Wednesday, December 4, 2013

அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மல்லை சத்யா உரை

பொடா சட்டத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து ஏவியவர்கள் முகத்திரையை கிழித்தவர் #வைகோ!

அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மல்லை சத்யா பங் கேற்று உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

காமன்வெல்த் மாநாட்டை ஒட்டி ஜெயலலிதா அரசு இரண்டு முறை சட்டசபை யில் தீர்மானம் நிறை வேற்றியது. முதல்முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட
பின் தோழர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார்.இரண்டாம் முறை தீர்மா னம் நிறைவேற்றிய அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முகப்பை இடித்துத் தள்ளினர்.

அதே நாளில், முற்றம் இடிக்கப் படுவதை அறிந்து அங்கு வந்து எதிர்ப்புத் தெரி வித்துப் போராடிய அய்யா பழநெடுமாறன், மதிமுக மாவட்டச் செயலாளர் உத யகுமார், தேர்தல் பணித் துணைச்செயலாளர் விடுதலை வேந்தன் உள்ளிட் ட தோழர்கள் 83 பேர் கொலை முயற்சி, பொதுச் சொத்துக்குச் சேதம் விளை வித் தது எனப் பல்வேறு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.

தமிழின உணர்வோ அறவுணர் வோ எதுவும் இன்றி வாக்குகளுக்காக மட்டுமே சிங்கள எதிர்ப்பும் காங்கிரசு எதிர்ப்பும் பேசி வருகிறார் ஜெயலலிதா என்பதை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றன இந்நிகழ்வு கள். தமிழக அர சுக்கு யார் தலைமை தாங்கினாலும் இந்திய அரசிடம் சரணடைந்து தமிழ் நாட் டின் தன்னுரிமையை அடகு வைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். இரட்டை
வேடம் போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்று கின்றார்கள்.

தஞ்சை விளாரில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டி விட்டார்கள், எனவே இடித்தேன்
என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று குதர்க்க வாதம் பேசும் முதலமைச்சரை பார்த்து கேட்க விரும்பு கிறேன். உங்கள் ஆட்சியில் வெளிப்படைத் தன்மை
இல்லை. அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் என்று இருந்தால் அதை ஏன், அறிக்கையாக மக்களுக்கு தெரிவிக்க வில்லை.

நீங்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக தேர்வு செய் யப்பட்டு உங்கள் ஆட்சியின் சாதனையை விளக்கிட சட்டமன்ற பொன்விழா வளைவை அமைத்தீர்களே அது எந்த பட்டா நிலத்தில் கட்டப்பட்டது. அதனு
டைய சர்வே எண் என்ன? எப்பொழுதும் அவசர கதியில் வாகனங்கள் சென்று கொண்டு இருக்கும் காமராஜர் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு
இடையூறாக தான் பொன்விழா வளைவு கட்டி உள்ளீர்கள்.நீங்கள் கட்டினால் சட்டப்படி சரி,தமிழர்கள் முள்ளிவாய்க்கால் முற்றம் பூங்கா அமைத்தால் அது
சட்ட வீரோதமா?

எந்த ஆட்சி ஜனநாயக பாதையில் இருந்து விலகி பாசிச சர்வாதிகார போக் கிற்க்கு செல்கிறதோ அந்த ஆட்சிதான் மக்கள் விரோத எதேச் சதிகார அடக்கு முறை சட்டத்தை மக்கள் மீதும், மக்கள் பிரதிநிதிகள் மீதும் ஏவும், அடக்கு முறை சட்டங்களை ஏவியவர்களை வரலாறு பதியவைத்திருக்கிறது.

விடுதலை அடைந்த இந்தியாவில் ஏவப்பட்ட அடக்கு முறை சட்டமான மிசா, தடா,பொடா சட்டத்தினை சந்தித்த ஒரே தலைவர் வைகோ, அதை சுக்குநூறாக உடைத்தெறிந்து ஏவியவர்களின் முகத்திரையை கிழித்தெரிந்த பெருமை 
தலைவர் வைகோ அவர்களுக்கு உண்டு.

திராவிட விடுதலை இயக்கத் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது, செய்யப்பட்டு இருக்கிறார்கள். யார் தேச
நலனுக்கு விரோதமானவர்,யார் எங்களின் கனிமவளங்களை கொள்ளைஅடிக் கின்றார்களோ, யார் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் வரிப் பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடிக்கின்றார்களோ அவர்கள் தான் தேசவிரோதிகள்,இந்த நாட்டின் பாதுகாவலர்கள் நாங்கள் அடக்குமுறை சட் டத்தை இடறி எரிவோம்.

ஆணவம் பிடித்தலையும் அதிகாரத்திமிரை வலிமையாக எதிர்த்து போராட தலைவர் வைகோ அவர்களும் மறுமலர்ச்சி திமுக-வும் என்றும் முன்னிற்கும்.

உங்களிடம் வேலை ஏதும் இல்லாத அரசு ஊழியர்கள் நிரம்ப இருந்தால், கொடி ய நோயை நச்சு காற்றை பரப்பிக் கொண்டு இருக்கும் பார்த்தீனிய செடிகளை பிடுங்க அவர்களை அனுப்புங்கள், இல்லை என்றால் பச்சிளம் பிள்ளைகள் அரும்புகள் கொடிய நோயினால் இறந்து கொண்டிருக் கிறார்கள் அதை தடுக்க பொது சுகாதாரத்தை பேண அவர்களை அனுப்புங்கள்,அதைப் போன்றே கால் நடைகள் கோமாரி நோயால் செத்து மடிந்துக் கொண்டிருப் பதை கட்டுப்படுத்த அனுப்புங்கள்,தமிழர்களின் அடையாளச் சின்னங்களை உடைத்தெரிய தமிழ னின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் தமிழனை ஈடுபடுத்தியது மானக்கேடு
அவமானம்.

தலைமைச் செயலகம் அமைந்து உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முன்பு உள்ள போர் நினைவுச்சின்னம் அங்கு எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் அவர்கள் இராணுவ வீரர்கள் வாத்திய இசை முழங்க இராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் மலர்வளையம் வைத்து
மறைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செய்தது அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நாட்டுக்காக அர்ப்பணித்ததை நினைவுகூறி கெளரவிப்பதற்
காக, அதை யாராவது இடிக்க முயலுவார்களா?அதே போன்று இந்திய நாட்டின் தலைநகர் தில்லி பட்டனத்தில் உள்ள இந்தியா கேட் என்கின்ற நுழைவு வாயி லில் போரிட்டு மடிந்த இந்திய இராணுவவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு
அணையா ஜோதி ஏற்றப்பட்டு உள்ளது அங்கும் நாள்தோறும் இராணுவ மரி யாதையுடன் மலர்வளையம் வைத்து மறைந்த வீரர்களின் தியாகத்தை கொள ரவிக்கப்படுகிறது. அதை யாராவது இடிக்க மனம் வருமா.

அதைப் போன்று தான் தமிழர்களின் வீரத்திற்கும், தியாகத் திற்கும் சான்றாக என்றும் நிலைத்த புகழை தரவல்ல வீரத்தியாகிகளான தமிழ் நாட்டிலும் தமி ழீழத்திலும் இனம், மொழி, நாட்டு விடுதலைக் களத்தில் இறந்து போனாலும் என்றும் இரவாப்புகழ் பெற்று விட்டவர்களுக்காக தஞ்சை விளாரில் எழுப்பப்
பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம்.

இனிவரும் முதலமைச்சர்கள் தலைமை செயலகத்திற்கு முதலமைச்சராக பொறுப்பேற்க போகும் முன் முள்ளிவாய்க்கால்முற்றம் சென்று வீரவணக்கம்
செலுத்திவிட்டுத்தான் முதலமைச்சராக பொறுப்பேற்கவேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும். ஆட்சி இருக்கின்ற காரணத்தால் அதிகாரம் கண்ணை மறைக்கிறது.

எனவேதான் எந்த கொடிய செயலை ராஜபக்சே செய்தானோ, அதை தமிழ்நாட் டில் செயல் படுத்திகாட்ட ராஜபக்சேவின் ஜெயலலிதா முயற்சிக்கிறார்.

கடந்த நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழர்களைப்போன்று தனித்த அடை யாளத்துடன் வீரத்திற்கும், தியாகத்திற்கும் பெயர் பெற்ற சீக்கியர்களின் பொற் கோவில் அமைந்து உள்ள பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தனி நாடு கேட்டு
போராடியவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்று புளு ஸ்டார் ஆபரேசனை பல
எச்சரிக்கையும் மீறி அதிகாரம் கண்ணை மறைத்ததால் 106 அணி சேரா நாடு களின் தலைவி பிரதமர் இந்திரா மேற் கொண்ட நடவடிக்கையின் காரணமாக
சீக்கியர்களின் புனிதமான தியாகம் நிறைந்த பொற்கோவில்சுவர்களை இயந் திர துப்பாக்கி களின் தோட்டாக்கள் துளைத்தது, அப்பாவிகள் பலர் கொல்லப்
பட்டு இரத்த வெள்ளத்தில் பொற்கோவில் நிரம்பியது.அதன் விளைவை இன்று வரை காங்கிரஸ்  அறுவடை செய்து கொண்டு இருக்கிறது.

பஞ்சாப்பில் காங்கிரஸ் கால் ஊன்ற முடியவில்லை,அம்மக்களால் புறக்க ணிக்கப்பட்டது.ஒவ்வொரு வினைக்கும், எதிர் வினை உண்டு. சீக்கியர்களின்
உள்ளம் தீப்பிழம் பாக மாறியது,அரசுப் பணியில் இருந்த போதும் பிரதமரின் பாதுகாவலர்கள் அவரை பழி தீர்த்தார்கள்.

மத்திய காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த நாளிலும், கடந்த மாதம் அந்த சீக்கியர் களின் குடும்பங்களை பொற்கோவிலுக்குள் அழைத்து
சீக்கியர் களின் உயரிய விருதை சீக்கிய மதத்தலைவர்கள் வழங்கி கெளரவித் தனர். இவ்வாறு மல்லை சத்யா உரையாற்றினார்.


தஞ்சை விளாரில் கட்டப்பட்டு உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து தமிழக அரசின் எதேச்சதிகாரத்தையும்,அதை தடுத்த அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரை கைது செய்ததையும் திராவிட விடுதலை இயக்கத் தலை வர் கொளத்தூர் மணி அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த தையும் கண்டித்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பின் சார்பில் 23.11. 2013 சனிக்கிழமை காலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தொல். திருமா வளவன்,ஜவஹிருல்லா, பண்ருட்டி வேல்முருகன், தோழர் தியாகு, தெகல் கான் பார்கவி, விடுதலை ராஜேந்திரன், டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட தலைவர் களும் பல்வேறு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர். உடன் மதிமுக சேப்பாக் கம் பகுதிச்செயலாளர் மார்க்கெட் சேகர், திருவல்லிக் கேணி பகுதிச் செயலா ளர் பந்தல் தேவராஜ், தியாகராயநகர் பகுதிச் செயலாளர் பீடா ரவி உள்ளிட்ட
தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment