சென்னையில் நடந்த மதிமுக வழக்கறிஞர்கள் மாநாட்டில் #மதிமுக பொது செயலாளர் #வைகோ தனது குரு நாதர்களை நினைவு கூர்ந்தார் ... அவரின் உரையில் இருந்து ....
அர்ச்சுனன் அம்பைத் தொடுப்பதில் வல்லவன் என்று நான் படித்து இருக்கின் றேன். அவனுக்கு அந்தக் கலையைக் கற்றுத் தந்தவர் துரோணாச் சாரியார். அந்த மரியாதைக்காகத்தான்,மகாபாரதப் போரின் தொடக்கத்தில், பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியாருக்கு முன்பு அம்புகளைத் தொடுத்து, அவர்கள்
முன்னால் தரையில் குத்திடச் செய்தான் தனஞ்செயன்.
என்னை வழக்கறிஞர் தொழிலில் பயிற்று வித்தவர் அண்ணாச்சி இரத்தின வேல் பாண்டியன் அவர்கள். 1964 ஆம் ஆண்டு, திருவேங்கடம் என்ற ஊரில், திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டத்தில் அவர் உரை ஆற்ற வந்த போது, அவருக்கு முன்பு நான் பேசினேன். ‘பேச்சை நிறுத்தாதே, தொடர்ந்து பேசு’ என்றார்.கூட்டம் முடிந்தபிறகு, என்னையும் உடன் அழைத்துக் கொண்டு போய், சுப்பையாத் தேவர் வீட்டில் நடந்த விருந்தில் பக்கத்தில் உட்கார வைத் துச் சாப்பிடச் சொன்னார்.தம்பி நீ எந்த ஊர்? என்று கேட்டார்.மூன்று கல் தொலைவில் உள்ள கலிங்கப்பட்டி என்று சொன்னேன். ‘எப்படி வந்தாய்?’ என்று கேட்டார்.‘சைக்கிளில் வந்தேன்’ என்று சொன்னேன். சைக்கிளை வேறு
ஒருவரிடம் கொடுத்து விட்டு, தனது காரில் என்னை ஏற்றி வைத்துக்கொண்டு, அந்த நடுநிசியில் என் வீடு வரையிலும் கொண்டு வந்து என்னை இறக்கி விட் டுச் சென்றார்.
பின்னர் சட்டக்கல்லூரியில் படிக்கின்ற போது சந்தித்தேன். ‘என்னிடமே ஜூனி யராகச் சேர்ந்து கொள்’ என்றார்.அவரிடமே சேர்ந்தேன். நெல்லை மாவட்ட
தி.மு.க. மாணவர் அணிச் செயலாளராகவும் பணி ஆற்றினேன்.சாதிக்கு அப் பாற்பட்டவர் அண்ணாச்சி இரத்தினவேல்பாண்டியன். அவரிடம் 12பேர் பயிற்சி வழக்குரைஞர்களாக இருந்தோம். வெளியூர் செல்லும்போது, 11 பேர் வேறு விடுதி அறைகளில் தங்கிக் கொள்ளுவார்கள். என்னை அவர் தம்முடைய அறையிலேயே தங்க வைத்துக் கொண்டார். மேடைகளில் என்னைப் பேச
வைத்தார். அரசியலில் வளர்த்தார். அவர் சிறப்புரை ஆற்ற வேண்டிய மேடை களில்,நீ ஒரு மணி நேரம் பேசு என்று சொல்லுவார். அதற்குப்பிறகு,அவர் ஐந்து
நிமிடங்கள் பேசுவார். அவரால் வழக்கறிஞர் தொழிலில் வார்ப்பிக்கப் பட்டேன். பின்னர் அவர் அரசு வழக்குரைஞர் ஆனார்.


செல்லப்பாண்டியன் வாழ்த்து
குறுக்கு விசாரணையில் விருத்தாசல ரெட்டியார் திறமை வாய்ந்தவர் என்று
சொல்லுவார்கள். ஆனால், நான் பார்த்த அளவில் அவருக்கு நிகர் வேறு எவ ரும் இல்லை என்று நான் கருதுகின்ற, சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பெரியவர் செல்லப்பாண்டியன் அவர்களிடம் நான் பயிற்சி வழக்குரைஞராகச் சேர்ந்தேன்.1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கலிங்கப்பட்டியில் நடைபெற்ற என் தம்பி ரவிச்சந்திரன் திருமணத்தில் வந்து கலந்து கொண்டு வாழ்த்து உரைத்த போது, ‘அரசியலில் இல்லாமல் வழக்குரைஞராகப் பணி ஆற்றினால்,
இந்தத் தம்பி எவ்வளவோ பிரகாசிப்பான்’ என்று என்னைப் பாராட்டினார். அவ ரும்,அண்ணன் இரத்தினவேல் பாண்டியன்அவர்களும்தான் என் குருநாதர்கள்.
அதன்பிறகு, இன்றைக்கு, பொடா வழக்கில் வாதாடுகிறேன்; விடுதலைப்புலி கள் மீதான தடையை உடைக்க, தீர்ப்பு ஆயத்தில் வாதாடுகிறேன்; சென்னை
உயர்நீதி மன்றத்தில் ரிட்மனுத் தாக்கல் செய்து, ஒன்றரை மணி நேரம் வாதாடு கிறேன்; தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் பூட்டப்பட்ட ஒருவருக்காக வாதாடு கிறேன், உச்சநீதி மன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் வாதங்களை எடுத்து வைக்கின்றேன்; பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் போராடுகிறேன் என்றால், இதற் கெல்லாம் குருநாதர் அருமைச் சகோதரர் தேவதாஸ் அவர்கள் தாம். அவர் என் னைப் பயிற்றுவிக்கிறார்; ஆவணங்களைத் தயாரித்துக் கொடுக்கின்றார்; வழக் கு விவரங்களை எடுத்துக் கூறுகின்றார்; தொகுத்துத் தருகின்றார்; அப்படி அவர் ஒவ்வொரு முறை தயாரித்துக் கொடுக்கின்ற ஆவணங்களுக்கு எல்லாம் மூத்த வழக்குரைஞர்கள் 50,000, ஒரு இலட்சம் எனக் கட்டணம் வாங்குவார்கள்.
ஆனால், இவரே இரவெல்லாம் கண் விழித்து, கணினியில் ஆவணங்களைத்
தட்டச்சு செய்கிறார்; இந்த இயக்கத்துக்கு அவர் ஆற்றி இருக்கின்ற அருந் தொண்டுக்காக, இந்தக் கழகம் அவருக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கின்றது. He is an unsung hero of the MDMK; பாராட்டுப் பெறாத ஒரு கதாநாயகன் என் அருமைச் சகோதரர் தேவதாஸ்.
No comments:
Post a Comment