Tuesday, December 17, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 36

நாள்:-10.02.2009

சென்னை-அமைந்தகரை,புல்லா நிழற்சாலையில்,ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக் கத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும்பொதுக்கூட்டத்தில், #வைகோ ஆற்றிய உரை 

ஈழத்தமிழர் படுகொலை...விடுதலைப் புலிகளை அழித்துவிட காங்கிரஸ் வகுத் த சதித்திட்டம்! சென்னை கண்டனப் பொதுக் கூட்டத்தில் வைகோ பகிரங்கக் குற்றச்சாட்டு!


இந்த மேடையின் வலதுபுறத்தில் உயிராயுதமாக, நம்முடைய நெஞ்சங்களில்
கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுவிட்ட முத்துக்குமாரின் திரு உருவப்படத்துக்கு,
மலர்களைத் தூவி வீரவணக்கம் செலுத்திவிட்டு, இந்த நிகழ் ச்சியைத்தொடங் கினோம்.

ஜனவரி 31 ஆம் தேதி முன்னிரவு தொடங்கி நள்ளிரவு வரையிலும், கொளத்தூ ரில் இருந்து மூலக்கொத்தளம் சுடுகாடு வரையிலும் சாலையின் இருமருங்கி லும், இலட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் பொங்கத் திரண்டு வந்தார்கள்.

எங்கோ தெற்குச்சீமையில், முத்துகள் குவிந்து கிடக்கின்ற கடலுக்குப் பக்கத் தில் இருக்கின்ற, அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்சீரலைவாய்க்கு அரு கில் இருக்கின்ற கொலுவைநல்லூரில் பிறந்த குமரேசன் அவர்களின் பிள்ளை முத்துகுமார், தலைநகர் சென்னையில், மத்திய அரசின் அலுவலகமான சாஸ் திரி பவனத்துக்கு உள்ளே, தன் மேனி முழுக்க நனைய நனையப் பெட்ரோ லைக் கொட்டி,நெருப்புக்குச்சியைக் கிழித்துப் போட்டுப் பற்ற வைத்துக் கொண் டான்.

உயிராயுதம்


அதற்கு முன்னரே விழிப்பு உணர்வோடு, தன்னுடைய மரண சாசனத்தை அனைவரிடமும் வழங்கிவிட்டு, உடல் கருகிய நிலையில், இதோ பக்கத்தில்
இருக்கின்ற கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்,மரணம் சிறிதுசிறிதாக அவ னைக் கொத்திக்கொண்டு இருந்த நேரத்திலும்கூட, ‘புலிகளுக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் நான் மகிழ் ச்சியாகச் சாகிறேன்; தமிழ் நாட்டின் இளைய தலைமுறையினரே, வாலிபர்களே, மாணவச் செல்வங்களே, என் உயிரை ஆயுதமாகத் தருகிறேன்; இதனை நகலாயுதமாகத் தமிழர்களின் மனங்களுக்கு எடுத்துச் செல்லுங்கள்’ என்ற வேண்டுகோளோடு, அவன் தன் ஆவியை அடக் கிக் கொண்டான்.

வரலாறு திரும்பியது


அந்த முத்துக்குமாரின் உயிரற்ற சடலம் வீதிகளில் செல்லும்போது, சவ ஊர் வலம் வருகிறது, கலவரம் வரும் என்று வீடுகளின் கதவுகளைத் தாழிட்டுக் கொள்கின்ற தலைநகரத்துத் தாய் மார்கள், அன்றைக்கு வீடுகளைவிட்டு வீதிக் குவந்து, தங்கள் கைக்குழந்தைகளைத் தூக்கி வைத்துக்கொண்டு வரிசையாக நின்றனர். பாஞ்சாலங்குறிச்சியில் பாய்ந்து ஓடி விரட்டிக் கொண்டுவந்த வேட் டைநாயை, முயல் திருப்பித் தாக்கியது என்று சரித்திரம் சொல்லப்படுவதால், அந்த மண்ணை எடுத்துத் தங்கள் பிள்ளைகளின் வாயிலே தெளிக்கின்ற வழக் கத்தை நான் பார்த்து இருக்கின்றேன்.

அன்றைக்குத் தலைநகர் சென்னையில், நமது தாய் மார்கள் தங்கள் குழந்தை களைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு, தியாக வீரன் முத்துக்குமாரின் உடல் வருகின்ற ஊர்தியைப் பார்த்து, கன்னத்தில் போட்டுக்கொண்டு, ‘கும்பி டுங்கள்’ என்று குழந்தைகளுக்குச் சொல்லி வழிபட்ட காட்சி, வழிநெடுக மெழு குவர்த்திகளை ஏற்றிவைத்துக் கொண்டு இருந்த காட்சியைப் பார்த்தபோது, பாஞ்சாலங்குறிச்சியின் காட்சிதான் என் நினைவுக்கு வந்தது. ஈழத்தமிழருக் காக ஆவியைத்தந்த முத்துக்குமாரின் உடல், மூலக்கொத்தளம் சுடுகாட்டுச் சிதையில் கருகிய காட்சி, நெஞ்சில் மோதிக் கொண்டு இருக்கிறது.

முத்துக்குமாரின் சடலத்தை வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளை யன் ஏற்பாட்டில், கொளத்தூரில் வைத்துக் கண்ணீரும் கம்பலையுமாக நாங் கள் கதறிக் கொண்டு இருந்த நேரத்தில், பாண்டிய மண்டலத்தில் பள்ளப்பட்டி ரவி எனும் கூலித்தொழிலாளி தீக்குளித்தான்என்ற செய் தி வந்தது. நெஞ்சம் பதற மதுரைக்கு ஓடினோம்.

இரங்கல் தெரிவித்தாரா?

‘ஈழத்தமிழர் நல உரிமைப் பேரவை’ அமைத்துவிட்டேன்; நமக்குள் மோதல்
வேண்டாம்; ஈழத்துப்புலிகளைப் போல் சகோதரச் சண்டை வேண்டாம்; நாம்
ஒற்றுமையாக இருப்போம் வாருங்கள்’ என்று, ஏசுநாதர் மலைச்சரிவில் கை களை விரித்து அழைத்ததைப்போல, முதல்வர் நம்மை அழைக்கின்றார்.

மருத்துவமனையில் இருக்கின்ற அவர், உடல் நலம் பெறட்டும் என்று தோழர்
தா.பா. சொன்னதை நான் வழிமொழிகிறேன். இன்னும் பல்லாண்டுகள் வாழட் டும். நாங்கள் மனிதநேயம் அற்றவர்கள் அல்ல.

ஆனால், மருத்துவமனையில் இருந்துகொண்டு எங்கள்மீது விஷ அம்புகளை
வீசுகிறபோது, இந்த அண்ணா நகரில் புல்லா அவென்யூவில் இருந்து, தமிழ் நாட்டு மக்களுள் ஒருவனாக இருந்து நான் கேட்கிறேன். தன் உயிர்முடித்த வீரத் தியாகி முத்துக்குமாருக்கு, 29 ஆம் தேதி நண்பகலில், நீங்கள் இரங்கல் தெரிவித்தீர்களா? 30 ஆம் தேதி இரங்கல் உண்டா? 31 ஆம் தேதி இரங்கல் உண் டா? 1 ஆம் தேதி இரங்கல் உண்டா? 2 ஆம் தேதி இரங்கல் உண்டா?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான அண்ணாவின் தம்பிகளின்
உள்ளம் கொதித்ததால், 3 ஆம் தேதி, நீங்கள் ஒப்புக்கு ஒரு இரங்கல் தீர்மானத் தைத் தடுமாறும் தமிழில் எழுதினீர்கள்.

முதல் அமைச்சரைக் கேட்கிறேன். ‘பள்ளபட்டி ரவி ஸ்டவ் வெடித்து தீக்காயத் தால் சாகக்கிடக்கிறான்’என்று ஏ.டி.ஜி.பி.ராஜேந்திரனைவிட்டு அறிக்கை விடச் செய் தீர்களே, அவராக அறிக்கை தரவில்லை. ஈவு இரக்கம் அற்ற, கருணை கடுகு அளவும் இல்லாத உள்ளத்தோடு நீங்கள் அந்த அறிக்கையைத்தரச்சொன் னீர்கள். ‘கணவன் மனைவிக்குள் தகராறு,அதனால் தீக்குளித்தான்’ என்று ஊட கங்களுக்குச் செய்தி தரச் சொன்னீர்கள்.

மரண வாக்குமூலங்கள்


ஆனால், அந்த பள்ளப்பட்டி ரவி, உடம்பெல்லாம் கருகியநிலையில் மருத்துவ மனையில் கொடுத்த மரண வாக்குமூலத்தை, காவல்துறையின் சார் ஆய்வா ளரான ஒரு பெண்மணி, துணிச்சலோடு, மனசாட்சியோடு எழுதி இருக்கிறார்.

அந்த முதல் தகவல் அறிக்கையில், ‘நான் இலங்கைத் தமிழர்களுக்காக வீட் டில் இருந்த மண்ணெண்ணெயை என்மீது ஊற்றிக்கொண்டு, வீதிக்கு வந்து தீக் குளித்தேன்; அப்போது,என் மனைவி தண்ணீர் எடுக்க கிணற்றடிக்குப்போய் இருந்தாள்; என் பிள்ளைகள் வீட்டுக்கு உள்ளே விளையாடிக் கொண்டு இருந் தார்கள். என் உடம்பை நெருப்பு பற்றி எரித்தபோது உடைகள் கருகியதால், அம் மணமாகக் கிடக்க நேரிட்டதால், மானத்தை மறைக்க,பக்கத்தில் இருந்த ஈரச் சாக்கை எடுத்து என் இடுப்பில் கட்டிக் கொண்டேன்’ என்று ரவி சொன்னது, முதல் தகவல் அறிக்கையில் பதிவாகி இருக்கிறதே,இந்த அறிக்கை தாக்கலா னதற்குப்பிறகு எப்படி ஏ.டி.ஜி.பி. இப்படி ஒரு அறிக்கைவிட்டார்?

இந்த அக்கிரமத்தை,1965 இல் பக்தவத்சலம் செய் யவில்லை. சிவலிங்கம் தீக் குளித்தபோது, அரங்கநாதன் தீக்குளித்தபோது,ஆசிரியர் வீரப்பன் நெருப்புக்குத் தன்னைத் தந்தபோது, மாயவரம் சாரங்கபாணி மடிந்தபோது,கீரனூர் முத்து செத்தபோது, சத்தியமங்கலம் முத்து சாக்காட்டுக்குச் சென்றபோது, பக்தவத் சலம் இப்படிச் சொல்லவில்லை. நீங்கள் செய்து இருக்கிறீர்கள்.

இந்த இரண்டு சாவுகளுக்குப்பிறகு, மூன்றாவது சாவு காங்கிரஸ் கட்சியின் சீர் காழி நகரத்தின் 17 ஆவது வட்டச் செயலாளர் ரவிச்சந்திரன். காங்கிரஸ் கட்சி யின் மத்திய அமைச்சரை எதிர்த்து, நான்கு நாள்களுக்கு முன்னால், இலங் கைத் தமிழர்களைக் காப்பாற்றத் தவறிவிட்ட காங்கிரசுக்குக் கண்டனம் தெரி வித்தார் ரவிச்சந்திரன்.

‘தீக்குளிக்கப் போகிறேன்’ என்று நள்ளிரவில் கூச்சல் இட்டதால், அவரைப்  பெற்ற தாய் பதறி, தூக்கத்தில் இருந்த கணவன் சுந்தரமூர்த்தியை எழுப்பி,
‘பிள்ளை தீக்குளிக்கப் போகிறான்’ என்று சொல்ல, மண்ணெண்ணையை எடுத் து மேலே ஊற்றிக்கொண்டு ரவி தீயைப் பற்ற வைப்பதற்கு முன், அவன் கை யில் இருந்த தீப்பெட்டியைப் பிடுங்கிக் கொண்டார்கள்.

அந்த இராத்திரி 1 மணிக்கு வீட்டைவிட்டு வெளியே வந்து, பக்கத்து வீட்டு மக் களை எழுப்பலாம் என்று,அந்த ஓலைக்குடிசை வீட்டில் இருந்துஅவனைப்பெற் றெடுத்த தாய்  சரஸ்வதி, ‘அய் யோ அப்பா என் பிள்ளை தீக்குளிக்கப் போகி றான்’ என்று கத்திக் கொண்டு இருந்தபோது, தகப்பனைக் கீழே தள்ளிவிட்டு ஓடிய ரவிச்சந்திரன், கையில் தீப்பெட்டி இல்லாததால், பக்கத்தில் அம்மன் கோவிலில் எரிந்து கொண்டு இருந்த விளக்கை எடுத்துத் தன்மேல் போட்டுத் தீ வைத்துக் கொண்டான்.

ஆனால், அவன் தீக்குளித்தபிறகு, ‘அவன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன்
அல்ல’ என்று, நாம் பெயரைச் சொல்வதற்கு அருகதையற்ற, ஒரு அமைச்ச ராக இருக்கின்ற, காங்கிரஸ் கட்சியின் கபோதி அறிக்கை விட்டார்.

அவனுடைய மரண வாக்குமூலமாக, டைரியில் எழுதி வைத்து இருந்தானே
ரவிச்சந்திரன்?

‘மானங்கெட்ட தமிழக அரசே, துரோகம் செய் கின்ற இந்திய அரசே, இதோ என்
உயிரைத் தருகிறேன் போரை நிறுத்து’ என்று எழுதி கையெழுத்துப் போட்டு
இருக்கிறான். அதை, காவல்துறையினர் கைப்பற்றிக் கொண்டார்கள்.

‘நீ அதைக் கொடுக்கப் போகிறாயா? இல்லையா? அவனுடைய டைரியில் கைப் பட எழுதியதை, ஒரு மணி நேரத்துக்குள் அவனுடைய தந்தையிடம் ஒப்படைக் கிறாயா? இல்லையா?’ என்று நான் செய்தியாளர்களை அழைத்துச் சொன் னேன். அடுத்த ஒரு மணி நேரத்தில், அந்த வாக்குமூலத்தைத் திருப்பிக்கொடுத் தார்கள்.

இங்கே இருக்கின்ற தலைவர்கள், நாங்கள் சீர்காழி சுடுகாட்டுக்குநடந்து சென் றோம். அங்கே தோண்டப்பட்டு இருந்த புதைகுழியில் ரவிச்சந்திரன் உடலைப் போட்டுவிட்டு அனைவரும் கதறி அழுதபோது, கொள்ளி வைக்கவேண்டிய பிள்ளையின் உடலுக்குத் தகப்பனும் கையில் மண்ணெடுத்துப் போட்டபிறகு, அய்யா இராமதாஸ் கைகளில் மண் அள்ளிப்போட, அண்ணன் நெடுமாறன் மண் அள்ளிப்போட, திருமா மண் அள்ளிப்போட, நானும் மண்ணை அள்ளிப் போட்டு விட்டு, பதறும் நெஞ்சத்தோடு, ‘இனி யாரும் தீக்குளிக்காதீர்கள்’ என்று கூறிக்கொண்டு நாங்கள் வெளியே வருகிறோம்.

தொடரும் ...


No comments:

Post a Comment