Monday, December 9, 2013

சிதம்பரத்தின் பகல் கனவு பலிக்காது!

சங்கொலி தலையங்கம் 

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு சிங்கள கொலைவெறியன் ராஜ பக் சேவுக்கு எல்லா வகையிலும் உதவி செய்தது மட்டுமின்றி,ராஜபக்சே நடத்திய இனப்படு கொலை குற்றங்களிலிருந்து அவரைக் காப்பாற்றவும்,இந்த நிமிடம் வரை செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மூலம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையை மாற்றிவிட லாம் என்று பகல் கனவு காணு கிறது.

அதனால்தான் நவம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கருத்தரங்கம் நடத்தி, அதில்.‘இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை யும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் ப.சிதம்பரம் பேசி இருக்கின் றார்.இந்நிகழ்வில், உரையாற்றிய ப.சிதம்பரம் அப்பட்டமான முறையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

“இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் வந்து கொண்டிருந்தபோது, இன்னொரு
நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி,அங்கே நடந்த உள்நாட்டுப் போரை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.ஆனால், அது வெற்றி பெறவில்லை.அந்தப் போரில் அப்பாவி மக்கள்,இராணுவத்தினர், விடுதலைப் புலிகள் என 65ஆயிரம் பேர் இறந்தனர்.

இந்தப் பிரச்சினையை மூன்றாக வகைப்படுத்தலாம்.ஒன்று இலங்கைத் தமிழர்
களுக்கு வாழ்வாதாரம், சம உரிமை, சம அந்தஸ்து கிடைக்கச் செய்வது ஆகும்.
அடுத்து, அங்கு நடந்த இனப்படுகொலை குறித்து ஆழமான,நேர்மையான விசா ரணை நடத்தி, அதில் சம்பந்தப் பட்டவர்களை தண்டிக்க வேண்டும். மூன்றாவ தாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு, வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் பழைய இடத்திலேயே வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும்” என் பது தான்.

இலங்கையில் நடந்த போரை நிறுத்து வதற்கு இந்திய அரசு முயற்சி செய்தது
என்று ப.சிதம்பரம் கூறுவது கடைந்தெடுத்த பொய் ஆகும். போர் நடந்து கொண்
டிருந்த போதே, ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போதே, இலங்கைக்கு இரண்டு முறை சென்று வந்தார் அப்போதைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

சென்னைக்கு வந்து அன்றைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துவிட்டு, அவர் வீட்டு வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, “போரை
நிறுத்துமாறு இலங்கையை வற்புறுத்துவது எங்கள் வேலை இல்லை” என்று
கூறிவிட்டுச் சென்றார்.


நாடாளுமன்றத்தில் 2009 பிப்ரவரி 18ஆம் தேதி,பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக் கல் செய்து உரையாற்றியபோது,“போரை நிறுத்துமாறு இலங்கை அரசை இந் தியா கோர முடியாது. ஏனெனில்,இலங்கை இறையாண்மை உள்ள நாடு. இந்தி யாவும் இறையாண்மை உள்ள நாடு.இன்னொரு நாட்டின் இறையாண்மையில் தலையிட முடியாது” என்று மிகவும் அலட்சியமாகக் கூறினார்.

ஒட்டுமொத்த தமிழ்நாடே போரை நிறுத்து என்று கூக்குரல் எழுப்பியபோது, முத்துக்குமார் உள்ளிட்ட இளம் தமிழர்கள் 16 பேர் தீக்குளித்து மாண்டபோது, ப.சிதம்பரம் எங்கே போனார்?

போரை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இந்திய அரசு தரப்பில்
எவராவது பேசியது உண்டா? இலங்கை அரசை எச்சரித்தது உண்டா? எதுவும்
இல்லை. ஏனெனில் போரை நடத்தியதேஇந்திய அரசுதானே? “இந்தியாவுக்காக
நாங்கள் இந்தப் போரை நடத்தினோம்” என்று ராஜபக்சே கூறியபோது, ப.சிதம் பரம் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு ஏன் பதில் கூறவில்லை?
பதில் கூற முடியாது.ஏனெனில் ராஜபக்சே இந்தியாவின் சார்பில் செய்யப்பட்ட
அனைத்து உதவிகளையும் போட்டு உடைத்து விடுவார் என்று இவர்களுக்குத் தெரியும்.

இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளியாக இந்திய அரசின் முகத்திரை யை நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சே அரசு கிழித்து முகத்தில் கரியையும் பூசிவிட்டது.

இதுகுறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபரின் சகோதரரும் பொரு ளா தார வனத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்சே பேசுகையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் புலிகளைத் தோற்கடிக்க இலங்கைக்கு உதவிய வெளிநாட்டு அரசாங்கமே இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்துவது மிகப் பெரி ய வேடிக்கையாகும் என்று ஏளனம் செய்து சிதம்பரத்தின் கன்னத்தில் அடித் துள் ளார்.

இலங்கையில் முக்கிய நாளிதழான தீவு பத்திரிகை திங்கள்கிழமை 2.11.2013
தலையங்கத்தில், ஈழம் நான்காவது யுத்தத்தில் விடுதலைப்புலிகளை அழிக்க
வேண்டும் என்றுதான் இந்தியா உதவியது என்றும், 87 இல் அனுப்பப் பட்ட அமைதிப்படை ஈழத்தமிழர்களை படுகொலை செய்தும், தமிழ்ப்பெண் களை கற்பழித்த குற்றச் சாட்டுக்கு ஆளானதையும் சுட்டிக் காட்டி உள்ளது.

ராஜபக்சே நடத்திய மனிதகுல விரோதப் போரில் மடிந்தவர்கள் ஒன்றரை இலட்சம் பேர் இருக்கும் என்று மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா. மன்ற விசாரணைக் குழுவும் மதிப்பீடு செய்து இருக்கும்போது, 65 ஆயிரம் பேர் இறு திக்கட்டப் போரில் இறந்தனர் என்றும், இதில் இலங்கை இராணுவத் தினரை யும் சேர்த்து ப.சிதம்பரம் கணக்குக் கூறியிருக்கிறார்.

இனப் படுகொலை குறித்து நியாயமான விசாரணை நடத்தி, அதில் சம்பந்தப் பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறும் ப.சிதம்பரம் ஐ.நா.மன்றத் தின் மனித உரிமைகள் குழுவில் 2012 மற்றும் 2013 மார்ச்சு மாதத்தில் இரு
முறை இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இந்தியா
அத்தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தது ஏன்? என்று விளக்குவாரா? தமிழ் நாட்டில் எழுந்த எதிர்ப்பைத் திசை திருப்புவதற்குத்தான், ஐ.நா. மனித உரிமை கள் குழு தீர்மானத்தை ஆதரிப்பது போல் காங்கிரஸ் அரசு நாடகமாடியது என் பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.

தமிழீத்தில், சொந்த மண்ணில் அகதி களாய் அலையும் தமிழ் மக்களுக்கு வீடு கள் கட்டித்தரப்படுமாம் காங்கிரஸ் அரசின் கருணையை ப.சிதம்பரம் தம்பட் டம் அடிக்கிறார். போர் முடிந்து நான்கு ஆண்டு காலத்தில் தமிழர்களின் வாழ் விடங் களையும், வாழ்வாதரங்களான நிலங்களையும் இலங்கை இராணுவம்
ஆக்கிரமித்து இருக்கிறதே, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஈழத்தமிழர்
களை நேரில் சந்தித்துப் பேசியபோது,தமிழ் மக்கள் கதறி அழுதார்களே!

எங்கள் வீடுகளையும் நிலங்களையும்இராணுவத்தின் பிடியில் இருந்து மீட்டுத்
தாருங்கள் என்று கண்ணீர் மல்க கோரினார்களே, அபகரித்துக் கொண்டதை
திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று ராஜபக்சேவை வலியுறுத்தியது உண்டா?
இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கொழும்பு சென்றபோது, பகி ரங்கமாக இந்தக் கருத்தை தெரிவிக்க வில்லையே? அதற்கு என்ன காரணம்?
என்று அமைச்சர் ப.சிதம்பரம் கூறுவாரா?

‘அறிவு ஜீவி’ ப.சிதம்பரம் அக்கருத்தரங்கில் மேலும் பேசி இருக்கின்றார். இந்தி யாவிலும் இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மை மக்கள் இருக்கிறார்கள்.ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தருவது எளிதல்ல, இந்தியாவிலும் பலர் தனிநாடு கேட் கிறார்கள். அந்த தனி நாடு கோரிக்கையை நாம் சரி என்றா சொல்கிறோம்?

இந்தியாவில் மத சிறுபான்மையினர் எங்கும் தனிநாடு கேட்கவில்லை. காஷ் மீரிலும், பஞ்சாபிலும், நாகலாந்து போன்ற மாநிலங் களில் எழுந்த தனிநாடு
கோரிக்கைகள்கூட அந்தந்த தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான
குரலாகும். ஆனால், இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களுக்கு, ஈழத்தில்
தமிழ்த் தேசிய இனம் அனுபவித்த கொடுமைகளைப் போலவோ, இனப்படு
கொலைகளோ எங்கும் நடக்கவில்லை.சொந்தநாட்டு மக்கள் மீதே குண்டு வீசி
கொன்று குவிக்கும் கொடூரம் இங்கும் நடக்குமானால், தனிநாடு கோரிக்கை
நியாயமாகத்தான் இருக்கும்.இந்தியாவுடன் இலங்கையை ஒப்பிட்டுப் பேசு வதே தவறானது. ‘பொருளாதார புலிக்கு’ இந்த அரசியல் அரிச்சுவடியை யார் பாடம் எடுப்பது?

இலங்கையில் தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வகுடி மக்கள். அவர்கள் இழந்த
உரிமை களை மீட்கவே அறுபது ஆண்ட காலம் போராடினார்களேயொழிய, சிங்களவர்களிடம் பிச்சை கேட்கவில்லை.

இலங்கையின் அரசியல் சட்டத்தில் 13 ஆவது திருத்தம் குறித்தும் ப.சிதம்பரம் ‘மேதாவிலாசத்தை’ புலப்படுத்தி இருக்கிறார்.

“இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இலங்கை அரசியல் சாசனத்தல் 13 ஆவது
திருத்தம் கொண்டுவர முயற்சி மேற் கொள்ளப்பட்டது. 13 ஆவது அரசியல்
சட்டத்திருத் தத்தின்படி சிங்களம் போல் தமிழையும் அரசு மொழியாக்க வேண் டும்.

வடக்கு-கிழக்கு மாகாணத்தை இணைத்து புதிய மாகாணத்தை உருவாக்க வேண்டும். தொடர்ந்து சாதுர்யமாக ராஜதந்திரமாக 13ஆவது அரசியல் திருத் தத்தை செயல் படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது” என்று
சிதம்பரம் சரடு விடுகிறார்.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு என்பது அடியோடு செல்லாது என்று இலங் கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து,இந்திய அரசின் மீது சவுக்கால் அடித்தபோது மானம் மரியாதை துளியும் இன்றி இந்திய காங்கிரஸ் அரசு வாய்மூடிக்கிடந் தது ஏன்? 

இலங்கை அரசியல்சட்டத்தின் 13ஆவது அரசியல் திருத்தம் என்பது எந்தவகை
யிலும் தமிழர்களுக்கு சாதகமானது அல்ல. அப்பொழுதே ஈழத்தமிழர் அமைப்பு கள் அனைத்துமே குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் 13 ஆவது திருத் தத்தை முற்றிலுமாக நிராகரித்த உண்மையை நினைவில் கொள்ள வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதை 13 ஆவது சட்டத்திருத்தம் அங்கீகரிக்கவில்லை.

மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, காவல்துறை
நிர்வாகம் அனைத்தும் சிங்கள அதிபரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். நிலம்
தொடர்பான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கு கிடை யாது என்று இப்போது கூட ராஜபக்சே அரசு கூறி இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு பெயரளவுக்குக்கூட பயன் இல்லாத 13ஆவது சட்டத் திருத்
தத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்த இந்தியா வற்புறுத்தும் என்று
மோசடி அறிவிப்பை காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
ஆனால், இலங்கை அரசு திட்டவட்டமாக 13 ஆவது சட்டத் திருத்தத்தை நடை முறைப்படுத்த முடியாது என்று இந்தியாவின் முகத்தில் அறைந்து கூறி வரு கிறது.இலங்கை சிங்களவர்களுக்கான நாடு, தமிழர்களுக்கு என்று தாயகம் கிடையாது. இங்கே பெளத்த மதம்,சிங்கள மொழியும் மட்டும்தான் ஆட்சி செய் ய முடியும் என்று ராஜபக்சே 2013 பிப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திர நாள் விழா வில் கொக்கரித்ததை ப.சிதம்பரம் மறந்து இருக்கலாம், தமிழ்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள்.

2012 ஜனவரியில் இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ் ணா,கொழும்பு சென்று ராஜபக்சேவை சந்தித்து விட்டு, இலங்கை அரசு 13 ஆ வது சட்டத்திருத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்று இந்தியா சார்பில் வலி யுறுத்தப் பட்டது என்று பேட்டி கொடுத்தார்.

அதற்கு உடனடியாக ராஜபக்சே சார்பில் மறுப்பு தெரிவிக்கப் பட்டது. 13ஆவது சட்டத்திருத்தம் பற்றி இந்திய வெளியுறவு அமைச்சர் பேசவே இல்லை என்று சிங்கள அரசு கூறியது. இந்திய அரசு சார்பில்,இதற்கு பதில் கூறாமல் அமைச்
சர்கள் மெளனமாகவே இருந்தனர். அப்போது ப.சிதம்பரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருப்பார் போலும்.

ப.சிதம்பரம் பேசிய அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டசிதம்பரம் கோஷ்டி யைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,கே.எஸ்.அழகிரி தனது அடிமுட்டாள் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றார். இறுதிக்கட்டப்போரை நடத்துவ தற்கு ப.சிதம்பரம் முயற்சி செய்தாராம்.

புலிகளிடம் பேசி வைகோ,பழ.நெடுமாறன் இருவரும் தான் போரை தொடர்ந்து நடத்துமாறு கூறினார்கள். எனவே, போர் நிறுத்தம் கொண்டு வர முடிய வில் லை என்று கே.எஸ். ஆழகிரி அவதூறு பிரச்சாரத்தை நடத்தி உள்ளார்.

தமிழினத்தை காட்டிக்கொடுத்து, ராஜபக்சேவின் கைக்கூலிகளாக உலா வருப வர்கள் பட்டியலில் காங்கிரஸ் எம்.பி.,கே.எஸ்.அழகிரிக்கும் இடம் உண்டு என் பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.இதுபோன்ற இட்டுக்கட்டிய பொய்
களைப் பரப்புவதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் இனத் துரோகத்தை மூடி மறைக்க முடியாது.

தமிழ்நாட்டு மக்களின் இன உணர்வு நீறுபூத்த நெருப்பாக தகித்துக்கொண்டே
இருக்கின்றது. அது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சுவடு தெரியாமல் சுட்டுச் சாம்பல் ஆக்கிவிடும் எச்சரிக்கை!

No comments:

Post a Comment