Sunday, December 15, 2013

கோவைக்கு மோனோ ரெயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்க

கோவைக்கு அறிவிக்கப்பட்ட மோனோ ரெயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்து மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனறு தமிழக அரசுக்கு #மதிமுக சார்பாக  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது:-

கோவை மாநகரம் 21 லட்சம் மக்கள் தொகையுடன் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக திகழ்கிறது. கோவைக்கு அடுத்த இடத்தில் உள்ள கொச்சியில் கூட மெட்ரோ ரெயில் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.மேலும் பல நக ரங்களில் இந்த திட்டத்தை ஆரம்பிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக் கப் பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கோவையிலும் மெட் ரோ ரெயில் திட்டதை தொடங்க வேண்டும் என்று 2 ஆண்டுகளாக அரசை வலி யுறுத்தி வருகிறோம்.


இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பொதுப்போக்குவரத்து திட்டங் களுக்கும் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கும் ஆலோசகராகவும் முன்னோடி யாகவும் திகழ்ந்து வருகிற மெட்ரோமேன் என்று அழைக்கப்படுகிற பரதன் கோவையை சுற்றி பார்த்து விட்டு கோவையில் உடனடியாக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் கோவை மாநகராட்சி கோவையில் மோனோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த தீர் மானம் நிறைவேற்றி மாநில அரசிற்கு அனுப்பி வைத்துள் ளது. மோனோ ரெயில் திட்டத்தை விட மெட்ரோ ரெயில் திட்டம் பலவகை களில் சிறந் தது.அதிக பயணிகளை கொண்டு செல்வது, இயக்கும் செலவு குறைவு,எளிதில் விரிவாக்கம், அதிக வேகம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங் களில் மெட்ரோ ரெயில் திட்டம் தான் சிறந்தது என்று உறுதி செய்யப்பட் டுள் ளது.

இதனால் தான் இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படுகிறது. எனவே கோவைக்கு மோனோ ரெயில் திட் டம் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதை மறுபரிசீலனை செய்து கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment