‘சிவகாமியின் சபதம்’ #வைகோ வின் இலக்கியச் சொற்பொழிவு
பரஞ்சோதி
நான் இதைக் குறிப்பிடக் காரணம் உண்டு. பார்த்திபன் கனவும் - சிவகாமியின் சபதமும் - பொன்னியின் செல்வனும் எழுதிக் குவித்த கல்கி ஆசிரியர் அவர் கள், சிவகாமியின் சபதத்தில் நான்கு பாகங்கள் வைக்கிறார் . முதல் பாகம், ‘பரஞ் சோதி யாத்திரை’; இரண்டாவது பாகம்,‘காஞ்சி முற்றுகை’; மூன்றாம் பாகம், ‘பிட்சுவின் காதல்’; கடைசி நான்காவது பாகம்,‘சிதைந்த கனவு’.
இந்த நான்கு பாகங்களை முன்வைக்கின்ற இந்தக் காப்பியத்தில், தொடக்கக் காட்சி ,எடுத்த எடுப்பில் காஞ்சிபுரத்தை நோக்கி வருகின்ற ராஜபாட்டையில் பரஞ்சோதி வருகிறான். கீழச் சோழ நாட்டில், திருச்செங்காட்டாங்குடியில் மாமாத்தியார் என்கின்ற வீரம்மிக்க குலத்தில் பிறந்து, தமிழ் படிக்கவும், சிற்பக் கலை பயிலவும் பரஞ்சோதி வருகிறான்.1 8 வயது துடிப்புள்ள வாலிபன்.அவன் முரட்டுப்பிள்ளை. காஞ்சிபுரத்திற்குச் சென்று, அப்பர் அடிகள் - நாவுக்கரசர் மடத்திற்குச் சென்று, அவரிடத்திலே தமிழ் படிக்க வேண்டும் என்று பரஞ்சோதி யை அனுப்பி வைக்கிறார்கள்.
பரஞ்சோதியின் மாமனார், திருவெண்காட்டு வைத்தியர், நாவுக்கரசருக்கு நெருக்கமானவர். அதே முதலாம் அத்தியாயத்தில், பரஞ்சோதி வருகிறபோதே நாகநந்தியும் வருகிறார். நாகநந்தியின் உடலில் வியர்வைத் துளிகள் தெறிக்கு மானால், காற்றில் வியர்வையின் நாற்றம் கலக்குமானால், நாகப்பாம்புகள் பதறி ஓடும். காரணம், விஷ மூலிகைகளை உண்டு உண்டு, விஷத்தை முறிக் கக்கூடிய வலிமையைத் தன் மேனி முழுவதும் தேக்கி வைத்து இருக்கிறார் நாகநந்தி. அந்த நாகநந்தி, பரஞ்சோதியோடு வருவதும், கோட்டைக்கு உள்ளே நுழைவதும், எடுத்த எடுப்பிலேயே திடுக்கிடும் சம்பவம். கோட்டைக்கு உள்ளே நுழைவதற்கு அனுமதி வேண்டும். அதற்கு ஏற்பாட்டைச் செய்து இருக்கிறான் நாகநந்தி. உள்ளே வந்து விட்டான் பரஞ்சோதி.
ஆடுகிறாள் சிவகாமி
அவரவர்கள் பாதையில் அவரவர்கள் போகிறார்கள். பரஞ்சோதி போகிறான். முதல் அத்தியாயத்திலே இதனை அழகாகக் காட்டுகிறார். மகேந்திரவர்மன் சபையில் நாட்டிய அரங்கேற்றம் நடக்கிறது. நாட்டியத்தை அரங்கேற்றம் செய்வது யார்? நடனக் கலை அரசி, இந்தக் காவியத்தின் பெயரை யாருக்குச் சூட்டி இருக்கிறாரோ அந்த சிவகாமி. ஆயனர் மகள் சிவகாமி நாட்டியம் ஆடுகிறாள். நாட்டியம் நடந்து கொண்டு இருக்கிறபோதே, அவசரத் தகவல் வருகிறது மன்னருக்கு. அவர் எழுந்து போய்விடுகிறார்.
என்ன நாட்டியம்? ‘மத்த விலாசம்’ எழுதியவர் மகேந்திரவர்மன். வடமொழி யி லும் பாண்டித்யம் பெற்றவர், அவரது இன்னொரு பெயர் ‘மத்த விலாசர்’ என் றே உண்டு. அந்த நாடகத்தின் காட்சியை, நடனமாக சிவகாமி ஆடிக்கொண்டு இருந்ததைப் பார்த்தவருக்கு ஏதோ தகவல் வருகிறது. எழுந்து போய்விடு கி றார். பாதியில் முடிந்த காரணத்தினால், அங்கிருந்து ஆயனரும் மகளும், சிவி கையில் வருகிறார்கள்.
மதம் பிடித்த யானை ஒன்று ஓடி வருகிறது. பின்னாலே இருந்து சிவிகையை விரட்டிக்கொண்டு வருகிறது. பல்லக்கில், ஆயனரும் மகளும் வருகிறார் கள். ‘நீங்கள் ஓடி விடுங்கள், உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என சிவிகை தூக்கிகளைப் பார்த்துக் கூறுகிறாள் சிவகாமி. கல்கி எவ்வளவு நுணுக்கமாக எழுதுகிறார் என்று பார்க்க வேண்டும். அவர்களாகப் போட்டுவிட்டு ஓடி விட் டார்கள் என்று சொல்லாமல், ‘நீங்கள் ஓடித்தப்பி, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், சிவிகையை இறக்குங்கள்’ என்று சொல்ல, பல்லக்கைத் தூக் கியவர்கள் விலகிக்கொள்ள, அதற்கு உள்ளாக யானை நெருங்கி விட்டது. இன் னும் கணப்பொழுதில், ஆயனரும் சிவகாமியும் யானையின் தாக்குதலுக்கு இரையாகி பலி ஆகி இருப்பார்கள்.
பொழுது போதாது
அந்த வேளையில், இவன் பார்க்கிறான். நம்ம கதாநாயகன் பரஞ்சோதி. யானை வரும்போதே பார்த்து விட்டான். இவனும் வரும்போதே வேல் கம்போடுதான் வந்து இருக்கிறான். அந்தக் கம்பில் வேலை மட்டும் தனியே எடுத்து, மூட் டைக்கு உள்ளே வைத்து இருக்கிறான். அந்த வேலின் திருகையை, கம்பில் பொருத்துகிறான். எல்லாம் ஒரு நிமிடத்திற்குள் நடக்கிறது. எந்தப் பயமும் இல்லை. யானை நெருங்கி வந்தவுடன், அவனுடைய பலத்தை எல்லாம் திரட் டி, யானை மீது வேலை வீசுகிறான். அது யானையின் கண்ணைப் பொத் திக் கொண்டு பாய்கிறது. உடனே யானை பயங்கரமாகப் பிளறிக்கொண்டே, யார் நம்மீது வேல் வீசியது என்று ஆவேசத்தோடு திரும்புகிறது. அது திரும்புவதற் குள் அந்தப் பாதையில் எதிர்த்து ஓடுகிறான் பரஞ்சோதி.
இப்படித்தான் இந்த அத்தியாயத்தைத் தொடங்கி, அதன்பின்னர் சிவகாமியின் சபதத்தின் ஒவ்வொரு செய்தியையும் சொல்ல ஆரம்பிக்கிறார். அவர் சொன்ன தையெல்லாம் கூறினால், இவர்கள் கூறியதுபோல வைகறைப் பொழுது வரை சொல்ல வேண்டியது இருக்கும்.
தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சியைச் சொல்வதற்கு காரணம் உண்டு. அதன்பின் னர், ஆயனர் வீட்டிலேயே நாகநந்தியும் பரஞ்சோதியும் வருகிறார்கள். இது வெல்லாம் கதையின் சுவாரஸ்யமான பகுதிகள், அதை எல்லாம் நான் சொல் ல விரும்பவில்லை. டிரெய்லர் பார்க்கிறீர்கள் அல்லவா? ‘அதில் இதைப் பாருங் கள், இந்தக் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும்’ என்பார்கள். அதைப் போல நான் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்கிறேன்.
தொடரும் ....
No comments:
Post a Comment