தன்னை முன்னிறுத்தாமல் இயக்கத்திற்காக, மக்களுக்காக உழைத்த உத்தமர் என்று 30.11.2013 அன்று மறைந்த எஸ்.ரெத்த்தினராஜ் இரங்கல் கூட்டத்தில் (01.12.2013) உரை ஆற்றும்போது #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ குறிப் பிட்டார். அவரது உரை வருமாறு:
நான் வாழ்க்கையில் மிகவும் நேசிக்கிற ஆருயிர்ச்சகோதரர் ரெத்தினராஜ்அவர் களே என்று, ஆயிரக்கணக்கான மேடைகளில் அவரை அமர வைத்துக்கொண் டு பேச்சைத் தொடங்கி இருக்கிறேன். இனிமேல், இந்த இரங்கல் நிகழ்ச்சியில் இருந்து, என் நினைவில் நிறைந்து விட்ட சகோதரனே என்று சொல்ல வேண் டிய நிலைமைக்கு ஆளாகி இருக்கிறேன்.இங்கே பல்வேறு இயக்கங்களின்
தலைவர்கள், முன்னணியினர்,நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர்கள், எங்கள் இயக்கத்தின் ஒரு மாணிக்கக் கட்டியின் மறைவுக்கு,தங்கள் இரங்கல் உரையைத்தெரிவித்து இருக்கின்றார்கள்.
ஒரு பாரம்பரியமான, பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்தவர் ரெத்தினராஜ்.
பரந்த அளவில் நிலங்கள்,தோட்டங்கள், தோப்புகள், செல்வச் செழிப்புள்ள வீடு என்ற இத்தகைய வசதியான பின்னணியில் வளர்ந்து,ஒரு கல்லூரியில் பேரா சிரியராகப் பணி ஆற்றி, அறிஞர் அண்ணாவின் இயக்கத்தில் தன்னை இணைத் துக் கொண்டு, இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்து, கன்னியா
குமரி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளராகப் பொறுப்பு ஏற்று,
அந்த இயக்கத்திற்காக ஒரு அழகான கட்டடம் உருவாவதற்குக் காரணமாக
இருந்து, இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள் வரிசையில் திகழ்ந்தவர் ரெத் தினராஜ்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில்
இருந்து விலக்கப்பட்டபோது,இந்தத்தென்முனையில் இருந்து தலைநகர் சென் னைக்கு வந்து, நான் நீக்கப்பட்டது அநீதி என்று, ரெத்தினராஜ் குரல் கொடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இவரை விட என்னிடம் நெருங்கிப் பழகிய வர்கள்,என்னை உயிராக நேசித்தவர்கள்,என்னோடு பல காலம் அன்போடு பழ கியவர்கள், என் மீது எடுக்கப்பட்ட முடிவு தவறு என்று நினைத்தாலும் கூட,
அவர்களது எதிர்கால அரசியல் வாழ்வு சூன்யமாகி விடக் கூடும் என்று கருதி,
எனக்காக மனதுக்குள் இரண்டு சொட்டுக் கண்ணீரை வடித்துவிட்டு, திராவிட
முன்னேற்றக் கழகத்திலேயே தொடர்ந்து நீடித்தார்கள்.
என்னோடு வந்தால், எம்.எல்.ஏ., எம்.பி.,ஆக முடியாது; துன்பமும், துயரமும்,
போராட்டமும், கண்ணீரும்,வேதனையும் தான் இருக்கும் என்று, 93 அக்டோப ரில் நான் பகிரங்கமாகவே சொன்னேன். துன்பங்களை எதிர்கொள்ள ஆயத்த மாக இருப்பவர்கள் மட்டுமே என்னோடு வாருங்கள் என்று அழைத்தேன். எந் தக் கைதாக இருந்தாலும், இந்த மாவட்டத்தில் சிறை பிடிக்கப்படுபவர்களை யும் பாளையங் கோட்டைச் சிறையில் கொண்டு வந்துதான் அடைப்பார்கள். அங்கே என்னோடு பழகியதால், இந்த மாவட்டத் தோழர்கள், என்னைத் தங்கள் செல்லப் பிள்ளையாகக் கருதினார்கள்.
அதங்கோட்டு ஆசானும், தொல் காப்பியனும் உலவிய இந்தப் பழம் பெரும் தமி ழர் மண்ணில், தமிழ் வளர்த்த இந்த மண்ணில் வாழும் மக்கள், பூர்வீகத் தமிழ்க் குடி மக்கள். என் மீது உயிராக இருந்தார்கள். அன்றைக்கு ரெத்தினராஜ் துணிச் சலாக முடிவு எடுத்தார்.அவருக்குக் கடுகளவேனும் தன்னலம் இருந்திருந் தா லும், என்னோடு வந்து இருக்க மாட்டார்.அவர் இங்கே ஒன்றியப் பெருந்தலை
வராக இருந்தபோது, ஒன்றிய அலுவலகத்துக்குச் சொந்தமான ஜீப் வண்டியில்
போகாமல், நடந்தே அலுவலகத்துக்குப் போவார் என்று சொன்னார்கள். அந்தப்
பண்பாடு இருந்ததனால், ஒரு அநீதி நடக்கிறது, உண்மையான ஒரு தொண்ட னுக்குக் கேடு நடக்கிறது,அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர் வோடு வந்தார்.
ஐயா கே.பி.கே. அவர்கள் கரம்பற்றிக் கொடுக்க, ரெத்தினராஜ் அவர்கள் ஏற் பாடுகளைச் செய்ய, 94 ஆம் ஆண்டு, 1600 கிலோமீட்டர் எழுச்சி நடைப் பயணத் தை, முக்கடல்கள் சங்கமிக்கும் இந்தக் குமரி முனையில் இருந்துதான் நான் தொடங்கினேன்.அதற்குப் பின்னரும் எத்தனையோ நிகழ்ச்சிகள். பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இங்கே வந்து இருப்பதால், நான் அரசியல் பேச
விரும்பவில்லை. ஆயினும், என் இயக்கத் தோழர்களுக்குச் சில செய்திகளை நான் சொல்லியாக வேண்டும்.
நான் இந்த மாவட்டத்துக்கு வருகின்ற போதெல்லாம், சகோதரர் ரெத்தினராஜ்
அவர்களோடு என்னை வரவேற்கின்ற அண்ணன் திரவியம் இல்லை; தோப்பூர்
சுப்பிரமணியம் இல்லை. இன்றைக்குத் தம்பி தில்லைசெல்வம் மாவட்டச்செய லாளராக இருக்கின்றார். சோதனையான காலங்களில் என்னை அரவணைத் துக் கொண்ட குழித்துறை ஜெயராஜ், கோட்டாறு கோபால்,தி.மு.க. இளைஞர் அணி அமைப்பில் எனக்காகக் குரல் கொடுத்துப்போராடிய தம்பி வெற்றிவேல், அரசியலில் தனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நிலையிலும் என் னோ டு வந்து,இன்றைக்கு இந்த மாவட்டக் கூட்டுறவு வங்கியின் தலைவராகத்திகழ் கின்ற சம்பத் சந்திரா, இன்னும் எண்ணற்ற தோழர்கள், ஒன்றிய நகரச் செயலா
ளர்கள் என்னோடு இருக்கின்றார்கள்.
ரெத்தினராஜைப் போலவே ஒரு சோதனையான காலத்தில் எங்களுக்குத் தோள் கொடுக்க வந்தவர்,என் ஆருயிர்ச் சகோதரர் இமயம் ஜெபராஜ் அவர்கள். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தோற்ற காலத்தில், என்னை வந்து அவர் சந்தித்தார். இந்தக் கட்டத்தில் என்னோடு இருந்தால், உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை; மாறாக துன்பம்தான் இருக்கும்; எனவே, நீங்கள் வர வேண்டாம் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால், அண்ணாவின் இயக் கத்துக்காக, தமிழ் இனத்துக்காக, நேர்மையாக நீங்கள் போராடுகிறீர்கள். உங் கள் கஷ்டங்களை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்று வந்தார்.
இங்கே, நெல்லை மாவட்டச் செயலாளர் சரவணன், மாநகர் மாவட்டச் செய லாளர் பெருமாள், மாணவர் அணிச் செயலாளர் இராஜேந்திரன் வந்து இருக் கின்றார்கள்.கழகத் தோழர்களுக்குச் சொல்லுகிறேன். ஒரு கட்சியில் ஒரு மாவட்டச் செயலாளர் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டா கத் திகழ்ந்தவர் ரெத்தினராஜ்.இன்றை க்கு ஒரு பொதுக்கூட்ட அழைப் பிதழில்
என் பெயர் கீழே இருக்கிறது,எழுத்து சிறிதாக இருக்கிறது என்றெல்லாம் பிரச் சினைகள் வருகின்றன. எனக்கு உரிய மரியாதை தர வில்லை என்பார்கள். ஆனால், ரெத்தினராஜ் பெயரைப் போட வில்லை என்றாலும்,அந்த நிகழ்ச்சிக்கு அவர் வருவார்.அப்படித்தான் இந்த மாவட்டத்தில் அவர் தோழர்களை அரவ ணைத்தார்; அதனால் தான், மாவட்டச் செயலாளராக உயர்ந்தார். அவர் மட்டும்
அல்ல; இந்தக் குமரி மாவட்டத் தோழர்கள் எல்லோருமே அத் தகைய பண்பு உடையவர்கள்.தமிழகத்தின் பிற மாவட்டத் தோழர்கள் அனைவரும், குமரி
மாவட்டத் தோழர்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
யார் அவரிடம் கோபப்பட்டுப் பேசினாலும், அதைக் கேட்டுச் சிரித்துக் கொண் டே நிற்பார்.கடைசியில்,அந்தத் தோழரைக் கட்டி அணைத்து அரவணைத்துக் கொள்வார். அனைத்துக்கட்சித் தோழர்களிடமும் நேசத் தோடு இருந்தார். அப் படிப் பட்ட ஒரு பண்பாளர். பண வரவு செலவில் நேர்மையானவர், நாணய மா னவர். ஒரு கட்டத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது,அவராக விரும்பித்தான்,அடுத்து தம்பி தில்லை செல்வம் கட்சியை நடத் தட்டும் என்று ஒரு வழியைக் காட்டினார்.
தில்லி ராஜபாட்டையில் இந்தியா கேட் எனப்படும் நுழைவாயில் இருக்கின் றது.யாருக்காக? பெயர், அடையாளம் தெரியாத வீரர்களின் நினைவுக்காகக் கட்டப்பட்டது.அதைப்போலத்தான், ஒரு கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள். தங்கள் பெயரை முன்னிறுத்திக் கொள்ளாத, தன்னலம் அற்ற தொண்டர்கள் தான், ஒரு கட்சியை வாழ வைக்கின்றார்கள்.அதைப்போன்ற ஒரு தொண்ட னும், சேனாதிபதியாக முடியும் என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில், இந்த மாவட்டத்தில் திராவிட இயக்கத்தைக் கட்டி வளர்த் தவர் ரெத்தினராஜ். அவர் ஒரு ” நல்ல விவசாயி. கழனியில் அனைத்து வேலைகளையும் செய் வார். அரசியலுக்கு வந்த பிறகு, தன்னுடைய குடும்பச் சொத்துகளை விற்று இருக்கின்றாரே தவிர, சம்பாத்தியம் எதுவும் செய்யவில்லை. இன்றைக்கு அர சியலைப் பயன் படுத்தி குபேரர்கள், கோடீசு வரர்களாக ஆகிக் கொண்டு இருக் கின்ற காலத்தில், என் சகோதரன் ரெத்தினராஜை எண்ணி நான் பெருமைப்படு கின்றேன்.
மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். நாள் காட்டியில் ஒரு தேதியைக் கிழிக்கும்போது, நமக்கும் ஒருநாள் கழிகிறது. எனவே, வாழ்க் கை யில் மனிதநேயத் தோடு, அன்போடு, யாருக்கும் கேடு செய்யாமல், பிறருக்கு
உதவியாக வாழ்கிறவன் இறக்கின்றபோது, எல்லோரும் கண்ணீர் சிந்துகிறார் கள்.
புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்க துடைத்து
என்றார் வள்ளுவர். அப்படி இன்றைக்கு இந்தக் குமரி மாவட்ட மக்கள் கண்ணீர்
சிந்துகிறார்கள் என் சகோதரன் ரெத்தினராஜூக்காக.
அலை அலையாக எங்களோடு வந்தவர்களுள் பலர், 96 தேர்தலுக்குப் பிறகு விலகிச் சென்றார்கள். ஆனால், அந்தத் தோல்விக்குப் பிறகும், அடுத் தடுத்த தோல்விகளுக்குப் பிறகும், எங்களோடு உறுதி யாக நின்றவர் ரெத்தினராஜ்.
பதவியை எதிர்பார்த்து விலகிச்சென்றவர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால் ரெத்தினராஜூக்கு எம்.எல்.ஏ. பதவி தருகிறோம் என்று சொல்லி அழைத்தார்கள். கட்சியில் முக்கியமான பிரமுகர்களை அனுப்பி வைத்து, ரெத் தினராஜை நேரடியாகவே சந்தித்து அழைத்தார்கள். ஏன், கட்சித் தலைவரே பேசினார்.அமைச்சர் பதவியும் தரத் தயாராக இருந்தார்கள். அதைக்கேட்டதும், யாருக்கும் ஆசை வரும். என் பக்கம் தோல்வி கண்ணுக்கு எதிரே தெரிகிறது.
அந்தத்தேர்தலில் அவர்கள் தான் வெற்றி பெற்றார்கள்.அந்த வேளையில் அவர் கள் அழைத்தபோதும், இல்லை நான் வர மாட்டேன்,மன்னித்துக் கொள்ளுங் கள்; வைகோவோடுதான் இருப்பேன் என்று சொன்ன அந்த உத்தமனை நான்
இழந்து தவிக்கிறேன்.
அவருக்கு நான்கு பிள்ளைகள்.அருமையானவர்கள், பள்ளிக்கூடம் நடத்து கி றார்கள், கல்லூரி நடத்துகிறார்கள். ஒருவர்,ஒரு பல்கலைக் கழகத்தில் பெரிய பொறுப்பில் இருக்கின்றார். எனவே, ரெத்தினராஜ் உடல்நலம் கெட்டதே தவிர,
குடும்பத்தை எண்ணி அவரது மனதில் கவலை எதுவும் இல்லை.ஒரு மகனுக் கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.
தம்மின் தம்மக்கள் அறிவுஉடைமை மாநிலத்து
மண்ணுயிர்க் கெல்லாம் இனிது
என்றார் வள்ளுவர். அப்படிப்பட்ட மக்கள் செல்வத்தைப் பெற்று இருக்கின்றார்.
உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க வேண்டும்.உங்கள் தந்தைக்குப் பேரும் புகழும் இருக்கின்றது. ஒரு சமூகமே உங்களை நம்பி, ஒரு கல்லூரி நிர் வாகத்தை உங்களிடம் ஒப்படைத்து இருக்கின்றது. ஒரு வணிகர் சங்கத்தை, பள்ளிக்கூடத்தை ஒப்படைத்து இருக்கின்றார்கள். அங்கே அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துக் கொள்ளுங்கள். இந்த நிறுவனங்களைத் திறமை யாக நடத்திக் காட்டுவதுதான்,நீங்கள் சகோதரர் ரெத்தினராஜூக்கு செய்கின்ற சிறப்பு.
எனக்கு இருக்கின்ற கவலை எல்லாம், துன்பங்களையும்,தோல்விகளையும் மட்டுமே என்னோடு இருந்து பார்த்த என் சகோதரன், நாங்கள் இதை விடச் சிறந்த இடத்துக்கு வருவதைப் பார்க்க வேண்டுமே என்றுதான் நான் ஆசைப்
பட்டேன். இன்று அவரை இந்த மரங்கள் அடர்ந்த சோலைக்கு நடுவே, மண் ணுக்குள் புதைக் கின்றோம். இங்கே உலவும் காற்றிலே அவர் இருப்பார்.
இந்த மரங்களின் இலைகளின் அசைவில் அவர் இருப்பார்.இந்தக் குமரி மாவட் டத்துக்கு உள்ளே நான் நுழைகின்றபோதெல்லாம், அவர் எங்களை வாழ்த்திக் கொண்டு இருப்பார்.எந்தக் கொள்கைகளுக்காக அவர் இருபது ஆண்டுகள் எங் களோடு போராடினாரோ,அந்தக் கொள்கைகளில் நாங்கள் உறுதியாக இருப்
போம். நேர்மையாக இருப் போம்; வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலை இல்லை. தமிழ் நாட்டு மக்களுக்காகப் பாடுபடுவோம்.
தமிழகத்தின் வாழ் வாதார உரிமைகளுக்காகப் பாடுபடுவோம், ஈழத்தின் விடிய லுக்காகப் பாடுபடு வோம். குமரி மாவட்டத்தில் நெய்யாறு இடதுகரை வாய்க் காலுக்காகப் போராடினோம். இந்த மண்ணின் மக்களை இழிவு படுத்தி பாட புத் தகத்தில் எழுதியதைக் கண்டித்துப் போர்க்களம் அமைத்தோம்; மார்ஷல் நேச மணியின் புகழை விண் முட்டச் சொன்னோம்.
இந்த மாவட்டத்துக்காக மட்டும் அல்ல,ஒட்டுமொத்தத் தமிழகத்துக்காகப் பணி ஆற்றுகிறோம். மனித நேயத்தோடு பணி ஆற்றுகிறோம். தன் முனைப்பு இல் லாமல் பொதுத் தொண்டு ஆற்றிய ரெத்தின ராஜ் நமக்குக் காட்டிய வழியில்
பணி ஆற்றுவோம்.
கடைசி நாள்களில், பிள்ளைகளால் நன்கு கவனிக்கப்பட்டு, நிறை வாழ்வாக, அமைதியாக இயற்கை எய்தி இருக்கின்றார்.தூக்கத்திலேயே அவரது உயிர்ப்
பறவை பறந்து விட்டது.மழைக்கு நடுவிலும், பல்லா யிரக்கணக்கான மக்கள் இங்கே திரண்டதும், பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது வீட்டுக்கு வந்து இரங்கல் தெரிவித்ததும்,மலர்கள் தூவியதும், மக்கள் மன்றத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கைப் புலப்படுத்து கின்றன. அவரது பெயரும்,புகழும் என் றைக்கும் நிலைத்து இருக்கும்.
முன்பு இருந்த இயக்கத்துக்கு ஒரு கட்டடத்தை உருவாக்கியது போல, மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் இந்த மண்ணில் ஒரு கட்டட த்தை எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் அவரது உள்ளத்தில் இருந்தது.அதை, தில்லை செல்வமும் தோழர்களும் நிறை வேற்று வார்கள் என்ற நம்பிக்கை
எனக்கு உண்டு. அப்படி ஒரு கட்டடம் எழுகின்றபோது, அது ரெத்தினராஜ் மாளி கையாக,திரவியம் அரங்கமாக, தோப்பூர் சுப்பிரமணியத்தின் நினைவாக அமை யும். அவர்களது புகழ் நிலைத்து இருக்கும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment