என்று அறிவிக்கப்பட்ட கொள்கை இன்று இலங்கையில் பின்பற்றப்படுகிறதா? இல் லையே! சிங்களவர் களுக்கு உள்ள உரிமைகள் இன்னமும் நம் தமிழர் களுக்கு இல்லையே! காமன்வெல்த்தின் பிரகடனத்திற்கு நேர் எதிரான நாட் டை அந்த கூட்டமைப்பில் வைத்து இருப்பதும், அந்த நாட்டிலேயே மாநாட்டை நடத்து வதும் கேலிக்கூத்து அல்லவா?

ஒரே ஒரு பத்திரிக்கையாளர்தான் நைஜீரியாவில் கொல்லப் பட்டார். ஊடக
சுதந்திரம் இல்லாத அந்த நாடு, காமன் வெல்த்தில் இருக்க தகுதி இழந்துவிட் டது என்று அந்த நாட்டை விலக்கி வைக்க வில்லையா? ஆனால், ஈழ மண் ணில் எத்தனை எத்தனை இசைப்பிரியாக்கள் கற்பழிக்கப் பட்டு கொடூரமாகக் கொல்லப் பட்டார்கள். நீதிக்காக குரல் கொடுத்த காரணத்தாலேயே, சிங்கள வராக இருந்தாலும் கூட,சண்டேலீடர் இதழாசிரியர் லசந்த விக்கர சிங்கே கொல்லப் பட்டாரே! பத்திரிகை சுதந்திரம் கடுகளவுகூட இல்லாத காட்டாட்சி நடக்கும் நாடுதானே இலங்கை! மக்களாட்சி நெறி முறைகளுக்கு மாறாக நடந்த பாகிஸ்தான் நாட்டை காமன் வெல்த்தில் இருந்து வெளி யேற்றினார் களே! கறுப்பின மக்களை அடிமைகளாக நடத்திய ரொடீசியாவை, தென் ஆப் ரிக் காவை, உகாண்டாவை, பிஜித் தீவை விலக்கி வைத்தார் களே! இந்த வரி சையிலே இலங்கையையும் சேர்த்து வெளியேறு என விரட்ட வேண்டாமா?

அதைவிட கொடுமை, குதிரை கீழே தள்ளியதோடு மட்டும் இல்லாமல் குழியை யும் தோண்டியது என்று சொல்வார்களே. அதைப்போல கொடியவன் ராஜபக் சேவின் கொலைக்களத்திலேயே காமன் வெல்த் மாநாடு நடத்துவது என்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா? எனவே தான் நாம் குமுறும் உள்ளத்
தோடு கண்டிக் கிறோம். நாம் கண்டிப்பது மட்டுமல்ல முள்ளி வாய்க்காலில் நம் தமிழின உறவுகளை கருவறுக்கும் இனப்படு கொலையை சிங்களக் காடை யர்கள் நிகழ்த்திய 2009 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகள் எல்லாம் இலங்கை யில் காமன் வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்று 2010 ஆம் ஆண்டு முதலே வறிபுறுத்தி வருகின்றன.

காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது.நடத்தினால் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித் தாரே! அங்குள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் இதற்காக தொடர்ந்து குரல் கொடுத் தார்களே, போராடினார்களே! கனடா,ஆஸ்திரேலியா, மொரீசியஸ் தீவு ஆகிய நாடுகள் எதிர்த்தன.அன்புத் தோழர்களே காமன் வெல்த் அமைப்பில் 54 நாடுகள்
அங்கம் வகிக்கின்றன என்றால் 26 நாடுகள் இதனை ஏற்க முடியாமல் புறக்க ணிக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார்களே! 2012ஆம் ஆண்டு காமன்வெல்த்
நீதிபதிகள் கலந்து கொண்ட சட்ட மாநாடு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றது. அந்த மாநாடு இலங்கையில் மாநாடு நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து
தீர்மானம் நிறைவேற்றியது. இன ஒடுக்குமுறைக்கு எதிராக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஏற்ற தியாகத்தலைவர் நெல்சன் மண்டேலே வாழ்ந்த தென்
ஆப்ரிக்காவில் நோபல் பரிசு பெற்ற பேரறிவாளர் லெஸ்பின் டிட்டோ, கொழும் பில் மாநாடு நடத்தினால் அனைவரும் புறக்கணிக்க வேண்டும், எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.அப்போது தான் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று அறி வித்தாரே! இப்படி உலகெங்கும் தொலை தூரத்தில் உள்ளவர்கள் எல்லாம் மனி த நேயத்துடன் நம் இனத்திற்காக பரிந்து பேசும்போது இங்கே உள்ள இந்திய அரசும், காங்கிரசு கட்சியும் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துக்
கொண்டுதான் இருக்கிறது.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே, இந்திய அரசே கலந்து
கொள்ளாதே என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஓங்கி குரல் எழுப்பினார் கள். ஜி.கே.வாசன்,ஜெயந்தி நடராசன், நாராயணசாமி, சிதம்பரம் போன்ற காங் கிரசு கட்சியின் அமைச்சர்களும் இதனை வலியுறுத்தினார்கள். தமிழக சட்டப்
பேரவையில், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறது.இத்தனைக்குப் பிறகும் இந் திய அரசு கொழும்பு மாநாட்டுக்கு செல்லும் என்றுதானே டில்லி பேசுகிறது! தான் கலந்து கொள்ள முடியாத நெருக்கடியை விளக்கி அவசர கடிதத்தை தூத ரகம் மூலம் ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்து விட்டு, அடுத்த நாளே தொலை
பேசி மூலம் ராஜபக்சேவிடம் சமாதானம் செய்கிறவர்தான் நமது பிரதமர் மன் மோகன் சிங்!தமிழ்நாட்டைப் பற்றி, தமிழக மக்களின் உணர்வைப் பற்றி அவர் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை என்பதைத்தான் அவருடைய நடவடிக்கை கள் உணர்த்துகின்றன.

அருமைத் தோழர்களே, கடந்த 20 ஆண்டுகளில் காமன்வெல்த் மாநாடுகள் பத் துமுறை நடைபெற்று இருக்கின்றன.இதில் ஐந்து மாநாடுகளில் நமது பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அதற்காக யாரும் வருத்தப்பட வில்லை. ஆனால், கொழும்பு மாநாட்டில் கலந்து கொள்ள வில்லையே என்று மட்டும் மன்மோ கன்சிங் சங்கடத்தால் நெளிகிறார்.அவர் சார்பில் மாநாட்டில் பங்கேற்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பிரதமர் கலந்து கொள்ளாத தால் இலங்கை யுடனான உறவு பாதிக்காது என்று சமாதானம் பேசுகிறார்.
மன்மோகன் சிங் கலந்து கொள்ளாதது ஒன்றும் பின்னடைவு அல்ல; இதை ஒரு பிரச்சினையாக நாங்கள் கருத வில்லை; அவருக்கு அங்கு இருக்க வேண் டிய அவசியம்; இதைப் பல கோணங்களில் பார்க்க வேண்டும் என்று இலங்கை யின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் அவர்களும் வேலிக்கு ஓணான்
சாட்சி என்று பதிவுரை தருகிறார்.

யார் இந்த அமைச்சர் பெரிஸ் தெரியுமா? நண்பர்களே, அண்மையிலே இவர் டில்லிக்கு வந்தார்; காமன்வெல்த் மாநாட்டிலே பங்கேற்க அழைப்புக் கொடுக்க வந்தார்!இப்போது இலங்கை சிறையில் இருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழக
மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும் உத்தேசம் எங்களுக்குஇல்லை. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித்தரப் போகிறோம் என் று அப்போது பேசினார்.கச்சத்தீவு முடிந்து போன விசயம்.அதைப் பற்றிப் பேசா தீர்கள் என்று பதில் சொன்னார்!

இலங்கை மீதான மனித உர்மை மீறல் குற்றச்சாட்டுகள் பற்றிய மற்ற நாடு களின் கருத்து களுக்கும், அவை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்கும்
தொடர்பு இல்லை என்றும் அப்போது பேட்டி அளித்தார்.இந்தியா இந்த மாநாட் டில் கலந்து கொள்ளும் தேவை இல்லை என்பதுபோல் பிரதமர் இல்லத்தின் அருகில் நின்று அவர் பேசுகிறார் என்றால், அவருக்கு இந்த துணிச்சலைக் கொடுத்தது யார்? அது மத்தியில் ஆளும் காங்கிரஸ் தான் எனில் அது வெட்கக் கேடு என்று தினமணி (28.08.2013) ஏடு தலையங்கம் தீட்டிக் கண்டிக்கும் அளவு நடந்து கொண்ட இலங்கையின் அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் இப்போதும் அலட்சி யமாக இந்தியாவைப் பேசுவதை தோழர்களே நீங்கள் கவனிக்க வேண்டும்.

இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தியே தீர வேண்டும் என்று ராஜபக்சே அரசுக்கு தோன்றாத் துணையாக செயல்பட்ட கமலேஷ் சர்மா ஓர் இந்தியர் தான்! ஆனாலும், பலவழிகளில் இலங்கையின் இனவெறிச் செயலை உலக நாடுகளின் கவனத்தில் இருந்து திசை திருப்பியதில் தண்டனை கிடைக்காமல் காப்பாற்றி வருவதில் பெரும்பங்கு இவருக்கு உண்டு! இவர்தான் காமன் வெல்த் மாநாட்டின் செயலாளர்! நரிக்கு நாட்டாமை கிடைத்தால், கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும் என்பார்களே, இப்படித்தான் இவர் அதிகாரத்தைப் பயன் படுத்தி இந்திய அரசின் உதவியோடு சிங்கள இனவெறி கொடுங்கோல் அரசை சட்டத்தின் பிடியில் இருந்து நழுவச்செல்ல இவர் பெரிதும் பாடுபடுகிறார்.

மனித உரிமைகள் இன்னமும் இலங்கையில் தமிழர்களுக்கு கிடைக்கவில் லையே, கடும் பகை உணர்வு மாறாமல் இருக்கும் நிலையில் தமிழர்களும்
சிங்களவர்களும் இணைந்து வாழ முடியுமா என்றெல்லாம் லண்டன் பி.பி.சி. செய்தியாளர் இவரிடம் கொழும்பு நகரில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு திணறடித் தார்! ராஜபக்சேவின் பிரதிநிதியாக நின்று சமாதானமாக கமலேஷ் சர்மா பதில் சொன்னாரே தவிர, காமன்வெல்த் அமைப்பின் நிர்வாகி என்ற
உணர்வே இருப்பதாக அவர் காட்டிக் கொள்ளவில்லை! இப்படிப் பட்டவரின் நிர்வாகத் தில்தான் கொழும்பு மாநாடு கூடுகிறது.

இவர்களின் நிலைதான் இப்படி என்றால், தமிழ்நாட்டுத் தலைவர்களில் கரு ணாநிதியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. சூழ்ச்சியின் வடிவம், சுய நலத்தின் மறு உருவம் அவர்! காமன்வெல்த் மாநாடுக்கு இந்தியாவிலிருந்து
சிறு துரும்பு கூட செல்லக்கூடாது; மீறிக் கலந்து கொண்டால் அதன் விளைவு களை காங்கிரசு கட்சி அனுபவிக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரித்து அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகு அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை வந் தார்.இவரைச் சந்தித்துப் பேசினார்.இப்போது இந்திய அரசு இலங்கைக்கு மாநாட்டுக்கு செல்ல முடிவெடுத்துவிட்டது.அன்று துள்ளிக்குதித்து முண்டா
தட்டிய கருணாநிதி இன்று,மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளாதது ஆறுதல் அளிக்கிறது என்று அடக்கி வாசிக்கிறார்.துரும்பு கூட கலந்துக் கொள்ளக்
கூடாது என்று சொன்னீர்களே,இப்போது வெளியுறவு அமைச்சர் செல்கிறாரே என்று கேட்டதற்கு இது விவாதத்திற்குரியது என்று பதில் அளிக்கிறார். இது தொடர்பாக போராட்டம் தேவைப்படுமானால் நாங்கள் நிச்சயம் நடத்துவோம். அவர் செல்வதை எதிர்த்து இப்போது போராட்டம் நடத்துவதாக இல்லை. என் றெல்லாம் கருத்து சொன்ன கருணாநிதி மாநாட்டில் பிரதமர் பங்கேற்காதது
ஆறுதல் அளிக்கிறது என்ற எனது கருத்து அரைமனதாக கூறப் பட்டது. அதே நேரத்தில் அதை வரவேற்றும் சொல்லவில்லை விவாதத்திற்குரியது என்று தான் கூறினேன் என்று கழுவிய மீனில் நழுவிய மீனாக பேசுகிறார்.அவரது திடீர் மாற்றத்திற்கு சமரசத்திற்கு என்ன காரணம்? ஏற்காடு இடைத் தேர்தலா?
அண்மையில் வர உள்ள நாடாளுமன்றத் தேர்தலா? குடும்பத்தின் மீது தொடர்ந் து வரும் வழக்குகளா? இதில் எது என்பது நமக்குத் தெரியவில்லை; அவருக் குத்தான் தெரியும்.

தி.மு.க. தலைவரின் நிலைக்கு சற்றும் சளைத்ததல்ல அம்மையார் ஜெயலலி தாவின் அணுகு முறை! ஈழத்தமிழர் களுக்காக மத்திய காங்கிரஸ் அரசைக்
கண்டித்து முதல்நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றுவார். மறுநாள் செந்தூரன் உள்ளிட்ட ஈழத்தமிழ் அகதிகளை வலுக் கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கும் செயலிலும் ஈடுபடுகிறார்.காமன்வெல்த் மாநாட்டில் இந் திய கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றிய வீராங்கணையாக காட்சி அளிப்பார்.

விருதுநகரில் நடைபெற்ற மாநாட்டில் மாவீரன் பிரபாகரன் படம் வைக்கக் கூடாது என்று மிரட்டுவதும் இவரே! ஈழ விடுதலைக்கு குரல் கொடுக்கும்
கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பதும் இவரே! முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவுக்கு அனுமதி
மறுத்து அடக்குமுறையை ஏவி விட்டு தமிழக ராஜபக்சேவாக செயல் படுவ தும் இவரே! “ராமன் எத்தனை ராமனடி” என்று பாடியதைப் போல செயலலிதா வின் அரசியல் வேடங்கள்தான் எத்தனை எத்தனை? நினைத் தாலே நம்மை திகைக்க வைக்கிறது. இதுதான் அவருடைய அரசியல்.

அதன்பின் இனிய தோழர்களே,சூதுமதியினர்களும் நயவஞ்சகர்களும் நம்மைச் சுற்றி நிறைந்து இருப்பதால் அவர்களிடம் ஆட்சி அதிகாரமும் இணைந்து இருப்பதால் தற்காலிக வெற்றி சிங்களவர்களுக்கு கிடைத்து விட்டது! காமன் வெல்த் மாநாடு அங்கே தொடங்கிவிட்டது. இதன் காரணமாகவே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பு ராஜபக்சே விடம் வந்து விட்டது.கொலை காரனுக்கே மகுடம் சூட்டி, செங்கோலையும்
ஒப்படைத் ததைப்போல நிலைமை ஆகி விட்டது! இந்த மாநாடு சர்வதேசத் தலைவர்கள் கூடிக் கலைகிற மாநாடு அல்ல! காமன்வெல்த் நாடுகளின் கார்ப் பரேட் முதலாளிகள் எல்லாம் கொழும்பு நகரில் கூடுவார்கள்.

உலகத் தொழில் நிறுவனத்தின் (World Trade Organization) கூட்டமும் அங்கே நடக் கும்.மாநாட்டை ஒட்டி Wealth Business Forum 2013 என்ற நிகழ்வும் நடக்கும்.சர்வ தேச அளவில் முதலீட்டாளர்கள் எல்லாம் அங்கே கூடு வதால், அவர்களின் முதலீட்டால் இலங்கையின் தொழில்வளம் பெருகும். இலங்கை வளமான
நாடு அங்கே தொழில் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்;ஆசியாவிலே யே 3 ஆவது இடத்தில் உள்ள, உலகிலேயே 81 ஆவது இடத்தில் உள்ள அருமை யான நாடு இலங்கை என்று உலக தொழில் நிறுவனமே அண்மையில் சான்ற ளித்துள்ளது.

இந்தியாவுக்கு உலகில் 132 ஆவது இடத்தைத்தான் அந்த நிறுவனம் அளித்துள் ளது.எனவே முதலீடு செய்ய, வணிகம் செய்ய சர்வதேச முதலாளிகளும் இனி முகாமிடுவார்கள்.ஆஸ்திரெலிய, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளின்
தொழில் அதிபர்கள் இப்போதே அங்கு வணிகஒப்பந்தங்களை செய்ய கொழும்பு சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து காமன் வெல்த் பண்பாட்டுத் திருவிழா வும் கொழும்பு நகரிலும்,இலங்கையின் பிற நகரங்களிலும் நடைபெற உள்ளது. சுற்றுலாவை மையப் படுத்தி, நட்சத்திர விடுதிகளிலும்,இந்த நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்யும்.சிங்களமே ஆட்சிமொழி,சிங்க ளவர்களே பூர்வ குடியினர் என்று தங்கள் இன வல்லாதிக் கத்தையே புதிய வர லாறாக சிங்களவர்கள் உருவாக்குவார்கள். செல்வமும், பொருளா தாரமும் குவியும்போது ராஜபக்சே வின் இனவெறி அரசு, இதனைப் பயன்படுத்தி தமிழ் மக்களை எப்படி எல்லாம் ஒடுக்கப்போகிறது என்பதையும் நாம் எண்ணிப்
பார்க்க வேண்டும்.

பாகிஸ்தான் நாடு இலங்கைக்கு அதிவேக விமானங்களைத் தருவதற்கான ஒப்பந்தம் இந்த மாநாட்டின் போது நடக்க உள்ளது. மலேசிய அரசு, அமெரிக்க அரசு ஆகியவை இலங்கைக்கு இராணுவ உதவியும் அளித்து, படைவீரர்களுக் கு பயிற்சியும் அளிக்க ஒப்பந்தம் செய்யப்போகின்றன.இந்தியா-சீனா-மாலத் தீவு ஒப்பந்தமும் இந்த மாநாட்டின் போது நடைபெற உள்ளது.இப்படிப்பட்ட செயல்களினால் இலங்கையின் இனவெறி இராணுவத்தின் வலு மேலும் கூடப் போகிற அபாயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு பல்வேறு தீயவிளைவுகளும் நிகழும் என்பதால்தான் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்றும் அந்த அமைப்பில் இருந்தே இலங்கையை தூக்கி எறிய வேண்டும் என்றும் நாம் வற்புறுத்தினோம். நடக் கக் கூடாதது நடந்து விட்டது.இப்போது நமக்கு கூடுதலான பொறுப்புகள் சேர்ந் து விட்டது.ஏற்கனவே ஐக்கிய நாட்டு நிறுவனம் நீதி நெறியோடு செயற்பட்டு ஈழத்தமிழ் மக்களை பாதுகாக்கவில்லை. ஐ.நா.மன்றத்தின் 68 ஆவது பொதுச்
சபைக் கூட்டத்தில் ஈழத்தின் இறுதிப்போரில் ஐ.நா.அமைப்பு கடமை தவறிவிட் டது. உறுப்பு நாடுகள் ஒத்துழைக்கவில்லை.இதுகுறித்தெல்லாம். மூத்த அதி காரிகள் குழு கூடி பரிசீலிக்கும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான்.கி.மூன்
அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.இதனைக்கேட்டு கூட்டத்தில் அமர்ந் திருந்த கொலைவெறியன் ராஜபக்சே அலட்சியமாக சிரித்தான்.

குதிரை ஓடிய பின் லாயத்தை இழுத்து மூடுவதைப் போன்ற பொறுப்பற்ற செய லில் ஐ.நா.மன்றமே ஈடுபட்டதே! எனவே தான் தோழர்களே, நமது இலட்சியத் தலைவர் வைகோ அவர்கள் ஐ.நா. மன்றத்தின் பொறுப்பற்ற செயலை விவரித் து,அவர்களையும் விசாரிக்க வேண்டும், தவறு இழைத்தோரை தண்டிக்க வேண்டும் என்று அப்போது கொதிக்கும் நெஞ்சத் தோடு அறிக்கை வெளியிட் டார்! என்றும் வலியுறுத்தியும் வருகிறார்.

இத்தகைய நம் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்கத் தான் இந்தப் போராட்டத்தை எழுச்சிப் பெருக்குடன் நடத்திக் கொண்டிருக்கிறோம். இன் றைக்கு முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவது என்று வணிகர் சங்க தலை வர் வெள்ளையன் அவர்கள் தான் முதலில் அறிவித்தார். இதே நாளில் இரயில் மறியல் போராட்டத்தை நடத்துவது என்று பெரியார் திராவிடர் கழகம் அறிவித் தது. இந்த அறிவிப்புகளை தமிழ்நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிற அதிமுக
கண்டு கொண்டதா? ஆண்ட கட்சியான திமுக ஆதரித்ததா? சர்வதேசம் பேசு கிற கம்யூனிஸ்டுகள் வரவேற்றார்களா? இவர் களின் தொங்கு சதைகளாக
இயங்கிக் கொண்டிருக்கிற சில்லறைக் கட்சிகள் இது குறித்து பரிந்து பேசின வா? இல்லை தோழர்களே, இல்லை!

ஆனால், தமிழீழமே ஈழச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு என்று தொடர்ந்து வலியு றுத்திவரும் ஒரே தலைவர்; பொதுவாக் கெடுப்பு இதற்காக நடத்தப்பட வேண் டும் என்று முதன் முதலில் குரல் எழுப்பி இன்றைக்கும் அதற்காக களத்தில் நிற்கும் ஒப்பற்றத் தலைவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப் பட்ட தடையைத் தகர்த்தெறிய மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் வாதாடி வரக்கூடிய ஈடு இணையற்ற போராளித்தலைவர் என்ற பெருமைகளுக்குரிய நம் இலட்சியத்தலைவர் வைகோ அவர்கள்தான் இந்த போராட்ட அறிவிப்பு களை முதன் முதலாக வரவேற்று அறிக்கை தந்தார் மறுமலர்ச்சி திமுக. இந் தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் என்று அறிவித்தார்.மாணவர்கள், தமிழி ன உணர்வாளர்கள், வணிகர்கள் பொது மக்கள் அனைவரையும் இந்தக் கிளர்ச் சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். நம் தலைவர் வைகோ அவர் களின் வேண்டுகோள் அடங்கிய தலைமைக்கழக துண்டு அறிக்கைகளை அளித்து நாம் ஆதரவு திரட்டினோம்.இன்று முழுமையாக கடைகள் அடைப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.

இரயில் நிலையங்கள் உள்ள அனைத்து சிற்றூர்களிலும் கூட மறியல் செய்து கைதாகிற காட்சி களை ஊடகங்களில் பார்க்கிறோம். முத்துக்குமார் மூட்டிய
தமிழீழ விடுதலை நெருப்பு தமிழ் மக்கள் நெஞ்சில் தணியாமல் இன்னமும் கனன்று கொண்டு இருப்பதை நாம் காண்கிறோம்.அந்த உணர்வோடு களம் காண வந்திருக்கும் தமிழ் உணர்வாளர்களான உங்கள் அனைவருக்கும் பாராட் டுகளை, வாழ்த்துகளை நன்றியினை கனிவுடன் தெரிவித்து என் உரையினை
நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு ஆ.வந்தியத்தேவன் உரை ஆற்றினார்.

விருத்தாச்சலத்தில் 12.11.2013 அன்று முழு அடைப்பு, இரயில் மறியல் போராட் டம் ஆ.வந்தியத்தேவன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி, மனித நேய மக்கள் கட்சி,முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 500 தோழர் கள் பெரியார்-அம்பேத்கர் சிலை அருகில் இருந்து காலை 10.30 மணிக்கு ஊர் வலமாகப் புறப்பட்டனர். காவல்துறையினரின் தடையை மீறி, இரயில் நிலை யத் திற்குள் நுழைந்து,வைகை, குருவாயூர் விரைவு தொடர்வண்டி ஆகியவை களைமறித்து முழக்க மிட்ட தோழர்களை காவல் துறையினர் கைது செய்து காந்தி நகர் சிவபூஜா திருமண்டபத்தில் அடைத்து வைத்து இருந்தனர். தலை மைச்செயற் குழு உறுப்பினர் கோ.செளந்தர ராசன், மாவட்டத்துணைச் செய லாளர் அய்யாவு,நகர செயலாளர் தில்லைராசன், ஒன்றியச் செயலாளர்கள் வரதராசன், சம்பத்குமார், கார்த்திக்,சுகுணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment