Sunday, December 1, 2013

நெஞ்சில் உறைந்த பூங்கொடி சாமிநாதன்-வைகோ கண்ணீர் உரை

நெஞ்சில் உறைந்த பூங்கொடி சாமிநாதன்-வைகோ கண்ணீர் உரை 

எங்கள் கண்கள் எல்லாம் குளமாகி இருக்கின்ற சூழ்நிலையில், இந்த இரங்கல் கூட்டத்தில் உங்கள் முன்னால் நிற்கின்றேன்.

என் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் துயரங்களைச் சந்தித்து இருக்கின் றேன்.துயரங்களாலேயே என்னுடைய மனது மரத்துப்போய் விட்டது. கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவில்,விழுப்புரத்தில் இருந்து, நான் இந்த நாகமலைத் தோட் டத்துக்கு வந்தேன்.கார் இங்கே நுழையும்போது விழித்துக் கொண்டுதான் இருந் தேன். ஓடோடி வந்து காரின் கதவைத் திறந்தார் பூங்கொடி சாமிநாதன்.
நான் நேராக வீட்டுக்கு உள்ளே செல்லாமல், வழக்கமாக நான் விரும்பி அமர் கின்ற அந்த ஊஞ்சலில் ஏறி உட்கார்ந்தேன். தரையில் காலைப் பதித்து ஊஞ்ச லை ஆட்டத் தொடங்கியபொழுது,‘அண்ணே இன்னும் கொஞ்சம் வேகமாக ஆட்டி விடவா?’ என்று கேட்டார். ‘சரி’ என்றேன்.‘கெட்டியாகப் பிடித்துக் கொள் ளுங்கள்’ என்றார்.

அப்போது நான் சொன்னேன்: ‘என் பாட்டனார் கட்டிய வீட்டிலும் இப்படி ஒரு ஊஞ்சல் உண்டு.ஆனால், இங்கே நீங்கள் போட்டு இருப்பது போல்,பின்பக்கச் சாய்மானப்பிடி கிடையாது’ என்றேன்.‘இங்கே இரண்டு ஊஞ்சல் போட்டு இருக் கின்றீர்களே?’ என்று கேட்டேன்.

‘முதலில் ஒரு ஊஞ்சல்தான் போட்டேன். என் பேரன்கள் இருவருக்கும், யார் முதலில் ஆடுவது என்ற பிரச்சினை. அதனால், எதிரே மற்றொரு ஊஞ்சலைப் போட்டு விட்டேன்’ என்றார்.

என்னை அறையில் கொண்டு வந்து விட்டு விட்டு, வெந்நீர் எடுத்துக் கொண்டு வந்தார்.போர்த்திக்கொள்ள போர்வை சரியாக இருக் கிறதா? என்று கேட்டார். தொலைக்காட்சியை இயக்கினார். ‘அண்ணா நன்றாகத் தூங்குங்கள். அண்ணி யார் காலையில் வருகிறார்கள். உடன் என்னுடைய துணைவியார் தொடர் வண்டி நிலையத்துக்குச் சென்று அழைத்துக் கொண்டு வருகிறார்கள்’ என்றார். நான் உறங்கச் செல்கையில் இரவு மணி ஒன்றரை.

காலை ஆறேகால் மணிக்கு எழுந்து வெளியே வந்து பார்த்தேன்.என் துணைவி யார் வந்து இருந்தார்கள். வழக்கம்போல சற்றே நடக்கலாம் என்று கருதிப் புறப்பட்டேன். அவரும் உடன் வந்தார். இருவரும் சேர்ந்தே நடந்தோம். முதல்
நாள் இரவில் சற்றே மழை பெய்து இருக்கின்றது;எனவே, செடிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.அவர் எந்த இடத்தில் விபத்துக்கு உள்ளாகி இப்போது இங்கே எரிந்து கொண்டு இருக்கின்றாரோ, அந்த இடம் வரையிலும் நான் சென்று வரு வது வழக்கம்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கே வந்து ஐந்து நாள்கள் தங்கி இருந்தபோதும்,
பத்து நாள்களுக்கு முன்பு, இதற்கு முந்தைய சுற்றுப்பயணத்தின்போது இரண் டு நாள்கள் இங்கே தங்கியபோதும், நேராக அந்த முனை வரை சென்று, திரும்ப
இந்த வழியாக வந்து வெளியே சென்று, அடுத்த தோப்பு வழியாக சாலையில்
ஏறி, திரும்ப இங்கே வருவதற்கு, இரண்டு கிலோ மீட்டர் தொலைவு சரியாக
இருக்கும். அந்தப் பக்கத்து மனையிலும் நான் போய் நிற்பேன்.

அப்போது அவர் சொன்னார்: ‘அண்ணா, தீரன் சின்னமலை இங்கே அருகில் தான் பாசறை அமைத்து இருந்தார்’ என்றார். ‘அங்கே போய்ப் பார்க்க வேண்டு மே?’ என்றேன். ‘பாதை சரியாக இல்லை. இன்னொரு நாள் ஏற்பாடு செய்கி றேன்’ என்றார்.

‘அண்ணா காலையில் நீங்கள் இவ்வளவு தொலை வந்து திரும்புவதற்குள் எட் டு மணி ஆகி விடுகிறது. வெயிலிலேயே நீண்ட தொலைவு நடக்க வேண்டிய
தாக இருக்கிறது. எனவே இந்தத் தோப்புக்கு உள்ளேயே நடந்து வருகின்ற வகையில், ஒரு நடைபாதை அமைப்பதற்கு அளந்து வைத்து இருக்கிறேன்’ என்றார்.

அங்கிருந்து நாங்கள் திரும்பி வருகையில், முட்செடிகளைத் தள்ளி விட்டுக் கொண்டே வந்தார். என் காலணிக்குள், மணல் புகுந்து விட்டது.ஒரு நாற்காலி யை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். அதில் உட்கார்ந்து, மணலைத் தட்டி
விட்டேன். அப்போது நான் கேட்டேன். ‘இந்த இடத்தில் முன்பு நேராக நடந்தது போல இருக்கிறதே?’ என்றேன்.

‘நன்றாக நினைவு வைத்து இருக்கின்றீர்கள். இப்போது இந்த இடத்தில் ஒரு சுவர் கட்டி இருக்கின்றோம். இந்த இடத்தில்தான், தொண்டர் அணி பயிற்சி நடைபெற்றது. இங்கேதான் நீங்கள் பேசினீர்கள் என்றார். அங்கே நமது கொடிக் கம்பம் இருக்கின்றது என்றார்.

நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, மகன் செந்திலைப் பற்றிப் பெருமை யாகச் சொன்னார்.


தம்மின் தம்மக்கள் அறிவுஉடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

என்ற குறளுக்கு ஏற்பத் திகழ்பவர் தம்பி செந்தில்.

எல்லாம் அருமையாகச் செய்கிறான்; ரொம்பக் கெட்டிக்காரன். மருமகளும் அப்படித்தான். இங்கே ஒரு விவசாயக் கல்லூரி தொடங்க அனைத்து ஏற்பாடு களும் செய்து விட்டோம்’ என்றார்.

அப்போது நான் சொன்னேன்: ‘ஆம்.. ஒரு பொறியியல் கல்லூரியை விட, ஒரு மருத்துவக் கல்லூரியை விட, நீங்கள் ஒரு வேளாண்மைக் கல்லூரியைத் தொடங்கப் போகிறேன் என்று சொன்னது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கிறது. நிறைவாக இருக்கிறது’ என்றேன்.

இப்படியே பேசிக்கொண்டு நடந்து வந்தோம்.அன்றைய சுற்றுப்பயணத்திற்கா கப் புறப்பட்டபொழுது நல்ல மழை. நடுப்பாளையத்தில் மழை இல்லை. நிகழ்ச் சியை முடித்துக் கொண்டு வந்தோம்.

செந்தில் வந்து, ‘விவசாயக் கல்லூரி தொடங்குவதைப் பற்றித் தலைவரிடம் சொல்லப் போகிறேன் என்றபொழுது, இப்பொழுது தலைவர் ஓய்வு எடுக்கட் டும்.காலையிலேயே நான் சொல்லி விட்டேன். அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந் தார். நீ நாளைக் காலையில் பேசிக்கொள்’ என்றார்.

பூங்கொடி சாமிநாதன்-அவர் துணைவியாரைப் போல மனம் ஒத்த தம்பதிய ரைப் பார்க்க முடியாது. இந்த இழப்பை அந்தச் சகோதரி எப்படித் தாங்கிக் கொள் ளப் போகிறாரோ எனக்குத் தெரியவில்லை. அவர் சமைத்துக் கொடுப்பதை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு வந்து தந்து உபசரிப்பார் சாமிநாதன். சாப் பிடும் போது,நமது முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பார்.2000ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த மறுமலர்ச்சி மாநில சுயாட்சி மாநாட்டின் போது, ஐந்து நாள்கள் ஈரோட்டில் உள்ள அவரது வீட்டில்தான் தங்கி இருந்தேன். நான் மட்டும் அல்ல,என் மனைவி, என் அம்மா,என் தம்பி எல்லோருமே அங்கேதான்
தங்கி இருந்தோம்.

இரண்டாம் நாள் காலையிலும் நாங்கள் நடந்து சென்றோம்.அரசியல் பேசிக் கொண்டே போனோம்.திரும்பி வந்து மருமகளுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, கணேசமூர்த்தி அவர்களுடைய பேரன்,அவிநாசி பெரியசாமி வந் தான்.அவனைத் தூக்கி வைத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருந்தேன். வழக்க மாக நான் வீட்டுக்கு உள்ளே செருப்புப் போட மாட்டேன். அன்றைக்குக்காலில் சற்றே வலி இருந்ததால்,போட்டு இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, ‘தாத்தா
செருப்பைக் கழற்றி விட்டு வாங்க’ என்றான்.‘அவிநாசி பெரியசாமி அவர்களே, உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுகிறேன்’என்று சொல்லி வெளியே போய் கழற்றி
விட்டு வந்தேன். அவைத் தலைவர், மாவட்டச் செயலாளர்கள், தோழர்கள் எல் லோரும் வரிசையாக வந்தார்கள்.இஸ்லாமியத்தோழர்கள் திருமண அழைப் பிதழ் கொண்டு வந்தனர்.வரவேற்றுப் பேசிக்கொண்டே இருந்தேன்.

இரண்டாம் நாள் சுற்றுப்பயணம் முடித்து, வெள்ளகோயில் நகரச் செயலாளர் வீட்டில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12மணிக்கு வந்து சேர்ந்தோம்.என் துணை வியாரைப் பார்த்து, ‘வெள்ளகோயில் கடைத்தெருவில் எவ்வளவு கூட்டம்   தெரியுமா அண்ணி?பிரமாண்டமான கூட்டம்; வீதியெல்லாம் மக்கள் வெள்ளம்’
என்று மகிழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டு இருந்தார்.

நேற்று மாலை திருப்பரங்குன்றத்தில் இருந்து பூமிநாதனும், அழகுசுந்தரமும் என்னை வழி அனுப்பி வைத்தார்கள்.பொன்னையனிடம் இருந்து போன்வந்தது என்றார் பிரசாந்த்.திரும்பப் போட்டுப் பேசினேன்.எம்.பி. பேசினார்.

‘பூங்கொடி நம்மை விட்டுப் போய்ட்டாருங்க’ என்றார்.‘என்னங்க சொல்றீங்க?’ என்றேன் பதட்டத்தோடு.

‘டிராக்டர் மேலே ஏறி இறந்துட்டாருங்க’ என்றார். என்னால் நம்பவே முடிய வில்லை; அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.நேற்று இரவு வீட்டுக்குப் போ னேன். பூங்கொடி மறைவைக் கேட்டு, என் தாயார் அழுதார்.என்னால் சமாதா னம் சொல்ல முடியவில்லை.

93 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நான் நீக்கப்பட்ட போது,அவருடைய கவிதா லாட்ஜில்,ஒவ்வொரு நாளும் 100 பேர்150 பேர் எனத் தங்கி இருந்தார்கள்.எல்லோரையும் அரவணைத்து உபசரித்தார். கணேச மூர்த் தி அவர்கள் மூலமாக பூங்கொடி என்னிடம் 1988 இல் அறிமுகமாகி, இன்று 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டு களிலும் அவர் என் மீது காட்டிய ”
அன்பு, பாசத்தை என்னால் மறக்கவே முடியாது. எங்கள் கிராமத்துக்கு வந்து இருக்கின்றார்;என் வீட்டில் தங்கி இருக்கின்றார்.அப்படி ஒருவரைப் பார்க்கவே
முடியாது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்த நண்பர்களுடைய அன்பை யும் பெற்று இருக்கின்றார். என் சகோதரனே, உனக்கா இந்தக் கோர மரணம்?

இங்கே நம்முடைய பேராசிரியர் கண. குறிஞ்சி அவர்கள் சொன்னதைப் போல,

புரந்தார்கண் நீர்மல்கிச் சாகிற்பின் சாக்காடும் 
இரந்துகோள் தக்க துடைத்து

அவரது மறைவுக்கு எங்கள் கண்ணீரைத்தான் கொட்ட முடிந்தது.

நான் இறந்த பிறகு, என்னுடைய நாட்குறிப்பை எடுத்துப் பாருங்கள் என்று சொல்லி வைத்து இருக்கின்றார்.

“நான் ஒரு நாத்திகன். நாத்திகன் என்றால், சுயமாகச் சிந்திப்ப வன் என்று பொருள்.நான் இறந்த பிறகு, எந்தவிதமான மதச்சடங்குகளும் செய்யக் கூடா து. நாகமலைத் தோட்டத்திலேயே என்னை எரித்து, அந்தச் சாம்பலை, தென் னை மரங்களுக்கும்,மா மரங்களுக்கும் போட்டு விடுங்கள். இதை என் இறுதி
வேண்டுகோளாகத் தெரிவிக்கிறேன்”

என்று எழுதி வைத்து இருக்கிறார்.2006 ஆம் ஆண்டு சற்று உடல் நலக்குறை வாக இருந்தபோது எழுதி இருக்கிறார். அவரது விருப்பப்படியே இந்த நாக மலைத் தோட்டத்தில் எரியூட்டிக் கொண்டு இருக்கின்றோம்.

எனக்கு ஒரு சிறிய ஆறுதல்.டிராக்டரை அவர் மேட்டில் ஏற்றி இருப்பார். அது கவிழ்ந்து அவர் மீது விழுந்து, உதவி கேட்கக்கூட முடியாமல், பலத்த வேத னைக் குள்ளாகி இறந்திருப்பார் என்று மனத்துன்பத்தோடு இங்கே வந்தேன். அவரது உடலைப் பார்த்தேன். பெருவிரலில் ஒரு சிறு காயத்தைத் தவிர வேறு
எந்தக் காயமும் இல்லை. அவர் டிராக்டர் ஓட்டி வந்த வழியை,நானும், எம்.பி. அவர்களும் போய்ப் பார்த்தோம். அங்கே செடிகளைச் செதுக்கிய பிறகு, இந்த
இடத்துக்கு அவர் வர வேண்டிய தேவை இல்லை. ஒரு வரப்பில் ஏறும் போது டிராக்டர் கவிழ்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கே அப்படி நேர வாய்ப் பே இல்லை.அவர் வாந்தி எடுத்ததற்கான அறிகுறி டிராக்டரில் இருக்கின்றது.
என்னுடைய யூகம் என்ன என்றால், ஓரிரு நிமிடங்களுக்குள்,பலத்த அழுத்தத் தால் அவருடைய இருதயம் நின்று போயிருக்கும். இயற்கைக்குத் தான்  தெரி யும்.

எல்லோருக்கும் மரணம் என்பது நிச்சயம். அந்த வரிசையில் நாமும் இருக்கி றோம். இன்றைக்கு இவர்.நாளைக்கு யாரோ? நமக்கு எப்போதோ? ஆனால், மரணம் என்பது இயற்கையாக அமையாமல், கோரமாக நிகழும்போது தான் மனம் துன்பப்படுகிறது. என் தந்தை புற்றுநோயால் இறந்தார்.கடைசி ஆறு மாதங்களும் நான் உடன் இருந்தேன். அவரது துன்பத்தைப் பக்கத்தில் இருந்து
பார்த்தேன். அண்ணா புற்று நோயால் இறந்தார். கடைசி நாள் வரையிலும், புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார்.

பூங்கொடி சாமிநாதன் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, இந்தப் பகுதி மக்க ளுக்கு மட்டும் அல்ல,எனக்கும்,இலட்சக்கணக்கான இயக்கத் தோழர்களுக்கும் உற்ற துணையாக இருந்திருக்க வேண்டியவர். நாங்கள் எத்தனையோ இழப்பு களைச் சந்தித்து விட்டோம்.

எங்கள் சகோதரனை, கொள்கை மாணிக்கத்தை, பாசத்தோடு எல்லோரையும் அரவணைக்கக் கூடியவரை இழந்து தவிக்கிறோம்.என்னை மட்டும் அவர் உப சரிப்பது இல்லை; கார் ஓட்டுநர், உடன் வருகின்ற தொண்டர் படையினர், கழக
முன்னணியினர் எல்லோரையும் ஒன்றாகப் பாவித்து அன்பு காட்டுவார். கனி வோடு உபசரிப்பார். அணுஅணுவாகப் பார்த்துக் கவனிப்பார். இரண்டே நாள் களில் மாநாட்டுக்கான இடத்தைச் சரி செய்து கொடுத்தார் என்று சொன்னார் கள். கடும் உழைப்பாளி. என் சாம்பல் இந்த மண்ணில் உள்ள மரங்களுக்குப்
பயன்படட்டும்; என் உடல், இந்த மரங்களுக்கு உரம் ஆகட்டும்என்கிறார். என்ன உயர்ந்த சிந்தனை பாருங்கள்!

அவர் உருவாக்கிய அனைத்தையும் வெற்றிகரமாகக் கொண்டு வந்து விட்டார். அப்படித்தான் இந்த நாகமலைத் தோட்டத் தையும் அருமையாக உருவாக்கி
இருக்கிறார்.

தம்பி செந்திலுக்குச் சொல்லுகிறேன். ‘அப்பாவைக் கேட்காமல் நான் எதையும் செய்யமாட்டேனே? இனி யாரைக் கேட்பேன்?’ என்று துடிக்கிறார்.‘தம்பி கவ லைப்படாதே. சாமி நாதன் இங்கேதான் இருக்கிறார்.உன்னோடுதான் இருக் கிறார்.உன்னைப்பற்றி என்னிடம் எவ்வளவு பெருமையாகப் பேசினார் தெரியு மா?’

மகள் ராதா, மருமகள் ஆனந்தி இரண்டு பேர் மீதும் பாசம் வைத்தவர். இரண்டு பேரப்பிள்ளைகள் மீதும் உயிரை வைத்து இருந்தார். அவர்களும், இவரை நண் பர்களாகவே கருதினார்கள். எத்தனை ஆட்கள் இருந்தாலும், இவரை மறித்துக்
கொண்டு பேசுவானாம்.இன்றைக்கு அந்தப்பிள்ளைகள் எப்படித் துடிக்கிறார்கள் பாருங்கள்? நாம் எத்தனையோ இறப்புகளைப் பார்த்து இருக்கிறோம்; சுடுகாடு களைப் பார்த்து இருக்கிறோம்.

ஆனால், இவர்கள் சின்னப்பிள்ளைகள் அல்லவா? அவர்கள் கண்ணுக்கு எதிரே வைத்து எரிப்பதை அவர்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? எல்லோ ரையும் விட அவரது துணைவியாரை எண்ணும்போது தான் வேதனை யாக இருக்கிறது.

கணவரை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்றனர் நம் முன்னோர்கள்.

பிள்ளைகள், மருமகள், மருமகன்,பேரப்பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார் கள். பூங்கொடியும் எப்போதும் உங்களோடுதான் இருக்கிறார் என்றே கருதிக் கொள்ளுங்கள். அவரது நினைவில் வாழுங்கள்.

எங்கள் குடும்பத்தில் ஒருவர் பூங்கொடி

இன்றைக்கு என் குடும்பமே இங்கே வந்து இருக்கிறது. நான்,என் துணைவி யார், மருமகன்,தம்பி, தம்பியின் துணைவியார், சகோதரிகள், சகோதரியின் மகன், தம்பி மகன்கள் எல்லோரும் வந்து இருக்கிறோம். காரணம், பூங்கொடி யை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம்.அவர் என்னை விட்டுப் பிரிந்ததாகவே நான் நினைக்கவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்பு இதே
தோட்டத்தில் என்னோடு நடந்து வந்தார். இனியும் அப்படியே வருவார்.

இந்த நாகமலைத்தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் எல்லோரும் அவர் மீது அவ்வளவு அன்பு காட்டினார்கள். காரணம்,அந்த அளவுக்கு அவர் இவர்கள் மீது பாசம் வைத்து இருந்தார்.எல்லோரையும் ஒன்றாகக் கருதி அரவணைத்தார். இங்கே இருக்கின்ற ஆடு, மாடு, கோழிகளிடமும் அன்பு வைத்து இருந்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு அரணாக இருந்து பாது காத்தார். அவரது பெயரும் புகழும் என்றைக்கும் நிலைத்து இருக்கும். அவரது
மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க அனைத்துக் கட்சி யினரும் இங்கே வந்து இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு இரங்கல் உரை ஆற்றினார்

No comments:

Post a Comment