ஐ.நா. குழுவை அனுமதிக்காத இலங்கைக்கு உதவுவதா?
தமிழர் வாழ்விடங்களில் சிங்களக் குடியேற்றம்! இதற்குத்தானா இந்தியாவின்
நிதி உதவி? #மதிமுக அ.கணேசமூர்த்தி கண்டனம்
இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத் தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப் பினர் அ.கணேசமூர்த்தி 25.8.2010 அன்று ஆற்றிய உரை...
சபாநாயகர் அவர்களே! அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சில விஷயங் களைச் சுட்டிக் காட்ட விழைகிறேன். தங்களது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு, முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த இலங் கைத் தமிழர்கள் தங்களது பழைய வாழ்விடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டார் களா? என்பதை அறிய விரும்புகிறேன்.
அமைச்சரும்,உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் சில புள்ளி விவரங்களை முன் வைத் தார்கள். அகதிகள் முகாம்களில் இருந்த இலங்கைத் தமிழர்கள் அனைவரும் அவர்களது பூர்வீக வாழ்விடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால்,உண்மை அதுவல்ல.
அமைச்சர் இந்திய அரசு தரப்பிலிருந்து இலங்கைக்கு அளிக்கப்பட்ட உதவி களை பட்டியலிட்டார். ஒதுக்கப்பட்ட நிதி அளவு, செலவு செய்யப்பட்ட தொகை மேற்கொண்ட மறுவாழ்வு பற்றியும் விவரித்தார்.சர்க்கரையென தாளில் எழுதி, நக்கிப் பார்த்து, இனிக்கிறது என சொல்வது போல் நிதி அமைச்சரின் விவர அறிக்கை உள்ளது.
மனித வாழ்க்கைக்கு லாயக்கற்ற முகாம்களில் இருந்து இலங்கைத்தமிழர்கள் தங்களது பூர்வீக வாழ்விடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படவில்லை என்பதே உண்மையாகும்.
இந்த உண்மைகளை எல்லாம் நாம் உலகச் செய்தி ஊடகங்களில் இருந்து தான் அறிய வேண்டி இருக்கிறது. ஊடக சுதந்திரம் முற்றிலுமாக இலங்கையில் முடக்கப்பட்டு விட்டது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்பது வெளி உல கிற்குத் தெரியவே இல்லை.இங்கு இருந்து சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட, குறிப்பிட்ட இடங்களைத் தவிர, எல்லா இடங்களுக்கும்
அனுமதிக்கப்படவில்லை. இலங்கை ஒரு இரும்புத் திரை நாடாக மாறி விட்ட தால், அங்குள்ள உண்மை நிலவரங்களை யாரும் அறிய முடிவதில்லை. அந்த இரும்புத் திரையையும் தாண்டி பல உண்மைச் செய்திகள் வெளி உலகிற்கு வந்து கொண்டிருக்கின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கொன் றும், இங்கொன்றுமாக அத்தகைய செய்திகளைச் சேகரித்து வெளிஉலகுக்கு பரப்பி வருகின்றன. இதுவே இலங்கையில் உள்ள தமிழர்களின் உண்மை
நிலையாகும்.
ஈழத்தின் மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் இன்றைக்கு இலங்கையின் இரண்டாம் தர குடி மக்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள். சொந்தம் என்று சொல் லிக்கொள்ள எந்த வாழ்விடமும் இலங்கைத் தமிழர்களுக்கு இல்லை. தமிழர்க ளுக்கு என தனியாக தாயகப் பகுதி இலங்கையில் இல்லவே இல்லை எனக் கொக்கரிக்கும் ராஜபக்சேவிடம் இருந்து நீதியையோ மறுவாழ்வு நடவடிக்கை களையோ எதிர்பார்க்க முடியாது.
சபாநாயகர்: தயவுசெய்து உங்களது கேள்விக்கு வாருங்கள்
அ.கணேசமூர்த்தி: எனது கேள்விக்கு வருகிறேன்.அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் சிங்களவர்கள் ஈழத் தமி ழர்களுக்கு எவ்வாறு மறுவாழ்வு அளிப்பார்கள், எவ்வாறு அவர்களின் உயிர் களைக் காப்பார்கள், எவ்வாறு தமிழர்கள் தங்கள் பூர்வீக வாழ்விடங்களுக்குத் திரும்ப அனுமதிப்பார்கள் என்பதை எல்லாம் தங்களைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
தமிழர்களின் உண்மை வாழ்க்கை நிலை மறைக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக் கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.பல்லாண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களையெல்லாம் இராணுவ முகாம்கள் ஆக்கிரமித்து விட்டன.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த -தமிழர்களின் ஆளுமைக்குட்பட்ட இடங்களில் எல்லாம் சிங்களவர்கள் புதிதாக குடியேற்றப்படுகிறார்கள்.இந்திய அரசு அளித்த உதவிகள் எல்லாம் முறையாக அங்கு பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க எந்தவிதமான கண்காணிப்பு நடவடிக்கைகள் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அரசிடமிருந்து அறிய விரும்பு கிறேன்.
ஏனெனில், தமிழர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் எல்லாம் தமிழர்களுக்காக
செலவிடப்படவில்லை. மாறாக, விரட்டப்பட்ட தமிழர் பகுதிகளில் சிங்கள குடி யேற்றங்களை ஏற்படுத்தவே இந்திய அரசின் உதவிகளை அவர்கள் பயன்படுத் துகிறார்கள் என்று தெரிய வருகிறது.
எனவே, தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட நிதி உதவி- தமிழர்கள் மறுவாழ்விற்காக இல்லாமல் சிங்களவர்களுக்காகவே அவர்கள் அரசால் செலவிடப்படுகிறதா என்பது பற்றிய உண்மை நிலவரத்தை இந்த அரசு அறிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். எனவே, இந்திய அரசு இலங்கைக்கு அளிக்கும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதையும் வலி யுறுத்துகிறேன்.
இலங்கை அரசு தமிழினப் படுகொலையைத் தொடர்வதோடு, தமிழர்களைத் தங்களது பிறப்பிடங்களிலிருந்தும் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்தும் அப் புறப்படுத்தி அகற்றுவதிலேயே கவனமாக இருக்கிறது.
பாதிக்கப்பட்ட தமிழர்கள் இழந்த வாழ்விடங்களைத் திரும்பப் பெற்றிடவும்,
இயல்பான வாழ்வு நிலையைத் திரும்பப் பெற வேண்டும் என்ற எண்ணமே இலங்கை அரசுக்குக் கிடையாது.
சர்வதேச மனித உரிமை ஆணையரையே அகதிகள் முகாமைப் பார்வையிட இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. ஈழத்தில் நிலவும் உண்மை நிலையை அறியவும் நடந்த போர் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அறி யவும் ஐ.நா. அமைத்த குழுவையே அனுமதிக்கவில்லை. ஐ.நா. அனுப்பும் குழு வையே அனுமதிக்காத போது, இந்திய அரசு அனுப்பிய உதவிகள் இன்னும் தங்களின் சொந்த இடங்களுக்கு குடியமர்வு செய்யப்படும் தமிழர்களுக்கு செல விடப்பட்டது என்று எப்படி கண்காணிக்க முடியும்? உண்மை நிலையை அறிய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? சிங்கள அரசின் திட்டமிட்ட நடவடிக்கைக ளால் இலங்கையில் தமிழினத்தைப்பூண்டோடு அழித்து ஈழத்தில் தமிழ்இனமே இல்லை என்ற நிலை உருவாக்க செயல்படுகிறார்கள்.
அங்குள்ள இலங்கை அரசாங்கம் போர் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட் டுள்ள அரசாங்கமாகும். அதை அறிந்திருந்தும் இந்திய அரசு அவர்களுக்கு இன் னும் உதவிக்கரம் நீட்டுகிறது. அந்த உதவிகள் உண்மையில் பாதிக்கப்பட்ட
தமிழர்களுக்கு சென்றடையவில்லை. போர்க் குற்றவாளியும் மனித உரிமை மீறல் குற்றவாளியுமான அவர்களுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும்? நமது நிவாரண உதவிகள் தமிழர்களுக்கு எதிராக சிங்களக் குடியேற்றத்திற்கு பயன்
படும் போது, நாம் எதற்காக நிதி உதவி செய்ய வேண்டும்? அண்டை நாட்டில்
நடைபெறும் இன அழிப்பைத் தடுத்திட முடிவுக்குக் கொண்டு வரும் பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு என்பதை இந்த அரசு உணர்கிறதா?
இந்திய அரசு அளித்த உதவிகள் முறையாக செலவிடப்பட்டதா என்பதைக் கணித்திட என்ன அளவு கோள் வைத்துள்ளீர்கள்? இலங்கையில் நிலவும் உண் மை நிலை அறிய துணிவுள்ள தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகளின்
சார்பாளர்கள், மனித உரிமைக்கழக அமைப்புகள்,பத்திரிக்கையாளர்கள் கொண் ட குழுவினை அனுப்ப இந்த அரசு முயலுமா என்பதையும் அறிய விரும்பு கிறேன்.
அ.கணேசமூர்த்தி எம்.பி., இவ்வாறு உரையாற்றினார்.
No comments:
Post a Comment