Thursday, December 5, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 32

நாள்:-29.4.2009

உடனடியாகத் தலையிட்டுத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!

பாரக் ஒபாமாவுக்கு #வைகோ வேண்டுகோள்

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று (29.4.2009) அனுப்பி உள்ள மின் அஞ்சல் :

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கையில் நடைபெறுகின்ற தமிழ்  இனப்படுகொலைத் தாக்குதல்களை,
கண்ணீருடனும் வேதனையுடனும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகி றேன்.
இருண்டு கிடக்கின்ற இலங்கைத் தமிழர்களின் வாழ் வில், அமெரிக்காவின்
உடனடித் தலையீடுதான் ஒரே நம்பிக்கை ஒளிக்கீற்றாகத் தெரிகிறது.

1979 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நடந்த முக்கிய நிகழ் வு ஒன்றைத் தங்கள் கவனத் துக்குக் கொண்டு வருகிறேன்.

அமெரிக்காவின் மசாசூசெட் மாநிலச் சட்டமன்றத்தில், மேரி எலிசபெத் ஹோ வே அம்மையார் அவர்கள், ஈழத்தமிழர்கள் பிரச்சனை குறித்து மிக முக்கிய மான தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.

அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து,மசாசூசெட் மாநில ஆளுநர் எட்வர்டு ஜெ கிங், 1979 மே மாதம் 22 ஆம் நாளை, ‘தமிழ் ஈழம் நாள்’ என்று அறிவித்தார்.

இலங்கையில் இருதரப்பினரும் போரை நிறுத்தவேண்டும் என்று தாங்கள்
விடுத்த அழைப்பை ஏற்று, விடுதலைப்புலிகள் உடனடியாக போர்நிறுத்தம்
அறிவித்து விட்டனர். ஆனால்,திட்டமிட்ட இனப் படுகொலையை நடத்துகின்ற இலங்கை அரசு, தாக்குதலை நிறுத்தவில்லை.

இலங்கை அரசின் தலைவர் மகிந்த ராஜபக்சே, உலகநாடுகளை ஏமாற்றி வரு கிறார்.

விமானக் குண்டுவீச்சையும் கனரக ஆயுதத் தாக்குதலையும் பயன்படுத்த மாட் டோம் என்று ஏப்ரல் 27 ஆம் நாள் அவர் சொன்னார். ஆனால், அன்று மாலையி லேயே விமானங்கள் குண்டுகளை வீசியதிலும், 27, 28 ஆகிய இரண்டு நாள் களிலும் நடைபெற்ற கடுமையான தாக்குதல்களிலும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

நாற்பதுகளில் யூதர்களை நாஜிகள் கொன்று குவித்ததுபோல், இன்று இலங் கையில் தமிழ் இனத்தையே இலங்கை அரசு கரு அறுத்து வருகிறது.

இந்தப் பிரச்சனையில் தாங்கள் நேரடியாக உடனே தலையிட்டு, உலகின் தொன்மையான இன மக்களான தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று
வேதனையோடு வேண்டிக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

பொதுச் செயலாளர்

(மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியத் தேர்தல் ஆணையத் தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சி)

(மற்றும், ஆசிரியர், பாரக் ஒபாமாவின் வாழ் க்கை வரலாற்று நூல் “ஆம் நம் மால் முடியும்!”)


வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 31

No comments:

Post a Comment